படைப்பினங்களை அல்லாஹ் என்று சொல்லலாமா?
By Sufi Manzil
கேள்வி: சிலர் விலங்கினமான ஆடு, மாடு, பன்றியும் அல்லாஹ், கிருஷ்ணனும் அல்லாஹ், மலமும் அல்லாஹ் என்று சொல்கிறார்கள்! கேட்டால் அனைத்தும் அல்லாஹ்தான். இதைத்தான் ஞானவான்கள் போதித்தார்கள். நீங்கள் புரிந்ததுதான் தவறு என்று வாதிட்டுக் கொண்டிருக்கிறார்களே! இதற்கு விளக்கம் தருக..
பதில்:
தவறாக ஞானத்தை விளங்கிக் கொண்டு தானும் வழிகெட்டு மக்களையும் வழிகெடுத்துக் கொண்டிருக்கும் போலி ஷெய்குமார்கள் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் கூறும் கூற்று மிகவும் தவறானது. நமது ஷெய்குமார்கள் போதித்து தந்த ஞானத்திற்கு முற்றிலும் மாறுபட்டது.
ஷெய்குனா முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் ஹைதராபாத் கத்;தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் தங்கள் நூலானா அல் ஹகீகா என்ற நூலில் ‘கட்டளைகளையும் குணபாடுகளையும் பின்பற்றுதல் என்னும் தலைப்பின் கீழ்,
‘கழுதை என்னும் பெயரை மாட்டின் பேரில் புழங்குவது தடை என்பதுபோல்,
மாடு என்னும் பெயரை குதிரையின் பேரில் புழங்குவதும் குதிரையின் பெயரை மனிதனின் பேரில் புழங்குவதும் தடுக்கப்பட்டதாகும். என்பதுபோல
கழுதை, மாடு, குதிரை, மனிதன் இவைகள் அனைத்தும் உயிரினம் எனும் உள்ளரங்கத்தில் ஒரே ஐனாக இருந்தாலும்; சரி.
இதுபோன்றுதான் ஷுஊனுடைய மர்த்தபாவில் தாத்துக்கு ஐனாக இருந்தாலும் சரி. உஜூது எனும் உள்ளமையில் ஒன்று மற்றதின் ஐனாக இருப்பதும் இதுபோலவேதான்.
அவைகளில் ஒன்று மற்றவைகளின் ஐனாக இருப்பதை நீ அறிந்திருப்பதுடன் அதாவது விலங்கு என்னும் உள்ரங்கத்திலும் உஜூது எனும் உள்ரங்கத்திலும் ஒன்று மற்றதுதான் என்று அறிவதுடன், அதில் ஒன்றுடைய பெயரை மற்றதன் பேரில் புழங்குவது உனக்காகாது. ஏனெனில் கூட்டத்தை விட்டும் நீ தனித்துப் போவது நிர்பந்தம் ஆகிவிடும் என்பதற்காக.
குறிப்பாக்கப்படாத கலப்பற்ற உஜூதின் நேர்பாட்டில் வைக்கப்பட்ட ஹக்குடைய இஸ்முகளை கௌனீயான குறிப்பான வஸ்துக்களின் பேரில் புழங்குவதாகிறது ஷரீஅத்துடைய ஹுக்மு கொண்டு ஷிர்க்காகும். தரீகாவுடைய ஹுக்மைக் கொண்டு குப்றுமாகும். இல்மில் எகீனைக் கொண்டு அதனுடைய ஹகீகத்தை அறிந்திருந்தால் தரீக்கத்துடைய ஹுக்மில் குப்றுமாகும்.
நீ அதனுடைய ஹகீகத்தைக் கொண்டு அறியாதவனாக இருந்தால் ஷரீஅத்திலும், தரீக்கத்திலும் ஷிர்க்காகும்.
உன்னுடைய பார்வையைத் தொட்டும், உன் உள்பார்;வையைத் தொட்டும் கோலங்கள் எனும் திரையை உயர்த்தப்படுவதற்கு முன்பதாக, அறிந்தோ, அறியாமலோ உன் நப்சையோ மற்றதையோ ஹக்கு என்று சொல்லக் கூடாது.
வாயால் சொல்லாமல் கல்பைக் கொண்டு அறிவது அதாவது இவைகள் ஹக்குத்தான் என்று அறிவது உனக்கு குற்றமில்லை. ஏனெனில், நிச்சயமாக கல்பில் உள்ள இருள்களாகிறது அது இல்முல் எகீன் எனும் சூரியனின் பிரகாசத்தைக் கொண்டு நீங்கி விட்டது. ஆனால், உன்னுடைய வெளிரங்கமாகிறது அது இருளடைந்ததாகவும், அது ஹகீகத்துடைய பார்வை எனும் ஒளியைக் கொண்டு அது ஒளிபெற்றதாகவும் ஆகும்.
1 Comment found
super
Assalamu allailum. Play store apps vandal serappaha irrukum .sppdy irundal apps name sent to