தஃவத்தே இஸ்லாமி சுன்னத் ஐமாஅத்தா?

தஃவத்தே இஸ்லாமி சுன்னத் ஐமாஅத்தா?

By Sufi Manzil 0 Comment August 20, 2020

Print Friendly, PDF & Email

அஃலா ஹஜ்ரத் மாத இதழ் பரேலவி ஷரீப் 2010 ஆம் ஆண்டு மே மாதம்

எதார்த்தத்தை பிரகடனப் பபடுத்துதல்.
சங்கைக்குரிய வாசகர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

பிரகடனப்படுத்துதல் யாதெனில்:-
டில்லி பதிப்பு ‘ஜாமே நூர்‘ மாத இதழ் 2010 ம் ஆண்டு மே மாத இதழின் தலைப்பு பக்கத்தில் தஃவத்தே இஸ்லாமி இயக்கத்திற்கு ஆதரவாக நான் துஆ செய்த வார்த்தைகளாக என்னளவில் இணைத்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஜாமே நூரில் உள்ள இந்த வார்த்தைகளை வாசகர்கள் பார்த்தால் நானும் தஃவத்தே இஸ்லாமிய இயக்கத்திற்கு பாதுகாவலராகவும், உறுதுணையாளராகவும் இருப்பதாக தெரிந்து குணபாடு அளித்து விடும்.

எதார்த்தம் என்னவெனில்:-பல வருடங்களுக்கு முன், தஃவத்தே இஸ்லாமி இயக்கத்திற்கு சம்பந்தமான ஒரு பத்வாவை ஒருவர் வெளியிட்டதற்கு அதைஉறுதிபடுத்தியிருந்தேன், அப்போது அஃலா ஹஜ்ரத் அவர்களின் வழிமுறையை பரப்புவதாகவும், பாதுகாக்கக் கூடியதாகவும் இருந்தது. இவ்வியக்கதின் செயல்பாடுகளும், சொற்களும் அஃலா ஹஜ்ரத் அவர்களின் வழிமுறையை பிரபல்யமாக்கக் கூடியதாக இருந்தது.
என்றாலும் இப்போது இரண்டு மூன்று ஆண்டுகளாக அஃலா ஹஜ்ரத் அவர்களது வழிமுறைக்கு முற்றிலும் மாறுபட்டிருப்பதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இப்படி பிரபல்யமாகவும் இருந்து வருகிறது. இதை கேட்டு மிகவும் கவலைப் படுகிறேன்.

அஃலா ஹழ்ரத் அவர்களின் வழிமுறையை செயல்படுத்துவதாகவும், பரப்புவதாகவும், தியாகம் செய்வதாகவும், சொல்,செயல் யாவும் அஃலா ஹழ்ரத் அவர்களின் வழிமுறையை பின்பற்றுவதாகவும் இருந்த இந்த தஃவத் இஸ்லாமி இயக்கம், திடீரென்று அஃலா ஹஜ்ரத் அவர்களின் வழிமுறைக்கு மாறுபட்டு அழிச்சாட்டியத்திற்கு இறங்கி விட்டதே! அஃலா ஹழ்ரத் அவர்களின் வழிமுறையை முற்றிலும் மோதக் கூடியதாக ஆகி விட்டதே! (என்று மிகவும் கவலைப் படுகிறேன்)

ஆகவே இந்த நிலைக்கு மாறிவிட்ட இந்த இயக்கத்திற்கு பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் இருப்பது பொருத்தமில்லை. இல்லை இல்லை முற்றிலும் இது அசாத்தியமாகும்.

ஆகையினால் ஜாமே நூரில் என்னளவில் சேர்த்து சொல்லப்பட்ட வார்த்தைகளை கண்டு ஏமாந்து மோசம் போய்விடாதீர்கள்.!
வஸ்ஸலாம்.


பகீர் காதிரி முஹம்மது சுப்ஹான் ரஜாகான்
சுப்ஹானி
(அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படுமாக!)
ஆலிய்யா ரஜ்விய்யா தவச்சாலை நிர்வாகி
ரஜா நகர், சூதாகர் வீதி,
பரேலி ஷரீப், யு.பி. இந்தியா.

Add Comment

Your email address will not be published.