ஸலவாத்துந் நாரிய்யாவும் அதன் துஆவும்-Salawathunnarriyah and Dua

ஸலவாத்துந் நாரிய்யாவும் அதன் துஆவும்-Salawathunnarriyah and Dua

By Sufi Manzil 0 Comment August 1, 2011

Print Friendly, PDF & Email

صلٰوةُ النَّارِيّٰة

اَللّٰهُمَّ صَلِّ صَلاَةً كَامِلَةً وَّسَلِّمْ سَلَامًا تَآمًّا عَلٰى سَيِّدِنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍؕ اَلَّذِىْ تَنْحَلُّ بِهِ الْعُقَدُ وَتَنْفَرِجُ بِهِ الْكُرَبُ وَتُقْضٰى بِهِ الْحَوَآئِجُ وَتُنَالُ بِهِ الرَّغَآئِبُ وَحُسْنُ الْخَوَاتِمِؕ وَيُسْتَسْقَى الْغَمَامُ بِوَجْهِهِ الْكَرِيْمِ وَعَلٰى اٰلِهِ وَصَحْبِه فِىْ كُلِّ لَمْحَةٍ وَّنَفَسٍ بِعَدَدِ كُلِّ مَعْلُوْمٍ لَّكَ ٭

صلٰوةُ النَّارِيّٰة دُعَا

اَلْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَالَمِيْنَ ، اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ وَاَنْعِمْ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ خَيْرِالْبَرِيَّةِ الَّذِيْ تَنْحَلُّ الْعُقَدُ وَالْبَلِيَّةُ بِقِرَائَةِ الصَّلوٰةِ عَلَيْهِ النَّارِيَّةِ وَالتَّفْرِيْجِيَّةِ وَعَلٰى اٰلِه وَاَصْحَابِه اَهْلِ الْمِنَحِ السَّنِيَّةِ، اَللّٰهُمَّ اِنَّا قَدْ حَضَرْنَا هٰذَااْمَجْلِسَ الْعَاطِرَ الرَّوَائِحَ ، وَالْمَاطِرَ الْمَنَائِحَ ، وَقَرَأْنَا هٰذِهِ الصَّلوٰةَ عَلٰى نَبِيِّكَ الْعَالِى الْقَدْرِ وَالْمَدَائِحِ ، بِاِذْنِ صَاحِبِ هٰذَا الْمَحَلِّ فِىْ هٰذَاالْمَحْفَلِ الْاَجَلِّ فَتَقَبَّلْهَا بِفَضْلِكَ وَكَرَمِكَ وَجُوْدِكَ وَاٍحْسَانِكَ . اَللّٰهُمَّ اِنَّا نَسْئَلُكَ الْعَافِيَةَ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ ، فَعَافِنَا بِحُرْمَةِ هٰذِهِ الصَّلوٰةِ الْمُبَارَكَةِ الْفَاخِرَةِ ، وَنَسْئَلُكَ اَنْتُفَرِّجَ عَنَّا الْكُرَبَ وَالْهُمُوْمَ ، وَالْمِحَنَ وَلْغُمُوْمَ ، وَاَنْ تُبَلِّغَ بِهَا مَطَالِبَنَا وَاٰمَالَنَا وَتَتَقَبَّلَ بِهَا اَعْمَالَنَا وَتَفْتَحَ بِهَا اَقْفَالَ قُلُوْبِنَا ، وَتَكَحِّلَ بِهَا اَبْصَارَنَا وَبَصَآئِرَنَا ، اَللّٰهُمَّ حَسِّنْ بِهَا اَخْلَاقَنَا ، وَوَسِّعْ بِهَا اَرْزَاقَنَا ، وَطَوِّلْ بِهَا اَعْمَارَنَا ، وَ عَمِّرْ بِهَا دِيَارَنَا ، وَاغْفِرْ بِهَا ذُنُوْبَنَا ، وَاسْتُرْ بِهَا عَيُبَنَا ، وَاشْرَحْ بِهَا صُدُوْرَنَا ، وَطَهِّرْ بِهَا قُلُوْبَنَا ، اَللّٰهُمَّ رَوِّحْ بِهَا اَرْوَاحَنَا وَقَدِّسْ بِهَا اَسْرَارَنَا وَنَزِّبِهَا اَفْكَارَنَا ، وَتَقَبَّلْ بِهَا مَنَاسِكَنَا وَاَذْكَارَنَا ، اَللّٰهُمَّ اَعْظِمِ الْاَجْرَ وَاثَّوَابَ ، لِمَنْ جَعَلَ هٰذَا الخَيْرَ فِيْ هٰذَا الْيَوْمِ مَعَ جَمْعِ الْاَحْبَاب ، وَحَقِّقْ لَهُ الرَّجَاءَ وَالْاُمْنِيّٰة ، وَلِقَارِئِ هٰذِهِ الصَّلاَةِ السَّنِيّٰة ، وَسَامِعِهَا وَحَاضِرِهَا رَاجِىْ مِنَحِكَ الْهَنِيّٰة ، اَللّٰهُمَّ اغْفِرْلَنَا وَلِوَالِدِيْنَا وَاقَارِبِنَا وَعَشَآئِرِنَا وَمَشَآئِخِنَا وَاَسَاتِيْذِنَا وَتَلَامِيْذِنَا وَاَحْبَابِنَا وَجِيْرَانِنَا وَمَنْ حَضَرَ فِىْ هٰذَا الْمَجْلِسِ مِنَ الْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ ، اٰمِيْنَ ، يَااَكْرَمَ الْاَكْرَمِيْنَ ، وَيَااَرْحَمَ الرَّاحِمِيْنَ ، وَصَلِّ وَسَلِّمْ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ سَيِّدِالْعَالَمِيْنَ ، صَلَاةً تَهْدِيْنَا اِلٰى صِرَاطِ الْمُسْتَقِيْمٍ ، وَتُجِيْرُنَا بِهَا مِنْ عَذَابِ الْجَحِيْمِ ، وَتُنَعِّمُنَا بِهَا بِالنَّعِيْمِ الْمُقِيْمِ يَارَحْمٰنُ يَارَحِيْمُ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُوْنَ وَسَلاَمٌ عَلَى الْمُرْسَلِيْن وَالْحَمْدُ لِلهِ رَبِّ الْعَالَمِيْنَ٭  

அஸ்ஸலாத்துந் நாரிய்யா துஆ

(அல் ஆலிமுல் பாளில், அல்ஹாஜ் நஹ்வி முஹம்மத் இஸ்மாயீல் இப்னு அல் ஆலி;முல் பாளில் நஹ்வி செய்யிது அஹ்மது அல்காதிரி அல் காஹிரி)

புகழனைத்தும் உலகத்தாரைப் படைத்து வளர்ப்பனுக்கே!

இறைவா! கருணையும் ஈடேற்றமும், விருத்தியும், உபகாரத்தையும் படைப்புகளில் மிக விசேசமான எங்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஈந்தருள்! அவர்களின்பால் நாரிய்யா தப்ரீஜிய்யா எனும் ஸலவாத்தை ஓதுவது கொண்டு அவர்கள் எப்படிப்பட்டவர்கள் எனில், முடிச்சுகளும் கஷ்டங்களும் (அவர்களைக் கொண்டு) அவிழ்கின்றன.

இன்னும் மேன்மைவாய்ந்த கொடைகளுடைய கிளையார்கள், தோழர்கள் மீதும் ஈந்தருள்!

இறைவா! நிச்சயமாக நாங்கள் நறுமணம் கமழும் இவ்விடத்திற்கு ஆஜரானோம். இன்னும் கொடைகள் மழைமாரி பொழியும் இடம்.

இன்னும் இந்த ஸலவாத்தை நாங்கள் நல்ல தகுதியும் புகழ்ச்சியும் உயர்;ந்த உனது நபி ஸல்லல்'லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஓதினோம். மகா வலுப்பமுள்ள இக் கூட்டத்தில் உள்ள இக்கூட்டத்தில் இந்த இடத்தினரின் உத்திரவு கொண்டு ஓதினோம்.

ஆனதால் உனது வருஷை கொண்டும், ஈகையை கொண்டும், கொடையைக் கொண்டும், உபகாரத்தைக் கொண்டும் இதை நீ ஒப்புக் கொள்.

இறைவா!இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் சுகத்தை உன்னிடத்தில் நாங்கள் கேட்கிறோம்.

ஆனதால் பெருமை வாய்ந்த, பரக்கத்து செய்யப்பட்ட இந்த ஸலவாத்தின் சங்கையைக் கொண்டு எங்களை நீ சுகமாக்குவாயாக!

இன்னும் எங்களை வpட்டும் கஷ்டங்களையும், துக்கங்களையும், கவலைகளையும், சங்கடங்களையும் நீக்க உன்னிடத்தில் கேட்கிறோம்.

இன்னும் இந்த ஸலவாத்தைக் கொண்டு எங்கள் தேட்டங்களையும், ஆதரவுகளையும் எத்தி வைக்கவும் நாங்கள் கேட்கிறோம்.

இன்னும் இதைக் கொண்டு எங்கள் கிரியைகளை ஒப்புக் கொள்ளவும், இதைக்கொண்டு எங்கள் இதயத்திலுள்ள பூட்டுகளை திறப்பதையும், இன்னும் இதைக் கொண்டு எங்கள் வெளிப்பார்வைக்கும், அகப்பார்வைக்கும் சுர்மா இடவும் கேட்கிறோம்.

இறைவா! இதைக் கொண்டு எங்களின் குணங்களை அழகாக்கு! இன்னும் இதைக் கொண்டு எங்கள் உணவுகளை விசாலமாக்கு! இன்னும் இதைக் கொண்டு எங்கள் வாழ்நாளை நீளமாக்கு! இன்னும் இதைக் கொண்டு எங்கள் வீடுகளை பரிபாலனம் செய்! இன்னும் இதைக் கொண்டு எங்கள் பாவங்களை மன்னித்தருள்! இன்னும் இதைக் கொண்டு எங்கள் மானங்களை மறைத்து விடு! இன்னும் இதைக் கொண்டு எங்கள் இதயங்களை விரிவாக்கு! இன்னும் இதைக் கொண்டு எங்கள் இதயங்களை தூய்மையாக்கு!

இறைவா! இதைக் கொண்டு எங்கள் ஆன்மாக்களை ராஹத்துப் பெறச் செய்! இன்னும் இதைக் கொண்டு எங்கள் அகமியங்களை தூய்மையாக்கு! இன்னும் இதைக் கொண்டு எங்கள் சிந்தனைகளை தூய்மையாக்கு! இன்னும் இதைக் கொண்டு எங்கள் வணக்கங்களையும், திக்ருகளையும் நீ ஓப்புக் கொள்!

இறைவா! இந்த நன்மையான செயலை நேசத்திற்குரி;யவர்களுடன் எவர் செய்தாரோ அவரது கூலியையும் பகரத்தையும் வலுப்பமாக்குவாயாக!

இன்னும் அவர்களுக்கு ஆதரவையும் நாட்டத்தையும் நிச்சயமாக்கு!

இன்னும் இந்தச்' சிறப்பான ஸலவாத்தை ஓதியவர்களுக்கும், கேட்டவர்களுக்கும் உன்னுடைய மேன்மையான கொடைகளை ஆதரவு வைத்தவர்களாக ஆஜரானவர்களுக்கும் நாட்டத்தை நிச்சயமாக்கு!

இறைவா! எங்களுக்கும் எங்கள் தாய் தந்தையருக்கும் எங்கள் குடும்பத்தாருக்கும், எங்கள் இனத்தாருக்கும், எங்கள் குருமார்களுக்கும், எங்கள் ஆசிரியர்களுக்கும், எங்கள் மாணவர்களுக்கும், எங்களின் நேசர்களுக்கும், எங்கள் அண்டை வீட்டாருக்கும் இந்த இடத்தில் கூடியிருக்கும் முஸ்லிமான ஆண், பெண்களுக்கும் நீ பிழை பொறுத்தருள்வாயாக! ஆமீன்.

கிருபையாளனே! உலகத்தார்களுக்கு நாயகமான எங்கள் நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் சொல்வாயாக! ஆமீன்.

இந்த ஸலவாத்தைக் கொண்டே எங்களை நீ நேரான பாதையில் நேர்வழி காட்டுவாய். இன்னும் அதைக் கொண்டே நரகத்து வேதனையை விட்டும் காப்பாற்றுவாய்! இன்னும் அதைக் கொண்டே எங்களை நிரந்தரமான சுகத்தைக் கொண்டு சுகமாக்குவாய்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!