சிறப்பு மிகு துஆ

சிறப்பு மிகு துஆ

By Sufi Manzil 0 Comment August 2, 2011

اَللهُمَّ اَفْتَحْ عَلَيْنَا فُتُوْحَ الْعَارِفِيْنَ وَنَوِّرْ قُلُوْبَنَا بِاَنْوَارِ مَعْرِفَتِكَ ٭ اَشْغِلْنَا بِكَ وَلاَ تُشْغِلْنَا بِاَحَدِ غَيْرِكَ وَاَفْنِنَا بِكَ وَاَرْزُقْنَا مَحَبَّتَكَ الْعُظْمَا بِجَاهِ سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَّ اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَطِّفْ قَلْبَ شَيْخِنَا عَلَيْنَا ٭ وَاجْعَلْهُ رَاضِيًا عَلَيْنَا وَمُقْبِلاً اِلَيْنَا ٭ وَمُتَوَجِّهًالَنَا اَنَاءَ لَّليْلِ وَاطْرَفَ اَنَّهَارِ٭ وَمَتِّعْنَا بِجَاهِ سَيِّدِنَا وَاَمِدَّنَا بِاَمْدَادَتِهِ ٭ وَانْفَعْنَا بِبَرَكَابِهِ ٭ وَبَرَكَاتِ اَوْلِيَآءِ الله مَشَارِقِاالْاَرْضِا اِلٰى مَغَارِبِهَا وَكُنْ لَنَا وَلَا تَكُنْ عَلَيْنَا بِحُرْمَهِ الْفَاتِحٰة ٭

பொருள்:

இறைவா! உன் அந்தரங்கத்தை உனது இறை பக்தர்களுக்கு திறந்து காண்பித்தது போல் எங்களுக்கும் திறந்து காட்டியருள்!

உன் அந்தரங்க ஒளியினால் எங்களின் இதயங்களை ஒளிவாக்கு!

உனது ஞாபகமில்லாமல் வேறு வழியில் பராக்காக்கி கொண்டிருக்கிறார்களே அவர்களோடு எங்களை சேர்த்து விடாமல் உன்பக்கம் ஞாபகம் செலுத்தக் கூடிய மக்களாக எங்களை ஆக்கியருள்!

மேலும் உன்னைக் கொண்டு எங்களை பனாவாக்கு. மேலும் ஈருலக இரட்சகர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால் கண்ணியமான உன் விருப்பத்தைக் கொண்டு எங்களுக்கு உணவளி!

எங்களின் இதயத்தை  எங்களின் குருநாதர் அவர்களின் இதயத்தோடு இணைத்து விடு.

மேலும் எங்கள் குருநாதருக்கு எங்கள் மீதுள்ள பொருத்தத்தையும், எங்களின் மீது அவர்களின் முன்னோக்குதலையும் ஆக்கியருள்.

மேலும் எங்களின் மீது அவர்களின் எண்ணங்களை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகிமையைக் கொண்டு எங்களை சாட்டிவிடு.

மேலும் இரவும் பகலும் அவர்கள் எங்களின் பக்கம் முகம் திருப்புவதையும் எங்களுக்கு ஆக்கியருள்.
மேலும் அவர்களின் பரக்கத்தைக் கொண்டு எங்களுக்கு பிரயோஜனத்தைத் தந்தருள்.

மேலும் உதயகரையிலிருந்து அஸ்தகரை வரையிலுள்ள மேலான வலிமார்களின் பரக்கத்தைக் கொண்டும் எங்களுக்கு பிரயோஜனத்தைத் தந்தருள்.

ஸூரத் பாத்திஹா உடைய சங்கையைக் கொண்டு எங்களின் பேரில் உதவி  செய்யக் கூடியவனாக ஆகிவிடு. எங்களின் பேரில் கேடான உதவி செய்பவனாக ஆகிவிடாதே!