காதியானி மதமும் அதன் தீய கொள்கைகளும்!

காதியானி மதமும் அதன் தீய கொள்கைகளும்!

By Sufi Manzil 0 Comment September 4, 2012

Print Friendly, PDF & Email

இந்தியாவில் தோன்றிய காதியாணி மதம் தங்களை முஸ்லிம் சமுதாயம் என்றும், இஸ்லாம் தாங்கள்தான் என்றும் எண்ணற்றோர்களை இஸ்லாத்தில் எடுப்பதாக கூறிக் கொண்டு அவர்களை தங்கள் மதத்தில் இணைத்துக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாமிய பெயர் தாங்கிய இவர்கள் யார்? இவர்களின் தலைவர் யார்? இவர்களின் கொள்கைகள் என்ன? இவர்கள் சுன்னத்வல் ஜமாஅத்திலிருந்து எவ்வகையில் மாறுபட்டவர்கள்? என்பதை நாம் ஆதாரப்பூர்வமான தகவல்களைக் கொண்டு பார்க்கலாம்.

காதியானி மதத்தை தோற்றுவித்த மிர்ஜா குலாம் அஹ்மது காதியானி பிரிட்டீஸ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காதியான் என்ற கிராமத்தில் 1835 ம் வருடம் பிப்ரவரி மாதம் 13ம் நாள் பிறந்தவர்தான் இந்த மிர்ஜா குலாம் அஹ்மது என்ற மனிதர். இவருடைய தந்தை பெயர் மிர்ஸா குலாம் முர்தஜா என்பதாகும் இவர் ஒரு வைத்தியராவார்.

மிர்ஜா குலாம் அஹ்மது தம் தந்தையின் அரவணைப்பில் இஸ்லாமிய சூழ்நிலையில் வளர்ந்தார். கல்வி கற்கும் குழந்தைப் பருவத்தில் இவர் பாரசீக மொழியையும் அரபு மொழியையும் ஓரளவுக்கு கற்றுக்கொண்டார். (இதை நினைவில் நிறுத்துங்கள்). கூடவே மருத்துவப் பணியாற்றிய தன் தந்தையாருக்கு ஒத்தாசையாகவும் இருந்தார். பின்னர் இளைமைப் பருவத்தில் தன் தந்தையின் அறிவுரையின் படி 1864 முதல் 1868 வரை சியால்கோட் நகரில் கிளர்க் பணியாற்றினார். இக்கால கட்டத்தில் கிறித்துவர்களோடு மதவிவாதங்களில் ஈடுபடலானார். பின்னர் தன் தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 1868ல் மீண்டும் காதியாண் என்ற நகரில் உள்ள தனது தந்தையாரின் எஸ்டேட் விவகாரங்களை கவனித்து வந்தார்.

கி.பி. 1875 ல் தம் தந்தையை இழந்த மிர்ஜாவின் வயது அப்போது 40 ஐ எட்டியிருந்தது. கி.பி.1886ல் ஆரிய சமாஜத்துடன் கருத்து மோதலில் ஈடுபட்டார். இஸ்லாம் மார்க்கம் உண்மையானது என்பதை இந்த விவாதத்தில் மிர்ஜா நிரூபிக்க தவறிவிட்டார். எளிமையான இவ்விவாதத்தில் தோற்றுப் போன மிர்ஜா, தாம் சிறந்த மனிதராக பரிணமிக்க தவம் செய்து சக்தியைப் பெறுவதே ஒரே வழி என்று எண்ணி ஹோஸியார்பூர் என்ற நகரத்திற்கு சென்றார். அங்கு ஒரு வீட்டின் மாடியில் தவம் மேற்கொண்டார். இதற்கு சில்லாஹ்-நஸ்ஹினி என்று பெயர் கூ10ட்டிக் கொண்டார். தவத்தின் 40வது நாளில் தாம் இறைவனிடம் அருள் வாக்கு பெற்றதாகவும் தன்னை மஸீஹ் என்றும் இமாம் மஹ்தி என்றும் பிரகடனப்படுத்தினார்.

1888 ம் ஆண்டு தமக்கு அல்லாஹ்விடமிருந்து வஹி வந்ததாகவும் அனைவரும் தம்மிடம் பைஅத் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கட்டளையிடப்பட்டதாகவும் கூறினார். தன்னிடம் பைஅத் பெற்ற 40 முரீதுகளின் உதவியால் 1889 ம் ஆண்டு மார்ச் 23 ல் அஹ்மதிய்யா அமைப்பை உருவாக்கினார்.

காதியான் கிராமத்தில் இந்தக் கும்பல் தோற்றம் பெற்றதால் 'காதியானிகள்' என்றும் 'மிர்ஸா குலாம் அஹ்மத்' என்ற பொய்யனை திரைமறைவில் நபியாக ஏற்றுக் கொண்டதனால் 'அஹ்மதியாக்கள்' என்றும் அழைக்கப்படுகின்றனர்.

மிர்ஜாவின் பொய்களால் உருவான மதம்:

கிறித்தவர்கள் ஏசு எனும் ஈஸா மஸீஹ் சிலுவையில் அறையப்பட்டார் என்று நம்புகிறார்கள். ஆனால் இஸ்லாம் இதை மறுக்கிறது. மாறாக சிலுவையில் அறையப்படும் முன் விண்ணுலகிற்கு உயர்த்தப்பட்டார்கள் என்றும் கியாமநாளுக்கு முன்னர் இறங்கி தஜ்ஜாலை கொன்று ஆட்சி நடத்துவார், பின்னர்தான் மரணிப்பார் என்றும் இஸ்லாம் கூறுகிறது.. ஆனால் இந்த இரண்டு கொள்கைளைக்கும் முரணாக மிர்ஜா மூன்றாவதாக ஒரு கொள்கையை அதாவது, 'ஈசா (ஏசு) நபி தம் பிரச்சாரத்திற்காக இந்தியா வந்தபோது இயற்கையாகவே மரணடைந்தார் என்றும் அவரை காஷ்மீரில் நல்லடக்கம் செய்யப்பட்டு விட்டது என்றும் கப்ரு கூட உள்ளது' என்றும் மாபெரும் பொய்யை இட்டுக் கட்டினார். அவர் கூறுவதைப் பாருங்கள்:

ஹஸ்ரத் அஹ்மது(அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தம் வாதத்தில் உண்மையாளர் என்பதற்கு ஆதாரமாகக் கூறிய விஷயங்களில் முதன்மையானது இதுவாகும். அல்லாஹ்வின் தூதர் மஸீஹிப்னு மரியம் இறந்து போய்விட்டார். அவரின் சாயலில் வாக்குறுதிக்கு ஏற்ப நீர் வந்திருக்கிறீர்.

(ரூஹானி கஸாயின், பாகம் 3, பக்கம் 402, சமாதான வழி நவ.95, பக்.19)

'இறைவன் ஈசா நபியை உடலுடன் வானத்திற்கு உயர்த்திக் கொண்டான் என்ற பெரும்பாலான முஸ்லிம்களின் நம்பிக்கைக்குத் திருக்குரானில் எந்த இடத்திலும் எந்த ஆதாரமும் இல்லை (chirst in kashmir– பக்கம் 15)

ஆனால், ஈஸா நபி வானில் உயர்த்தப்பட்டார் என்று அருள்மறை குர்ஆனில் வல்லமைமிக்கவனும், ஞானமிக்க இறைவனாகிய எங்கள் இறைவன் அல்லாஹ் சாட்சி கூறுகிறான்!

ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:158)

ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கொல்லப்படவுமில்லை, சிலுவையில் அறையப்படவுமில்லை. மேலும் இயற்கையாக இன்னும் மரணிக்கவுமில்லை என்று அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் சாட்சி கூறுகிறான்! இதோ அந்த வசனம்

وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَٰكِن شُبِّهَ لَهُمْ ۚ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِّنْهُ ۚ مَا لَهُم بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ ۚ وَمَا قَتَلُوهُ يَقِينًا

இன்னும், 'நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய – மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்' என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் – வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (4:157)

அதே சமயம் பெருமானாரின் பொன்மொழி கூறுவதைப் பாருங்கள்: அவர்கள் ' வேதக்காரர்களில் ஒரு பகுபகுதியினர் அவரை(ஈஸாவை) அவரது மரணத்திற்கு முன்னர் நிச்சயமாக நம்பிக்கை கொள்வர். மறுமையில் உங்களுக்கு எதிராக அவர் சாட்சி சொல்வார். என்ற) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்;ட அபூஹுரைரா (எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன்மீது சத்தியமாக மர்யமின் மகன் (ஈஸா) நீதியரசரசராக இறங்கி வந்து, சிலுவையை உடைத்தெறிவார், பன்றியைக் கொல்லுவார், (இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் சிறுபான்மை மக்களிடம் இருந்து பெறப்படும்) ஜிஸ்யா (ஆள்) வரியை தள்ளுபடி செய்வார், (தர்மத்தை) யாரும் ஏற்றுக்கொள்ளாத அளவு செல்வம் கொளிக்கும். அக்காலத்தில் செய்யப்படும் ஒரு ஸஜ்தா இந்த உலகத்தையும், அதிலுள்ளவற்றையும் விட மேலானதாகும். என நபி (வசனத்தை விரும்பினால் படித்துப்பாருங்கள் என்று கூறுவார்கள். – (புகாரி).

மேலும் இஜாலத்துல் அவ்ஹாம் என்னும் நூல் பக்கம் 151 முதல் 163 வரை ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய முஃஜிஸாத்தை மெஸ்மெரிஸம், வீண் விளையாட்டுகள் என்று சொல்கிறார்.

நபி மூஸா அவர்களுக்கு மறித்து 1400 ஆண்டுகளுக்கு பின்னர் ஈஸா நபி வருவார் என்று முன்னறிவிப்பு செய்யப்பட்டது போன்றுதான் நபி முஹம்மதுவுக்கு பின்னர் 14 நூற்றாண்டுகள் கழித்து இமாம் மஹதி வருவார் என்று முன்னறிவிப்பு உள்ளது. அந்த முன்னறிவிப்பின் படி மிர்ஸா குலாம் அஹ்மதாகிய தாம்தான் இமாம் மஹதி எனறும், தன்னுடைய வாழ்க்கையை நபிமார்களுடன் ஒப்பிட்டு காட்டி தாம்தான் இஸ்லாத்தின் இறுதி நபி என்று பிரகடனப்படுத்தினார். இந்த பொய்களை வஹி என்று அறிவிப்பு செய்து அருள்மறை குர்ஆனுக்கு எதிராக 'தஸ்கிரதுஸ் ஸஹததன்'; என்ற நூலை உருவாக்கி அதில் எழுதிக்கொண்டார்.

மிர்ஜா ஸாஹிபு  'தாபிஉல் பலா' என்னும் நூலின் 15வது பக்கத்தில் 'அல்லாஹ் அம்மாதிரியான மனிதரை (கருத்த ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை) எப்படி துன்யாவில் கொண்டு வர முடியும்? அவருடைய முந்தைய குழப்பம் துன்யாவையே நாசமாக்கிவிட்டதே!'.

இந்த இடத்தில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை மீண்டும் துன்யாவில் கொண்டு வர முடியாது என்று சொல்கிறார். இது அல்லாஹ்வால் இயலாத காரியம் என்று வாதிடுகிறார். ஆனால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பொன்மொழி இவரின் கூற்றை பொய்யாக்குவதைப் பாருங்கள்:

கஸ்பஹான் பகுதியில் வாழும் யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான். மதீனாவை நெருங்கி, அதன் எல்லையில் இறங்குவான். அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு நுழைவுப் பாதைகள் இருக்கும். ஓவ்வொரு நுழைவு பாதையிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள். அவனை நோக்கி (மதீனாவில் உள்ள) தீய மக்கள் புறப்பட்டுச் செல்வார்கள். பாலஸ்தீன் நகரின் 'லுத்' எனும் வாசலுக்கு அவன் புறப்பட்டுச் செல்வான். அங்கே ஈஸா நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இறங்கி அவனைக் கொல்வார்கள். அதன்பின் நாற்பது ஆண்டுகள் ஈஸா நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இந்த பூமியில் நேர்மையான தலைவராக, சிறந்த நீதிவானாகத் திகழ்வார்கள் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு) நூல்- அஹ்மத்.

இறுதி நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றிய கொள்கை:

கி.பி. (1880)ல் ' பராஹீன் அல்அஹ்மதிய்யா' எனும் நூலை வெளியிட்ட 'மிர்ஸா தன்னை எதிர்பாக்கப்படும் ஒரு மஹ்தியாக' அதில் வாதிட்டார். பின்னர் அந்த முடிவை திடீரென மாற்றி தான் ஒரு தூதர் என்றும், தனது நபித்துவத்தை ஏற்க மறுப்பவர் காபிர் என்றும், அவர் அறுத்தவைகளை உண்ணுவது கூடாது, அவர் மரணித்தால் அவருக்காக தொழுவதும் கூடாது என்பன போன்ற சட்டங்களை (1900)ல் உத்தியோகபூர்வமாக அறிவிப்புச் செய்தார்.

1. நான் அனைத்து தூதர்களையும், நபிமார்களையும் விட சிறப்பானவன். அல்லாஹ் என்னை தூதராக அனுப்பியுள்ளான். என்னை மறுப்போர் காபிர்கள். (ஹகீகத்துல் வஹி. பக்கம்: 74)

2.'பராஹீனே அஹ்மதிய்யாவில்' என் பெயரை இறைவன் முஹம்மது என்றும் அஹ்மத் என்றும் கூறி, எனது வருகையை ஹஸ்ரத் முஹம்மது(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வருகை என்றே கூறியுள்ளான். – (சமாதான வழி பிப்ரவரி 96, பக்கம்9)

3. நான் பிரதி பிம்பமான பரூஸியாக (நிழலாக) முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களாகவே இருக்கும்போது, அவ்வாறே முஹம்மதின் எல்லாப் பூரணத்தன்மைகளும் நுபுவ்வத்தே முஹம்மதிய்யாவோடு கலந்து நிழல் போன்று என் கண்ணாடியில் பிரதி பிம்பமாக இருக்கிறேன்.- (சமாதான வழி, பிப்ரவரி 96,பக்கம் 9)

இறைவன் எனது உண்மைக்குச் சாட்சியாக மூன்று இலட்சத்திற்கும் அதிகமான அடையாளங்களை வெளிப்படுத்தியுள்ளான் என தன்னைப் பற்றிக் கூறும் மிர்ஸா குலாம் அதே பாராவின் கடைசியில், நூற்றுக்கணக்கான இறையடையாளங்கள் இருந்தும் என்னை அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனாகக் கருதுகின்றார்களே அவர்கள் எவ்வாறு நம்பிக்கையாளர்களாக இருக்க முடியும்?

(ஹகீகதுல் வஹி ரூஹானி கஸாயின் தொகுதி 22, பக்கம் 167 சமாதான வழி ஜனவரி 1996 பக்கம் 14)

இன்றைய நாள் வரை நான் ஏறக்குறைய 150 முன்னறிவிப்புகளை இறைவன் புறமிருந்து பெற்று, அவை தெளிவாக நிறைவேறியிருப்பதை என் கண்களால் நானே கண்டிருக்கும் போது நான் எவ்வாறு என்னை 'நபி' அல்லது ''ரஸூல்' என்று கூறிக் கொள்வதை நிராகரிப்பேன்.

(ஏக் கலத்திக்கா இஸாலா மொழி பெயர்ப்பு சமாதான வழி பிப்ரவரி. 96. பக்.7)

ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நம்பிக்கையாளர்களின் தந்தையாக விளங்குகின்றார். அவர் ஆன்மீகத் தந்தை என இன்றைய காதியானிகளின் மௌலவிகள் கூறுகின்றனர். (பார்க்க: சமாதான வழி, நவம்பர் 95, பக்கம் 13-15) ஆனால் இவர்களது நவீன நபி குலாம் மிர்ஸா தனது ''ஏக் கலத்தீக்கா இஸாலா' என்ற நூலில் கூறுவதைப் பாரீர்.

'முஹம்மது இவ்வுலக மனிதர்களின் தந்தையல்ல. ஆனால் அவர் மறுவுலக மனிதர்களின் தந்தையாக இருக்கின்றார்' – (சமாதான வழி ஜூன் 96, பக்.22)

மிர்ஜா ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை காத்தமுன்னபி என்று ஒப்புக் கொள்வதில் தயக்கம் காட்டுவதில்லை. அதை மறுக்கவும் இல்லை. ஆனால் காத்தமுன்னபி என்பதற்கு ஒரு புது விளக்கத்தைத் தருகிறார், 'காத்தமுன்னபீ என்பதற்கு எல்லா நபிமார்களுக்கும், இறுதியான, கடைசியான நபி என்று மக்கள் கருதுகிறார்கள். ஆனால் அது சரியில்லை. காத்தமுன்னபீ என்பதற்கு பொருள் நபிமார்களுக்கு முத்திரையைப் போன்றவர்கள் என்பது பொருளாகும். அரசனுடைய கட்டளைக்கு அரசனுடைய முத்திரையைக் கொண்டுதான் மதிப்பிருக்கிறது. எந்த கட்டளையில் அரசனுடைய முத்திரை இல்லையோ அது மதிக்கப்படமாட்டாது. ஆகவே காத்தமுன்னபிய்யீன் என்பதற்கு கருத்தாவது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பித்தாத்து நபி என்பதாகும். அதாவது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா வேறு யாருடைய பொருட்டைக் கொண்டுமல்லாது அவன்தானே நேரடியாக நபித்துவத்தைக் கொடுத்தான். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர மற்றெல்லா நபிமார்களுக்கும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டைக் கொண்டே நபித்துவத்தை வழங்கினான். ஆகவே எல்லா நபிமார்களும் 'பில்அர்ள்' நபிகளாவார்கள். எனவே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டைக் கொண்டல்லாது நேரடியாக எனக்கு நபித்துவம் கிடைத்தது என்று தாவாச் செய்வானேயானால் அவன் பொய்யனாகும். இன்னும் நான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடிமையாகும். எனக்கு அவர்கள் பொருட்டாலேயே நபித்துவம் கிடைத்தது என்று சொல்வானேயானால் அவன் உண்மையானவன் ஆவான். எனவே இந்தபடி அர்த்தம் வைத்தால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முந்தைய நபிமார்களுக்கு மட்டும் காத்தம் அல்ல. அவர்களுடைய காலத்திலேயும் இலட்சக்கணக்கான நபிமார்கள் உண்டாயிருப்பினும் அவர்களுடைய காத்தமுன்னபிய்யீன் என்பது அவ்வாறு தரிபாடானதாகவே இருக்கும். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முன்னுண்டான பின்னுண்டான நபிமார்களுக்கு முத்திரையானவர்களாகவே இருப்பார்கள்.

காதியானி மேதாவிகள் கதம் என்பதற்கு 'நபிமார்களின் அலங்காரம், அழகு, என்ற ஒன்றுக்கும்; உதவாத பொருளைத் தருகின்றனர் . வாதத்திற்hகக முத்திரை என்ற பொருளை வழங்கினாலும் அந்த முத்திரையை நபித்துவத்தின் மூலம் உடைக்கும் அதிகாரம் மிர்ஸாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக 'குலாம் பஷீர்' காதியானிப் பிரியர் ஒருவர் பின்வருமாறு வியாக்கியானம் தருகின்றார்.

அவர்களுக்குப்பின்னாலும் திறந்திருக்கும் என்பது நண்பகலில் தெரியும் சூரியனைப் போன்றது.

(ஹகீகதுன்னுபுவ்வா. பக்கம்: 288).

இதே கருத்தைத்தான் தேவ்பந்திய மத்ரஸா ஸ்தாபகர் காஸிம் நானுத்தவி தன்னுடைய தஹ்தீருன்னாஸ் என்னும் நூல் பக்கம் 13, 14, 28 ல் கூறுகிறார். ஆனால் அல்லாஹ் தன்னுடைய இறுதி வேதமான குர்ஆனில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இறுதி நபி என்பதை ஆணித்தரமாக தெளிவாக விளக்குவதைப் பாருங்கள்:

مَّا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَٰكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ ۗ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا
 

முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. ஆனால், அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் ,ருக்கின்றார், மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் பற்றியும் நன்கறிந்தவன்' (அல்குர்ஆன்33:40)

நானே இறுதி நபி என்று அறிவிக்கும் எண்ணற்ற ஹதீது ஆதாரங்கள் காணக் கிடக்கின்றன. அவற்றிலிருந்து சில:

மக்களே! எனக்குப் பின் எந்தவொரு நபியும் (இறைத் தூதரும்) இல்லை. உங்களுக்குப் பின் எந்தவொரு சமுதாயமும் இல்லை. உங்களைப் படைத்து காப்பவனான அல்லாஹ்வையே வணங்குங்கள். உங்களுக்கு விதிக்கப்பட்ட ஐவேளை தொழுகையை நிறைவேற்றுங்கள். ரமழான் மாதத்தில் நோன்பு வையுங்கள். மனமுவந்து உங்கள் செல்வத்துக்கான (மார்க்க வரி) ஸகாத்தை நிறைவேற்றுங்கள். உங்கள் இறைவனின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள். உங்கள் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். (மேற்கூறிய நற்செயல்களால்) இறைவன் உங்களுக்காக படைத்துள்ள கவனத்தில் நுழைவீர்கள்………………….. (நூல்: முஸ்லிம், திர்மிதி, அஹ்மத், இப்னு ஜரீர், இப்னு ஹிஷாம்)

'எனக்குப்பின் நபிவருவதாக இருந்தால் அவர் உமராகத்தான் இருப்பார்' என நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (திர்மதி).

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : என்னுடைய உம்மத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். ஒவ்வொருவரும் தான் நபி என்று வாதிடுவார்கள். நான்தான் நபிமார்களில் முத்திரையானவன். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது.

அறிவிப்பவர் : ஸவ்பான(ரலியல்லாஹு அன்ஹு) நூல் : திர்மிதி (2145)

அல்லாஹ்வின் தூதர(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்கன் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டு விட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து விட்டு ஆச்சரியமடைந்து, 'இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டி ருக்கக் கூடாதா?' என்று கேட்கலானார்கள். நான் தான் அந்தச் செங்கல். மேலும், நான் தான் இறைத் தூதர்கல் இறுதியானவன்.

அறிவிப்பவர் :  அபூ{ஹரைரா (ரலியல்லாஹு அன்ஹு) நூல் : புகாரி (3535)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: நான் மற்ற இறைத்தூதர்களைவிடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்: 1. நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன். 2. (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது. 3. போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன. 4. எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிட மாகவும் ஆக்கப்பட்டுள்ளது. 5. நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப்பெற்றுள்ளேன். 6. என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப்பெற்றுவிட்டது.

அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) நூல் : முஸ்லிம் (907)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : தூதுத்துவமும் நபித்துவமும் நிறைவு பெற்றுவிட்டது. எனக்குப் பிறகு எந்த ரசூலும் இல்லை நபியும் இல்லை. (நபியவர்கள் இவ்வாறு கூறியது) மக்களுக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. உடனே நபியவர்கள்  என்றாலும் நற்செய்திகள் (எஞ்சியுள்ளது) என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே (முபஸ்ஸராத்) நற்செய்திகள் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ஒரு முஸ்லிம் காண்கின்ற கனவு. அது நபித்துவத்தின் (நாற்பத்தாறு) பங்குகளில் ஒரு பங்காகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) நூல் : திர்மிதி (2198)

ஜுபைர் பின் முத்இம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், 'எனக்கு (ஐந்து) பெயர்கள் உள்ளன. நான் 'முஹம்மத்' (புகழப்பட்டவர்) ஆவேன். நான் 'அஹ்மத்' (இறைவனை அதிகமாகப் புகழ் பவர்) ஆவேன். நான் 'மாஹீ' (அழிப்பவர்) ஆவேன்; என் மூலம் அல்லாஹ் (ஏக) இறை மறுப்பை அழிக்கின்றான். நான் 'ஹாஷிர்' (ஒன்றுதிரட்டுபவர்) ஆவேன்; மக்கள் என் பாதங்களுக்குக் கீழே (என் தலைமையில்) ஒன்றுதிரட்டப்படுவார்கள். நான் 'ஆகிப்' (இறுதியானவர்) ஆவேன்; எனக்குப் பிறகு வேறெந்த இறைத்தூதரும் இல்லை'' என்று கூறினார்கள்.

நூல் :   முஸ்லிம் (4697)

அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்: 'பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப் போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்'' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.                                                                       நூல் : புகாரி (3455)

ஆங்கிலேய அரசின் கைக்கூலி:

உலகெங்கும் இஸ்லாம் பரவி எழுச்சியுறுவதைத் தடுக்கும் பொருட்டும், இஸ்லாமிய கிலாபத் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டும் முஸ்லிம்களிடையே பிரிவினையை உண்டுபண்ணி அவர்களுக்கிடையில் சண்டைசச்சரவுகளை ஏற்படுத்தினால் தங்களது ஆட்சி நிலைபெறும் என்று நம்பிய ஆங்கிலேயர்கள் அதற்கு உறுதுணையாக இருக்க முஸ்லிம்களில் சிலரை தேர்வு செய்தனர். அவர்களில் ஒருவர்தான் இந்த மிர்ஜா குலாம் அஹ்மது காதியானி. அவர் ஆங்கிலேயர் சொன்னதை அப்படியே செய்தார். ஆங்கிலேயரின் மதமாகவே காதியாணி மதம் உருவாயிற்று. ஆங்கிலேயருக்கு ஆதரவாக அவர் செய்த காரியங்கள் ஆதாரங்களுடன் தரப்படுகின்றன.

தன்னை இமாம் மஹதி என்றும் இறுதி நபி என்றும் பிரகடனப்படுத்திய மிர்ஸா குலாம் முஸ்லிம்களை நோக்கி இனிமேல் யாரும் ஆயுதங்களைக் கொண்டு ஜிஹாது செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறினான். இதை அறிந்ததும் அக்காலத்து மார்க்க மேதைகள் மிகுந்த மனவேதனையடைந்தனர் அவர்களிடம் மிகப் பெரும் சலசலப்பு காணப்பட்டது. மேலும் இதே காலகட்டத்தில் சூடான் நாட்டை மற்றொருவன் தன்னை இமாம் மஹதி என்ற பிரகடனப்படுத்தியதும் மார்க்க மேதைகளின் குழப்பத்தை மேலும் மேலும் அதிகரித்தது.

பின்னர் மார்க்க மேதைகள் அனைவரும் ஒன்று கூடி, ஆங்கிலேயர்கள்தான் ஜிஹாதை தடைசெய்தார்கள் என்றும,; இந்த மிர்ஸா குலாம் அஹ்மது என்பவன் அதை ஆதரித்து பேசும்விதமாக ஜிஹாதை தடை செய்வதால் இவன் ஆங்கிலேயே கைக்கூலிதான் என்று பிரகடனப்படுத்தினர். இவன் ஆங்கிலேய நாய்களின் கைக்கூலி என்பதற்கான ஆதாரம் அடங்கிய வாக்குமூலம்

Behold! I have come to you people with a directive that henceforth jihad with the sword has come to an end but jihad for the purification of your souls still remains. This injunction is not from me but rather it is the will of God. – British Government and Jihad pg.15
'
நான் இந்த (ஆங்கிலேய) அரசுக்கு விசுவாசமான ஒரு குடும்பத்தைக் சார்ந்தவன். எனது தந்தை மிர்சா குலாம் முர்தளா ஆங்கிலேய அரசின் பார்வையில் விசுவாசமான நபராக இருந்தார். அதனால் அவருக்கு கவர்னரின் சபையில் அமர இடம் கிடைத்தது. எந்த அளவிற்கெனில் மிஸ்டர் கிரேகபன் என்ற ஆங்கிலேயன் பஞ்சாப் சீகப்  என்ற தனது நூலில் இவரைப் பற்றி கூறுகிறான்.

1857 ல் அவர் தனது சக்தியையும் தாண்டி ஆங்கிலேய அரசுக்கு உதவினார். குதிரைகளுடன் 50 வீரர்களை அனுப்பி கலகத்தின் முக்கியமான கால கட்டத்தில் ஆங்கிலேயருக்கு உதவினார். இந்த பணிவிடையின் காரணமாக ஆங்கிலேய அரசு முலம் என் தந்தைக்கு பல நற்சான்றிதழ்கள் கிடைத்தன. எனக்கு கைசேதம் என்னவெனில் அவற்றில் பல காணாமல் போய்விட்டன.  மூன்று மட்டும் நீண்ட காலத்திற்குப் பின் அச்சாகியுள்ளது. அதனுடைய நகல் இதோ!'

Translation of Certificate of J.M. Wilson

To, 

Mirza Ghulam Murtaza Khan,

Chief of Qadiyan.

 
I have persued your application reminding me of your and your family’s past services and rights I am well aware that since the introduction of the British Govt. You and your family have certainly remained devoted faithful and steady subjects and that your rights are really worthy of regard. In every respect you may rest assured and satisfied that the British Govt. will never forget your family’s rights and services which will receive due consideration when a favourable oppurtunity offers itself.
You must continue to be faithful and devoted objects as in it lies the satisfaction of the Govt. and your wellfare.


11.6.1849

 Lahore.


Translation of Mr. Robert Cast’s Certificate 


To,

Mirza Ghulam Murtaza Khan,

Chief of Qadiyan.

As you rendered great help in enlisting sowars and supplying horse to Govt. in the mutiny of 1857 and maintained loyalty since its beginning upto date and thereby gained the favuor of Govt. a Khalat worth Rs. 200/- is presented to you in recognition of good services, and as a reward for your loyalty.

Moreover in accordance with the wishes of Chief Commissioner as conveyed in his no. 576 dt. 10th August 58. This parvana is addressed to you as a token of satisfaction of Govt. for your fedelity and repute.

Translation of Sir Robert Egerton

Financial Commr’s

Murasala dt.29 June 1876.

My dear friend Ghulam Qadir

I have persued your letter of the 2nd instant and deeply regret the death of your father Mirza Ghulam Murtaza who was great well wisher and faithful Chief of Govt.

In consideration of your family services I will esteem you with the same respect as that bestowed on your loyal father. I will keep in mind the resto ration and wellfare of your family when a favourable opportunity occurs.

எனது தந்தை மரணமான பின்பு என் அண்ணன் மிர்சா குலாம் காதிர் ஆங்கிலேய அரசுக்கு பணிவிடை செய்வதில் ஈடுபட்டார் கலகக்காரார்கள் ஆங்கிலேயப் படையை எதிர்த்த போது அவர் ஆங்கிலேய அரசின் சார்பாக சண்டையில் கலந்து கொண்டார். (ஆதாரம் : ரூஹானி கஜாயின் பாகம் 13 , பக்கம் : 4,5,6, – ஆசிரியர் : மிர்சா குலாம் காதியானி)

இதே கருத்து கொண்ட ஒரு வாசகத்தை மிர்ஸாவே தனது 'துஹ்பா அல்கைஸரிய்யா' என்ற நூலில் பக்கம் 16-ல் குறிப்பிடுகின்ற போது
بأن أبي 'غلام مرتضى' كان من الذين لهم روابط طيبة، وعلاقات ودية مع الحكومة الإنجليزية، وكان له كرسي في ديوان الحكومة ، وقد ساعد الحكومة حينما ثار عليها أهل وطنه ودينه الهنديون مساعدة طيبة في سنة (1851) بل مدها بخمسين جنديا، وخمسين فارسا من عنده. وخدم الحكومة العالمية فوق طاقته .((التحفة القيصرية. ص:16)

ஆங்கிலேய அரசுடன் சிறந்த தொடர்பும், சிநேகபூர்வ உறவும் கொண்டவர்களில் ஒருவராக எனது தந்தை 'குலாம் முர்தழா' இருந்தார். ஆங்கிலேய அரச சபையில் அவருக்கென தனி ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவரது மார்க்கத்தைச் சேர்ந்த, அவரது ஊரவர்களான இந்திய வம்சாவழியினர் அந்த அரசுக்கெதிராக கிளர்ச்சி செய்தபோது தன்னிடமிருந்த ஐம்பது படைவீரர்களையும், ஐம்பது குதிரை வீரர்களையும் கொண்டு அதற்கு சிறப்பாக உதவி நல்கினார். சர்வதேச அரசாங்கத்திற்கு தனது சக்திக்குமேல் உதவி செய்தார். என குறிப்பிடுவது பற்றி இவர்களின் முகத்திரையை கிளித்தெறிந்த பாகிஸ்தானைச் சேர்ந்த அல்லாமா இஹ்ஸான் இலாஹி ழஹீர் (மதனி) (ரஹ்) என்ற அறிஞர் குறிப்பிடும் போது 'இந்தக் குடும்பத்தில் குலாம் அஹ்மத் பிறக்காவிட்டால் வேறு ஒருவர் பிறப்பாரா? எனக் கேட்டு விட்டு, இவர் பருவ வயதெல்லையை அடைந்த போது உருது, மற்றும் அரபு நூல்களை அறிமுகமற்ற ஆசிரியர்களிடம் படித்தார். சட்டத்துறையில் சில பகுதிகளைப் படித்த இவர் பாகிஸ்தான் நகரங்களில் ஒருநகரான ஸியால் கோட்டில் மாதாந்தம் பதினைந்து ரூபாவிற்கு பணியாற்றினார். எனக் குறிப்பிடுகின்றார்கள்.

நானே எதிர்பாக்கப்பட்ட மஹ்தி, இங்கிலாந்து அரசு எனது வாள், அவர்களின் வெற்றியை நாம் கொண்டாடுவோம். ஈராக், ஷாம், என அனைத்து அரபு தேசங்களிலும் இந்த வாளின் சுடர் வீசட்டும். இந்த அரசாங்கத்திற்கு துணைபோகவும், அதற்கு உதிவிடவும் வானவர்களை அல்லாஹ் இறக்கி வைத்துள்ளான். (அல்பழ் சஞ்சிகை. 07-11-1918-ன் வெளியீடு)

ஜிஹாத் பற்றிய வசனம் தனது வருகையுடன் மாற்றப்பட்டு விட்டது. (காதியானிகள் விளம்பரம்: 4: 49). ல் பின்வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது.

اتركوا فكرة الجهاد، لأن القتال للدين قد حرم . وجاؤ الإمام ، والمسيح، ونزل نور الله من السماء فلا جهاد. بل الذي يجاهد في سيبل الله فهو عدو الله.
 
ஜிஹாத் (அறப்போர்) பற்றிய சிந்தனையை கைவிட்டுவிடுங்கள். மார்க்கத்திற்காக போரிடுவது தடை செய்யப்பட்டு விட்டது. இமாமும், மஹ்தியும் உதித்துவிட்டார், வானத்திலிருந்து அல்லாஹ்வின் பிரசகாசமும் இறங்கிவிட்டது, எனவே 'ஜிஹாத்' இல்லை. மட்டுமின்றி 'ஜிஹாத்' செய்பவர் அல்லாஹ்வின் விரோதியாவார்.

வாக்களிக்கபட்ட மஸீஹ் முன்வைத்த குர்ஆனைத்தவிர வேறு குர்ஆன் கிடையாது என வெளியிட்டனர். ஆதாரம்: (அல்பழ் சஞ்சிகை 15-07-1924-ன் வெளியீடு)

பொய்த்துப் போன மிர்ஸாவின் பொய்கள்
:

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தம்முடைய உண்மையை முன்னிறுத்திதான் தம்மை நபி என்று மக்களிடம் எடுத்துரைத்தார்கள்.

1891 ம் ஆண்டிலிருந்து மிர்ஸா குலாம் அஹ்மத் தன்னை நபி என்று வாதிட்டான். ஒரு நபி என்பதற்கு முக்கியமான அடையாளமே அவர் பொய்யராக இருக்க்கூடாது என்பதுதான்.

ஆனால் இந்த மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவரோ மிகவும் கடைந்தெடுத்த பொய்யர்களில் ஒருவராக இருந்தார். இவர் திருமறைக்குர்ஆனில் இல்லாத வசனங்களை திருமறைக் குர்ஆனில் உள்ளதாகவும், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறாத ஹதீஸ்களை நபியவர்கள் கூறியதாகவும் அல்லாஹ்வின் மீதும் நபியவர்களின் மீது இட்டுக்கட்டி கூறியுள்ளார். இப்படிப்பட்ட பொய்களே இவர் பொய் நபி என்பதற்கு தெளிவான சான்றுகளாக விளங்குகின்றன.

சான்று 1: முஹம்மதீ பேகம் என்ற பெயர் கொண்ட இன்னொருவரின் மனைவியின் மீது ஆசை கொண்ட மிர்சா குலாம் எப்படியாவது அவளை அடைந்து விட வேண்டும என்ற நோக்கத்தில் அல்லாஹ் தனக்கு முன்னறிவிப்புச் செய்திருப்பதாக பின்வரும் விசயங்களைக் கூறினான்.

முஹம்மதீ பேகத்தை நாம் உமக்கு திருமணம் செய்து வைத்ததோம் என்று அல்லாஹ் எனக்கு அறிவித்தான்.

இது ஒரு முன்னறிவிப்பு அல்ல. இதில் ஆறு முன்னறிவிப்புகள் உள்ளன.

முதலாவது : அவளைத் திருமணம் செய்யும் வர நான் உயிருடன் இருப்பேன்.

இருண்டாவது : அவளைத் திருமணம் செய்யும் வரை அந்தப் பெண்ணின் தந்தை உயிருடன் இருப்பார்.

மூன்றாவது : எனக்குத் திருமணம் செய்து தந்த பின் அவளுடைய தந்தை மூன்று வருடத்துக்குள் இறப்பார்.

நான்காவது : முஹம்மதீ பேகத்தின் கணவர் சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் மரணிப்பார்.

ஐந்தாவது : அப்போது நான் முஹம்மதீ பேகத்தை திருமணம் செய்வேன்.

ஆறாவது : அவளை மணப்பேண். அது வரை அவள் உயிருடன் இருப்பாள்.

இந்த ஆறு அறிவிப்புகள் நிறைவேறாவிட்டால் அதுவே நான் பொய்யன் என்பதற்கான ஆதாரம் என்று மிர்ஸா குலாம் சொன்னான்.
இவை அனைத்தும் 'ஆயினே கமாலாத்' என்ற நூலில் 325 ஆம் பக்கத்தில் மிர்சா குலாமால் எழுதப்பட்டுள்ளது.

ஆனால் பொய்யன் மிர்சா செத்துப் போகும் வரை அந்தப் பெண்ணை அவர் மணமுடிக்கவில்லை. இதில் இருந்து அவன் அல்லாஹ்வின் மீது பொய் கூறி விட்டான் என்பது உறுதியாகிறது.

சான்று 2: சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் செத்துப் போவார் என்று பொய்யன் மிர்சா கூறினான். அவ்வாறு நடக்காவிட்டால் நான் பொய்யன் என்றும் கூறினான். ஆனால் பொய்யன் சொன்னபடி சுல்தான் முஹம்மத் சாகவில்லை. நீண்ட காலம் வாழ்ந்தார்.

சான்று 3: அல்லாஹ் எனக்கு நான்கு ஆண்மக்களைத தந்துள்ளான். ஐந்தாவதாக ஒரு ஆண் மகன் குறித்து அல்லாஹ் நற்செய்தி கூறினான். இது என்றாவது ஒரு நாள் நடந்தே தீரும் என்று மிர்சா கூறினான்.  (நூல் : தத்கிரா)

ஆனால் இவனுக்கு ஐந்தாவதாக ஆண் பிள்ளை பிறக்கவில்லை. தன்னைத் தானே பொய்யன் என்று இவர் நிரூபித்தான். இதன் மூலம் இவன் அல்லாஹ்வின் பெயரால் புளுகு மூட்டையை அவிழ்த்து விடுபவன் என்பது உறுதியாகி விட்டது. இதை மறைப்பதற்காக இவரது நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த போது மகன் என்ற இடத்தில் கிராண்ட் சன் பேரன் என்று மாற்றிக் கொண்டார்கள்.

இது தத்கிரா என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பின் 265 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

சான்;று 4
: 'தமக்கு அரபு மொழி தமக்கு தெரியாது என்றும் அல்லாஹ்தான் தமக்கு அரபு மொழியில் புத்தகம் எழுத உதவினான் என்றும் மிர்ஸா குலாம் அஹ்மது உளறினான் (ஆதாரம் –

Mirza Ghulam Ahmad, Seerat-ul-Mahdi, Narration No. 104)

ஆனால் மேற்கண்ட வாதம் பொய் என்பதற்கு இவனுடைய மற்றொரு நூலே ஆதாரம் இதோ :

தம்முடைய 10ம் வயதில் ஃபஜல் அஹ்மது என்ற அரபு மொழி ஆசிரியரின் உதவியால் தாம் அரபு மொழி கற்றதாக இந்த பொய்யனின் வாக்குமூலம் இடம் பெற்றுள்ளது. பள்ளிப் பருவத்தில் தாம் அரபு இலக்கணம் படித்ததாக ஒப்புக்கொண்டுள்ளான் (ஆதாரம் Mirza Ghulam Ahmad, Kitab ul Bariyah, Roohani Khazain Volume 13, pages 180181)

சான்று 5: பொய்யன் மிர்ஸா தனது காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் வாழ்ந்த பேரறிஞர் 'தனாவுல்லாஹ் அல்அம்ரஸ்தரி' என்பவருடன் முபாஹலா (அழிவுச் சத்தியம்) செய்து கொண்ட போது தான் உயிருடன் இருக்கின்ற போதே தனது கண்ணுக்கு முன்னால் தனாவுல்லாஹ்' மரணிப்பார் என அடித்துக் கூறினான். பரிதாபம். பொய்யன் மிர்ஸாவே (மே மாதம், 1908-ல்) அதற்கு இலக்காகி காலரா நோயினால் பீடிக்கப்பட்டு மலசலகூடத்தில் விழுந்து மரணித்தான்.

ஃபத்வாக்கள்:

இவ்விதமான குப்ரிய்யத்தான கொள்கையைக் கொண்ட மிர்ஜாவும் அவனை பின்பற்றும் அஹ்மதியாக்களுக்கும் முஸ்லிம்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்து, உலமாக்களும், நீதி மன்றங்களும் அவர்களை காபிர் என்று தீர்ப்பு வழங்கி தனி மதமாக்கியது. தீர்ப்புகள் இதோ:

1. அன்றைய காலகட்டத்தில் வாழந்த மார்க்க மேதையான முஜத்தித் இமாம் அல்லாமா அஹ்மத் ரிழா கான் பாஜில் பரேலவி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் தேவ்பந்திய தலைவர்கள் மற்றும் மிர்ஸா குலாம் அஹ்மது பற்றிய தகவல்களை சேகரித்து ஹிஜாஸ் சென்று அங்கு மக்கா மற்றும் மதீனத்து மார்க்க மாமேதைகளின் தீர்ப்பை(பத்வாவை) பெற்று வெளியிட்டார்கள். அது ஹுஸாமுல் ஹரமைன் அலா குப்ரி வல்மைன் என்ற பெயரில் வெளிவந்தது. அதில் மிர்ஜா குலாம் அஹ்மது காதியானியை 'காபிர்' என்று பத்வா வெளியாகியிருந்தது.

2. இறுதியாக காதியாணிகளின் தலைவனான பொய்யன் மிர்ஸா குலாம் அஹ்மது என்ற மனிதன் சாதாரண மனிதர்தான் என்றும் இந்த மனிதன் தன்னை இறுதி நபி என்று பொய்ப் பிரச்சாரம் செய்வது இஸ்லாத்தின் கோட்பாடுகளுக்கு மீறிய செயல் என்றும் இவன் முழுக்க முழுக்க காஃபிர்தான் என்றும் மார்க்க அறிஞர்கள் ஃபத்வா கொடுத்தனர். இந்த ஃபத்வாவை இந்தியாவில் உள்ள 200க்கும் மேற்பட்ட பல்வேறு இந்து, புத்த, கிருத்த மத மற்றும் முஸ்லிம் மார்க்க அறிஞர்களும் ஒருமனதாக ஏற்றனர்.

3. 1974ம் ஆண்டு பாகிஸ்தான் நாடு மிர்ஸா குலாம் அஹ்மது என்பவரையும் அவனை பின்பற்றும் அஹ்மதியாக்களையும் காஃபிர்கள் என்று தமது பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றியது.

4. 1984ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டு பீனல் கோடு செக்சன் காஃபிர்களாக மாறிய அஹ்மதியாக்கள் எனும் காதியாணிகள் இனி தங்கள் பிரச்சாரங்களை அரங்கேற்றக்கூடாது என்றும் அவ்வாறு மேற்கொள்பவர்கள் கைது செய்யப்பட்டு தூக்கிலடப் படுவார்கள் என்றும் சட்டமியற்றியது.

5. 2007ம் ஆண்டு பெலாரஸ் நாடு காஃபிர்களான காதியாணிகள் தங்கள் கீழ்த்தரமான பொய்களை அவிழ்த்துவிடுவதை தடை செய்தது.

மிர்ஸாவின் மரணம்

1907 மற்றும் 1908ம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் இவன் பாகிஸ்தான் நாட்டு லாகூர் நகருக்கு குடும்பத்துடன் பயணமானார். அங்கு தன் பொய்ப் பிரச்சாரத்தை பரப்பினார். அதுசமயம் நோய்வாய்ப்பட்டு வயிற்றுப்போக்கு (பேதி) ஏற்பட்டு 1908ம் ஆண்டு மே மாதம் 26ம்நாள் மரணமடைந்தார்.

அவருடைய மரணத்துடன் இந்த இயக்கம் முடிவுறவில்லை. அதன்பின்னும் கலீபாக்கள் என்ற தொடருடன் தொடர்ந்து கொண்டிருப்பதே இது பொய்யான மதம் என்பதற்கு மிகப் பெரிய சான்றாகும்.