உலக மக்கள் யாவருக்கும் …

உலக மக்கள் யாவருக்கும் …

By Sufi Manzil 0 Comment June 24, 2015

Print Friendly, PDF & Email

உலக மக்கள் யாவருக்கும்

       உரிமை யானவர்

உருவமற்ற இறைவனுக்கு

       உண்மையானவர்!

சிலை வணக்கம் செய்த

       அரபு நாட்டிலே

சீர்திருத்த சேவைச்

       செய்ய வந்தவர்

தலைச் சிறந்த ஏகத்

       தெய்வ வீட்டிலே

தரணி வாழ வழிவகுத்து தந்தவர்

கலை வளர்ந்த காவலர்

நபிகள் நாயகர்

       உருவமற்ற இறைவனுக்கு

உண்மையானவர்!

கோடி கோடி செல்வம்

       வந்தப் போதிலும்

கொண்டக் கொள்கை

       மாறிடாமல் நின்றவர்

ஆடையின்றி பெண்கள் அந்த நாளிலே

       அலைந்திருந்த மடமை

நீங்கி வென்றவர்

       ஈடில்லாதப் போதகர்

நபிகள் நாயகர்

உருவமற்ற இறைவனுக்கு

       உண்மையானவர்!

துன்பம் வந்து தொல்லைத்

       தந்தப் போதிலும்

துணிவுக் கொண்டு நீதிச்

       சொன்ன வல்லவர்

பண்பு கெட்டு போர்ப்

       புரிந்த மாந்தரை

அன்பினாலே மாற்றி

வைத்த நல்லவர்

இன்ப வாழ்வ தந்த யெங்கள்

       நபிகள் நாயகர்

உருவமற்ற இறைவனுக்கு

       உண்மையானவர்!

(நிறைவு)

Add Comment

Your email address will not be published.