நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம்

நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம்

By Sufi Manzil 0 Comment March 10, 2015

Print Friendly, PDF & Email

நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்களது இரண்டாவது புதல்வரான நபி இஸ்ஹாக்  அலைஹிஸ்ஸலாம் அவர்கள். இஸ்ஹாக் என்றால் சிரிப்பவர் என்று பொருளாகும். இவர்கள் ஆஷூரா நாளில் சாரா அம்மையாருக்கு பிறந்தார்கள். உருவத்தில் தம் தந்தையை பெரும்பாலும் ஒத்திருந்தனர்.

திருமறையில் அல்லாஹ் குறைவான இடங்களில் நபி இஸ்ஹாக்  அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வரலாறை குறிபிட்டாலும் அல்லாஹ் அந்த வரலாறை நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இணைத்தே குறிப்பிடுகிறான் .

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒருநாள், சிலரை மலக்குகள்  என்று அறியாமல் அழைத்து கறிசமைத்து விருந்து கெடுத்தார். அவர்கள் பேசிகொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் கை உணவின் பக்கம் நெருங்கவில்லை அந்த சமயத்தில் நமது தந்தை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சற்று அச்சம் கொள்கிறார்கள் அவர்களிடம் நீங்கள்  யார் ஏன் இங்கு வந்தீர்கள் என்று வினவ தொடங்கிவிட்டார். அதற்கு அந்த மலக்குகள் நபி இப்ராஹீமே அச்சமுற வேண்டாம். நங்கள் இருவரும் மலக்குகள் நாங்கள் உனது சகோதரனின் மகனான லூத் அலைஹி வசல்லம் அவர்களது சமூகத்தை அழிக்க அல்லாஹ் எங்களை அனுப்பியிருக்கிறான் என்று கூறினார்கள்.

மேலும் அல்லாஹ் உங்களுக்கு ஒரு சுப செய்தி கூற சொன்னான் அது என்ன வென்றால் உங்களுக்கு சாரா அம்மையாருக்கும் ஒரு அழகான மகன் பிறப்பான். அவரது பெயர் நபி இஸ்ஹாக்  அலைஹிஸ்ஸலாம். மேலும்  அல்லாஹ் பல நபிமார்கள் இவர்களது சந்ததியினர்களில்  உருவாவார்கள் என்றார்கள் .அப்போது இவர்களுக்கு வயது அதிகமாக இருந்ததால் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

இவர்களின் தாயார் ஸாரா அம்மையார் தமது 130ஆவது வயதில் காலமாயினர்.

இவ்வாறு நபி இஸ்ஹாக்  அலைஹிஸ்ஸலாம் அவர்களை பற்றி சுபச்செய்தி செய்த மலக்குகளிடம் நமது தந்தை இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூகத்தை பற்றி தர்க்கம் செய்ய தொடங்கினார்கள். ஏன் ஏன்றால் லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது தம்பி மகன் மேலும் தனது  மனைவி சாரா அம்மையாரின் சகோதரன் என்பதால் சாரா அம்மையாரும்  வருந்த ஆரம்பித்துவிட்டார்கள். மேலும் அங்கு வருகைதந்த மலக்குகள் கூறினார்கள் நபி  இப்ராஹீமே (அலைஹிஸ்ஸலாம்) நீர் இந்த விசியத்தை புறக்கணித்து விடுவீர்களாக! ஏன் என்றால் அல்லாஹுவின் புறத்திலிருந்து கட்டளை வந்துவிட்டது, நிச்சயமாக அவர்கள் தட்டமுடியாத வேதனை அவர்களை வந்தே தீரும் என்று அவர்கள் கூறி சென்றுவிட்டார்கள்.

மேலும் நபி இஸ்ஹாக்  அலைஹிஸ்ஸலாம் அவர்களின்  சந்ததிகளில் தான் நிறைய நபிமார்கள் வந்ததாக மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு அல்லாஹ் பல இடங்களில் சிலாகித்து குறிப்பிடுகிறான். மேலும் அல்லாஹ் கூறுகிறான் நபி இஸ்ஹாக்  அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹுவின் கட்டளையை நிறைவேற்றும் ஆற்றல் பெற்றவராகவும் மேலும் அல்லாஹுவின் மார்க்க நுணுக்கங்களை கண்டறியும் ஆற்றல் பெற்றவராக அல்லாஹ் மேலும் மேலும் இவரை சிலாகித்து கூறுகிறான்.

தம் தந்தையின் ஆணைப்படி கன்ஆன் நாடு சென்று ஓரிறைக் கொள்கையை மக்களுக்கு எடுத்துரைத்தனர். அங்கு தம் மாமன் மகள் ருபக்காவையும் மணமுடித்து வாழ்ந்தனர். 80 வயதாகியும் பிள்ளைப்பேறு இவர்களுக்கு இல்லை.

பின்னர் இத்தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது. முதலில் பிறந்த குழந்தையின் குதிகாலை கொழுகிக் கொண்டு அடுத்த ஆண்பிள்ளை பிறந்தது. முன்னால் பிறந்ததற்கு முன்னால் பிறந்தது என்று பொருள்படும் ஈசு என்றும், அடுத்தற்கு குதிகாலில் கொழுகி கொண்டு வந்தது என்று பொருள்படும் யஃகூப் என்றும் பெயரிட்டனர்.

தாம் இறைவனைத் தொழுதுவந்த பள்ளியை யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு தங்களது 180வது வயதில் மறைந்தனர். இவர்களின் அடக்கவிடம் இவர்களின் பெற்றோர்களின் அண்மையில் உள்ளது.

Add Comment

Your email address will not be published.