பூ தென்றல் காற்றாய்…

Print Friendly, PDF & Email

பூ தென்றல் காற்றாய்

       புகழ் மா மதினா

பூமானின் ரவ்லாவை

       நிதம் ஏக ஆசை! (2)

மஹ்மூது மகிமைகள் பாடிட ஆசை

மஹ்மூதர் ஆசிகள் அணிந்திட ஆசை

யா ஹபீபி யா ஹபீபி

யாஹபீபல்லாஹ் யா ஹபீபல்லாஹ்!

அன்பில் அளித்தேன் காதலாய்

       ஆவல் மிகுதியாம் நபி

பண்பின் சிகரம் மாநபி

தாங்கள் போற்றும் மாமணி (2)

அஹ்மது நபியின் மீதிறைவா

அனுதிம் அருள் மழைப் பொழிந்திடுவாய்

மஹ்மூது மகிமைகள் பாடிட ஆசை

மஹ்மூதர் ஆசிகள் அணிந்திட ஆசை

யா ஹபீபி யா ஹபீபி

யாஹபீபல்லாஹ் யா ஹபீபல்லாஹ்!

வறியோர் வாழ வாஞ்சையாம்

       வரிகள் வகுத்த மாநிதி

வானுயர்ந்த சேவையாம்

       வையம் போற்றும் மாநபி (2)

(அஹ்மது நபியின்…)

தீனின் ஜோதியாம் நபி உயர்

       தீனின் சுவை மொழியாம் நபி

ஸெய்யிதுல் லில் முர்ஸலீன்

சிந்தையாள் வீரர் யா நபி (2)

(அஹ்மது நபியின்…)

ஆதியின் நூரா னோரே

அழகின் எழில் பூஞ்சோலையே

அறிவான் ஞான மாமறை

அண்ணல் எங்கள் முஸ்தஃபா (2)

(அஹ்மது நபியின்…)

வெய்மை வாழ்வேன் ஆனந்தம்

       மேலாம் போதங்கள் ஆற்றினார்

பொய்மைகள் விரைந் தோற்றி நீ

       வேய்மையின் வழிக் காட்டி நீ (2)

அஹ்மது நபியின் மீதிறைவா

அனுதிம் அருள் மழைப் பொழிந்திடுவாய்

மஹ்மூது மகிமைகள் பாடிட ஆசை

மஹ்மூதர் ஆசிகள் அணிந்திட ஆசை

யா ஹபீபி யா ஹபீபி

யாஹபீபல்லாஹ் யா ஹபீபல்லாஹ்!

(நிறைவு)

2 thoughts on “பூ தென்றல் காற்றாய்…”

  1. குத்புல் அக்தாபே !
    குரு மணியே !

    பாடல் வரிகளையும் ,

    கதீஜா என் தாயே!

    பாடல் வரிகளையும் பதிவு செய்யுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *