பேர்காலமானபோது …

பேர்காலமானபோது …

By Sufi Manzil 0 Comment June 23, 2015

Print Friendly, PDF & Email

பேர்காலமானபோது சொர்க்கத்து மாதர்களும்
மலக்குகளும் பட்சிகளும் ஆமினத்தை சூழ்ந்தார்கள்

அவர்களுடைய தஸ்பீஹும் ஓசை சப்தம் தொனிகளையும்
ஆமினத்தும் ஆசையுடன் இன்பமாய் கேட்டார்கள்

அவ்வேளை தன்னில் எங்கள் வள்ளல் முஸ்தபா நபியும்
ஆண்டவனை ஓர்மையாக்கி விரலைக் கொண்டு சாடை செய்தே

தொப்புளும் அறுக்கப்பட்டு, கத்னாவும் செய்யப்பட்டு
தலை எண்ணெய் பூசப்பட்டு கண் சுருமா போடப்பட்டு

கலிமாவை ஓதிக் கொண்டு அழகான சூரத்திலே
ஆதிக்கு சாஷ்டாங்கம் செய்து நபி பிறந்தார்கள் 3

பிறந்தவுடன் தாயாரும் பெற்றதற்கு யாதொன்றும்
அடையாளம் காணாமல் தூய்மையுடன் ஆகிவிட்டார்

நபியுடைய ஓர் ஒளிவு சாமூரு கோட்டைகளை
கண்ணாலே பார்க்க மட்டும் வெளிப்பட்டு நின்றதுகாண்

ஆயிரம் வருடமாக அமராத நெருப்பதுவும்
அஹ்மது பிறந்ததினால் அமர்ந்து நூர்ந்து விட்டதுகாண்

புத்துகளும் அடித்துக் கொண்டு கீழே விழுந்தது காண்
கிஸ்ராவும் போதமாறி தட்டழிந்து போகிவிட்டான்

அவ்வேளை ரப்பில் நின்றும் இந்த நபி தம்மை கொண்டு
அடங்களிலும் சுற்றுமென சப்தத்தை கேட்டார்கள்

அப்போது பூமியிலும் வானநகர் அடங்களிலும்
இமைக் கொட்டி நேரத்திலே மலக்கு சுத்தி மீண்டார்கள்

ஆலத்தார் அடங்கள்களும் ஆண்டவர்கள் பிறந்ததினால்
சந்தோஷமெனும் கடலில் மூழ்கி சுகமெடுத்தார்கள்

மவ்லாய சல்லி வசல்லிம் தாயிமன் அபதன்
அலா ஹபீபிக்க ஹைரில் ஹல்க்கி குல்லிஹிமி

Add Comment

Your email address will not be published.