Mahlarathul Quadiriyya – மஹ்ழறத்துல் காதிரிய்யா

mahlara

  சுமார் 100 அடி உயரம்! 100 அடி அகலம்! நான்கு கன அடிகளைக் கொண்ட வலிமை மிக்க சுவர்! தூண்களே இல்லாத வட்டவடிவமான கும்பம்! நிமிர்ந்து பார்த்திடத் தூண்டும் நெடிதுயர்ந்த மினாராக்கள்! பார்த்தால் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று உணர்ச்சியூட்டும் அமைப்பு!

முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புனிதமிகு ரவ்லா ஷரீஃபின் அமைப்பில் பரவசமூட்டும் பாங்கான கவர்ச்சி! காதிரிய்யா தரீகாவின் கவினார்ந்த சின்னமாக நின்றிலங்கும் மஹ்லறா.

   அண்ணல் கௌது நாயகத்தின் திருவழிப் பேரர் பகுதாதைச் சார்ந்த ஹழரத் மௌலானா ஸெய்யித் அப்துல்லாஹில் பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆலிஜனாப். கம்பெனி அஹ்மது முஹ்யித்தீன் லெப்பை ஆலிம் (ஸூபி ஹழரத் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பாட்டனார்) ஹாஜி குளம் சதக்குத் தம்பி ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர்களின் பெருமுயற்சியின் காரணமாக ஆலிஜனாப். கம்பெனி அஹ்மது முஹ்யித்தீன் லெப்பை ஆலிம் அவர்களிடமிருந்து வாங்கப்பட்ட நிலத்தில் இம்மாமண்டபத்தை நிறுவிமுடித்து, 'மஹ்லறத்துல் காதிரிய்யா' என்று பெயர் சூட்டினார்கள்.

   பகுதாது மௌலானா அவர்கள் இதை கட்டி முடித்து எழுதிய வக்பில்,

  ஹிஜ்ரி 1288 ஷஃபான் பிறை 25 ஞாயிற்றுக் கிழமை பகுதாதைச் சார்ந்த ஸெய்யிது ஹபீபுல் காதிரிய்யி அவர்களின் குமாரர் ஸெய்யிது அப்துல்லாஹில் காதிரிய்யில் ஹனஃபியாகிய நான் கூறுவது,

    திருநெல்வேலி மாவட்டம் காயல்பட்டணம் நகரில் ஜைனுத்தீன் புலவர் அவர்கள் வீட்டுக்கு வடக்கு, கதீபு மூஸா நெய்னா அவர்களின் வழியினர்கள் வீட்டிற்கு தெற்கு, குத்பா சிறுபள்ளிக்கு மேற்கு, பொதுப் பாதையான அம்பலமரைக்கார் தெருவிற்கு கிழக்கு (இத்துடன் சிறுபள்ளிக்கும் மஹ்லறாவிற்கும் இடையில் ஒரு சிறு பாதை உள்ளது.) இந்நான்கு திசைகளையும் உள்ளடக்கியிருக்கிற தென்வடல் காலடி 75, கிழமேல் தச்சுக் கோல் 45 அளவு கொண்ட நிலத்தை,

   மொகுதூம் முஹம்மது அவர்களின் குமாரர், அஹ்மது முஹ்யித்தீன் லெப்பை ஆலிம் அவர்களிடமிருந்து ரூபாய் 300 க்கு கிரயம் வாங்கி, அல்லாஹ்வின் நற்கூலியையும், அண்ணல் நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் நல்லாசியையும் வேண்டியவனாக,சுவாதீனமும், நற்சுகமும் உள்ளவனாக இருக்கின்ற நிலையில், கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 'காதிரிய்யா' தரீகாவைச் சார்ந்தவர்களுக்காக வக்ஃப் செய்து, இத் திருத்தலத்திற்கு 'மஹ்லறத்துல் காதிரிய்யா' என்று பெயரிட்டிருக்கிறேன்.

   எல்லாம் வல்ல இறைவா! இதைப் புனிதத் தலமாக ஆக்குவாயாக!

இத்தலத்தை எவரேனும் விற்கவோ, வாங்கவோ செய்தால் யுகமுடிவு நாள் வரை அவருக்கு இறைவனின் முனிவு (சாபம்) உண்டாகட்டும்.

  இதே 'வக்ஃபு'க்கு கீழ்காணும் நபர்கள் சாட்சிகள். இறைவனே சாட்சிக்கும் பொறுப்புக்கும் மிகவும் மேலானவன்! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

                                                  இங்கனம், 
                     ஸெய்யிது அப்துல்லாஹில் காதிரிய்யில்பகுதாதி.

சாட்சிகள்:
1. தைக்கா செய்கு முஹம்மது ஸாலிஹ் லெப்பை – கலீபத்துல் குலஃபா த/பெ. தைக்கா ஸாஹிபு வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு.
2. கிலுரு முஹம்மது – கலீபா த/பெ.செய்கு அப்துல் காதர்.
3. அஹ்மது முஹ்யித்தீன் – கலீபா த/பெ. மொகுதூம் முஹம்மது.
4. முஹம்மது சுலைமான் லெப்பை – கலீபா த.பெ. அப்துல்லா லெப்பை ஆலிம்
5. கதீபு காதர் சாகிபு – கலீபா த/பெ.அபூபக்கர் சாகிப்.
6. பாளையம் முஹம்மது அப்துல் காதர் லெப்பை – கலீபா
7. முஹம்மது சுலைமான் லெப்பை – கலீபத்துல் குலஃபா த/பெ. அப்துல் காதிர் நெய்னா லெப்பை
8. செய்கு  முஹ்யித்தீன் லெப்பை – கலீபா த/பெ. கல்லிடைக்குறிச்சி பீர் முஹம்மது லெப்பை
9. அப்துல் காதிர் த/பெ. அஹ்மது முஹ்யித்தீன்
10. முஹ்யித்தீன் தம்பி த/பெ. விளக்கு முஹம்மது
11. முஹ்யித்தீன் அப்துல் காதர் த/பெ. மீரா லெப்பை.

  இதை கட்டுவதற்கு மௌலானா அவர்களுக்கு அப்போது பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை அவதூறு பேசினர். கொலை செய்யக் கூட முயன்றனர். திருநெல்வேலிக்கு மௌலானா அவர்கள் சென்றிருந்த சமயம் கொலை செய்ய வந்தவர்களுடன் வாள் சண்டை போட்டிருக்கிறார்கள். இது திருநெல்வேலி கெஜட்டிலும் பதிவாகியுள்ளது. தங்களுக்கு நடந்த சம்பவங்களை தங்கள் கைப்பட எழுதி 'அஹ்ஸனுல் அஃமால்' எனும் நூலில் பதிவு செய்துள்ளனர்.

   மஹ்லறா உருவாக பகுதாது மௌலானா அவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்த மூலகர்த்தாக்கள் பின் வரும் மூன்று இலட்சியங்களை இதற்கு வகுத்தளித்தனர்.
 

1. அண்ணல் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மேற்கொண்டு நடத்திக் காட்டிய இஸ்லாமிய கலைஞானங்களை பரப்பும் பணியை – மத்ரஸாவை சிறப்புற நடத்துவது.
2.  கீர்த்திமிகு காதிரிய்யா தரீகாவின் திக்ரை தொடர்ந்து நடத்தி வருவது.
3. .நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை – மீலாது விழாவை கொண்டாடுவது.
4. அண்ணல் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் ரபீயுல் ஆகிர் மாதம் கந்தூரி விழா எடுத்து விருந்து உண்ணக் கொடுப்பது.

      1941 ஜூலை 18 அன்று அல்ஹாஜ் நஹ்வி செய்யிதகமது லெப்பை ஆலிம் முப்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மஹ்லறா அரபிக்கல்லூரி புணர் நிர்மாணம் செய்யப்பட்டது.

    1968 ம் வருடம் இந்தியன் சொஸைட்டி ரெஜிஸ்ட்ரேஸன் ஆக்ட்டில் சொஸைட்டியாக S1/1968ல் 'மஹ்லறத்துல் காதிரிய்யா சபை' என்று பதிவு செய்யப்பட்டது. சபையை நிர்வகிக்க அம்பலமரைக்கார் தெரு, சதுக்கைத் தெரு, குறுக்குத் தெரு, நெய்னார் தெரு, ஆராம்பள்ளித் தெரு, குத்துக்கல் தெரு ஆகிய தெருக்களைச் சார்ந்த  காதிரிய்யா தரீகாவைச் சார்ந்த மேஜரான ஆண்கள் மட்டுமே தகுதி வாய்ந்தவர்கள்.

    மஹ்லறா ஆலிம் என்று அழைக்கப்படும் செய்யிது இஸ்மாயில் ஆலிம் முப்தி  ஹஜ்ரத் அவர்கள் 1908 ம் வருடம் மறைந்து மஹ்லறாவின் முன் வாசலுக்கருகில் நல்லடக்கம் செய்யப் பட்டுள்ளார்கள்.

  07-06-1971 திங்கள் கிழமை அரபிக்கல்லூரி தஹ்ஸீல் வகுப்பு தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு (8 பேர்) மௌலவி-ஆலிம் மஹ்லரி ஸனது முதன் முதலாக கிப்லா ஹஜ்ரத்  ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : கிப்லா ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்     நினைவு மலர்.
                      மஹ்லறத்துல் காதிரிய்யா சபை சட்டதிட்டங்கள்.
                      அஹ்ஸனுல் அஹ்மால்

    மஹ்லறா அரபிக் கல்லூரியிலிருந்து வெளியிடப்பட்ட முக்கிய மார்க்க தீர்ப்புகள்.

1. 3,7,40 ம் நாள் பாத்திஹாக்கள் ஆகுமானது – மார்க்கத்திற்கு     உட்பட்டதுதான் என்று மார்க்கத் தீர்ப்பு வெளியிடப்பட்டது.
2. மஹ்லறா கலீபா கிலுருமுஹம்மது லெப்பை ஆலிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது கொடுக்கப்பட்ட 'காபிர்' பத்வாவிற்கு பதிலாக கொடுக்கப்பட்ட மறுப்பு பத்வா.
3. ஹழரத் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து உதவி தேடும் 'குத்பியத்'செய்வது ஆகும் என்று கொடுக்கப்பட்ட பத்வா.
4. 'ஜும்ஆ பத்வா'- ஒரே ஊரில் ஷாஃபி மத்ஹபு படி இரு ஜும்ஆக்கள் தொழுவது கூடாது என்று வழங்கப் பட்ட தீர்ப்பு
 

நடைபெறும் நிகழ்வுகள்.

கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நினைவாக கட்டப்பட்டுள்ள இதில் சுன்னத் – வல் – ஜமாஅத் அடிப்படையில் மார்க்கத்தை கற்றுகொடுக்கும் மத்ரஸா நடைபெறுகிறது. அத்துடன் ஹிப்ழு மத்ரஸாவும் நடைபெறுகிறது.

ரபீயுல் அவ்வல் பிறை 1 முதல் 12 வரை ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பேரில் மௌலிது ஷரீஃபு ஓதி மீலாது விழா நடத்துதல்.
 
ரபீயுல் ஆகிர் பிறை 1 முதல் 14 வரை கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் கந்தூரி வைபவம் :-  காலை கத்முல் குர்ஆன் ஓதி தமாம், மௌலிது ஷரீபு ஓதுதல்.
 
பிறை12,13 அன்று மாதிஹுல் கௌது ஹாமிது லெப்பை ஆலிம் அவர்கள் கோர்வை செய்த கௌது நாயகம் அவர்கள் மீதான வித்ரிய்யா ஓதப்படும்.

பிறை 6 அன்று மஹ்லறா நிறுவனர் செய்யிதினா அப்துல்லாஹில் பக்தாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் கந்தூரி

பிறை 6 முதல் 14 வரை இரவு மார்க்கச் சொற்பொழிவு பிறை 14 அன்று மாபெரும் விருந்து வைபவம் கந்தூரி இரவு காதிரிய்யா ராத்திபு.

ஓவ்வொரு வாரமும் பிரதி வியாழன் பின்னேரம் வெள்ளியிரவு, ஞாயிறு பின்னேரம் திங்களிரவு, மாதம் பிறை 14 ஆகிய நாட்களில் காதிரிய்யா ராத்திபு நடத்துதல்.

பிரதிவாரம் வெள்ளி புர்தா ஷரீபு ஓதுதல்.

ஹழரத் ழியாவுல் ஹக் ஸூபி ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் துல்ஹஜ் மாதம் பிறை 28 அன்று கந்தூரி வைபவம்.

Mahboob Subhani-ஹஜ்ரத் கௌது அஃலம் ரலியல்லாஹு அன்ஹு

Ghauzul Azam Shaikh Syed Muhiyyuddeen Abdul Quadir Jeelani

 Piran ne Peer Ghaus ul Azam Dastageer, Radiallahu anhu, the Great defender and the leader of the saints was born in jeelan, Persia Iran, in 470 Hijri, ( 1077 AD ). He was of pious parents of Hassani lineage. He was Syed from both, the father as well as the mother side. His father Syed Abu Saleh, was an illustrious and God fearing man. Once he was engrossed in meditation by the bank of a river he saw an apple floating down the river. He picked it up and ate it. It struck to him that he ate the apple without paying for it so he set out in search of the owner on the bank of the river and at last reached the owner of the orchard; Abdullah Somai, whom he requested to tell him the price of the apple. Abdullah Somai replied that it was an expensive thing. Syed Abu Saleh replied that he had not much by way of worldly material, yet he could serve him for its compensation.

Abdullah Somai then asked him to work for a year in the orchard. In the course of time the duration was extended several times. In the end Abdullah Somai admitted that he had served him in excess of the price and desired to reward him. Abu Saleh hesitated in accepting it but when Abdullah Somai persisted, he relented. He said he had a daughter, blind of eyes, handicapped of hands and feet and wanted to give her in marriage to him. In this way Abdullah Somai got his daughter, Syeda Fatima, married to him. To his astonishment, Abu Saleh found her wondrously beautiful and wholesome. He complained to his father in law that he found her exactly the opposite to what he had described her. Abdullah Somai insisted on the truthfulness of his statement, and said. she was blind because she had not seen a man who could marry her. She was mute because she had not uttered a word repugnant to the Shari'aa. She was deaf because she had not heard anything inconsistent with the Shari'aa. She was handicapped of hand and feet because she had never moved in the direction of evil.

The great man died soon after the marrige and the little orphan was reared up by his mother and under the benevolent care of his grand father, Abdullah Somai.


Childhood: During infancy he never sucked milk during the day and had it after it was dark. When hungry he never cried like other children but remained composed in the cradle. As he was an orphan his initial education started under the supervision of his mother. Having completed, his primary education he sought his mother's permission to go to Baghdad for higher education. His mother was old still she allowed him to go and thus he set out to Baghdad in the year 488 Hijri.


Some chroniclers say he was 14 when he set out to Baghdad. His mother sewed 40 gold Dinars ( coins ) in his quilt so that he might spend as he needed. The dacoits struck the caravan on the way, and looted all the travelers of their belongings and wealth. They asked him what he had. He replied that he had 40 gold Dinars ( coin ). The dacoits took his reply as a joke and took him to their cheiftain. The Chief of the dacoits asked him the same question and he again replied that he had 40 gold coins on him. He demanded that he should be shown the Dinars as there was no appaent trace. Abdul Quader tore away the quilt and produced the Dinars to the Chief. He was surprised and impressed and asked him why he had given the hidden Dinars. He could have kept them and the dacoits could have never known about them. The boy replied that he was travelling to Baghdad to receive education and his mother had instructed him to speak the truth always and so he had done it. This left the Chief with a deep effect, and he gave up his profession of looting.


Higher Education:
He received lessons on Islamic Jurisprudence form Abu Saeed Makhzoomi, Tradition from Abu Bakr bin Muzaffar, and Commentary from the renowned Commentator, Abu Muhammad Jafar. Having thus qualified he engaged himself in the field of teaching.


Teaching: He became a teacher and took to teaching in the seminary of his teacher, Qazi Abu-Said-Mubarak. Soon he became popular with his pupils. His fame spread far and nears. Pupils flocked to him. In the morning he taught on Tradition and Commentary, and in the afternoon he held discourse on mysticism, and the virtues of the Holy Qur'an. The number of students grown so much that the seminary could no more hold them. He, therefore, decided to extend the premises of the seminary. The students and the people willingly came forward with their whole hearted contributions, and the construction started. The campus buildings were ready in 528 Hijri and thereafter it became known as Madarsa-e Quadriya.


Judicial Sentences and Ermons:
The Shaikh ( The Great Defender ), besides teaching engaged himself in Judicial Sentences and Sermons in the service of the Religion; delivered his sermons three times a week. His oratory drew multitude of crowds, which sometimes exceeded sixty or seventy thousand in bare numbers.


Truthfulness & Fearlessness: The Shaikh was truthful and fearless. The Caliph Al-Muqtazi once appointed Ibn-e Marjam the Qazi. Ibn-e Marjam was known for his cruelties. The people were panicked, and approached the Sheikh. He addressed the Caliph from the pulpit that he had posted a man as a Qazi who was extremely cruel. When he reached before his Creator on the last day what excuse he would put forward for appointing him. God is merciful and find to the people. The Caliph trembled and at once sacked Ibne Marjam form the post.


Generosity: Whatever Presents, valuables his followers or disciples offered him he distributed them among the poor and the needy and gave precedence to other's needs to this own. None returned empty handed from his gate. He was therefore, called leader of the saints, the Helper, the Great defender, and Darling of God. God filled his heart with profound love for the poor, the needy, and the helpless.


Propagation of Islam:
He propagated Islam through his writings and speeches and remained aloof from the government and politics. He, therefore, ruled over the hearts of the people. The kings were envious of him. Not only did he propagate Islam through pen and word of mouth but saved also the Muslims from complete extinction. The world so remembers him with the little, Mohyyuddin, the life-giver.

Death: He busied himself for forty years in the service of the Faith from 521 to 561 Hijri During this period hundreds embarrassed Islam because of him and organized several teams to go abroad for the purpose. He came to India in 1128 AD. And stayed at Multan.

His Qadriya order still exists through out India. He died 11, Rabi ul awwal, 561 Hijri ( 1168 AD ), at the age of 91. His shrine is in the Bughdad, Iraq.


His Sayings:
o- Knowledge is useless without action.

o- Be a doer and not an illiterate deliberately. One who knows and acts accordingly is a viceroy of Allah.

o- Allah is such a name that eases every difficulty and relieves of all kind of worries and grieves and this is a great name.

o- Whoever keeps Allah his friend, he is under His protection and passes his life under His benign benevolence.

o- Beggar is the one who perpetually engages himself in the prayer and in contemplation. He is truthful, capacious, and courageous. He regards his 'self' the meanest; what he does not know, tries to know; teaches the ignorant, and advises the careless.

o- The faithful is one, who seeks lawful living, and is not a fatalist. If succeeds in getting a job, he shall get lawful living and compensation for search of a living.

o- For patience he said; the faithful perseveres in difficulty and distress and does not forsake the Shairah; submits to the will of Allah; is not perturbed from poverty and grief but remains composed, patient, and thankful.

o- The patience of a beggar as against the thankfulness of a rich man, and the beggar's thankfulness as against the rich man's patience is larger.

o- The war of the inner is better than that of the outer.

o- Don't complain of Allah's slave ( men ).

o-Think great so long as you live.

Books:
He was a great speaker, lecturer and writer of his time. He wrote books of immense depth on the subjects he wrote in the defense and service of Islam.

1- Ghansat ul Tal-e been, is on the orders from the Tradition.

2- Mansharah ul Ghaib ( Revelation of the Unseen )deals with mysticism.

3- Fateh Rabbani is the collection of his sermons and addresses.

4- Maktoob-e Subhani comprises of his letters.

In poetry he wrote fourteen moving odes in Persian which is a great work

A dervish is a friend of God and a friend of a friend is a friend. So why not be a friend of a dervish? 

 

கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு.

    ஈரான் நாட்டில் ஜீலான் நகரின் அண்மையில் நீப் என்ற சிற்றூரில் ஹிஜ்ரி 470 ரமலான் பிறை 1 திங்கட்கிழமை இரவு (கி.பி.1078,மார்ச்19) அன்று பிறந்த இவர்களின் தந்தைபெயர் ஸெய்யித் அபூ ஸாலிஹ் இப்னு மூஸா. தாயார் பெயர் பாத்திமா. தந்தை இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வழியிலும், தாயார் இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வழியிலும் வந்தவர்கள். தம்முடைய 60வது வயதில் அவர்களுடைய அன்னை அவர்களை ஈன்றனர். பிறந்த அன்று ரமலான் முதல்பிறையாக இருந்ததால், குழந்தை பால் அருந்தவில்லை.அதைக் கொண்டே அன்று ரமலான் பிறை 1 என்று மக்கள் அறிந்து கொண்டனர். இளமையில் தந்தையை இழந்த இவர்கள,; பாட்டனார் ஸெய்யித் அப்துல்லாஹ் ஸெளமயீயால் வளர்க்கப்பட்டார்கள். கல்லியில் முதன்மையாக திகழ்ந்தார்கள். தங்கள் 18வது வயதில் அன்னை ஆசியுடன் உயர்கல்வி கற்க பகுதாது சென்றனர்.

      அப்போது, 40 பொற்காசுகளை இவர்கள் சட்டைப் பையில் மறைத்து தை;து வைத்து, 'எக்காலமும் பொய்யுரைக்க கூடாது' என்று கூறி ஒரு வணிகக் கூட்டத்தாருடன் பகுதாது செல்ல   தாயார் வழி அனுப்பி வைத்தனர். வழியில் ஹமதான் அருகே செல்லும்போது இவர்கள் கூட்டத்தை ஒரு கள்வர் கூட்டத்தினர் தாக்கினர். அதில் ஒருவன் இவர்களைப் பார்த்து, 'உம்மிடம் என்ன உள்ளது?' என்று கேட்க, 'நாற்பது பொற்காசுகள் என் சட்டையின் விலாப்பறத்தில் வைத்து தைக்கப்பட்டுள்ளன' என்று இவர்கள் சொன்னார்கள். பின்னர் அதை சோதித்தபின் தெரிந்து கொண்ட கள்வர்கள் இவர்களின் நேர்மையைக் கண்டு நேர்வழி பெற்று கள்ளத் தொழிலை விட்டொழித்து, இறைவணக்கங்களில் ஈடுபட்டு இறைநேசர்களாயினர்.

     பகுதாதை சென்றடைந்த இவர்கள், அங்கு நிஜாமிய்யா கல்லூரியல் சேர்ந்து அபூ ஜக்கரிய்யா யஹ்யா தப்ரேஸிடம் கல்வி கற்றனர். தம் கையிலுள்ள பணம் செலவழிந்து முடிந்ததும், மிக வறுமையுடன் ஏழாண்டு காலம் கல்வி கற்றனா. ஹம்மாது என்ற பெரியாரிடம் ஆத்மீக அனுபவம் பெற்றனர். பின்னர் மக்கா சென்று ஹஜ் செய்தனர். பின்னர் மதீனா சென்று தம் பாட்டனாரின் அடக்கவிடத்தை தரிசித்தனர்.

    பின்னர் ஈராக் காடுகளில் உள்ள கர்க் என்ற இடத்தில் அமர்ந்து கடும் தவம் செய்தனர். சிலசமயம் அங்குமிங்கும் தம்மை மறந்த நிலையில் ஓடுவார்கள். சில சமயம் களைப்புற்று பிணம் போல் கிடப்பார்கள். மக்கள் இவர்கள் இறந்துவிட்டார்கள் என்றெண்ணி அடக்குவதற்கு குளிப்பாட்டத் துவங்கும்போது இவர்கள் உணர்வு பெற்று எழுவார்கள். பிறகு ஒரு பாழடைந்த போட்டையில் பதினோர் ஆண்டுகள் கடுந்தவம் செய்தனர். எனவே அக் கோட்டைக்கு 'ஃபுரூஜுல் அஜமி'(அரபியல்லாதார் கோட்டை) என்ற பெயர் வந்தது.

   இங்கு இவர்கள் இரவு செய்த உளுவுடன் சுபுஹுத் தொழும் வழக்கமுடையவர்களாகவும், ஒற்றைக் காலில் நின்று திருக் குர்ஆன் முழுவதையும் ஓதி கிழக்கு வெளுக்கும்வரை தொழும் வழக்கமுடையவர்களாகவும் இருந்தனர்.

  இச்சமயத்தில் இவர்கள் பகுதாது வரும்போது நோய்வாய்பட்ட வயோதிகர் ஒருவர் கானகத்தின் நடுவே கிடந்து, 'என்னை தூக்கி நிறுத்தும்' என்று கூறினர். அவ்விதமே இவர்கள் செய்ய, அவர் இளமை எழிலுடன் காட்சி வழங்கி, 'நான் இஸ்லாம் எனும் மார்க்கமாகும். நீர் அதனை உயிர்ப்பித்தவராவீர்' என்று கூறி மறைந்தார்.

    இதன்பின் பகுதாது வந்த இவர்களை மக்கள் 'முஹ்யித்தீன்' என்று அழைத்து மார்க்கத்தை புத்துயிர் செய்யும் பணியை செய்ய வேண்டினர். பகுதாதில் பாபுல் அஸஜ் என்ற இடத்தில் கல்லூரி நிறுவி கல்வி போதித்து வந்த ஷைகு அபூ ஸயீத் முகர்ரமியிடம் ஆத்மீக மாணவராகி, கிர்கா அணிவிக்கப்பட்டு அவர்களின் கலீபாவாக திகழ்ந்தனர்.

    அதன்பின் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கனவில் சொன்னதற்கேற்ப, தங்களின் இஸ்லாமியப் பிரச்சாரத்தை துவக்கினார்கள். இவர்களின் பேருரைகளை கேட்பதற்கு ஒருமுறை 70000 போகளுக்கு மேல் வந்து இருந்தனர். இரவில் நடக்கும் கூட்டங்களுக்கு மக்கள் பகலிலேயே முண்டியடித்து இடம் பிடித்தனர். வாரம் மும்முறை இவர்கள் பேருரை நிகழ்த்தினார்கள். இவர்கள் பேருரையைக் பேட்டு உணர்ச்சி மேலிட்டு சிலர் இறந்திருக்கிறார்கள். ஹிஜ்ரி 521 முதல் 561 வரை 40 ஆண்டுகள் பேருரை வழங்கினர். இதனால் லட்சோப லட்சம் மக்கள் தங்கள் தவறான வழியைவிட்டு திருந்தினர். தாம் காடுகளில் சென்று துறவறம் மேற்கொள்ளவே விரும்பியதாகவும் ஆனால் இறைவனோ தம்மால் மனித இனத்திற்கு நற்பயன் ஏற்பட விரும்பியதாகவும் கூறினார்கள். இவர்களின் பேருரைகள், 'ஃபுத்தூஹுல் கைப், பத்ஹுர் ரப்பானி என்ற பெயர்களில் வெளிவந்துள்ளன.

    தம்மிடம் இல்லையென்று வருபவர்களுக்கு இல்லையென சொல்லாது வாரி வழங்குவார்கள். மிகுந்த இரக்க குணம் படைத்தவர்களாக இருந்தார்கள். குற்றம்,குறை எவரிடம் காணப் பெற்றாலும் அவர் தெ;தனைப் பெரிய பொறுப்பிலிருந்தாலும் ,அறிவாளியாயிருந்தாலும், பாமரர்களாயிருந்தாலும் அதை கண்டிக்கத் தவறுவதில்லை.

   ஆத்மீக ஞானத்தில் சிறந்து விளங்கிய இவர்கள் மார்க்க சட்டதிட்டங்கள் பற்றிய அறிவிலும் சிறப்புற்று விளங்கினார்கள். ஆன்மீகத்தை பகிரங்கமாக மக்களுக்கு எளிதில் புரியும்வண்ணம் விளக்கியவர்கள் இவர்களே! ஆரம்பத்தில் ஷாஃபி மத்ஹபை பின்பற்றி வந்த இவர்கள் ஹம்பலி மத்ஹபின் நலிவுற்ற நிலை கண்டு அதனை அதற்கு புத்துயிர் ஊட்ட அம் மத்ஹபிற்கு மாறினார்கள்.

   தங்களின் 51ம் வயதில் 4 மனைவியரை மணந்து 27 ஆண்மக்களையும்,22 பெண்மக்களையும் பெற்றெடுத்தனர். இவர்களின் மக்களும் சிறந்த கல்வி அறிவு பெற்று மார்க்க மேதைகளாக திகழ்ந்தார்கள்.

    இவர்கள் மனைவி,மக்களோடு இல்லற வாழ்க்கை வாழ்ந்து வந்த போதிலும், உலக ஆசாபாசம் இல்லாமலேயே இருந்து வந்தனர். இது பற்றி அவர்களிடம் கேட்டபோது, 'எனக்கொரு பிள்ளை பிறந்தால் அதைக் கையிலெடுத்து இது என்னைப் பொறுத்தவரை இறப்பெய்தியதாகும்' என்று கூறி அதுபற்றிய அன்பை உள்ளத்திலிருந்து அப்புறப்படுத்தி விடுவேன். பின்னர் அது இறப்பெய்தினாலும் அதன் காரணமாக எனக்கு அணுவளவும் கவலை ஏற்படாது' என்றனர்.

    நடுத்தர உயரமும், நிதானமான பருமனும் வாய்க்கப்பெற்றிருந்த இவர்களின் உடல் நிறம் சிவப்பு. பெரும்பாலான நாட்களில் நோன்பு நோற்றிருப்பார்கள். இவர்களின் உடையோ மிகவும் எளிமையானது.இவர்களின் முகத்தில் ஒருவித கம்பீரம் இலங்கிக் கொண்டிருக்கும்.அவர்களை ஏறிட்டுப் பார்ப்பவர்கள் திடுக்கிடுவர்.

   இவர்களை இறைவன் கௌதுல் அஃலம் என்றழைத்தான். இவர்களுக்கு 99 திருப்பெயர்கள் உள்ளன.

    ஹிஜ்ரி 559ல் ஒரு நாள் தம் தவச்சாலையில் அமர்ந்திருக்கும்போது, 'என்னுடைய பாதங்கள் வலிமார்களின் தோள் மீது இருக்கும்' என்று கூறினர். அங்கிருந்த இறைநேசர்கள் அனைவரும் தங்கள் தோள்களில் இவர்கள் பாதங்களை வைத்துக் கொண்டனர். இப்பிரகடனத்தை பதாயில் இருந்த செய்யிது அஹ்மது கபீர் ரிபாயி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஞானதிஷ்டியால் விளங்கி, 'இந்த சின்ன அஹ்மதின் தோள் மீதிலும் கௌது நாயகத்தின் பாதங்கள் இருக்கும்' எனக் கூறி தம் தேள்களைத் தாழ்த்திக் கொண்டனர் என்றும், இவ்வாறே உலகிலுள்ள அனைத்து வலிமார்களும் செய்தார்கள் என்றும் வரலாறு கூறுகிறது.

     தங்கள் வாழ்நாளிலும், மறைவிற்குப்பின்னரும் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி கொண்டிருக்கிறார்கள்.

   இறப்பு வேளை நெருங்கியபோது, தம் மக்களை வானவர்களுக்கு இடம்விட்டு அமருமாறு சொல்லி, இரவுபகலாக அரூபிகளுக்கு சலாம் உரைத்துக் கொண்டிருந்தனர். 'அல்லாஹ்' என்ற திக்ரோடு ஹிஜ்ரி 561 ரபீயுல் ஆகிர் பிறை 11 திங்கட் கிழமை (கி.பி.1166 பிப்ரவரி 14) தங்கள் 91வது வயதில் மறைந்தார்கள். இவர்களின் அடக்கவிடம் பகுதாதில் உள்ளது. அதன் மீது சுல்தான் சுலைமான் ஹிஜ்ரி 941 (கி.பி.1535)ல் ஒரு அழகிய கட்டிடம் எழுப்பினார்.

Importance and Needness of Sheikh-Guru-முர்ஷிதுகள்-ஷெய்குமார்கள் தேவைதானா?

முர்ஷிதுகள்-ஷெய்குமார்கள் தேவைதானா?

மௌலானா மௌலவி அஷ்ஷெய்கு முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் காதிரி ஸூபி.

யா -அய்யு-ஹல்லதீன-ஆமனுத்தகுல்லாஹ்-வப்தகு-இலைஹில் வஸீலத…..

ஈமான் பொண்டவர்களே! அல்லாஹ்வை தக்வா-அஞ்சி நடங்கள், அவனளவில் வஸீலாவை-இடைப் பொருளை தேடிக் கொள்ளுங்கள். அவன் பாதையில் ஜிஹாத்- போர் புரியுங்கள், நிச்சயம் நீங்கள் வெற்றி-முக்தி பெறுவீர்கள். -அல்குர்ஆன் 5-35.

மனிதன் வெற்றி பெறுவதற்கும், முக்தி அடைவதற்கும் மிக முக்கியமான நான்கு அம்சங்களை இவ்வசனத்தில் இறைவன் கூறியுள்ளான்.

1. ஈமான் கொள்ளுதல்.
2.தக்வா செய்தல்
3.வஸீலா தேடுதல்.
4.அவன் பாதையில் போர் புரிதல்.

இந் நான்கில் மூன்றாவதான வஸீலாவைப் பற்றி இங்கு ஆராய்வோம்.

வஸீலா என்பதற்கு நல்ல கிரியைகளை முற்படுத்துவதும், நல்ல செயல்களை செம்மைபடுத்துவதும் என்பது பொதுவான கருத்து.

இறைவழி நடப்பவன் தனக்கென்று பூரணத்துவமடைந்த நேர்வழி காட்டுபவர்களில் ஒருவரை (முர்ஷிது-ஷெய்கை) தனது உற்ற நண்பராக எடுத்துக் கொள்ளுதல் என்பது குறிப்பிடத்தக்கதான கருத்து என்று மாமேதை மகான் மஹ்மூது தீபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நவின்றுள்ளார்கள்.

உண்மையில் இரண்டாம் கருத்துதான் இவ்விடம் வஸீலா என்பதற்கு தகும். ஏனெனில்,

இரண்டாவது அம்சமான தக்வா செய்வதென்பதில் நல்ல கிரிகைகளை முற்படுத்துவதும், நல்செயல்களை செம்மைபடுத்துவதும் அடங்கும்.

தக்வா என்றால் பாவமான காரியங்களை தவிர்த்து நடப்பதும், நல்ல காரியங்களை செய்வதும்தானே! அதையே மூன்றாவது கூறுவது பொருத்தமன்று.

ஷரீஅத். தரீகத், ஹகீகத், மஃரிபத்- சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய வழிகள் மூலம்தான் இறைவன் அளவில் சேர முடியும் என்பது மெய்ஞ்ஞானிகளின் ஏகோபித்த முடிவு.

எனவே இவ் வழி நடப்பவர்களுக்கு கண்டிப்பாக ஒரு ஷெய்கு-குருவின் கரம் பிடிப்பது இன்றியமையாத கடமை.

இதன் அடிப்படையில்தான் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் சொன்னதை நமக்கு கவி நயமாக மாமேதை அல்லாமா ஸதக்கத்துல்லாஹ் அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,

'வ குல்த- மன்லா லஹு- ஷெய்குன்- ஃப இன்னி………………..'

'எவர்களுக்கு ஷெய்கு இல்லையோ அவர்களுக்கு நிச்சயம் நான் ஷெய்காக-முர்ஷிதாக இருக்கிறேன். அவன் கல்வத்தில்-தனிமையிலும் அவனது உற்ற நண்பனாக நான் இருக்கிறேன். என்னில் நின்றும் அவனுக்கு தொடர்பு உண்ட என்று (கௌது நாயகமே!) நீங்கள் கூறியுள்ளீர்கள். இப்படியே முஹ்யித்தீன் ஆண்டகையே எனக்கு ஆகுங்கள்'.

என்று பாடி தந்துள்ளார்கள்.

'யவ்ம –நத்உ-குல்ல உனாஸின்-பி இமாமிஹிம்- அன்று(கியாமத் hளில் நாம் ஒவ்வொரு மக்களையும் அவர்களது தலைவர்(களின் பெயர்)களைக் கொண்டு அழைப்போம்'(17-71) என்ற இறைவன் கூறியுள்ளான்.

கருத்து:- தரீகத் தலைவர்களின் பெயர்களைக் கொண்டு அதாவது:- காதிரிய்யா தரீகாகாரர்களே! ஜிஷ்திய்யா தரீகாகாரர்களே! ஷாதுலிய்யா தரீகாகாரர்களே! என்று இப்படியே அழைப்பான் என்று சில விரிவுரையாளர்கள் இவ்வசனத்திற்கு கருத்துக் கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

இறைவன்பக்கம் போய் சேருவதற்கு இறைதூதர்கள் பக்கம் போகுவதற்கு ஷெய்குமார்கள்-முர்ஷிதுகள் அவசியம். உதாரணம்:- அனுமதி வழங்கப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு அவைகளின் கழுத்தில் அடையாள பட்டிகள் மாட்டியிருப்பது அவசியமாக இருப்பது போல், நமது கழுத்துக்களிலும் எந்த ஷெய்குமார்களின் பட்டியாவது கண்டிப்பாக மாட்டியிருப்பது அவசியம். ஏனெனில்,

நமது நப்ஸு- ஆத்மா நாய் போன்றது. சுதந்திரமாக விட்டு வைக்கலாகாது. அதன் கழுத்தில் பட்டிபோட்டு ஒரு ஷெய்கின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கச் செய்ய வேண்டும். கழுத்துப்பட்டியில் கொழுகப்பட்டிருக்கும் சங்கிலியின் முதல் கொழுக்குபட்டியிலும், மறுபக்கத்து கொழுக்கு எஜமானின் கரத்தில் இருப்பது போல், ஷெய்கின் கரம் நம் கழுத்திலும்,  ஷெய்கின் ஸில்ஸிலாவான சங்கிலி தொடர்பான மறுபுறம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹஜ வ ஸல்லம் அவர்களின் கரத்திலும் இருக்க வேண்டும்.

நாம் இயங்குவது அந்நாயகம் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ்தான். நமது ஷெய்கு அதற்கு வஸீலாவாக இடைப் பொருளாக தொடர்பை உண்டாக்கி தருபவர்களாக இருக்கிறார்கள். இதுதான் உண்மையான எதார்த்தமான வஸீலாவாகும். இந்த வஸீலாவை தேடும்படியாகத்தான் மேற்கண்ட 5:35 வசனத்தில் இறைவன் கூறியுள்ளான்.

மழை பொழியும் போது அதை நாம் பெறாவிட்டால் அதை வாங்கி வைத்திருக்கும் குளம் குட்டையை நாம் நாடுவது போல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது ஜீவிய காலத்தில் அருள் மழை பொழியும் போது நாம் இல்லை என்றால் வாழையடி வாழையாக அந்த அருள் வெள்ளத்தை வாங்கி வந்திருக்கும் குளம் குட்டைகள் போன் ஷெய்குமார்களின் திருக்கரத்தை பிடித்தால்தானே வயல் போன்ற ஈமானுக்கு அவ்வருள் வெள்ளம் பாய்ந்து ஈமான் உருப்படும். இல்லையென்றால், ஈமான் கருகி சருகாகி விடும் அல்லவா? அல்லாஹ் அந்நிலையை விட்டும் நம்மை காப்பாற்றுவானாக!

இதை எங்களது குருநாதர் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹஜ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் கிழுரிய்யா பைத்தில்,

'ழல்லமன்-ளன்ன-லஅல்லஹு-யபூஸு-பிநப்ஸிஹி
ழாஅ-உம்ரஹு-அகிஸ்-யாரப்பி-பில்-கிழ்றின்னபி'

(ஷெய்குமார்களின் துணையின்றி) தானாக ஜெயம் பெறலாம் என்று எவன் எண்ணினானோ அவன் தனது வயதை பாழ்படுத்திவிட்டான். கிழ்று நபியின் பொருட்டால் எனது இரட்சகனே! என்ழன இரட்சிப்பாயாக!

என்று அழகாக வலியுறுத்தி பாடியுள்ளார்கள். இன்னும் அவர்கள் அதே பைத்தில், ஸுஹ்பத்துஷ் ஷெய்கி-ஸஆததுன்-ஷெய்குவின் சகவாசம் சீதேவித்தனமாகும்., கூனூ-மஅஸ்ஸாதிகீன்-மெய் அன்பர்களுடன் நீங்கள் இருந்து வாருங்கள்(9-119) என்ற திருவசனத்தில் இறைவனின் கட்டளையும் இருக்கின்றது என்றும் பாடியுள்ளார்கள்.

உலுல் அஜ்மிகளில் ஒருவரான் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் கூட மெஞ்ஞான கடலான கிழ்று நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று மெஞ்ஞான அருளை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று இறைவன் இட்ட கட்டளையும், அவர்களுக்கு மத்தியில் நடந்த நீண்ட வரலாற்றையும் ஷெய்கு முர்ஷிதுகளின் முக்கியத்ததுவத்தையும், ஒழுக்கத்தையும் நமக்கு ஸுரத்துல் கஃபு பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறது. இதையே அடிப்படையாக வைத்துதான் எங்கள் ஷெய்குநாயகம் கிழ்றியா பைத்தை இயற்றியுள்ளார்கள்.

'ஸுஹ்பத்தே-ஸாலிஹ் குதுனா-ஸாலிஹ் குனத்
ஸுஹ்பத்தே-தாலிஹ் குதுனா-தாலிஹ் குனத்'

நல்லவர்களின் சகவாசம் நல்லவர்களாக மாற்றி விடுகின்றது. கெட்டவர்களின் சகவாசம் கெட்டவர்களாக மாற்றி விடுகின்றது' என்றும்,

'யக்ஸமானா-ஸுஹ்பத்தே-பா அவ்லியா
பெஹ்தர்-அஸ்-சத்-ஸாலெயே-தாஅத்-பேரியா'

சற்று நேரம் அவ்லியாக்களுடன் சகவாசத்தில் இருப்பது நூறு ஆண்டுகள் முகஸ்துதியின்றி வழிப்படுவதைக் காண மிகச் சிறந்தது' என்றும் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பாடியுள்ளார்கள்.

'அஸ்ஸுஹ்கத்து-துஅத்திரு- சகவாசம் குணபாடு அளிக்கும்' என்ற நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கூறியுள்ளார்கள்.

'பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்' என்ற தமிழ் முதுமொழியும் ஒன்று உண்டு.

ஆகவே இப்படிப்பட்ட ஷெய்குமார்களின் சகவாசம் மிகத் தேவை. முக்தி பெறுவதற்கு அவர்களின் திருக்கரம் பற்றிப் பிடித்து அவர்களின் தரீகத்தில் செல்லுவது மிக முக்கியமாகும். இவ்வழிதான் நபிமார்கள், சித்தீக்கீன்கள்,ஷுஹதாக்கள், சாலிஹுன்கள் சென்ற வழி. இதுதான் ஸிரத்தே முஸ்தகீம்-நேரான வழி. இவ் வழியைத்தான் தொழுகையின் ஒவ்வொரு நிலையிலும்'இஹ்தினஸ்ஸி ராதல்-முஸ்தகீம்-ஸிராதல்லதீன-அன்அம்த-அலைஹிம்-(இறiவா!) நீ நேரான வழியை எங்களுக்கு காட்டுவாயாக! (அவ்வழி) நீ உபகாரம் புரிந்தவர்களின் வழி' என்று ஓதி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டுமென்ற நியதியும் உண்டு.

'வத்தபிஃ-ஸபீல-மன்-அனாப-இலய்ய- என்னளவில் மீண்டவர்களின் பாதையை பின்பற்றுவீராக! என்ற(31-15) திருவசனமும், அல்லாஹ் அளவில் போய் சேர்ந்து அவனது திருக்காட்சியை கண்டு களித்து மீண்டவர்களான முர்ஷிது-ஷெய்குமார்களை நாம் கரம்பிடித்து பைஅத் தீட்சை பெற்று பின்பற்றியாக வேண்டுமென்று வலியுறுத்துகின்றது.

இதுமட்டுமன்று, நமது இக்கட்டான வேலையிலும் நம்மை காப்பாற்றுபவர்களும் அவர்கள்தான். எடுத்துக்காட்டாக,

நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மிஸ்ரு நாட்ல் ஜுலைஹா அம்மையாரின் அறையில் அடைக்கப்பட்டு இருக்கும் வேளையில், 'கன்ஆன்' என்னும் சிற்றூரில் இருந்துக் கொண்டிருக்கும்  யஃகூபு அலைஹிஸ்ஸலாம் அவர்களை(உதவிக்கு)அழைத்தார்கள். உடனே அவ்வறையில் காட்சிக் கொடுத்து ஜுலைஹா அம்மையாரின் மாய லீலையை விட்டும் காப்பாற்றினார்கள் என்பது திருமறை கற்பிக்கும் வரலாறு.

அல்லாமா இமாம் ராஸி ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு மரண தருவாயில் அவர்களது ஷெய்கு குரு நஜ்முத்தீன் வலி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஆஜராகி ஈமானை காப்பாற்றினார்கள் என்பது உலகம் அறிந்த வரலாறு.

நம் உடம்பின் நரம்புகள் நம் ஹிருதயத்துடன் தொடர்பு கொண்டு இயங்குவது போல், உலகத்திற்கு ஹிருதயமாக-முக்கிய அங்கமாக மூலக்குருவாக இருந்து வரும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களோடு இக்குருமார்கள்தான் தொடர்பை ஏற்படுத்தி தருகிறார்கள். அதுபோழ்துதான் நாம் சரியாக இயங்க முடியும். நமது இலட்சியமும் நிறைவேறும்.

நகரங்கள், பட்டிதொட்டிகள் எல்லா இடங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் மின் விளக்குகளுக்கு பவர் ஹவுஸில் இருந்து வயர் கம்பிகள் மூலம் மின்சக்தி வருவது போல் உலகத்திற்கு பவர்ஹவுஸாக இருந்து வரும் அவ்வுத்தம நபியின் அருள் இயக்க சக்தி வர வேண்டுமானால் வயர் கம்பிகள் போன்று அமைந்திருக்கும் ஷெய்குமார்களின் ஸில்ஸிலா-தொடர்பு இருக்க வேண்டும்.

சூரியக் கதிர்கள் துணியில் மேனியில் படுகின்றன. கரித்துவிடுவதில்லை. ஆனால் பூதக்கண்ணாடியை சூரியக் கதிர்களுக்கும் துணிக்கும் இடைப் பொருளாக வைத்தால் பூதக் கண்ணாடி கதிர்களை ஒன்று கூட்டி துணியை-மேனியை கரித்து விடும் இயக்கத்தை நாம் அறிவோம். இதைப்போல்,

 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹஸ வஸல்லம் அவர்களின் அருள் ஜோதி உலகத்தில் ஒளித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஜோதி நம் உள்ளத்தில் பட்டு குணப்பாடு அளிக்க வேண்டுமானால் அந்த அருள் ஜோதியை ஒன்று கூட்டிதரும் பூதக் கண்ணாடி போன்ற குருநாதர்களை நம் உள்ளத்திற்கும் பெருமானாரின் அருள் ஜோதிக்கும் இடைப்படுத்தினால் தான் உள்ளத்தில் 'இஷ்க்' எனும் குணப்பாட்டை ஏற்படுத்த முடியும் என்பதையும் இவண் உணர்க! பெருமானாரின் பேரொளியின்றி எவரும் இறைசன்னிதானம் பிரவேசிக்க முடியாது என்பது வெள்ளிடைமலை.

ஆகவே முக்தி அடைவதற்கும் இறையருள் வெறுவதற்கும் வஸீலாவான ஷெய்கு-முர்ஷிது ஒருவரை எடுத்துக் கொண்டு இறைவழி நடக்க வேண்டும்.

அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் இவ்வழி நடந்து முக்தி பெற்றவர்களாக ஆகுவதற்கு நல்லுதவி புரிவானாக!