இறந்துபோன மய்யித்தை முத்தமிடலாமா?

பதில்: உஸ்மான் இப்னு மல்ஊன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வபாத்தான நேரத்தில் அவர்களின் மய்யித்தை (முகத்தை) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முத்தமிட்டார்கள்.

அறிவிப்பாளர்: ஆயிஷா சித்தீகா ரழியல்லாஹு அன்ஹா

நூல்கள்: திர்மிதி, இப்னு மாஜா 1446, அபூதாவூத் 2750, அஹ்மத் 23036

ஹழ்ரத் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவாகள் இவ்வுலகை விட்டும் மறைந்தபோது நபியவர்களின் புனிதமான உடலை முத்தமிட்டார்கள்.

அறிவிப்பாளர்: ஆயிஷா நாயகி ரழியல்லாஹு அன்ஹா

நூல்கள்: புகாரி, பாகம்02, பக்கம்641, திர்மிதீ 910, நஸாயீ 1818, இப்னுமாஜா 1447, அஹ்மத் 23718

ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்: கஃபாவின் தூண்களை முத்தமிடுவதை ஷரீஅத் அனுமதித்துள்ளது. இதிலிருந்து கப்ருகளையும் முத்தமிடலாம் என்று அறிஞர்கள் சட்டம் எடுத்துள்ளனர். கண்ணியத்திற்குரியவர்களையும் கண்ணியத்திற்குரிய பொருட்களையும் முத்தமிடுவது ஆகும். இந்த வகையில் பெரியவர்களின் கைகளை முத்தமிடுவது ஆகும் என கிதாபுல் அதப் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மின்பரையும், அன்னாரின் புனித ரௌலாவையும் முத்தமிடுவது கூடுமா? என்று இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி இடத்தில் கேட்டபோது அதில் எதுவித குறையும் இல்லை என்று விடை பகர்ந்தார்கள். ஷாபி மத்ஹபைச் சார்ந்த அறிஞர்களுள் ஒருவரான அபுஸ்ஸைப் அல்யமானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி மூலம் இவ்வாறு கூறப்படுகின்றது. திருக்குர்ஆன் முஸ்ஹப்புகளையும், ஹதீஸ் கிரந்தங்களையும் முத்தமிடுவது ஆகுமானதாகும்.

(ஆதாரம்: பத்ஹுல் பாரி , பாகம் 03, பக்கம் 475)

நன்றி: ஹலாவத்துல் ஈமான்.

Recommend to friends
  • gplus
  • pinterest

About the Author

Leave a comment