காண வேண்டும் நபிகள் பெருமானை…

காண வேண்டும் நபிகள் பெருமானை…

By Sufi Manzil 0 Comment June 24, 2015

Print Friendly, PDF & Email

காண வேண்டும் நபிகள் பெருமானைக்

காலைக் கதிராய் உதித்த பூமானே (2)

சந்தனப் பூங்காற்றே கண்டு வந்து

       சம்மதம் சொல்லி விடு

எந்தன் இரு விழிகள் ஏங்கும்

       சங்கதிச் சொல்லி விடு!

(காண வேண்டும்…)

புதுப் பாதையிலே இந்த உலகை

       அழைத்த திருத் தூதர்

       அருமை மஹ்மூதர்

புரியா நிலையைத் தீர்த்து தெளிவை

       தந்த மறைப் போதகர்

       அருமை நபி நாதர்

காட்டினார்…..

காட்டினார் உலகை மாற்றி

       கருணை வழிக் காட்டி

வந்ததுலகம் நல்வழியில்

       வள்ளல் கொடுத்த நன் கொடையில்

அந்த நபியோ என்னுயிரில்

       அல்லும் பகலும் என் நினைவில்

அதனால் வாழ்வில் அருகே நேரில் (2)

(காண வேண்டும்…)

தணல் பாலையிலே அந்த நாளில்

       முள்ளில் நடந்தார்கள்

       தொல்லைச் சுமந்தார்கள்

தளரா நிலையில் தன்னந் தனியே

       முறையைச் சொன்னார்கள்

       முடிவில் வென்றார்கள்

அண்ணலார்….

அண்ணலார் தந்த வேதம்

       எங்கள் உயிர் நாதம்

தத்துவம் சொன்ன முத்துச் சரம்

       தன்னிகரில்லாத தங்கக் குணம்

அன்னைக் கருவில் வந்த நிலா

       அகிலமெல்லாம் வெற்றி உலா

அதனால் வாழ்வில் அருகே நேரில் (2)

காண வேண்டும் நபிகள்

       பெருமானைக்

காலைக் கதிராய் உதித்தப்

       பூமானே!

(நிறைவு)

Add Comment

Your email address will not be published.