தூங்குகிறவனை தொழுகைக்காக எழுப்பலாமா?

தூங்குகிறவனை தொழுகைக்காக எழுப்பலாமா?

By Sufi Manzil 0 Comment June 21, 2012

Print Friendly, PDF & Email

கேள்வி: தூங்குகிறவனை தொழுகைக்காக எழுப்பலாமா?

பதில்:
'தொழுகை நேரம் வந்த பின் தன்னை மிகைக்காத நிலையில் தூங்கும் தூக்கமும், இன்னும் கொஞ்சம்  தேவையிருக்க கையை எடுக்காத உணவும் ஆகுமானதல்ல' என்று இமாம் கஸ்ஸலாலி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் மற்றும் பல ஸூபியாக்களும் கூறியுள்ளனர்.

தூங்குகிறவனைத் தொழுகைக்காக எழுப்புவது சுன்னத். நேரம் நெருக்கமாயுள்ள போது பலமான சுன்னத்து. நேரம் வந்து விட்டதை அறிந்து மனமுரண்டாகத் தூங்குகிறவனை எழுப்புவது வாஜிபு. அதனால் குழப்பம் ஏற்படும் என்றிருப்பின் வாஜிப் இல்லை. தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்திருக்கும் எண்ணத்தில் நடுப்பகலில் சிறிது நேரம் தூங்குவது சுன்னத்.

ரமலான் ஸஹர் உணவு அருந்துவதற்காகவும் வழமையான தஹஜ்ஜுத் தொழுபவர்களையும் எழுப்புவது  சுன்னத். தூங்குகிறவனுக்கு ஏதேனும் ஆபத்து வருவதைக் கண்டால், அவரை எழுப்புவது வாஜிபாகும்.

தொழுபவர்களுக்கு முன் புறத்திலும், முந்தின ஸப்பிலும், மிஹ்ராபிலும் தூங்குகிறவர்களை எழுப்புவது சுன்னத்.

கிழக்கு வெளுத்த பின்பும், ஸுப்ஹு தொழுத பின்பும பொழுது கிளம்பும் முன் தூங்குகிறவர்களை எழுப்புவது சுன்னத்.

அஸருக்குப் பின் தூங்குகிறவர்களை எழுப்புவது சுன்னத்.

வீட்டில் தனிமையில் இருட்டில் தூங்குகிறவர்களை எழுப்புவது சுன்னத்.
மல்லாந்து படுத்துறங்கும் பெண்ணையும், குப்புறப் படுத்துறங்கும் ஆணையும் எழுப்புவது சுன்னத்.

வெட்ட வெளியில் தூங்குபவர்களை எழுப்புவது சுன்னத்.

கை, வாயில் புலால் வாடை இருக்கின்ற நிலையில் தூங்குபவர்களை எழுப்புவதும் சுன்னத்தாகும்.