திருக்குர்ஆன் ஸூராக்களின் சிறப்புகள்- Significance of Al Quran
By Sufi Manzil
முஹம்மதிப்னு முஹம்மதிப்னு முஹம்மதிப்னு அல் ஜஸ்ரீ ஷாஃபி;யீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கோர்வை செய்த அல்ஹிஸ்னுல் ஹஸீன் என்னும் துஆக் களஞ்சியம் என்ற நூலிலிருந்து….
1. குர்ஆனை ஓதி வாருங்கள். அது கியாமத்து நாளில் அதனை ஓதியவருக்குப் பரிந்துரை செய்யும் நிலையில் வரும். -நபிமொழி.
2. என்னை திக்ரு செய்வதை விட்டும், என்னிடம், கேட்பதை விட்டும் குர்ஆன் ஓதுவதிலேயே ஒரு வர் ஈடுபட்டிருந்தால், கேட்பவர்களுக்குக் கொடுப்பதை விடச் சிறந்ததை அவருக்கு நான் கொடுப்பேன்’.-ஹதீது குத்ஸி.
3. அல்லாஹ்வுடைய திருவேதத்தின் சிறப்பாகிறது, அல்லாஹுதஆலா தன் படைப்பினங்களை விட எவ்வாறு சிறப்புள்ளவனாக இருக்கிறானோ அது போன்றதாகும் என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
4. குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள். அதனை ஓதி வாருங்கள். ஏனெனில், குர்ஆனைக் கற்று, அதனை ஓதி, அதன்படி அமல் செய்பவருக்கு உதாரணமாகிறது, அதனுடைய வாடை எல்லா இடங்களிலும் வீசிக்கொண்டிருக்கிற, ஒரு தோல்பையைப் போன்றதாகும். குர்ஆனைக் கற்று, அதன்படி அமல் செய்யாமல் தூங்கி விடுகிறவருக்கு உதாரணம், வாய் கட்டப்பட்ட கஸ்தூரி நிரப்பப்பட்ட வாயைப் போன்றதாகும்’ என்று ஹதீதில் வந்துள்ளது.
5. திருக்குர்ஆனில் நன்கு தேர்ச்சியடைந்தவர்கள், கண்ணியவான்களும், நல்லோர்களுமாகிய எழுதுகின்ற மலக்குகளுடன் இருப்பார்கள். எவர் குர்ஆனை திக்கித் திக்கிச் சிரமமப்பட்டு ஓதுகிறாரோ அவருக்கு இரண்டு மடங்கு நற்கூலிகள் இருக்கின்றன’ என்று ஹதீதில் வந்துள்ளது.
6. அல்லாஹ்வுடைய திருவேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுகிறவாகு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை என்பது அது போன்று பத்து மடங்கு நன்மை உடையதாகும். அலிப், லாம், மீம் என்பதை ஓர் எழுத்து என்று நான் சொல்லவில்லை. அலிப் ஓர் எழுத்து, லாம் ஓர் எழுத்து, மீம் ஓர் எழுத்து என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.
7. (கியாமத்து நாளில்) குர்ஆன் உடையவரை (குர்ஆன் ஓதி அதன்படி அமல் செய்தவரை) நோக்கி, குர்ஆனை ஓதிக் கொண்டே செல்வாயாக! அதன் மூலம் (சுவனத்தில்) படித்தரங்களில் முன்னேறிச் செல்வாயாக! இன்னும் உலகில் நீ குர்ஆனை நிறுத்தி நிறுத்தி ஓதியது போல் இங்கும் நீ நிறுத்தி நிறுத்தி ஓதி முன்னேறுவாயாக! நீ ஓதுகின்ற கடைசி ஆயத்தின் எல்லையில்தான் உன்னுடைய தங்குமிடம் இருக்கிறது என்று சொல்லப்படும் என்று ஒரு ஹதீதில் வந்திருக்கிறது.
8. இரண்டு மனிதர்களுடைய விஷயத்தில் தவிர பொறாமை வைத்தல் கூடாது. ஒருவர்: அல்லாஹுத்தஆலா அவருக்கு குர்ஆனுடைய அறிவைக் கொடுத்தான். அவர் அதனைக் கொண்டு இரவுக் காலங்களிலும், பகல் காலங்களிலும் அமல் செய்கிறாரே அவராகும். இரண்டாமவர்: அல்லாஹுத்தஆலா அவருக்கு செல்வத்தைக் கொடுத்தான். அதனை அவர் இரவு காலங்களிலும், பகல் காலங்களிலும் (அல்லாஹ்வின் கட்டளைப் படி) செலவு செய்கிறாரே அவராகும் என்று ஒரு ஹதீதில் அருளப்பட்டுள்ளது.
ஸூரத்துல் பாத்திஹாவின் சிறப்பு:
1. ‘குர்ஆன் உடைய ஸூராக்களிலேயே மிக்க மகத்துவம் வாய்ந்ததாகும். திரும்ப ஓதப்படக் கூடிய ஏழு ஆயத்துகளைக் கொண்டதும் மகத்தான குர்ஆனுமாகும்’ என்று ஒரு ஹதீதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. ‘சூரத்துல் பாத்திஹாவாகிறது அர்ஷுகு;கு கீழுள்ள (பிரத்தியேக) இடத்திலிருந்து எனக்கு வழங்கப்பட்டுள்ளது’ என ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள்.
3. ‘ஒரு தடவை ஹஜ்ரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தில் வருகை தந்து அமர்ந்திருந்தார்கள். அப்போது மேலிருந்து (வானத்திலிருந்து) ஒரு பெரும் சப்தத்தைக் கேட்டார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்கள் தலையை உயர்த்திப் பார்த்து, ‘இது வானத்திலுள்ள கதவொன்று திறக்கப்படுகின்ற சப்தம். அதன் வழியாக ஒரு மகலக்கானவன் பூமிக்கு இறங்கி வருகிறார். அவர்கள் இதுவரை பூமிக்கு வந்ததே கிடையாது என்று கூறினார்கள். அதற்குள் அந்த மலக்கானவர் அங்கு வந்து ஸலாம் கூறி விட்டு, ‘இரண்டு ஒளிகளைக்கொண்டு நீங்கள் மகிழ்ச்சி அடையுங்கள். அவ்விரண்டு ஒளிகளும் உங்களுக்கு முன்னுள்ள எந்த நபிக்கும் கொடுக்கப்படவில்லை. அவை ஸூரத்துல் பாத்திஹாவும், ஸூரத்துல் பகராவுடைய கடைசி இரண்டு ஆயத்துமாகும். அவ்விரண்டிலிருந்து ஓர் எழுத்தை நீங்கள் ஓதினாலும் அதற்குரிய நன்மை கொடுக்கப்படும்’ என்று கூறினார்.
ஸூரத்துல் பகராவின் சிறப்புகள்
1. ‘ஸூரத்துல் பகராவை ஓதுகின்ற வீட்டிலிருந்து ஷைத்தான் விரண்டோடுகிறான’; என்று ஒரு ஹதீதிலும்,
2. ‘ஸூரத்துல் பகராவை ஓதிக் கொள்ளுங்கள். ஏனெனில் அதனை ஓதிவருவது பரக்கத்தாகும். அதை விடுவது நஷ்டமாகும். வீணானவர்கள் தாம் அதனை ஓதச் சக்தி பெற மாட்டார்கள்’ என்று மற்றொரு ஹதீதிலும்,
3. ‘ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் உயர்ந்த நிலை இருக்கிறது. குர்ஆனின் உயர்ந்த நிலை ஸூரத்துல் பகராவாகும்’ என்று வேnhறாரு ஹதீதிலும்,
4. ‘எவரொருவர் சூரத்துல் பகராவை இரவில் ஓதினால், அன்றிலிருந்து மூன்று இரவுகள் ஷைத்தான் அவ்வீட்டில் நுழைய மாட்டான்’;என்று இன்னொரு ஹதீதிலும்,
5. ‘எனக்கு சூரத்துல் பகரா முதல் தரமான திக்ரிலிருந்து லவ்ஹுல் மஹ்பூலிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது’ என்று பிறிதொரு ஹதீதிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பகரா, ஆலு இம்ரான் இரு ஸூராக்களின் சிறப்புகள்:
பிரகாசிக்கின்ற இரண்டு ஸூராக்களாகிய பகரா, ஆலு இம்ரான் இரண்டையும் ஓதிக் கொள்ளுங்கள். ஏனெனில், அவ்விரண்டும் கியாமத்து நாளில் இரண்டு மேகக் கூட்டங்களாக அல்லது அணிவகுத்து வரும் இரண்டு பறவைக் கூட்டங்களாக வந்து, அவ்விரண்டையும் ஓதியவருக்காக(அல்லாஹுதஆலாவிடம்) வாதிடும்’ என்று ஒரு ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயத்துல் குர்ஸியின் சிறப்பு:
1. ஆயத்துல் குர்ஸியாகிறது அல்லாஹ்வுடைய வேதத்தில் மகத்தான ஆயத்தாகும் என்று ஒரு ஹதீதிலும்,
2. குர்ஆனுடைய ஆயத்துகளில் தலைமையானதாகும் என்று மற்றொரு ஹதீதிலும்,
3. ஆயத்துல் குர்ஸி ஓதி ஊதப்படும் அல்லது எழுதிப் போடப்படும் எந்தப் பொருளின் மீதும், குழந்தைகளின் மீதும் ஷைத்தான் நெருங்குவதில்லை என்று வேறொரு ஹதீதிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பகராவின் கடைசி இரு ஆயத்துக்களின் சிறப்புகள்:
‘ஆமனர் ரஸூலு..’ என்பதிலிருந்து கடைசிவரையிலுள்ள (ஸூரா பகராவின் கடைசி) இரண்டு ஆயத்துக்கள் ஒரு வீட்டில் ஓதப்பட்டால் மூன்று நாட்களுக்கு ஷைத்தான் அவ்வீட்டை நெருங்குவதில்லை’ என்று ஒரு ஹதீதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘அல்லாஹுத் தஆலா ஸூரத்துல் பகராவை இரண்டு ஆயத்துக்களைக் கொண்டு முடித்துள்ளான். அவ்விரண்டையும் அல்லாஹுத்தஆலா தன்னுடைய அர்ஷுக்குக் கீழுள்ள புதையலிலிருந்து எனக்கு வழங்கியுள்ளான். எனவே அவ்விரண்டையும் நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய பெண்களுக்கும், மக்களுக்கும் கற்றுக் கொடுங்கள். ஏனெனில், நிசச்யமாக அவை தொழுகையின் சாரமாகவும், குர்ஆனின் கருத்தாகவும், மகத்தான துஆவாகவும் இருக்கின்றன’ என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.
ஸூரா அன்ஆமின் சிறப்பு:
சூரத்துல் அன்ஆம் இறங்கிய போது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுப்ஹானல்லாஹ் என்று கூறிவிட்டு, இந்த ஸூராவிற்காக அடிவானத்தை அடைத்து கொள்ளுமளவிற்கு மலக்குகள் வருகை தந்தார்கள்’ என்று கூறினார்கள்.
ஸூரா கஹ்பின் சிறப்புகள்:
1. எவரொருவர் சூரத்துல் கஹ்பை ஜும்ஆவுடைய பகலில் ஓதுகிறாரோ அவருக்கு அடுத்த ஜும்ஆ வரை உள்ள தினங்கள் ஒளியினால் இலங்குகின்றன’ என்றும்,
2. எவர் சூரத்துல் கஹ்பை ஜும்ஆவுடைய இரவில் ஓதுகிறாரோ அவருக்கும் கஃபாவுக்கும் இடையே ஓர் ஒளி இலங்கிக் கொண்டிருக்கும் என்றும்,
3. எவர் ஸூரத்துல் கஹ்பை அது இறங்கியது போலவே, (சரியான முறையில்) ஓதுகிறாரோ அவருக்கு அவருடைய இல்லத்திலிருந்து கஃபாவை ஒரு ஒளி இருக்கும் என்றும்,
4. எவரொருவர் சூரத்துல் கஹ்புடைய கடைசி பத்து ஆயத்துக்களை ஓதி வருகிறாரோ, அவர் காலத்தில் தஜ்ஜால் வெளியானால் அவன் அவர் மீது சாட்டப்படமாட்டான் என்றும்,
5. எவரேனும் ஒருவர் சூரத்துல் கஹ்பை ஓதினால் அவருடைய இடத்திலிருந்து மக்கா வரை (உள்ள தொலைவு) கியாமத்து நாளில் அது ஒளியாக அவருக்கு ஆகிவிடும் என்றும்,
6. எவரொருவர் சூரத்துல் கஹ்புடைய கடைசி பத்து ஆயத்துக்களை ஓதி வந்தால், (அக்காலத்தில்) தஜ்ஜால் தோன்றினால், அவன் அவருக்கு எந்த இடையூறும் செய்ய முடியாது என்றும்,
7. எவர் ஸூரத்துல் கஹ்புடைய ஆரம்பத்திலுள்ள பத்து ஆயத்துக்களை மனனம் செய்து கொள்கிறாரோ அவர் தஜ்ஜாலை விட்டும் பாதுகாக்கப்படுவார் என்றும்,
8. சூரத்துல் கஹ்புடைய ஏதேனும் பத்து ஆயத்துக்களை மனனம் செய்தால் அவர் தஜ்ஜாலை விட்டும் பாதுகாக்கப்படுவார் என்றும்,
9. எவரொருவர் சூரத்துல் கஹ்புடைய கடைசி பத்து ஆயத்துக்களை மனனம் செய்து ஓதி வருகிறவர் தஜ்ஜாலுடைய குழப்பத்தை விட்டும் பாதுகாக்கப்படுவார் என்றும்,
10. ஸூரத்துல் கஹ்புடைய முதல் மூன்று ஆயத்துக்களை ஓதி வருபவர் தஜ்ஜாலுடைய குழப்பத்தை விட்டும் பாதுகாக்கப்படுவார் என்றும்,
11. எவரொருவர் தஜ்ஜாலைப் பெற்றுக் கொண்டால், (தஜ்ஜால் அவர் முன் வந்தால்) அவன் மீது ஸூரத்துல் கஹ்புடைய ஆரம்பத்திலுள்ள சில ஆயத்துக்களை ஓதவும். ஏனெனில், அது அவனுடைய குழப்பத்தை விட்டும் அவருக்குப் பாதுகாப்பதாகும்’ என்றும் ஹதீதுகளில் அறிவிக்கப்பட்டுள்ளன.
தாஹா, தாஸீன், ஹாமீம் சூராக்களின் சிறப்புகள்:
‘தாஹா என்று ஆரம்பிக்கபட்பட்டுள்ள ஸூராவும், தாஸீன் என்று ஆரம்பிக்கப்பட்டுள்ள சூராக்களும், ஹாமீம் என்று ஆரம்பிக்கப்பட்டுள்ள ச10ராக்களும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வேதப்பலகையிலிருந்து எனக்குக் கொடுக்கப்பட்டவையாகும்’ என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸலல்ம் அவர்கள் அருளினார்கள்.
ஸூரா யாஸீனின் சிறப்பு:
ஸூரா யாஸீன் குர்ஆனுடைய இதயமாகும். அல்லாஹுத்தஆலாவையும், மறுமையையும் நாடியவராக ஒருவர் இதனை ஓதினால், அவருக்கு பாவங்கள் மன்னிக்கப்படும். எனவே, உங்களில் இறந்து விட்டவருக்காக இதனை ஓதுங்கள்’ என்று ஒரு ஹதீதில் வந்துள்ளது.
ஸூரத்துல் பத்ஹ் உடைய சிறப்பு:
‘சூரியன் ஒளிப்படும் (உலகப்) பொருட்கள் அனைத்தை விடவும் சூரத்துல் பத்;ஹ் எனக்கு மிக விருப்பமானது என ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸலல்ம் அவர்கள் அருளினார்கள்.
ஸூரத்துல் முல்க் உடைய சிறப்பு:
1. முப்பது ஆயத்துக்களை கொண்ட சூறத்துல் முல்க் அதனை ஓதிவரும் மனிதருக்கு மன்னிப்பளிக்கப்படும் வரை அது அவருக்கு (அல்லாஹ்விடம்) சிபாரிசு செய்யும் என்று ஒரு ஹதீதிலும்,
2. அதனை ஓதிவருபருக்கு அல்லாஹ் மன்னிக்கிறவரை அது மன்னிப்புத் தேடுகிறது என்று மற்றொரு ஹதீதிலும்,
3. ஒவ்வொரு முஃமினுடைய உள்ளத்திலும் சூறத்துல் முல்க் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸலல்ம் அவர்கள் அருளியுள்ளதாக ஒரு ஹதீதிலும்,
4. ஒரு மனிதருடைய கப்ரில் (வேதனை செய்யும் மலக்குகள்) அவருடைய கால்களின் பக்கமாக வருவார். (அப்போது அவர் ஓதி வந்த ஸூரத்துல் முல்க்காகிறது) ‘இவர் என்னை (தொழுகையில் நின்று) ஓதி வந்தார். எனவே, இவரிடத்தில் வர உங்களுக்கு எவ்வித வழியுமில்லை’ என்று கூறும். அந்த மலக்குகள் அவருடைய நெஞ்சின் பக்கமாக, அல்லது வயிற்றின் பக்கமாக வருவார்கள். அப்பொழுதும் அது அவ்வாறே கூறும். பிறகு அவர்கள் தலைப்பபக்கமாக வருவார்கள். அது அவ்வாறே கூறும். இறுதியாக அது கப்புருடைய வேதனையை விட்டும் அவரைப் பாதுகாக்கும் என்று மற்றொரு ஹதீதிலும்,
ஸூரத்துல் முல்க் உடைய சிறப்பு பற்றி தவ்ராத் வேதத்திலும் கூறப்பட்டுள்ளது. எவர் இதனை இரவு நேரங்களில் ஓதிவருகிறாரோ அவர் அதிகமான, இனிமையான அமலைச் செய்து விட்டார் என்று வேறொரு ஹதீதிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூறா ஜில்ஜாலுடைய சிறப்பு:
‘இதா ஜுல்ஜிலத் சூறா குர்ஆனில் நாலிலொரு பகுதிக்கு சமமாகும்’ என்பதாகவும், ‘குர்ஆனில் பாதிக்கு சமமானதாகும் ‘என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மனிதர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ‘யாரஸூலல்லாஹ், எல்லாக் கருத்துக்களையும் பொதிந்து கொண்ட ஒரு ஸூராவை எனக்கு சொல்லித் தாருங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். அப்பொழுது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸலல்ம் அவர்கள் இதாஜுல்ஜிலத் ஸூராவை அவருக்கு ஓதிக் காட்டினார்கள். நபியவர்கள் ஓதி முடித்தவுடன், ‘தங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பியவன் மீது ஆணையாக நான் எப்பொழுதும் இதைவிட அதிகமாக்க மாட்டேன்’ என்று அம்மனிதர் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். அப்பொழுது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸலல்ம் அவர்கள் , இந்த மனிதர் வெற்றி அடைந்து விட்டார்’ என்று இரண்டு தடவை கூறினார்கள்.
சூறா காபிரூன் உடைய சிறப்பு:
குல் யாஅய்யுஹல் ஸூரா குர்ஆனுpல் கால் பகுதியாகும் என்றும் அல்லது (நன்மையால்) கால் பகுதிக்குச் சமமாகும் என்றும் ஒரு ஹதீதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பஜ்ருடைய பர்ளுக்கு முன் (சுன்னத்துத் தொழுகையில்) ஓத வேண்டிய இரண்டு ஸூராக்கள் மிக நல்லதாகி விட்டன. அவை குல் யாஅய்யுஹல் காபிரூன், குல்ஹுவல்லாஹு அஹது ஆகிய இரண்டுமாகும் என்று ஒரு ஹதீதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூறா இதாஜாஅ உடைய சிறப்பு:
‘இதா ஜாஅ நஸ்ருல்லாஹிஜ என்ற சூறா குர்ஆனில் கால் பகுதியாகும் ‘ என்று ஒரு ஹதீதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூறா இக்லாஸ் உடைய சிறப்பு:
1.குல்ஹுவல்லாஹு சூறா குர்ஆனில் மூன்றிலொரு பகுதியாகும் என்றும் அல்லது மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமாகும் என்றும் ஒரு ஹதீதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. ஸஹாபி ஒருவர் இமாமாக இருந்தார். அவர் ஒவ்வொரு தொழுகையிலும் குல்ஹுவல்லாஹு சூராவை ஓதுபவராக இருந்தார். இதனை மற்ற ஸஹாபாக்கள் நபியவர்களிடம் தெரிவித்த போது அம்மனிதரைப் பற்றி விசாரித்தார்கள். நான் அதனை விரும்புகிறேன் என்று அவர் கூறினார். அப்படியானால் அல்லாஹ்வும் அவரை விரும்புகிறான் என்று அவரிடம் தெரிவித்து விடுங்கள் என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள்.
3. இவ்வாறே ஒரு ஸஹாபி தொழுகையில் மற்ற ஸூராக்களுடன் சூரத்துல் இக்லாஸை அதிகமாக ஓதி வருபவராக இருந்தார். அவரிடத்தில் நபி ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீர் அதை விரும்புவது உம்மை அது சொர்க்கத்தில் சேர்த்து வைக்கும் என்று அருளினார்கள்.
4. ஒரு மனிதர் குல்ஹுவல்லாஹு சூராவை ஓதிக் கொண்டிருக்கச் செவியுற்ற ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இவருக்கு சுவர்க்கம் வாஜிபாகிவிட்டது என்று அருளினார்கள்.
5. என் உயிர் யார் வசம் இருக்கிறதோ அந்த ஒருவனின் மீது ஆணையாக சூரத்துல் இக்லாஸ் குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமாகும்’ என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.
6. தூங்கச் செல்லுகின்ற ஒருவர் படுக்கையில் தன் வலது விலாப்புறத்தின் மீது படுத்துக் கொண்டு பிறகு நூறு தடவை குல்ஹுவல்லாஹு சூறாவை ஓதித் தூங்கினால், கியாமத்து நாளில் அல்லாஹுத்தஆலா, ‘என்னுடைய அடியானே! உன் வலப்புறமாக சுவர்க்கத்தில் நீ பிரவேசிப்பாயாக!’ என்று கூறுவான் என ஒரு ஹதீதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸூரத்துல் பலக், ஸூரத்துன்நாஸ் ஸூராக்களின் சிறப்புகள்:
ஓதப்படுகின்ற இரண்டு சிறந்த ஸூராக்களை நான் கற்றுத்தர வேண்டாமா? என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உக்பத்துப்னு ஆமிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வினவிய பின், குல்அஊது பிரப்பில் பலக், குல்அஊது பிரப்பின்னாஸ் இரண்டையும் கூறினார்கள்.
‘இவ்விரண்டு சூறாக்களையும் ஓதிக் கொள்வீராக! அவ்விரண்டையும் போல் வேறு எதனையும் நீர் ஓத முடியாது என்று மற்றோர் அறிவிப்பில் கூறியுள்ளார்கள்.
‘குல் அஊது ரப்பில் பலக், குல்அஊது பிரப்பின்னாஸ் ஆகிய இரண்டு சூறாக்கள் இறங்கும் வரை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜின்கள், மனிதர்களின் கண்ணேறுக்கு ஆகியவற்றிற்கு பல துஆக்களைக் கூறி அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தார்கள். அவ்விரண்டு சூறாக்களும் இறங்கிய பின் அவ்விரண்டையும் பற்றிப் பிடித்துக் கொண்டு மற்றவற்றை விட்டு விட்டார்கள்’ என்று ஓர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
‘அல்லாஹ்விடம் எதையேனும் கேட்க கூடியவரோ, அல்லது எதை விட்டேனும் பாதுகாப்புத் தேடக் கூடியவரோல இந்த இரண்டு ஸூராக்களைக் கொண்டு கேட்பது, பாதுகாப்புத் தேடுவது போன்று வேறு எதைக் கொண்டும் பாதுகாப்புத் தேடமுடியாது’ என்று ஒரு ஹதீதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘இவ்விரண்டு சூறாக்களையும் படுக்கும்போதெல்லாம், விழித்து எழும்போதெல்லாம் ஓதிக் கொள்வீராக!’ என்று மற்றொரு ஹதீதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘குல் அஊது பிரப்பில் பலக் சூறாவை ஓதிக் கொள்வீராக! ஏனெனில், அதைவிட அல்லாஹு தஆலாவிற்கு மிக விருப்பமானதும அவனிடத்தில் சேரும்படியானதுமாகிய வேறு எந்த ஸூராவையும் நீர் ஓதிட முடியாது. ஆகையால், அது உனக்குத் தவறிவிடாமல் இருக்குமளவுக்கு நீர் சக்தி பெற்றால் அவ்வாறே செய்து கொள்ளவும். (அதாவது எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாக ஓதிக் கொள்ளவும்) என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.
அல்லாஹுத்தஆலாவிடம் சென்றடையும் விஷயங்ளில் குல்அஊது பிரப்பில் பலக்கைத் தவிர வேறு எதனையும் நீ ஓதிட முடியாது என்று ஒரு ஹதீதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றிரவு இறங்கிய குல்அஊது பிரப்பில் பலக், குல்அஊது பிரப்பின்னாஸ் ஆகிய இந்த ஆயத்துகளை நீ பார்க்கவில்லையா? இவற்றைப் போன்று வேறு எதனையும் நீ காணவே முடியாது’ என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.