ஹழ்ரத் யஹ்யா அலைஹிஸ்ஸலாம்

ஹழ்ரத் யஹ்யா அலைஹிஸ்ஸலாம்

By Sufi Manzil 0 Comment December 21, 2014

Print Friendly, PDF & Email

ஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களது மனைவி ஈஷாவுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. அல்லாஹ் அறிவித்தபடி அக்குழந்தைக்கு ‘யஹ்யா’ என்ற பெயர் சூட்டப்பட்டது.நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே இவர்கள் பிறந்து விட்டார்கள்.

ஹழ்ரத் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிறுவயதிலேயே மிகவும் வசீகரமானத் தோற்றம் பெற்றிருந்தார்கள். அவாக்ளின் கைவிரல்கள் சிறியதாகவும்.அவர்களின் மூக்கு நீண்டதாகவும் இருந்தது. அவர்களின் புருவத்தின் உரோமங்ள் அடர்த்தியாக இருந்தன. அவர்களது குரல் மெல்லியதாகவும்.கேட்பவர்களுக்கு இனிமையானதாகவும் இருந்தது. அவர்கள் மற்ற சிறுவர்களைப் போல வீண் விளையாட்டில் ஈடுபடாதிருந்தார்கள். மற்ற சிறுவர்கள் அவர்களை விளையாட அழைத்தாலும் ‘மனிதனை அல்லாஹ் விளையாடுவதற்காக படைக்கவில்லை’ என்று கூறிவிடுவார்கள்.

அல்லாஹ் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி திருக்குர்ஆனில்

يَا يَحْيَىٰ خُذِ الْكِتَابَ بِقُوَّةٍ ۖ وَآتَيْنَاهُ الْحُكْمَ صَبِيًّا . وَحَنَانًا مِّن لَّدُنَّا وَزَكَاةً ۖ وَكَانَ تَقِيًّا . وَبَرًّا بِوَالِدَيْهِ وَلَمْ يَكُن جَبَّارًا عَصِيًّا . وَسَلَامٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا

(அதன் பின்னர்) “யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்” (எனக் கூறினோம்); இன்னும் அவர் குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு நாம் ஞானத்தை அளித்தோம்.

அன்றியும் நாம் நம்மிடமிருந்து இரக்க சிந்தனையும், பரிசுத்தத் தன்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்); இன்னும் அவர் மிகவும் பயபக்தியுடையவராக இருந்தார்.

மேலும், தம் பெற்றோருக்கு நன்றி செய்பவராகவும் இருந்தார்; அவர் பெருமை அடிப்பவராகவோ, (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவராகவோ இருக்கவில்லை.

ஆகவே, அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும், (மறுமையில்) அவர் உயிர் பெற்றெழும் நாளிலும் அவர் மீது ஸலாம் (சாந்தி) நிலைத்திருக்கும்.

– அல்-குர்ஆன் 19:12-15.

ஹழ்ரத் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிறுவராயிருக்கும்போதே சர்வ காலமும் இறையச்சத்தின் காரணமாக அழுது கொண்டேயிருப்பார்கள். இதைப் பற்றி அன்னாரது தந்தை கேட்டபோது, ‘தீயாலான பாலைவனம் நரகத்தில் உள்ளது. அதனைக் கண்ணீரைக் கொண்டுத் தவிர வேறு எதனைக் கொண்டும் அணைக்க முடியாது என்று நீங்கள் கூறினீர்கள். அதனைக் கேட்டபிறகுதான் நான் அடிக்கடி அழுது கொண்டிருக்கும் வழக்கத்தை மேற்கொண்டேன்’ என்றார்கள்.

தமது மகனின் இந்த நிலையைக் கண்டு மனம் வெதும்பிய ஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் கையேந்தி இதுபற்றி கேட்டார்கள். அதற்கு அல்லாஹ் சொன்னான்> ‘ ஓ ஜகரிய்யாவே! நீங்கள்தானே எனது அச்சம் அதிகம் நிறைந்த எனது வலீயாக உள்ள மக்கட்பேறு கேட்டீர்கள்? உங்கள் வேண்டுகோள்படியே யஹ்யாவை எனது அச்சம் நிறைந்த வலீயாகவே படைத்துள்ளேன். அவரது அழுகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்று.

அதன்பிறகு ஜகரிய்யா நபி அவர்கள் இதைப் பற்றி கவலைப்படுவதை விட்டு விட்டார்கள்.

ஹழ்ரத் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இவ்வாறு தொடர்ந்து அழுது கொண்டேயிருந்ததால் அவர்களது கன்னங்களின் சதை சிதைந்து, பற்கள் வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டன. அதனை மறைக்க அவர்களது தாயார் அன்னாரது கன்னங்களின் மீது பஞ்சை வைத்துக் கட்டி, அடிக்கடி அப்பஞ்சைப் பிழிந்து விட்டு மீண்டும் மீண்டும் கட்டி விட்டுக் கொண்டே இருந்தார்கள்.

தங்கள் மகன் முன்னால் நரகத்தைப் பற்றி போதிப்பதையே ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நிறுத்திவிட்டார்கள்.

கம்பளி உடையையே அணிந்து வந்த யஹ்யா நபி அவர்கள், இந்தக் கம்பளி ஆடை எனது தகுதிக்கு ஏற்றதாக இல்லை. என்னுடைய அந்தஸ்து அதற்கும் கீழே உள்ளது என்று சொல்லி அதை தூர எறிந்து விட்டு சாக்கால் ஆன போர்வையை போர்த்த ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் அவர்களின் பொன்;நிற மேனி புண் மயமாகி இரத்தம் கசிய ஆரம்பித்து விட்டது. இதனைக் கண்ட அவர்களது தாயார் பதறிப் போய் அவர்கள் அணிந்திருந்த அந்தச் சாக்குப் போர்வையை அகற்றிவிட்டு ஒரு மெல்லிய ஆடையைக் கொண்டு அவர்களது உடலை போர்த்தினார்கள். உடனே அல்லாஹ்விடமிருந்து வஹீ வந்தது. ‘ஓ யஹ்யாவே! நீர் ,என்னைவிட உலகத்தை அதிகமாக விரும்புகின்றீரா?’ என்று.

உடனே திடுக்கிட்ட ஹழ்ரத் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த மெல்லிய ஆடையைக் களைந்து விட்டு மீண்டும் சாக்குப் போர்வையைப் போர்த்திக் கொண்டார்கள்.

ஒருநாள் மஸ்ஜிதுல் அக்ஸாவில் ஹழ்ரத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்> வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மஸ்ஜிதிலிருந்த ஒருவர்> ‘அல்லாஹ்வின் சன்னிதானம் முன் நிற்கப் போகும் நாளை அவர்கள் மறந்து விட்டார்களா?’ என்ற கருத்துக்கொண்ட வேதவசனத்தை ஓதிக் கொண்டிருந்தார். இதனைக்கேட்டதும் யஹ்யா நபி அவர்கள் பயங்கரமாக அலறிய வண்ணம் அப்படியே மூர்ச்சித்துப் போய் கீழே விழுந்து விட்டார்கள். இந்த அதிர்ச்சியின் காரணமாக 4மாதங்கள் வரை படுத்தப் படுக்கையில் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார்கள்.

ஒருமுறை ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மக்களிடையே நற்போதனை செய்து கொண்டிருக்கையில்> சுவர்;க்கத்திற்கு எட்டு வாயில்களும்> நரகத்திற்கு ஏழு வாயில்களும் இருக்கிறதென்று கூறி நரகத்திலுள்ள ஸக்ரான் என்ற மலையைப் பற்றியும்> அதனருகே ஓடும் அஸியான் என்ற ஓடையைப் பற்றியும் குறிப்பிட்டு> நரகத்தில் பாவிகள் படும் வேதனையைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார்கள். உடனே ஒரு மூலையிலிருந்து யாரோ அலறும் சப்தம் கேட்டது. எல்லோரும் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். ஹழ்ரத் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அலறிக் கொண்டே தலைவிரி கோலமாக எழுந்து வெளியே ஓடிவிட்டார்கள். அதற்குப் பிறகு மூன்று நாட்கள் வரை அவர்களை வீட்டில் காணவில்லை. அவர்கள் தாயார் அவர்களை பல இடங்களிலும் தேடிபட பார்த்து இறுதியாக ஓர் ஓடையில் அவர்களை கண்டார்கள். அவர்களை சமாதனப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். வீட்டுக்கு வந்த யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கடும் நோய்வாய்ப்பட்டு போனார்கள். அந்நோயிலிருந்தும் மீள அவர்களுக்கு நான்கு மாதங்கள் ஆயிற்று. சற்று குணமடைந்ததும் அல்லாஹ் அவர்களை ஸிரியா சென்று மக்களை நேர்வழிப்படுத்துமாறும் ஏகதெய்வக் கொள்கையை விளக்கி அதன்படி இறைவணக்கத்தில் ஈடுபடச் செய்யுமாறும் ஏவினான்.அவ்வாறு அவர்கள் ஸிரியா சென்று மக்களுக்கு அறப் போதனை செய்தார்கள்.

அக்காலத்தில் ஹைருதூஸ் என்ற பெயருடன் ஒரு அரசன் இருந்து வந்தான். அவனது மனைவியின் பெயர் மலிகா. ஹப்ரிதூ என்றும் ஒரு குறிப்பில் உள்ளது. அவள் முதுமையடைந்திருந்தாலும் பனீ இஸ்ரவேலர்கள் அவளை மிகவும் கொண்டாடி வந்தனர். தனக்கு வயதாகி விட்டதால்> தன்னை தனது புருஷன் ஒருவேளை புறக்கணித்து விட்டால் என்ற செய்வது என்று பயந்து> அவளது மூத்த கணவனுக்குப் பிறந்த அழகான மகளை தம் புருஷனுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டால் தனது புருஷனோடு தானும் கடைசி வரை வாழ்ந்து வரலாம் என்று மனத்தில் எண்ணிக் கொண்டு> மெதுவாக தனது புருஷனுடன் ஆலோசனை செய்ததில் அவனும் சம்மதித்துவிட்டான். என்றாலும் மார்க்கத்தீர்ப்பு இந்த உறவு முறைக்கு சாதகமாக இருக்கிறதா? என்று கண்டறிய விரும்பினாள்.

மார்க்கத்தீர்ப்பை யாரிடம் கேட்பது என்று ஆலோசனை கேட்டதில் அனைவரும் ஹழ்ரத் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சொன்னார்கள். அவர்களை வரவழைத்து> இதுபற்றி கேட்டான். அதற்கு அவர்கள் ‘இந்த உறவுமுறை அறவே கூடாத ஒன்று. இயற்கைக்கு முரணானது. இறை ஆணைக்கு மாறானது. வேறுபெண்ணை மணமுடித்துக் கொள்ளவும்’ என்று கூறினார்கள்.

இந்தச் செய்தி அரசனின் மனைவிக்க எட்டியது. அவளது ஆத்திரத்திற்கு எல்லையில்லாமல் போய்விட்டது. தனது திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களை எப்படியும் ஒழித்துக் கட்டுவது என்று முடிவு செய்து திட்டமிட்டாள்.

அந்தத் திட்டப்படி ஒருநாள் தனது புருஷனோடு சரசசல்லாபஞ்செய்து அவன் சந்தோஷமாக இருந்த நேரம் பார்த்து அரசனுக்கு மதுவை அளவுக்கதிகமாக கொடுத்தாள். அவன் நிலைதடுமாற ஆரம்பித்தான். திட்டமிட்டபடி அவள் மனைவி தனது மூத்ததாரத்து மகளை நன்றாக அலங்கரித்து முழு போதையிலிருந்த தனது கணவன் முன்னால் அவளை வரச் செய்தாள். அவளது பேரழகைக் கண்டதும் அரசனது மதி மயங்க ஆரம்பித்தது. மகளை அணைத்துக் கொள்ள அவள் அருகே நெருங்க ஆரம்பித்தான்.

ஏற்கனவே தாய்சொல்லி தந்தபடி அவள் அதற்கு நிபந்தனை போட்டாள். என்னை நெருங்க வேண்டுமென்றால் காணிக்கையாக எஹ்யா நபியின் துண்டித்த தலை என் முன்னால் கொண்டு வந்து வைக்க வேண்டும் என்றாள்.

மதுபோதையிலும்,பெண் ஆசையிலும் மயங்கிய அரசன் தனது சேவகர்களை அழைத்து யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களை எங்கிருந்தாலும் கண்டு அவரது தலையை துண்டித்து தன் முன்னால் கொண்டுவர ஆணையிட்டான்.

அச்சமயம் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் முன் ஜி;ப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தோன்றி> அவர்களுக்கு நேரவிருக்கும் ஆபத்தை எடுத்துக் கூறி ‘நீங்கள் விரும்பும்பட்சத்தில் இந்த நாட்டையே தலைகுப்புற புரட்டி அழித்து விடுகிறேன்’ என்று கூறினார்கள்.

இந்த அரசனால் கொல்லப்பட வேண்டும் என்று எனது விதியில் எழுதப்பட்டுள்ளதா? என்றுகேட்டார்கள் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

ஆம். என்றார்கள் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

அப்படியாயின் நான் அதற்கு எதிர்த்து என்ன பயன்? விதிப்படியே நடக்கட்டும் என்று கூறினார்கள். அச்சமயத்தில் அரசனின் சேவகர்கள் வந்து யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிரசை துண்டித்து தம்மோடு எடுத்துச் சென்று விட்டார்கள்.

அரசன் முன் அந்த சிரசு வைக்கப்பட்டதும் அரசன் அதைக் கூர்ந்து நோக்கினான். அந்த துண்டிக்கப்பட்ட சிரசிலிருந்து அந்தப் பெண்ணை நீ மணப்பதோ> அவளருகில் நெருங்குவதோ கூடாது. கூடாது!! என்று முணுமுணுக்கும் சப்தம் அவவனது செவிகளில் மெதுவாக ஒலித்தது.

அந்த அரசனின் மனைவி அந்தப் பெண்ணை அந்த அரசனோடு திருமணம் செய்து வைத்து விட்டாள். உடனே எழுந்த ஒரு சூறாவளிக் காற்று அந்த அரசனை அலக்காக தூக்கி பாலைவனத்தில் வீசி எறிந்தது. அங்கு தயாராக நின்று கொண்டிருந்த ஒரு சிங்கம் அவனைக் கொன்று தின்றுவிட்டது.

யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நேர்ந்த கதி மக்களுக்குத் தெரிய வந்ததும் அவர்கள் கொதித்தெழுந்தனர். இது அடுத்த நாட்டு அரசனின் காதுக்கும் எட்டியது. இதுதான் சமயம் என்று பார்த்த அவன் உடனே படையெடுத்து அரசியையும்> அவள் மகளையும் கொன்று அரசிற்கு ஆதரவாக இருந்த 70000பனீ இஸ்ரவேலர்களையும் சிரச் சேதம் செய்து விட்டான்.

ஹழ்ரத் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஷஹீதாக்கப்படும் போது> அவர்களுக்கு வயது 75. அவர்களது புனித உடல் டமஸ்கஸில்(திமிஷ்க்) அடக்கம் செய்யப்பட்டது.

Add Comment

Your email address will not be published.