ஏற்றமிகு நன்மைகளை அள்ளித் தரும் ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதுள்ள ஸலவாத்துக்கள்.

ஏற்றமிகு நன்மைகளை அள்ளித் தரும் ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதுள்ள ஸலவாத்துக்கள்.

By Sufi Manzil 0 Comment July 1, 2011

قَلَّتْ حِيْلَتِىْ اَنْتَ وَسِيْلَتِيْ اَدْرِكْنِىْ يَارَسُوْلَ اَللهِ

என்னுடைய எல்லா முயற்சிகளும் முற்றுப்பெற்றுவிட்டன. நாயகமே! ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  நீங்கள்தான் என்னுடைய வஸீலாவாக இருக்கிறீர்கள். அல்லாஹ்வின் ரஸூலே என்னைக் கைவிட்டுவிடாது இரட்சித்துக் கொள்ளுங்கள்.

All my efforts have come to an end. Ya Rasoolullah Sallalahu Alaihi Wa Sallam  you are the only one who remains as my Waseelah. Oh Allah’s Rasool sallalahu alaihi wa sallam save me.

எல்லாவிதமான நாட்டத்தேட்டங்களுக்காக நின்று கொண்டிருக்கும் போதும் அமர்ந்து கொண்டிருக்கும் போதும் உளுவுடனோ, உளு இல்லாமலோ இதை ஓதிக் கொண்டிருங்கள். இன்ஷா அல்லாஹ் தோல்வி என்பதே இல்லை.

For all desires -while standing, sitting,walking with Ablution of without Ablution recite this salawath. Insha Allah every good intention would be fulfilled.

1.முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காண:

اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ رُوْحِ مُحَمَّدٍ فِي الْاَرْوَاحِ وَعَلىٰ جَسَدِهِ فِي الْاَجْسَادِ وَعَلىٰ قَبْرِهِ فِى الْقُبُوْرِ

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காண ஆவல் கொண்டவர்கள் இந்த ஸலவாத்தை ஓதினால் அவர்களை கனவில் காணுவார்.

யார் என்னைக் கனவில் கண்டாரோ அவருக்கு கியாமத்து நாளிலும் என் தரிசனம் கிடைக்கும். யார் என்னை கியாமத்து நாளில் தரிசிக்கிறாரோ அவருக்கு நான் ஷஃபாஅத்து செய்வேன். யாருக்காக நான் ஷபாஅத்து செய்வேனோ அவர் ஹவ்ளுல் கவ்தரிலிருந்து நீர் அருந்துவார். அவரின் உடலை அல்லாஹ் நரகத்துக்கு ஹராமாக்கி விடுவான். -கஷ்புல் கும்மா, அல்கவ்ளுல் பதீஃ பக்கம் 43.

A great gift for those who desire to see Holy Prophet sallalahu alaihi wa sallam in their dreams.
Whoever recites this salawath will have the privilege of seeing me in their dreams. The one who saw me in their dreams would have the privilege of seeing me on the day of judgement. The one who is blessed with my pleading would drink water from the pond of Kawthar. Allah would forbid him from hell fire. – Kashful Gumma, Qawdul Badhee Page 43.

2.தண்டனையை விட்டும், அவமானத்தை விட்டும், கேள்வி கணக்கை விட்டும் பாதுகாப்பு பெற:

اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ مُحَمَّدٍ كُلَّمَا ذَكَرَهُ الذَّاكِرُونَ وَ صَلِّ عَلىٰ مُحَمَّدٍ كُلَّمَا

غَفَلَ عَنْ ذِكْرِهِ الْغَافِلوْنَ

ஹஜ்ரத் இமாம் ஷாபியீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த ஸலவாத்தை ஓதி வந்தார்கள். இதன் பரக்கத்தைக் கொண்டு கேள்வி கணக்கை விட்டும் அவர்கள் ஸலாமத் பெற்றார்கள்.  -முலக்கஸ் அஸ்-ஸஆததுத் தாரைன் பக்கம் 29.

Protection from Punishment, disgrace and interrogation.

Hazrath Imam Shafi radiallahu anhu was in the habit of reciting this salawath. By the blessing (Brakath) of this salawath he was safeguarded from interrogation.
-Mulakhkhas-As-Sa-Aadathuth Daarein page: 29

3.பொருளில் நன்மையும் அபிவிருத்தியும்

   اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدَنَا مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُوْلِكَ وَعَلَى الْمُوْمِنِيِنَ وَالْمُوْمِنَاتِ وَالْمُسْلِمِنَ 

وَالْمُسْلِمَاتِ

 

ரூஹுல் பயானுடைய ஆசிரியர் அவர்கள் கூறுகிறார்கள்: எவரொருவர் இந்த ஸலவாத்தை ஓதுகிறாரோ அவருடைய பொருளும் செல்வமும் இரவு பகலாக வளர்ச்சி அடையும்.

Good and Prosperity in Wealth
The author of Roohul Bayan records: Whoever recites this salawath will see his wealth increasing by night and day.

4.மறதியைப் போக்க

اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلىٰ سَيِّدَنَا مُحَمَّدِنِ النَّبِىِّ الْكَامِلِ وَ عَلىٰ اٰلِه كَمَا لاَنِهَايَتَ لِكَمَالِكَ وَعَدَدَ كَمَالِهِ

எவரொருவருக்கு ஞாபக மறதி எனும் நோய் உள்ளதோ அவர் மஃரிப் தொழுகைக்கும் இஷாத் தொழுகைக்கும் இடையே இந்த ஸலவாத்தை அதிகமாக ஓதிவர வேண்டும். இன்ஷாஅல்லாஹ் ஞாபக சக்தி அதிகமாகும்.
-அஃப்ஸலுஸ் ஸலாத் பக்கம் 191

Cure for forgetfulness
The one who is afficted by forgetfulness should recite this salawath more and more in between Maghrib and Isha prayers. Insha alllah his memory power will increase.
-Afzalus Salaath page:191

5.முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தரிசனம் பெற

اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلىٰ سَيِّدَنَا وَمَوْلنٰاَ مُحَمَّدِنِ النَّبِىِّ الْاُمِّيِ الْحَبِيْبِ الْعَالىِ

الْقَدْرِ الْعَظِيْمِ الْجَاهِ وَعَلىٰ اٰلِه وَصَحْبِهِ وَسَلِّمَ

மகான்கள் அறிவித்துள்ளனர், எவரொருவர் ஒவ்வொரு வெள்ளி இரவும் (வியாழன் மாலை) இந்த ஸலவாத்தை தவறாமல் குறைந்தபட்சம் ஒருமுறையாவது தொடர்ந்து ஓதி வருவாராயின் அவர் மரணிக்கும் தறுவாயில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒளிபொருந்திய திருக்கரங்களினாலேயே மண்ணறையில் தான் வைக்கப்படுவதையும் கண்டு கொள்வார்.
-அப்லலுஸ் ஸலாத் அலா ஸயிதுஸ் ஸாதாத்.

Appearance of holy Prophet Sallalahu alaihi wa sallam
Religious dignitaries have said whoever recites this salawath every Friday night regularly without missing atleast once will be able to see the blessed presence of Holy Prophet sallalahu alaihi wa sallam at the time of his death. Further he will view the presence of Holy Prophet sallalahu alaihi wa sallam carrying his body with his merciful hands and laying him in his grave.

-Afzalus Salaath alaa Seiyidus sadath.

6.தலைக்குமேல் வந்த துன்பங்கள் எல்லாம் உங்கள் திருநாமம் கொண்டு இல்லாது ஒழிந்து விட்டது

صَلَّى اَلله عَلَيْكَ يَامُحَمَّدٌ نُّوْرٌ مِنْ نُّوْرِاللهِ

எல்லாவிதமான கஷ்டங்களிலிருந்தும் விடுதலை பெற இந்த ஸலவாத்தை மன ஓர்மையுடன் ஓதி வாருங்கள்.

By reciting of ypour blessed name all the difficulties have been got over.
To be away from all difficulties and calamities recite this salawath with strong faith.

7.பாவப் பிணியைப் போக்கும் மருந்து

اَللّٰهُمَّ صَلِّ سَيِّدَنَا مُحَمَّدٍ اَفْضَلِ اَنْبِيَآئِكَ وَاَكْرَمِ اَصْفِيَآئِكَ مَنْ فَاضَتْ مِنْ نُوْرِه جَمِيْعِ الْاَنْوَارِ وَصَاحِبِ الْمُعْجِزَاتِ وَصَاحِبِ الْمَقَامِ الْمَحْمُوْدِ سَيِّدِالْاَوَّلِيْنَ وَالْاَخِرِيْنَ

எவரொருவர் இந்த ஸலவாத்தை அதிகமாக ஓதி வருகிறாரோ இன்ஷாஅல்லாஹ் அவரை விட்டும் எல்லா விதமான தவறான செயல்களும் நீங்கி போய்விடும். இபாதத்தில் இன்பம் உண்டாகும். வணக்கவாளியாகவும், உள்ளத்தில் கட்டுப்பாடு உள்ளவராகவும்  ஆகிவிடுவார்.

To cure the sickness of sins
One who recites this salawath more and more inshallah he will be relieved from all bad deeds. He will find pleasure in worship. He will become selfcontrolled pious worshipper.

8.தீன் துன்யாவின் அருட்கொடைகளை அடைந்து  கொள்ளுங்கள்.

اَللّٰهُمَّ صَلِّ وَ سَلِّمْ وَبَارِكْ عَلىٰ سَيِّدَنَا مُحَمَّدٍ وَ عَلىٰ اٰلِه عَدَدَ اِنْعَامِ اللهِ وَاَفْضَالِهِ

இந்த ஸலவாத்தை ஓதுவதால் தீன் துனியாவின் எண்ணற்ற பாக்ககியங்கள் கைகூடிவிடும்.

Attainment of Blessings in Deen and Dunya
By reciting this salawath one would attain countless benefits of deen and dunya.

9.மருந்தற்ற நோய்க்கும் மருந்து

اَللّٰهُمَّ صَلِّ وَ سَلِّمْ وَبَارِكْ عَلىٰ رُوْحِ سَيِّدَنَا مُحَمَّدٍفِي الْاَرْوَاحِ وَصَلِّ وَسَلِّمْ عَلىٰ قَلْبِ سَيِّدِنَا مُحَمَّدٍ فِي الْقُلُوْبِ وَصَلِّ وَسَلِّمْ عَلىٰ جَسَدِ مُحَمَّدٍ فِي الْاَجْسَادِ وَصَلِّ وَسَلِّمْ عَلىٰ قَبْرِ سَيِّدِنَا مُحَمَّدٍ فِي الْقُبُوْرِ

ஹஜ்ரத் ஷெய்கு ஷஹாபுத்தீன் அர்ஸலான் அவர்களை சில ஸாலிஹீன்கள் கனவிலே கண்டு தங்களுடைய நோய்களைப் பற்றி முறiயிட்டார்கள். அதற்கு அப்பெரியார் ‘இந்த மாமருந்தை வைத்துக் கொண்டா நீங்கள் பரிதவிக்கிறீர்கள்? இந்த ஸலவாத்தை ஓதி வாருங்கள்’ என்றார்கள்.

Medicine for incurable disease
Some Saaliheens (pious people) dreamt Hazrath Sheikh Shahabuddeen Arsalaan and complained about thei sicknesses. For which he said ‘Why are you worrying having this great medicine? Recite this Salawath.’

10.நிவாரணம் தரும் ஸலவாத்து (ஸலவாத்துஷ் ஷிஃபா)

اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا وَمَوْلاَنَا مُحَمَّدٍ طِبِّ الْقُلُوْبِ وَدَوآئِهَا وَعَافِيَتِ الْاَدَانِ وَشِفَآئِهَا وَنُوْرِالْاَبْصَارِ وَضِيَآئِهَا وَعَلىٰ اٰلِهِ وَصَحْبِه وَسَلِّمْ

எந்த ஒரு நோயாக இருந்தாலும் நிவாரணம் கிடைப்பதற்கு இந்த ஸலவாத்தை விடாது ஓதுவதே மிகச் சிறந்ததாகும்.
ளுயடயறயவா கழச சநடநைக (ளுயடயறயவாரளா ளூகைய)

Salawath for relief (Salawathush Shifa)
Whatever maybe the disease, reciting of this salawath continuously is praiseworthy.ا

11.ஈருலகிலும் இன்பம் பெற

اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا مُحَمَّدٍ وَاٰلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ بِعَدَدؤ مَا فِي جَمِيْعِ الْقُرْاٰنِ حَرْفًا حَرْفًا وَّبِعَدَدِكُلِّ حَرْفٍ اَلْفًا اَلْفًا

குர்ஆன் ஷரீபை ஒதிய பிறகு எவரொருவர் இந்த ஸலவாத்தை ஓதி வருகிறாரோ அவர் ஈருலகிலும் இன்பமடைவார்.
-ரூஹுல் பயான், சூரத்துல் அஹ்ஷாப்.

Tobe Delightful in Dunya and Aakhira.
After reciting Boly Quran whoever recites this salawath, will be delightful in Dunya and Aakhira.-Roohul Bayan, Surathul Ahzaab

12.ஒரு லட்சம் ஸலவாத்தின் நன்மை

اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا مُحَمَّدِنِ النُّرِالذَّاتىِّ السَّارِيْ فِى جَمِيْعِ الْاٰثَارِ وَالْاَسْمَآءِ وَالصِّفَاتِ وَعَلىٰ اٰلِه وَصَحْبِحِه وَسَلِّمْ

இந்த ஸலவாத்தை ஒருமுறை ஓதினால் ஒரு லட்சம் முறை ஸலவாத்தை ஓதிய நன்மை கிடைக்ப்பெறும். மேலும், யாருக்கேனும், ஏதேனும் நாட்ட தேட்டங்கள் நிறைவேற வேண்டுமானால் இந்த ஸலவாத்தை ஐநூறு முறை ஓத வேண்டும். இன்ஷா அல்லாஹ் அவருடைய நாட்டம் நிறைவேறும்.
-அஹ்ஸனுல் கலாம் ஃபீ ஃபலாஇலுஸ் ஸலாத்து வஸ்ஸலாம்.

Rewards of one lakh salawath
Whoever recites this salawath once he will be rewarded the merit of reciting 100000 salawath. To fulfill your desires recite this salawath 500 times. Inshaallah your desires would be fulfilled.-Ahsanul Kalam fee Razaailus Salathu Wassalam.

13.ஆறு லட்டசம் ஸலவாத்தின் நன்மை

اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا وَمَوْلاَنَا مُحَمَّدٍ عَدَدَ مَا فِى عِلْمِ اللهِ صَلوٰةً دَائِمَتً بِدَوَامِ مُلْكِ اللهِ

ஷெய்குத் தலாஇல் ஸெய்யித் அலி பின் யூஸுப் மதனீ ரலியல்லாஹு அன்pஹு அவர்கள் ஹஜ்ரத் ஜலாலுத்தீன் ஸுயூத்தி அவர்களைக் கொண்டு அறிவிக்கிறார்கள், இந்த ஸலவாத்தை ஒருமுறை ஓதுவதால் ஆறு இலட்ச ஸலவாத்தின் நன்மைகள் கிடைக்கப் பெறுகின்றது. மற்றொரு அறிவிப்பின்படி எவரொருவர் இந்த ஸலவாத்தை தினமும் ஆயிரம் முறை ஓதி வருகிறாரோ அவர் ஈருலகிலும் ஈடேற்றம் பெற்றவராகிவிடுவார். இந்த ஸலவாத்தை ஈடேற்றம் பெறும் ஸலவாத் (ஸலவாத்துஸ் ஸஆதத்) என்பார்கள். – நுஸ்காஹ் ஸஹீ தலாஇலுல் கைராத் ஷரீஃப் பக்கம் 101.

Rewards of Six Lakhs Salawath

Sheikhud dalai Seyyid Ali Bin Yoosuf Madani radiallahu anhu narrates a saying from Hazrath Jalaludeen Suiuthi radiallahu anhu He who recites this salawath once will be bestowed with rewards of six lakhs salawath. According to another narration whoever recites this salawath one thousand times daily will be successful in this world and in the hereafter. This salawath is called as ‘Salawathus Saaadath’- Nuskha Sahee Dalaaiulul Khairath Shareef page 101.

14.பதினோராயிரம் ஸலவாத்தின் நன்மை

اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلىٰ اٰلِه صَلوٰةً اَنْتَ لَهَا اَهْلٌ وَهُوَ لَهَا اَهْلٌ

ஹாபிழ் ஸுயூத்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், இந்த ஸலவாத்தை ஒருமுறை ஓதுவது பதினோராயிரம் முறை ஸலவாத்து ஓதுவதற்கு சமம்.

Rewards of Eleven thousand Salawaths.
Hafil Suyoothi radiallahu anhu narrates racital of this salawath once is equivalent to reciting salawath eleven thousand times.

15.பதினான்காயிரம் ஸலவாத்தின் நன்மை

اَللّٰهُمَّ صَلِّ وَ سَلِّمْ وَبَارِكْ عَلىٰ سَيِّدِنَا مُحَمَّدٍ وَّعَلىٰ اٰلِه عَدَدَ كَمَالِ اللهِ وَكَمَايَلْيِقُ بِكَمَالِهِ

ஹாபிழ் ஸுயூத்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், இந்த ஸலவாத்தை ஒருமுறை ஓதுவது பதினான்காயிரம் முறை ஸலவாத்து ஓதுவதற்கு சமம்.- அஃபலலுஸ் ஸலாத் பக் 186.

Rewards of Eleven thousand Salawaths.
Hafil Suyoothi radiallahu anhu narrates racital of this salawath once is equivalent to reciting salawath eleven thousand times. -Afzalus Salaath page 186.

16.முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருக்கம் பெற

اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ مُحَمَّدٍ كَمَا تُحِبُّ وَتَرْضٰ لَهُ

ஒருநாள் ஒருவர் வந்தர், அவரை மதீனத்து மாமன்னர் ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமக்கும் தமது ந்பர் ஸித்தீகுல் அக்பர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்குமிடையில் அமர வைத்துக் கொண்டார்கள். அதைக் கண்ட ஸஹாபாக்கள் இத்தகைய சிறப்புக்குரியவர் யார் என்று வியப்பில் ஆழ்ந்தார்கள். அம்மனிதர் சென்றதும் அண்ணலார் அவர்கள் திருவுளமானார்கள், இவர் என் உம்மத்தில் ஒருவர் ஆவார். என்மீது ஸலவாத்து ஓதும்போ இவ்வாறு ஓதுகிறார் – ஸஆதத்துத் தாரைன் பக் 83, கவ்லுல் பதீஃ பக்க48

To become nearness of Holy Prophet Sallalahu alaihi wa sallam
once a person came to Rasoolullah sallalahu alaihi wa sallam and Holy Prophet sallalahu alaihi wa sallam made him to sit between himself and Hazrath Abubacker Siddeeq radiallahu anhu. Sahabas radiallahu anhum were surprised to see who this man was with such excellence. As the stranger left, Holy Prophet sallalahu alaihi wa sallam said he is one of my ummath. When he recites salawath on me, he recites in this manner.-Saaadathuth Daarein Page 83, Al Qawlul Badhee page 48.

17.ஷபாஅத்தின் ஸலவாத்

اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ مُحَمَّدٍ وَاَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَتِ

ரஸூலே கரீம் ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் எவரொருவர் இப்படி ஸலவாத்தை ஓதுகிறாரோ அவர் மீது என் ஷபாஅத் வாஜிபாகிவிடுகிறது.- அத்தர்கீப் வத்தர்ஹீப் பக் 504, ஆபே கவ்ஸர் பக் 49.

Salawath for Shafaa’th
Rasool e Akram sallalahu alaihi wa sallam said, ‘whoever recites salawath in this manner, my shafaath is obligatory on him’.-Aththargheeb waththarheeb p 504, Aabay kawsar p.49.

18.வாய்த் துற்நாற்றத்தை போக்கும் அருமருந்து

اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلىَ النَّبِىِّ الطَّاهِرِ

இந்த ஸலவாத்தை ஒரே மூச்சில் பதினொரு முறை ஓதுங்கள். துர்நாற்றம் வீசும் ஓதேனும் ஒன்றை ஏதேகுனும ஒன்றை சாப்பிட்டதால் இவல’வதறு ஏற்படும் வாடையை நீக்கும் அருமருந்து இதுவாகும்.-அஃபலலுஸ் ஸலவாத் ப்கம் 182.

To remove bad odour
By eating any food that throws out bad smell, will be removed by reciting this salawath eleven times in one breath.-Afzalus Salawath p.182.

19.எல்லா வித துன்ப துயரங்களை விட்டு; விமோசனம் பெற

اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلىٰ سَيِّدِنَا مُحَمَّدٍ قَدْضَاقَتْ حِيْلَتِىْ اَدْرِكْنِىْ يَارَسُوْلَ الله

ஸெய்யித் இனப்னு ஆபிதீன் கூறியுள்ளார்கள், நான் இந்த ஸலவாத்தைக் குழப்பம் (பித்னா) மிகுந்த ஒரு காலகட்டத்தில் ஓதினேன். குழப்பம் நடந்த இடம் டமஸ்கஸ்.  இதனை 200 முறை கூட ஓதியிருக்க மாட்டேன். அதற்குள் ஒருவர் வந்து அங்கு குழப்பம் இல்லாதொழிந்து விட்டது எனத் தகவல் கூறினார். -பலாயிலே துரூத் பக் 181

Releif from all kind of Difficulties and Hardships
Seyed Ibnu Abdeen has said,’I have recited this salawath at a crucial (big turmoil)time. The crucial incident happened in Damscus. I have not even recited this 200 times, a person came and informed me that certain problem was solved.-Fazail e Durood page 181.

20.மழை பெய்யும் போது இந்த ஸலவாத்தை ஓதுங்கள்

اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلىٰ سَيِّدِنَا وَمَوْلاَنَا مُحَمَّدٍ وَّ عَلىٰ اٰلِه سَيِّدِنَا وَمَوْلاَنَا مُحَمَّدٍ بِعَدَدَ قَطَرَاتِ الْاَمْطَارِ

Recite this salawath during raining

21.உள்ளங்களை ஒளிமயமாக்குங்கள்

اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا مُحَمَّدٍ نُّوْرِ الْاَنْوَارِ وَسِرِّ الْاَسْرَارِ وَسَيِّدِ الْاَبْرَارِ

இந்த ஸலவாத்தை ஓதுவதால் உள்ளத்தில் ஒளி உண்டாகும். இதைத் தவிர இதன் மகிமைகள் ஏராளம் ஏராளம். அவற்றை எழுத்தால் அடக்க இயலாது.

Make your Heart Enlighted
By reciting this salawath the heart gets enlighted. The majesty of it could not be expressed in words.

22.எண்பது வருட பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன

اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا مُحَمَّدِنِ النَّبِيِّ الْاُمِّىِ وَعَلىٰ اٰلِهِ وَسَلِّمْ

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்ள் கூறியதாக ஸஹல் பின் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், எவரொருவர் இந்த ஸலவாத்தை வெள்ளிக்கிழமை அன்று அஸர் தொழுகைக்குப் பின் எண்பது தடவை ஓதுகின்றாரோ அவருடைய எண்பது வருட பாவத்தை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். -அல் கவ்லுல் பதீஃ பக்.196

Sins of Eighty years forgiven
Sahi bin Abdullah narrates that, Rasoolullah sallalahu alaihi wa sallam has said, ‘whoever recites this salawath eighty times on Friday aftrer Asar prayer Almighty Allah will forgive his sins of eighty years’.
-Al Qawlul Badhee. Page 196.

23.படைப்பினங்கள் யாவற்றினதும் அமல்களின் எண்ணிக்கை அளவு நன்மை

اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا مُحَمَّدِنِ النَّبِيِّ عَدَدَ مَنْ صَلّىٰ عَلَيْهِ مِنْ خَلْقِكَ وَصَلِّ عَلىٰ مُحَمَّدِنِ النَّبِيِّ كَمَا يَنْبَغِىْ لَنَا اَنْ نُّصَلِّىْ عَلَيْهِ وَصَلِّ عَلىٰ مُحَمَّدِنِ النَّبِيِّ كَمَا اَمَرْتَنَا اَنْ نُّصَلِّى عَلَيْهِ

அங்கமெல்லாம் ஒளியாய் இலங்கும் கருணைக் கடல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள், ‘எந்தவொரு மனிதர் இந்த ஸலவாத்தை தினமும் காலையில் பத்து முறை  ஓதிவருகின்றாரோ அவருக்கு அனைத்துப் படைப்பினங்களும் செய்யும் நன்மைகளின் அளவுக்கு நன்மை கிடைக்கும்.’

Rewards equivalent to measure of good deeds of all creation
Rasoolullah sallalahu alaihi wa sallam has said, whoever recites this salawath ten times every morning will get the rewards equivalent to the measure of good deeds of all creations.


24.ஹவ்ளுள் கவ்தரின் நிறை கிண்ணம்

اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلىٰ اٰلِهِ وَ اَصْحَابِهِ وَاَوْلَادِه وَاَزْوَاجِه وَذُرِّيَتِه وَاَهْلِ بَيْتِه وَاَصْحَارِهِ وَاَنْصَارِه وَاَشْيَاعِه وَمُحِبِّيْه وَاُمَّتِه وَ عَلَيْنَا مَعَهُمْ اَجْمَعِيْنَ يَا اَرْحَمَ الرّٰحِمِيْنَ

ஹஜ்ரத் ஹஸன் பஸரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள், எவரொருவர் ஹவ்ளுல் கவ்தரிலிருந்து கிண்ணம் நிறைந்து அருந்த விரும்புகின்றாரோ அவர் இந்த ஸலவாத்தை ஓதிவரவும்.

The Bowl filled from Hawdul Kawsar
Hazrath Hasan Basari Radiallahu anhu narrates whoever wishes to drink a bowl filled from Hawdul Kawsar, should recite this salawath continuously.

25. நாள் முழுவதும் ஸலவாத்து ஓதிய நன்மை

اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا مُحَمَّدٍ فِي اَوَّلِ كَلاَمِنَا اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا مُحَمَّدٍفٍي اَوْسَطِ كَلَامِنَا اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا مُحَمَّدٍ فِي اٰخِرِ كَلَامِنَا

பெரியார்கள் கூறியுள்ளனர், ‘எவரொருவர் இந்த ஸலவாத்தை பகலில் மூன்று முறையும் இரவில் மூன்று முறையும் ஓதி வருகின்றாரோ அவர் இரவுபகலுமாக தொடர்ந்து ஸலவாத் ஓதிய நன்மை கிடைக்கப் பெறுவார்.

Benefits of Wholeday Reciting Salawath
Religious Eignitories have said whoever recites this salawath three times in the day and three times in the night whereby he will be benefited of reciting salawath day and night.


26.ஓராயிரம் தினங்களின் நன்மைகள்

جَزَى اللهُ عَنَّا(سَيِّدِنَا وَمَوْليٰنَا) مُحَمَّدً (صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ) مَاهُوَ اَهْلُهُ

இந்த ஸலவாத்தை ஓதுபவர்களுகு;கு 70 மலக்குகள் ஓராயிரம் தினங்கள் வரை நன்மைகளை எழுதுகிறார்கள். -தபரானி.

One Thousand Days Benefits
1000 days merits will be recorded by 70 Angels to one who recites this salawath.-Thabrani.

27.தலாயிலுல் ஹைராத் ஓதிய நன்மை பெற

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ مَادَامَتِ الصَّلٰوةُ ، وَ صَلِّ عَلٰى مُحَمَّدٍ مَادَامَتِ الرَّحْمَةُ ، وَ صَلِّ عَلٰى مُحَمَّدٍ مَادَامَتِ الْبَرَكَاتُ ، وَ صَلِّ عَلٰى رُوْحِ مُحَمَّدٍ فِى لْاَرْوَاحِ ، وَصَلِّ عَلٰى صُوْرَةِ مُحَمَّدٍ فِى الصُّوَرِ ، وَ صَلِّ عَلٰى اِسْمِ مُحَمَّدٍ فِى الْاَسْمَآءِ ، وَ صَلِّ عَلٰى نَفْسِ مُحَمَّدٍ فِى النُّفُوْسِ ، وَ صَلِّ عَلٰى قَلْبِ مُحَمَّدٍ فى الْقُلُوْبِ ، وَ صَلِّ عَلٰى قَبْرِ مُحَمَّدٍ فِى الْقُبُوْرِ ، وَ صَلِّ عَلٰى رَّوْضَةِ مُحَمَّدٍ فِى الرِّيَاضِ ، وَ صَلِّ عَلٰى جَسَدِ مُحَمَّدٍ فِى الْاَجْسَادِ ، وَ صَلِّ عَلٰى تُرْبَةِ مُحَمَّدٍ فِى التُّرَابِ ، وَ صَلِّ اللهُ عَلٰى خَيْرِ خَلْقِهِ سَيِّدِنَا مُحَمَّدٍ وَاٰلِهِ وَاَصْحَابِهِ وَاَزْوَاجِهِ وَذُرِّيَّاتِهِ وَاَهْلِ بَيْتِهِ وَاَحْبَابِهِ اَجْمَعِيْنَ ٭ بِرَحْمَتِكَ يَآ اَرْحَمَ الرَّاحِمِيْنَ ٭ وَالْحَمْدُ لِلهِ رَبِّ الْعَالَمِيْنَ ٭

யாராவது ஒருவர் இந்த சிறப்பான ஸலவாத்தை ஒரு தடவை ஓதினால் ‘தலாயிலுல் கைராத்து’ என்ற ஸலவாத்துக் கிதாபை முழுவதும் ஓதினவர் போலாவார். கபுராளிகளுக்கு இதை மூன்று தடவை ஓதி ஹதியா செய்தால் இதனுடைய பரக்கத்தைக் கொண்டு அங்குள்ள கபுராளிகளை விட்டும் 80 வருடத்து அதாபை நீக்கப்படுமென்றும் நான்கு தடவை ஓதினால் எக்காலமும் அதாபை நீக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும், யாராவது ஒருவர் இந்த ஸலவாத்தை 24 தடவை ஓதி அதனுடைய தவாபை தன் தாய் தந்தையின் பேரில் ஹதியாச் செய்தால் தாய் தந்தையுடைய எல்லா ஹக்கையும் அவர் நிறைவேற்றியவர் போல் ஆகிவிடுவார் என்றும் சொல்லப்படுகிறது. அந்தப் பெற்றோர்களை ஆயிரம் மலக்குகள் வந்து சந்திப்பார்கள். இந்த ஸலவாத்தைத் தினசரி ஓதி வந்தால் உள்ளத் தூய்மை ஏற்படும் என்றும் பல இமாம்கள் சொல்லியிருக்கிறார்கள்.

Get rewards of Dalaailul Khairath:

The recital of this Salawath once is equal to reciting the whole of ‘Dalaailul Khairath’. The recital of this salawath three times at a graveyard, will provide relief of eighty years adhab to the person buried therein. Recital of the Salawath four times may lift the dead from the agony suffered by them until the day of Judgement.

The agony brought about by the misdeeds of a sinner could be eased and forgiven by Allah through the merits of this Salawath.
A person who recites this salawath 24 times on behalf of his parents, would be deemed to have discharged his duties by them. Such parents would be visited by one thousand angels.

According to Imams, this Salawath could bring about purification of the mind if recited daily towards this end. The beneficial effects of this Salawath on the body and soul are immense. Life in this world and the life hereafter will be exalted. May we together with our children and family members derive the benefits of this noble Salawath and may we propagate the virtues of this Salawath among our muslim brethren