ஸூபி ஹழ்ரத் அவர்களின் 30வது வருட கந்தூரி விழா ஏற்பாடுகள்!

ஸூபி ஹழ்ரத் அவர்களின் 30வது வருட கந்தூரி விழா ஏற்பாடுகள்!

By Sufi Manzil 0 Comment August 19, 2011

Print Friendly, PDF & Email

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளாலும் எங்கள் கண்மணி ரஸூலே கரீம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கருணையாலும் எங்கள் தாதாபீர் இமாமுல் ஆரிபீன், ஸுல்தானுல் வாயிழீன் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஹைதராபாதி ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களது கலீபா

அல்ஆரிபு பில்லாஹ் அல்முஹிப்பிர் ரஸூல், அல்ஆலிமுல் பாழில், அல்லாமா அஷ்ஷெய்குல் காமில் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் அஸ்ஸித்தீகி, அல்காதிரி, அன் நக்ஷபந்தி காஹிரி ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் 30வது வருட கந்தூரி வைபவம்இன்ஷாஅல்லாஹ் 2011 ஆகஸ்ட் 24ம் திகதி புதன்கிழமை இரவு 10.30 மணிமுதல் (ஹிஜ்ரி 1432 ரமலான் பிறை 24) ஸூபி ஹழ்ரத் தர்ஹா ஷரீபில் (குப்பியாவத்தை ஜும்ஆ பள்ளி, கொழும்பு-10) அல்ஆரிபுபில்லாஹ் அல் முஹிப்பிர்ரஸூல், அல்ஆலிமுல் பாழில் மௌலானா மௌலவி முஹம்மது அலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி காதிரி, ஸூபி, காஹிரி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் விமரிசையாக நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல்:

இரவு 10.30 மணி கொடியேற்றத்துடன் ஜியாரம் ஆரம்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து திருக்குர்ஆன் ஷரீப் தமாம், திக்ர் மஜ்லிஸ், பயான் இறுதியாக ஸஹர் நேர்ச்சை விருந்துபச்சாரத்துடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுறும்.

ஹிஸ்புல்லாஹ் ஸபை,
இல. 33 A டிக்மன்ஸ் ரோட், கொழும்பு – 05.

தலைவர்; அல்ஹாஜ் எம்.ஏ.எம். நிலாம், இஷாக் அன் கம்பெனி, 45, சத்தாம் வீதி கொழும்பு-01

செயலர்: அல்ஹாஜ் எஸ்.எச். அப்துல் வஹ்ஹாப், 238, இரண்டாம் குறுக்குத் தெரு, கொழும்பு-11

பொருளாளர்: அல்ஹாஜ் எம்.எஸ்.எம் காமில், 292 யு, காலிவீதி, கொழும்பு-04.

இவ்விரு மகான்களின் பேரிலுள்ள நேர்ச்சை, நன்கொடைகளை

AlHaj S.H.A. Wahhab,

Thread House,

238 Second Cross Street,

Colombo-11.

என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக்கவும்.

காயல்பட்டணத்தில் கந்தூரி விழாக்கள்!

அல்ஆரிபு பில்லாஹ் அல்முஹிப்பிர் ரஸூல், அல்ஆலிமுல் பாழில், அல்லாமா அஷ்ஷெய்குல் காமில் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் அஸ்ஸித்தீகி, அல்காதிரி, அன் நக்ஷபந்தி காஹிரி ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் 30வது வருட கந்தூரி வைபவம்இன்ஷாஅல்லாஹ் 2011 ஆகஸ்ட் 24ம் திகதி புதன்கிழமை இரவு 10.30 மணிக்கு (ஹிஜ்ரி 1432 ரமலான் பிறை 24) அன்று காயல்பட்டணம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் நடைபெறும். அச்சமயம் மாபெரும் குத்பிய்யா மஜ்லிஸ் நடைபெறும்.

அல்ஆரிபு பில்லாஹ் அல்முஹிப்பிர் ரஸூல், அல்ஆலிமுல் பாழில், அல்லாமா அஷ்ஷெய்குல் காமில் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் அஸ்ஸித்தீகி, அல்காதிரி, அன் நக்ஷபந்தி காஹிரி ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் 30வது வருட கந்தூரி வைபவம் இன்ஷாஅல்லாஹ் 2011 ஆகஸ்ட் 25 ம் திகதி (ஹிஜ்ரி 1432 ரமலான் பிறை 24) வியாழன் கிழமை காலை சுப்ஹிலிருந்து கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு மாலை 5 மணிக்கு தமாம் செய்யப்படவிருக்கிறது. இவ் வைபவம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி காஹிரி அன்னவர்கள் தலைமையில் நடைபெறும்.

அனைத்து நிகழ்ச்சிகளிலும் அனைவர்களும் கலந்து சிறப்பிக் வேண்டுகிறோம்.

ஹிஸ்புல்லாஹ் சபை,
இந்தியா, இலங்கை.