ஜனாஸாவுடன் செல்லும்போது கலிமா(திக்ர்) ஓதுவது ஆகுமா?

ஜனாஸாவுடன் செல்லும்போது கலிமா(திக்ர்) ஓதுவது ஆகுமா?

By Sufi Manzil 0 Comment March 31, 2011

Print Friendly, PDF & Email

கேள்வி: ஜனாஸாவுடன் செல்லும்போது கலிமா(திக்ர்) ஓதுவது ஆகுமா?

பதில்: ஜனாஸாவுடன் செல்லும்போது, கூடச் செல்பவர்கள் சப்தமாகவும், (வெளிரங்கமாகவும்) சப்தமில்லாமலும் (உள்ரங்கமாகவும்) கலிமா ஓதுவது புகழப்பட்டதும், முஸ்தஹப்பானதும் ஆகும். இது ஒரு பித்அத்தான காரியமல்ல.

அல்லாஹ்தஆலா அருள்மறையாம் திருமறையில் 'விசுவாசிகளே! அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுதலாக நினைவு கூறுங்கள்' என்று கூறுகின்ளான். இந்த ஆயத்தை மேற்கோள்காட்டி இமாம்களான நமது முன்னோர்கள் ஜனாஸாவுடன் செல்லும்போது கலிமா (திக்ர்) போன்றவற்றை ஓதும்படி கூறியிருக்கிறார்கள். அப்படிச் செய்வதினால் அம்மய்யித்திற்கு இக்கலிமாவின் பொருட்டைக் கொண்டு பரக்கத் செய்யப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இமாம் சுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களது ஜாமிஉஸ் ஸகீர் எனும் கிரந்தத்தில் அனஸ் இப்னு மாலிக்கைத் தொட்டும் அறிவிக்கிறார்கள், ஜனாஸாவுடன் செல்லும்போது 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்னும் கலிமாவை அதிகமாக ஓதிக் கொள்ளுங்கள். மேலும் அப்படி சொல்வதினால் அம்மய்யித்திற்கு உணர்ச்சியூட்டக் கூடியதாகவும் இக்கலிமாவைக் கொண்டு பரக்கத் செய்யப்படுகிறது என்றும் சொல்கின்றார்கள்.

(ஆதாரம்: ஸரத்துல் அஹ்ஸாப், ஜாமிஉஸ்ஸகீர் பாகம் 1, பக்கம் 380, பைளுல் கதீர் காஷியா ஜாமிஉஸ்ஸகீர் பாகம் 2,பக்கம் 88)

இதுபற்றி மேலகதிக விபரங்களுக்கு அத்காருல் நவவி பக்கம் 170, நிஹாயா பக்கம் 03, பாகம் 23, கல்யூபி பாகம் 1, பக்கம் 347, புகாரி பாகம் 2 ஹதீஸ் எண் 944 ஐ பார்க்கவும்.

நன்றி:வெற்றி டிசம்பர் 2000.