இமாம் இப்னுமாஜா ரலியல்லாஹு அன்ஹு

இமாம் இப்னுமாஜா ரலியல்லாஹு அன்ஹு

By Sufi Manzil 0 Comment December 21, 2014

Print Friendly, PDF & Email

ஸிஹாஹ் ஸித்தா என்ற 6 ஸஹீஹான ஹதீது தொகுப்புகளில் இப்னுமாஜாவும் ஒன்று. இதை தொகுத்தவர்கள்ரபயீ கோத்திரத்தைச் சார்ந்த முஹம்மத்   பின் யஸீத்.குறிப்புப் பெயர் அபூ அப்தில்லாஹ்இவரது பிரபலமான பெயர் இப்னு மாஜா

இவர்கள் ஈரானிலுள்ள கஸ்வீன் என்னும் ஊரில் ஹிஜ்ரி 209 ல் பிறந்தனர். மாஜா என்பது இவர்களின் தந்தை பெயர் என்று சிலரும், அன்னை பெயர் என்று சிலரும், பாட்டனார் பெயர் என்று சிலரும் சொல்கின்றனர். ரபயீ கோத்திரத்தைச் சார்ந்தவர்களாக இருந்ததினால் இவர்களை ரபயீ என்றும் அழைப்பதுண்டு.

இப்னு மாஜா அவர்கள் தன்னுடைய ஊரில் ஏறத்தாழ20ஆவது வயதில் கல்வி கற்க ஆரம்பித்தார்கள். இவர்கள் தொகுத்த இப்னு மாஜா என்ற ஹதீஸ் புத்தகம் ஹதீஸ் கலையில் இவர்கள் பெற்றிருந்த பாண்டித்துவத்தை எடுத்துரைக்கிறது. அறிவிப்பாளர்களின் வரலாறுகள் தொடர்பாக இவர் எழுதிய அத்தாரீஹ் என்ற நூலும் இவரது அந்தஸ்தை உயர்த்துகிறது. மேலும் இவர் குர்ஆனிற்கு விளக்கம் அளிப்பதிலும் மார்க்கச் சட்டங்களிலும் தலை சிறந்த அறிஞராகத் திகழ்ந்தார் என இமாம்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

4000ஹதீதுகள் கொண்ட நூல் ஒன்றை எழுதியுள்ளார்கள். அதுதான் ஸுனனெ இப்னுமாஜா என்று அழைக்கப்படுகிறது. அதில் உள்ள ஹதீதுகள் 32நூற்களிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்டவையாகும்.

இவர்கள் திருக்குர்ஆனுக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்கள். இவர்கள் ஹன்பலீ மத்ஹபை சார்ந்தவர்கள் என்று ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

கல்விக்காககுராசான், ஈராக், ஹிஜாஸ், மிஸ்ர், ஷாம் மற்றும் பல ஊர்க ளுக்குப் பயணம் செய்திருக்கிறார்கள்.

அப்துல்லாஹ் பின் அபீஷைபா, அலீ பின் முஹம்மத்,முஸ்அப் பின் அப்தில்லாஹ் உஸ்மான் பின் அபீஷைபா, மற்றும் பல ரிடம் கல்வி கற்றிருக்கிறார்கள்.

இவர்கள் தம் நூலை தம் ஆசிரியர் அபூபக்கர் இப்னு அபீஷியா எழுதியது போன்றே எழுதியுள்ளார்கள்.

அலீ பின் இப்ராஹீம் அல்கத்தான், சுலைமான் பின் யஸீத்,முஹம்மது பின் ஈஸா மற்றும் அபூபக்கர் ஹாமித்ஆகியோர்கள் இவர்களது மாணவர்கள்.

ஹிஜ்ரீ 273 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் திங்கட்கிழமை அன்று மறைந்து புதன் கிழமை அடக்கம் செய்யப்பட்டார்.

Add Comment

Your email address will not be published.