ஷெய்குனா வாழ்வில் நடைபெற்ற காஜா நாயகத்தின் கராமத்து!

ஷெய்குனா வாழ்வில் நடைபெற்ற காஜா நாயகத்தின் கராமத்து!

By Sufi Manzil 0 Comment April 11, 2017

Print Friendly, PDF & Email

ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் வாழ்வில் நடைபெற்ற அற்புதசம்பவத்தை அன்னாரின் கலீபா மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி அவர்கள் ஹிஜ்ரி 1438 ரஜப் பிறை 6 அன்று இந்தியா, காயல்பட்டினத்தில் அமைந்திருக்கும் ஸூபி மன்ஸிலில் நடைபெற்ற காஜா நாயகத்தின் கந்தூரி வைபவத்தின்போது சொன்ன தகவல் :
ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்களின் சகோதரர் மகளுக்குத் திருமணம் செய்விக்கும் பொறுப்பு அன்னாருக்கு வந்து சேர்ந்தது. அப்போது அவர்களின் குடும்பச் சொத்து ஒரிசா மாநிலம் கட்டாக்கில் இருந்து வந்தது. அதை விற்று கல்யாணம் முடிக்க ஷெய்குனா அவர்கள் திட்டமிட்டு கட்டாக் சென்றார்கள். அங்கு அவர்கள் அந்த சொத்தை விலை பேசினார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. இதனால் மனம் சஞ்சலமுற்றிருந்தார்கள். உடனே அவர்கள் காஜா நாயகத்திற்கு ஒரு நேர்ச்சை வைத்தார்கள்.

இந்த சொத்து அவர்கள் எதிர்பார்த்த விலைக்கு விற்றால் காலில் செருப்பு அணியாமல் அஜ்மீர் சென்று காஜா நாயகத்தை ஜியாரத் செய்வதாக நேர்ச்சை செய்து கொண்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்த மறுநாளே ஒருவர் வந்து அந்த சொத்தை ஷெய்குனா அவர்கள் எதிர்பார்த்த விலைக்கே வாங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்து அதன்பிறகு ரிஜிஸ்டரும் முடிந்தது.

ஷெய்குனா அவர்கள் மகிழ்ச்சியுற்றார்கள். உடனே அஜ்மீர் சென்று ஜியாரத் செய்ய புறப்பட்டார்கள். செல்லும் வழியிலேயே அவர்களின் செருப்பு அறுந்தது. அச்சமயம்தான் அவர்களுக்கு தாங்கள் செய்த நேர்ச்சை ஞாபகத்திற்கு வந்தது. நாம் செருப்பில்லாமல் அஜ்மீர் செல்வதாக அல்லவா நேர்ச்சை செய்துள்ளோம், அதனால்தான் காஜா நாயகம் நமக்கு இதை ஞாபகப்படுத்துகிறார்கள் என்று செருப்பில்லாமல் அஜ்மீர் சென்று ஜியாரத் செய்து வந்து தமது நேர்ச்சையை நிறைவேற்றினார்கள்.

Add Comment

Your email address will not be published.