Tamil Nadu Majlis Ulamae Ahle Sunnah Resolutions-தழிழ் நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல ஜமாஅத் உலமா சபை செயற்குழு கூட்டம்-தீர்மானங்கள்!
By Sufi Manzil
தழிழ் நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல ஜமாஅத் உலமா சபை செயற்குழு கூட்டம்-தீர்மானங்கள்!
தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டம் அதன் தலைவர் மௌலானா மௌலவி எஸ்.எம்.ஹைச்.முஹம்மது அலி ஸைபுதத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி,ஸூபி அவர்கள் தலைமையில் மதுரை கத்தம்பட்டி மத்ரஸா கௌதுல் வராஃ அரபிக் கல்லூரியில் வைத்து 24-01-2010 ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. அதில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. மத்திய அரசு அமைக்கவுள்ள மத்ரஸா நலவாரியம் பற்றி வரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன் சாதக,பாதகங்களை கணித்து முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
2. வஹ்ஹாபிய போர்வையில் முஸ்லிம்கள் மத்தியில் அமல்களை முற்படுத்தி ஈமானை பின்னுக்குத் தள்ளும் கூட்டங்களின் செயல்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறது.
3. சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு மாறுபட்டு நமது உறுப்பினர்கள் நடந்து வந்தால் தானாகவே நமது சபையின் உறுப்பினரிலிருந்து நீங்கியவராக கருதப்படுவார்கள்.
4. இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களில் (திருமணப்பதிவு சட்டம் உட்பட) தலையிட கூடாது என்று இச்சபை மத்திய, மாநில அரசுகளை வேண்டிக் கொள்கிறது.
5. கூட்டத்தை ஏற்பாடு செய்த மத்ரஸா நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
சுகக் குறைவாக இருக்கும் சபை செயலாளர் மௌலவி எப்.எம். இப்றாஹிம் ரப்பானி ஆலிம் அவர்கள் நலம் பெற பிரார்த்திக்கப்பட்டது.
இறுதியில் பாத்திஹா துஆவுடன் நிறைவுற்றது.