பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்காதீர்!

பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்காதீர்!

By Sufi Manzil 0 Comment June 29, 2015

Print Friendly, PDF & Email

786

அன்புடையீர்,                                                  அஸ்ஸலாமு அலைக்கும்.

சுன்னத் வல் ஜமாஅத்தின் உயரிய கொள்கைகளை புறந்தள்ளி இஸ்லாத்தின் பெயரால் இடைக்காலத்தில்  தோன்றிய குழப்பவாத கூட்டங்களான தப்லீக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, அஹ்லே ஹதீத், போலித் தவ்ஹீத் ஜமாஅத்தினர் நம் குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்க தற்போது புதுப்புது யுத்திகளை கையாள்கின்றனர். தங்களின் வழிகெட்ட கொள்கைகளை நேரடியாக திணிக்க முயன்று தோற்றுப்போனவர்கள் இன்று —

  • குர்ஆன் ஓத மக்தப்
  • மார்க்கக்கல்வி கற்க மதரஸா (ஒருங்கிணைந்த பாடத்திட்டம்)
  • தரமான உலகக்கல்வி கற்க பள்ளிக்கூடங்கள்

என்ற போர்வையில் தங்களின் கேடுகெட்ட சித்தாந்தங்களை மழலைக் குழந்தைகளின் மனதிலே திணித்து விடுகின்றனர். அவற்றுள் சில.

  • இறைவனுக்கு உருவம் உண்டு
  • அல்லாஹ்வால் பொய் சொல்ல முடியும்
  • நபியவர்களின் கண்ணியத்தை குறைத்தல்
  • நல்லடியார்களை கேவலப்படுத்துதல்
  • நம் முன்னோர்களை காபிராக்குதல்
  • நம் நல்லமல்களுக்கு ஷிர்க் முத்திரை

 ان النبى صلى الله عليه وسلم قال فاياكم واياهم لا يضلونكم ولا يفتنونكم

‘நீங்கள் அந்த வழிகெட்ட கூட்டங்களை விட்டும் தூர விலகி இருங்கள், அவர்களை உங்களிடம் வரவும் விடாதீர்கள். அப்படியானால் அவர்கள் உங்களை வழிகெடுக்கவோ, உங்களை குழப்பத்தில் ஆக்கவோ முடியாது.’

நூல்: புகாரி, முஸ்லிம்.

எனவே சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைகளை வலுவாக பின்பற்றும் சகோதரர்களே – குறிப்பாக தாய்மார்களே!

இந்த வழிகேடர்களின் விஷயத்தில் தயவு செய்து சிந்தித்து முடிவெடுங்கள். உலக ஆதாயத்திற்காக நம் பிள்ளைகளின் ஈமான் பறிபோக நாமே காரணமாகி விடக்கூடாது. நாளை மறுமையில் வல்ல இறைவனின் சந்நிதானத்தில் நாம் குற்றவாளிக் கூண்டில் நிற்கக்கூடாது.

எனவே சுன்னத்வல் ஜமாஅத்தினரால் நடத்தப்படும் மக்தப், மத்ரஸா, பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து உங்களது ஈமானையும், உங்கள் பிள்ளைச் செல்வங்களின் ஈமானையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். சுவர்க்கத்து வேந்தர் சுந்தர நபியின் நேசத்தை உங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டுங்கள். மறுமையில் அவர்களோடு இருப்பதற்கு துணை புரியுங்கள்.

அல்லாஹ் நம்மையும், நம் சந்ததிகளையும் கண்மணி நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டாலும், இறைநேசர்களின் துஆ பரக்கத்தாலும்  இந்த வழிகேடர்களிடமிருந்து காப்பாற்றி அருள்வானாக. ஆமீன்.

இவண்,

ஜம்இய்யத்து அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் (JAS),

(தோற்றம்: 1990)

சதுக்கை தெரு, காயல்பட்டினம்-628204

Add Comment

Your email address will not be published.