பெரியம்மா, மாமா, மாமி இவர்களை மணமுடிக்கலாமா? பெரியவர்களின் போட்டோ வைக்கலாமா?

பெரியம்மா, மாமா, மாமி இவர்களை மணமுடிக்கலாமா? பெரியவர்களின் போட்டோ வைக்கலாமா?

By Sufi Manzil 0 Comment September 2, 2011

smk.abdul majeed s.majeed33@gmail.com

Fri, Sep 2, 2011 at 10:58 AM

அஸ்ஸலாமு அலைக்கும்.

1) வீடுகளில் வீட்டிலுள்ள பெரியவர்கள் போட்டோ வைக்கலாமா?
உருவ பொம்மைகள் (குதிரை நாய் இவைகள் போன்றவைகள்) வைத்திருக்கலாமா?

2) தாய் தந்தைக்காக அவர்களின் களா தொழுகையை பிள்ளைகள் இப்பொழுது களா செய்யலாமா?

3) உறவுகளில் அதாவது பெரியம்மா, சின்னம்மா, மாமா, மாமி இந்தமாதிரி உறவுகளில் உள்ள பெண்களை மணம் முடிக்கலாமா ? அப்படி முடித்தால் பிள்ளைகள் குறையுள்ள அதாவது ஊனமுள்ள பிள்ளைகள் பிறக்கும் என்று சொல்கிறார்கள் அதன் விவரம் தேவை தயவு செய்து தப்பான கேள்வியாக இருந்தால் மன்னித்துகொள்ளவும்.

4) பெருநாள் தொழுகை ஈத்கா மைதானத்தில் பெண்களையும் (தனியாக இடம் கொடுத்து) தொழலாமா?

பதில்:

1. வீடுகளில் பெரியவர்களின் போட்டோக்களை வைக்கலாம். நாய், குதிரை போன்ற உருவ பொம்மைகளை வைத்து ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் விளையாடியிருக்கிறார்கள். அதை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதித்திருக்கிறார்கள்.

2. தாய், தந்தைக்காக ஹஜ்ஜை மட்டும்தான் களா செய்ய இயலும். அவர்களால் விடுபட்ட தொழுகையை பிள்ளைகள் களா செய்ய முடியாது. 

3. உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (விலக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். – (திருக்குர்ஆன் 4:23)

4. பெண்கள் தொழுகையை அதிலும் ஜும்ஆவை பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. அதேபோல்தான் ஈத்கா மைதானத்தில் தொழுவதற்கும் அனுமதியில்லை. தனியாக இடம் கொடுத்தாலும் போகும், வரும் வழிகளில் மற்றும் பல சந்தர்ப்பங்களில் பித்னாக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.