குர்பானி கறியை காபிர்களுக்கு கொடுக்கலாமா? – தேவ்பந்திகளின் பித்தலாட்டங்களுக்கு பதில்

குர்பானி கறியை காபிர்களுக்கு கொடுக்கலாமா? – தேவ்பந்திகளின் பித்தலாட்டங்களுக்கு பதில்

By Sufi Manzil 0 Comment August 1, 2020

Print Friendly, PDF & Email

கேள்வி: குர்பானி கறியை காஃபிர்களுக்கு கொடுக்கலாமா ?

ஹனஃபி மத்ஹபின்படியும் ஷாஃபிஈ மத்ஹபின் படியும் இதன் சட்டம் என்ன ?

பதில்: மத நல்லிணக்கம் என்ற பெயரில் காஃபிர்களுக்கு குர்பானி கறியை கொடுக்கலாம் என்று சில மௌலவிகள் பயான் செய்கின்றனர். அதற்கு மார்க்த்தில் அனுமதி இருக்கிறதா ?

குர்பானி கறியை பங்கிட்டு கொடுப்பது பற்றி மார்க்கம் தெளிவாக சொல்லியிருப்பது ஆதாரத்துடன் கீழே விளக்கப்பட்டுள்ளது.

ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரிய குர்பானி கறியை காஃபிர்களுக்கு கொடுக்கலாம் என்ற மக்களிடைய ஒரு நம்பிக்கையை உண்டாக்குவதற்காக
தேவ்பந்திய வஹாபிகள் செய்திருக்கும் மிகப்பெரிய மார்க்க மோசடியை பாருங்கள்.

காஃபிர்களுக்கு குர்பானி கொடுக்கலாம் என்று சொல்லித்தருவது தேவ்பந்திய தப்லீகிய வஹ்ஹாபிகளின் சூட்சியே. ஹனஃபி மத்ஹபிலோ ஷாஃபிஈ மத்ஹபிலோ அவ்வாறு ஒரு கருத்து இல்லை.

வஹாபிய கொள்கைகளைக் கொண்ட தேவ்பந்திய வஹாபிகள் தான் ஹனஃபி மத்ஹபில் காஃபிர்களுக்கு குர்பானி கொடுக்கலாம் என்று முதன் முதலாக நூல்களில் ஒரு பொய்யை எழுதிவைத்தது. ஹனஃபி மத்ஹபில் காஃபிர்களுக்கு குர்பானி கொடுக்கலாம் என்று பொதுவாக சொல்லுவது (அதாவது திம்மி என்று குறிப்பிடாமல் சொல்லுவது) எவ்வாறு அனுமதிக்கமுடியும்.

ஸுன்னத் வல் ஜமாஅத்தினுடைய எந்தவொரு இமாமும் அவ்வாறு எழுதியதாக இந்த தேவ்பந்திய வஹாபிகளாலும் தேவ்பந்திகளுக்கு சிங்கிடியடிப்பவர்களாலும் கியாமத்து நாள் வரை நிரூபிக்கவே இயலாது.

பஹிஷ்தீ சேவர், ஃபதாவா ரஹீமிய்யா, ஃபதாவா மஹ்மூதிய்யா, இஃலாஉஸ் ஸுனன் போன்ற தேவ்பந்திய வஹாபிய தப்லீகிய நூல்களிலும், தேவ்பந்து மத்ரஸாவின் ஃபத்வா இணைய தளமான தாருல் இஃப்தா தேவ்பந்திலும், மற்று தேவ்பந்திய இணைய தளங்களிலும், ஏனைய வஹாபிய இணைய தளங்களிலும், தேவ்பந்திய வஹாபிய மதரஸாக்களான லால்பேட்டை மதரஸா, காஷிஃபுல் ஹுதா மதரஸா , வேலூர் பாக்கியாத்து ஸாலிஹாத் மத்ரஸாவில் தற்போது உள்ள தேவ்பந்திய வஹாபிய முஃப்திகள் தான் இந்த சூட்சியையும் களவாட்டத்தையும் நடத்தி மக்களை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களோடு ஆதாரத்தை கேட்டால் ஃபதாவா ஆலங்கீரிய்யாவில் திம்மி க்கு கொடுக்கலாம் என்று உள்ளது என்பதை சொல்லி தான் மக்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் திம்மி அல்லாத காஃபிர்களுக்கு கொடுக்கலாமென்றோ, பொதுவாக காஃபிர்களுக்கு குர்பானி கறியை கொடுக்கலாம் என்றோ ஃபதாவா ஆலங்கீரிய்யாவிலும் இல்லை வேறு எந்த ஹனஃபி மத்ஹபின் இமாமும் எழுதவேயில்லை.

திம்மியான காஃபிர்களுக்கு குர்பானி கறியை கொடுக்கலாம் என்பது இமாம்களின் கூற்றாக இருக்கும்போது இந்தியாவிலுள்ள காஃபிர்களுக்கு கொடுக்கலாமென்ற சட்டம் இவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது. ஆனால் இந்தியாவில் திம்மி காஃபிர்கள் இல்லை. எனவே இந்திய காஃபிர்களுக்கு குர்பானி யின் கறியை கொடுப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

ஆனால் தேவ்பந்திய வஹாபிகளோ திம்மிக்கு கொடுக்கலாம் என்று ஃபதாவா ஹிந்திய்யாவில் (ஆலங்கிரீயில்) சொல்லப்பட்டதை எடுத்து காஃபிர்களுக்கு கொடுக்கலாம் என்று ஃபதாவா ஹிந்திய்யாவில் (ஆலங்கிரீயில்) உள்ளதுபோல் அவர்களுடைய நூல்களிலும் ஃபத்வாகளிலும் களவாட்டம் நடத்தி முஸ்லிம்களை ஏமாற்றி வருகின்றனர்.

மேலும் ஹனஃபீ மத்ஹபின் பிரபல மற்று நூல்களான ஃபதாவா தாதார்கானிய்யாவிலும் & பதாஇஸ்ஸனாஈ லும் திம்மிக்கு கொடுக்கலாம் என்றே வருகிறது.

ஆனால் இப்போது தேவ்பந்திய வஹாபிகள் புதிய ஒரு பித்தலாட்டத்தை நடத்தியுள்ளனர்.

இஃலாஉஸ் ஸுனன் ( اعلاء السنن) என்ற நூலில் காஃபிர்களுக்கு கொடுக்கலாம் என்று உள்ளது என்று கூறி ஒரு புதிய மோசடியை செய்துள்ளனர். இந்த நூல் இமாம்களால் எழுதப்பட்ட நூல் அல்ல.

தேவ்பந்திய வஹாபியான ஜஃபர் அஹமது உஸ்மானீ தானவீ என்ற ஒரு மௌலவீ சுமார் 22 வருடங்களுக்கு முன் எழுதிய இந்த இஃலாஉஸ் ஸுனன் ( اعلاء السنن) என்ற நூலை கொண்டு வந்து விட்டு ஹனஃபீ மத்ஹபின் இமாம்களின் நூல் என்று சொல்லி பொய் பித்தலாட்டம் நடத்தும் தேவ்பந்திய வஹாபிகளும் அந்த கூட்டத்தை சார்ந்த கும்பகோணம் ஷறஃபுதீன் ஃபைஜீ நூரானி என்ற மௌலவியும், இவர்களுடைய பொய் பித்தலாட்டங்களை கையும் களவுமாக பிடிக்கப்பட்டது

உண்மை இவ்வாறு இருக்க தேவ்பந்திய வஹாபிகளிடமிருந்து கிடைத்த கருத்தை வைத்துக் கொண்டுதான் சில ஸுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்கள் குர்பானி கறியை காஃபிர்களுக்கு கொடுக்கலாமென்று தவராக சொல்லிக்கொண்டிருக்கிறார்களே தவிர எந்தவிதமான ஆதாரத்தின் அடிப்படையில் அல்ல. தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள், வருத்தமாக இருக்கிறது.

குறிப்பு :- திம்மி என்பது இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாட்டில் அரசாங்கத்திற்கு ஜிஸ்யா எனும் வரியை செலுத்தி அந்த அரசாங்கத்தோடோ அந்நாட்டு முஸ்லிம்களோடோ பகைமையில்லாமல் வாழும் காஃபிர்களை குறிக்கிறது. (அப்போது இந்தியாவிலுள்ள காஃபிர்களை திம்மி என்ற வகையில் சேர்க்க இயலாது).

ஷாஃபிஈ மத்ஹபின்படி எந்த காஃபிருக்கும் குர்பானி கறியை கொடுக்கக்கூடாது. ஷாஃபிஈ மத்ஹபின் நூல்களான துஹ்ஃபா, நிஹாயா, பாஜூரி இப்னு காஸிம் போன்ற நூல்களில் இது தெளிவாக உள்ளது.

ஸுன்னத் வல் ஜமாத்தினுடைய எந்தவொரு இமாமும் ஹனஃபி மத்ஹபில் திம்மி அல்லாத காஃபிர்களுக்கு குர்பானி கறியை கொடுக்கலாம் என்றோ அல்லது பொதுவாக காஃபிர்களுக்கு கொடுக்கலாமென்றோ எழுதியதாக இந்த தேவ்பந்திய வஹாபிகளால் கியாமத்து நாள் வரையும் நிரூபிக்க இயலாது.

ஸுன்னத் ஜமாஅத்தின் நூல்களை உபயோகித்து தேபந்திய வஹாபிகள் செய்யும் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்று தான் இந்த குர்பானி விஷயத்திலும் இவர்கள் செய்தது

காஃபிர்களுக்கு குர்பானி கறியை கொடுத்து குர்பானியின் நன்மையை வீணடிக்கவேண்டாம் சகோதரர்களே !

 

Add Comment

Your email address will not be published.