கப்றுக்கு மேல் தொழலாமா?

கப்றுக்கு மேல் தொழலாமா?

By Sufi Manzil 0 Comment May 26, 2010

Print Friendly, PDF & Email

கப்றின் மீது தொழுதல்

கேள்வி: கப்றுக்கு மேல் தொழலாமா? கப்றுக்கு மேல் அமரலாமா?
                                                                                 

முஹம்மது ஷிப்லீ, கூத்தாநல்லூர்.

பதில்: கப்றுகளில் உட்காராதீர்கள். அதில் தொழவும் செய்யாதீர்கள் என அண்ணல் நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்தனர்.
அறிவிப்பவர்: அபூ மர்தத்துல் ஙனவி ரலியல்லாஹு அன்ஹு , நூல்: முஸ்லிம்.

கப்ரின் மீது தொழக் கூடாது என்பதற்கு இந்த நபிமொழி தெளிவான ஆதாரமென நவவி ரஹிமஹுல்லாஹ் சொல்கின்றனர்.

ஷரஹ் முஸ்லிம், பாகம் 1, பக்கம் 312.

உங்களில் ஒருவர் கப்றின் மீது உட்காருவதை விட நெருப்புத்தனலின் மீது அமர்வதால், அது உங்கள் ஆடையை கரித்து உடலையும் தாவிப் பிடித்து சுடுவது மேலானதாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்.

எனது இரு பாதங்களை கப்றின் மீது வைப்பதை விட நெருப்புத் தணலின் மீது வைப்பது எனக்கு மிக விருப்பமாக உள்ளது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர்.

நூல்: கஷ்புன்னூர்.

கப்ரின் மீது தொழுவது மக்ரூஹ். நடப்பது, அமர்வது, மிதிப்பது ஹராம்.
ஷரஹ் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 312.

நன்றி: வஸீலா 1-11-87