பிரயாணத்திலிருந்து திரும்பும் போது செய்ய வேண்டிய சுன்னத்.
By Sufi Manzil
கேள்வி: மனிதன் பிரயாணம் செய்து விட்டு வீடு திரும்பினால் ஏதாவது பொருள்கள் (பண்டமோ, வேற ஏதாவதோ) வாங்கி வர வேண்டும். வாங்கி வருவது சுன்னத்தாகும் என சில ஆலிம்கள் கூறுகின்றனரே! அது சரிதானா?
பதில்: அக் கூற்று சரியானதே!. அதற்கு ஹதீஸ்களில் ஆதாரங்களை நம்மால் பார்க்க முடியும். 'ஒரு மனிதன் தனது பிரயாணத்தை முடித்து விட்டு வருவானேயானால் தனது குடும்பத்தாருக்கு ஏதாவது சன்மானமாக வாங்கி வருவாராக! ஒரு கல்லாக (புதுமையானதாக) இருந்தாலும் கூட வாங்கி வந்து குடும்பத்தாரை சந்தோஷப்படுத்துவானாக! என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் என அறிவிப்பவர் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் .
நூல்: 'தார குத்னீ' பக்கம் 335 (ஹஜ்ஜைப் பற்றிய பாடம்)
நன்றி: வஸீலா 1-11-1988