Mujadid Alfadani Sirkandi-ஹஜ்ரத் முஜத்தித் அல்பதாஃனி சிர்கந்திய்யி
By Sufi Manzil
Short Histroy-Hazrath Mujadid Alfadani Sheikh Ahmad Sarhindi
Name is Ahmad , Laqab Mujadid Alfadani
He was born in Sarhind , a town near New Dehli , on 971 Hijri.
Father name is Sheikh Abd-ul-Ahad. who was Khlaifa of Sheikh Rukunudeen in Silsila e Qadria and Silsila e Chishtia. , He also get Ijazah-o-Khilafat from Hazrath Sheikh Rukunudeen in these Tareeqa's.
Hazrath Sheikh Rukunudeen was son and Khalifa of Hazrath Abdul Quddus Gangohi.
Hazrath Mujadid Alfadani’s family belongs to Hazrath Umar Farooq Razi-Allah-anhu at about 28 steps.
He was Hafiz-e-Quran and get knowledge about Fiqah and Shariath from his Father and other Ulema Karaam .
He get Ijazah-o-Khilafat from all Tareeqas , i.e.,
Silsilae Naqshbandia —–> from Hazrath Baqi Billah
Silsilae Qadria —–> from Hazrath Shah Sikandar Kethli
Silsilae Chishtia , Sabria,
Suharwardia , Shattaria, —–> from Hazrath Sheikh Abdul-Ahad
Madaria , Kubrwia etc. ( father ) .
Hazrath Mujadid Alfadani got all Nisbatts but he propagated Tareeqae Naqshbandia .
He was perfect in both Fiqah and Tasawwuf.
He was only in his times .
He wrote numerous books , such as, Mubda-o-Ma`aad , Marif-e-Ludnia , Maktoobaat, etc.
He was perfect in Sunnah of Holy Prophet saww and do exactly the same work in all respects as the Prophet sallalahu alaihi wa sallam had done.
He has a number Khulafas and Murideens .
He passed the secrets of his Nisbatt to Hazrath Muhammed Masoom
He passed to Rafiq-e-Aala in Sarhind on 28 Safar 1034 Hijri .
His grave mubarak is in Sarhind.
Shaykh Aḥmad, who through his paternal line traced his descent from the caliph ʿUmar I (the second caliph of Islam), received a traditional Islamic education at home and later at Siālkot (now in Pakistan). He reached maturity when Akbar, the renowned Mughal emperor, attempted to unify his empire by forming a new syncretistic faith (Dīn-e-Ilāhī), which sought to combine the various mystical forms of belief and religious practices of the many communities making up his empire.
Shaykh Aḥmad joined the mystical order Nakshabandiya, the most important of the Indian Sufi orders, in 1593–94. He spent his life preaching against the inclination of Akbar and his successor, Jahāngīr (ruled 1605–27), toward pantheism and Shīʿite Islam (one of that religion’s two major branches). Of his several written works, the most famous is Maktūbāt (“Letters”), a compilation of his letters written in Persian to his friends in India and the region north of the Amu Darya (river). Through these letters Shaykh Aḥmad’s major contribution to Islamic thought can be traced. In refuting the Naqshbandīyah order’s extreme monistic position of wahdatul vujood (the concept of divine existential unity of God and the world, and hence man), he instead advanced the notion of waḥdat ash-shuhūd (the concept of unity of vision). According to this doctrine, any experience of unity between God and the world he has created is purely subjective and occurs only in the mind of the believer; it has no objective counterpart in the real world. The former position, Shaykh Aḥmad felt, led to pantheism, which was contrary to the tenets of Sunnite Islam.
Shaykh Aḥmad’s concept of waḥdat ash-shuhūd helped revitalize the Naqshbandīyah order, which retained its influence among Muslims in India and Central Asia for several centuries thereafter. A measure of his importance in the development of Islamic orthodoxy in India is the title that was bestowed posthumously on him, Mujaddid-i Alf-i Thānī (“Renovator of the Second Millennium”), a reference to the fact that he lived at the beginning of the second millennium of the Muslim calender. His teachings were not always popular in official circles. In 1619, by the orders of the Mughal emperor Jahangir. who was offended by his aggressive opposition to Shīʿite views, Shaykh Aḥmad was temporarily imprisoned in the fortress at Gwalior. His burial place at Sirhind is still a site of pilgrimage.
முஜத்தித் அல்ஃபதானி ரலியல்லாஹு அன்ஹு.
ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வழி வந்த காபூல் மன்னர் ஷிஹாபுத்தீன் அலி ஃபர்ரூக் ஷா (இவர் அரியணையைத் துறந்து காபூலுக்கு வடக்கே 60 மைல் தொலைவில் ஒரு குகையில் கல்வத்திருந்து அங்கேயே மரணமாகி அடங்கப்பட்டுள்ளார்கள்) அவர்களின் ஒன்பதாவது தலைமுறையில் வந்த இமாம் ரஃபீயுத்தீனின் வழிவழி வந்த மஹ்தூம் ஷைகு அப்துல் அஹத் அவர்கள் அக்காலத்திய இறைநேசச் செல்வராக விளங்கிய ஷெய்கு அப்துல் குத்தூஸ் கங்கோஹி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சிறிதளவு ஆன்மீகக் கல்வி பயின்றார்கள். மேலும் ஆன்மீக அனுபவங்களைப் பெற விரும்பிய போது, அவர்கள் இவர்களை மார்க்க கல்வி கற்று வர ஏவினார்கள். அதன்படி மார்க்க கல்வி கற்று அன்னாரின் கலீபாவான ஷைகு ருக்னுத்தீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஆன்மீகக் கல்வியைக் கற்று பைஅத்தும், கிலாஃபத்தும் பெற்றார்கள். பின்னர் அக்காலத்தில் காதிரிய்யா தரீகாவின் ஆன்மீக ஞானியாகவும், இறைநேசச் செல்வராகவும் விளங்கிய ஷைகு கமால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஆன்மீகப் பயிற்சி பெற்றனர். ஆன்மீக நாதாக்களைத் தேடி சிகந்தரா என்ற ஊருக்கு வந்தபோது, அவர்களின் நல்லொழுக்கத்தைக் கண்ட நல்லார் ஒருவர் அவர்களுக்கு தம் மகளை மணமுடித்துக் கொடுத்தார்.
தம் மனைவியுடன் சர்ஹிந்த் வந்து சேர்ந்த அவர்கள் ஹனஃபி மத்ஹப் சட்டதிட்டங்களையும், 'தஅர்ருஃப்', 'அவாரிஃபுல் மஆரிஃப';, 'ஃபுஸூஸுல் ஹிகம்' முதலிய ஆன்மீக நூற்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வந்தனர்.
சிஷ்தியா தரீகாவிலும், காதிரிய்யா தரீகாவிலும் அவர்கள் தீட்சை பெற்றிருந்த போதினும் நக்ஷபந்தியா தரீகாவைப் பற்றி அறிந்து கொள்ள பெரிதும் அவாவுற்றனர். அண்ணல் நபிஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களையும், அவர்களது குடும்பத்தாரையும் பெரிதும் நேசித்தனர். அந்த நேசமே ஒருவனின் ஈமானுக்கு உத்திரவாதம் என்று கூறினர்.
'கனூஸுல் ஹகாயிக்', 'அஸ்ராருத் தஷஹ்ஹுத்' என்ற இரு ஆன்மீக நூல்களை எழுதினார்கள்.
இவர்கள் ஹிஜ்ரி 1007, ரஜப் மாதம் 17ல் மறைந்தார்கள்.
அவர்களுக்கு நான்காவது மகனாக ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வழி யில் 31வது தலைமுறையில் ஹிஸ்ரி 971 ஆம் ஆண்டு ஷவ்வால் பிறை 14 (கி.பி.1564, ஜூன் மாதம் 5 ம் நாள்) வெள்ளிக் கிழமை இரவு பிறந்த ஆண்மகனுக்கு அஹ்மது என்று பெயரிட்டார்கள். அன்றிரவு அண்ணல் நபிஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் வந்து தம் மகனின் செவிகளில் பாங்கு சொல்வதுபோல் கனவு கண்டனர். விருத்த சேதனம்(சுன்னத்) செய்யப்பட்ட பிறந்த இக் குழந்தை மற்ற குழந்தையைப் போல் அழவொ,அசுத்தத்தில் புரளவோ இல்லை. எப்போதும் புன்முறுவலுடன் காட்சி அளித்தனர். இளமையிலும் அவரை எவரும் நிர்வாணமாக பார்த்ததில்லை.
பால்குடி பருவத்தில் தம் மகன் நோய்வாய்பட்ட போது, தந்தையார் ஷைகு கமால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் தம் குழந்தையை கொண்டு சென்று நிலைமையை எடுத்துரைத்தனர். ஷெய்கு அவர்கள் குழந்தையை தம் மடி மீது வைத்து முத்தமிட்டு, 'அல்லாஹ் இக் குழந்தைக்கு நீண்ட ஆயுளைக் கொடுப்பானாக! ஆன்றோர்களும், பெரியோர்களும் இவர்களிடம் தீட்சை பெறுவர். இவரின் ஆன்மீகச் சுடர் இறுதிநாள் வரை வீசிக் கொண்டிருக்கும். முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி,ஷெய்கு சலீம் சிஷ்தி, அப்துல்லாஹ் சுஹரவர்தீ ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் இவர்களைப் பற்றி முன்னறிவிப்பு செய்துள்ளனர். ஆன்மீக ஞானிகள் இவரின் வரவை எதிர்நோக்கியுள்ளனா'; என்று கூறினர்.
இளமையிலேயே குர்ஆனை ஓதத்துவங்கிய அஹ்மது அவர்கள் சில ஆண்டுகளிலேயே அதனை மனனம் செய்துவிட்டனர். தம் தந்தையிடமும், தம் ஊர் மார்க்க ஆசிரியர்களிடமும் மார்க்க கல்வியைக் கற்ற பின்னர், ஸயால்காட் சென்று மௌலானா கமால் கஷ்மீரியிடம் மார்க்க சட்டதிட்டங்களையும், ஷெய்கு யஃகூப் கஷ்மீரியிடம் ஹதீது கலையையும் கற்றனர். 'ரிஸாலா தஹ்லீலியா', 'ரிஸாலா மத்ஹப் ஷியா' என்ற இரு நூல்களை பார்ஸியிலும், அரபியிலும் எழுதினார்கள்.
தங்களது 22ம வயதில் அக்காலத்தில் அறிவுப் பட்டணமாகத் திகழ்ந்த அக்பராபாத்(ஆக்ரா) நகருக்கு சென்றனர். தள்ளாத வயதிலும் தம்மை தேடி வந்த தம் தந்தையுடன் சர்ஹிந்த் திரும்பினார்கள். வழியில் தானேஸ்வரின் ஆளுநரான ஷைகு சுல்தான் இவர்களை அகம்மலர உபாசரித்து தமது மாளிகையில் விருந்தினராக தங்க வைத்தார். இவரின் செயல்பாடுகளை நோட்டமிட்ட ஆளுநர் தம் மகளை இவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார். தம் தந்தையிடமே சிஷ்திய்யா, காதிரிய்யா தரீகாவில் தீட்சையும், கிலாஃபத்தும் பெற்றார்கள்.
நீண்ட நாட்களாக ஹஜ் செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த இவர்கள், தமது தந்தை மறைந்த அடுத்த ஆண்டில் ஹஜ் செய்யும் நோக்கத்துடன் தம் ஊரிலிருந்து புறப்பட்டு டில்லி வந்து சேர்ந்தனர். அப்போது டில்லி வந்து தங்கியிருந்த நக்ஷபந்தியா தரீகா ஷெய்கு காஜா பாகீபில்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சந்திக்கும் வாய்ப்பு பெற்றார்கள். அதன்பின் இவர்கள் வாழ்வில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.
ஷெய்கு பாக்கீபில்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவர்களுக்கு ஆன்மீக பயிற்சிகளை அளித்து கிலாஃபத்தும் கொடுத்தார்கள். தம் ஷெய்கு பாக்கீபில்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மறைவிற்குப் பின் நக்ஷபந்தியா தரீகாவின் ஆன்மீக அரியணை ஏறினார்கள்.
மக்களிடையே மலிந்து கிடக்கும் அனாச்சாரங்களைக் களைந்தெறிந்து, அவர்களை அல்லாஹ்வின் பாதையில் அடியொற்றி நடக்க வைக்கும் தலையாய பணியை செய்ய உலகெங்கும் தம் பிரதிநிதிகளை அனுப்பி வைத்தனர். மௌலானா முஹம்மது காஸிமின் தலைமையில் 70 பேர்கள் அடங்கிய குழு துருக்கிஸ்தானுக்கும், 40 பேர்கள் அடங்கிய மௌலானா ஃபர்ரூக் ஹுஸைனின் தலைமையிலான குழு அரேபியா, யமன், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கும் மௌலானா முஹம்மது ஸாதிக்கின் தலைமையில் 10 பேர்கள் அடங்கிய குழு காஷ்கருக்கும், மௌலானா ஷெய்கு அஹ்மது பர்கீயின் தலைமையில் 30 பேர்கள் அடங்கிய குழு தூரான், படக்ஷான், குராஸான் நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் செய்த பிரச்சாரத்தால் அனேகர் நேர்வழி பெற்றனர்.
இவை மட்டுமில்லாது இவர்களின் சீடர்கள் இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சென்று தீன் சுடர் ஏற்றினர்கள். மக்கள் இவர்களை 'இமாமே ரப்பானி', 'முஜத்தித் அல்ஃபதானி' என்று அழைக்கலாயினர். ஆம்! 11ம் நூற்றாண்டில் இஸ்லாத்தை புனருத்தாரணம் செய்ய இறைவனால் அனுப்பப்பட்ட சீர்திருத்தவாதிதான்!;. அக்பரின் காலத்தில் அவரின் தீனே இலாஹி என்னும் மதத்தை வன்மையாக எதிர்த்து இஸ்லாத்தை போதித்து இஸ்லாமியக் கொடி நாட்டினார்கள்.
அக்பர் மரணத்திற்குப் பின் அவரது மகன் ஜஹாங்கீர் அரியணை ஏறினார். இஸ்லாத்தை புணருத்மானம் செய்து கடடியெழுப்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்த இவர்கள், இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டனர். அக்பரைப் போல் இஸ்லாத்திற்கு ஜஹாங்கீர் விரோதியாக இல்லாவிட்டாலும், இஸ்லாத்திற்கு பாதுகாவலர் என்று கூறவும் முடியாது. இத்தகையவரை திருத்துவது எளிதானது என்பதை விளங்கிக் கொண்ட இவர்கள், அரசரின் அன்பிற்குப் பாத்திரமானவர்களுக்கு கடிதம் எழுதி அரசரை நேர்வழிப்படுத்துமாறும் அதன் மூலம் நாட்டில் இஸ்லாமிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துமாறும் வேண்டிக் கொண்டனர். இம் மடல்கள் பலனளிக்காமலில்லை. அதன்படி ஜஹாங்கீர் நான்கு மார்க்க அறிஞர்கள் கொண்ட குழுவை அமைத்து அதன்படி செயலாற்ற முன் வந்தார். ஆனால் அதில் உலகாதயத்தை விரும்பும் உலமாக்கள் புகுந்து இஸ்லாத்தின் நலனைக் கெடுத்துவிடக் கூடாதே என்று வருத்தமுற்றனர். இதை அரசருக்கு தெரியப்படுத்தினார்கள்.
இதுகண்டு உலகாதாய உலமாக்கள் பொறாமையுற்று ஷெய்கு அஹ்மது அவர்கள் எழுதிய கடிதங்களை திருத்தி வெளியிட்டனர். அந்த போலிக் கடிதங்கள் ஹதீதுக் கலை வல்லுநர் அப்துல்ஹக் முஹத்திஸ் தெஹ்லவி அவர்களின் கைக்கு கிடைத்ததும் அவர்களுக்கு ஏற்பட்ட வருத்தத்திற்கும், சினத்திற்கும் அளவில்லை. அதற்கு அவர்கள் விளக்கம் கேட்டு, ஷெய்கு அஹ்மது அவர்களுக்கு கடிதம் எமுதினர். ஷெய்கு அவர்கள் அந்தக் கடிதங்களின் போலித் தன்மையை விளக்கியபோது, திஹ்லவி அவர்களின் சினம் அழிந்தது. அவர்களின் மீது விருப்பு ஏற்பட்டது.
சர்ஹிந்தி அவர்கள் அரசவைப் பிரமுகர்களுக்கு எழுதிய மடல்களை மன்னரிடம் காண்பித்து, மன்னருக்கு எதிராக நடப்பதாக குற்றம் சுமத்தினர். அதை நம்பிக் கொண்ட மன்னர் ஷெய்கு அவர்களை அழைத்தார். அரசவைக்கு வந்த அவர்கள் மன்னருக்கு சஜ்தாயே-தர்பார் செய்யாததைக் கண்டு அவர்களை சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டார். சில நிமிடங்களில் அவர் மனம் மாறி அவர்களை சிறையில் தள்ளினார். இது ஹிஜ்ரி 1028 ஜமாதுல் ஆகிர் பிறை 8(கி;.பி.1619 மே22) ல் நடைபெற்றது. சிறையில் எண்ணற்றவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து அவர்களை நேர்வழிபடுத்தினர்.
விரைவில் ஜஹாங்கீர் தம் தவற்றை உணர்ந்து, ஷெய்கு அவர்களின் மாண்பினை உணர்ந்து அவர்களை கி;.பி. 1620 ல் விடுதலை செய்தார். எங்கு சென்றாலும் தன்னுடனேயே அவர்களை அழைத்துச் சென்று அவர்களின் ஆலோசனைகளை மன்னர் கேட்டு நடந்தார். மன்னர் மார்க்க பக்தி நிறைந்தவராக மாறினார். நாட்டில் உடைக்கப்பட்ட பள்ளிவாயில்கள் திரும்ப நிர்மாணிக்கப்பட்டன. மக்கள் இஸ்லாமிய நெறிப்படி நடக்கலாயினர். இந்தியாவில் வீழ்ந்து கொண்டிருந்த இஸ்லாம் வாழத் துவங்கியது.
ஷெய்கு அஹ்மது சர்ஹிந்தி அவர்கள் ஷெய்கு அலாவுத் தௌலா சம்னானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 'வஹ்தத்துஷ் ஷுஹூது' கொள்கையின் நாயகராக விளங்கினார்கள். எண்ணற்ற கராமத்துகளை நிகழ்த்தியுள்ளார்கள்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களைப் பின்பற்றி நோன்பு திறப்பதை துரிதப்படுத்தவும், ஸஹர் நேர உணவு உண்பதை தாமதப்படுத்தவும் செய்தார்கள். ரமலான் மாதம் இறுதிப் பத்து நாட்களில் பள்ளியில் இஃதிகாஃப் இருந்தார்கள். நெ;தப் பொருள் மீது ஜகாத் விதியோ அதற்கு ஆண்டு முடிவுவரை காத்திராது உடனே அதற்கான ஜகாத்தை ஏழை,எளியவர்க்கு கொடுத்துவிடுவார்கள்.
அவர்கள் தம்மைக் காண வருவோரை எழுந்து நின்று வரவேற்று அமரச் செய்வர். அவர்களை நன்முறையில் உபசரித்து, உணவளித்து அனுப்புவார்கள்.
தம்முடைய முடிவு நெருங்கிவிட்டதை தம் மக்களுக்கு தெரியப்படுத்தி, அவர்களை தாம் தங்கியிருந்த இடமான அஜ்மீருக்கு வரவழைத்தனர். இளுதியில், ஹிஜ்ரி 1034, ஸஃபர் பிறை 29 (கி.பி.1624,டிசம்பர் 10) செவ்வாய்க்கிழமை தமது 63 வது வயதில் மறைந்தார்கள். அவர்களின் ஜனாஸாத் தொழுகையை அவர்களின் மகன் காஜா முஹம்மது சயீத் முன்னின்று நடத்தினார்.
காஜா பாக்கீபில்லாஹ் அவர்களுக்கு ஹிஜ்ரி 1008 ல் எழுதிய மடல்கள் மொத்தம் 536 ஆகும். அவை மூன்று தொகுப்புகளாக தொகுக்கப்பட்டுள்ளன. ஹிஜ்ரி 1025ம் ஆண்டில் அவை முதன்முதலாக தொகுக்கப்பட்டபோது, 313 எண்ணிக்கை வந்ததும் அத்துடன் நிறுத்துமாறு கூறி, இது முர்ஸலான நபிமார்களின் எண்ணிக்கை மேலும், பத்ரு சஹாபாக்களின் எண்ணிக்கையுமாகும் என்று கூறி அத் தொகுப்புக்கு 'துர்ருல் மஃரிஃபத்' என்று பெயரும் சூட்டினார்கள்.
ஹிஜ்ரி 1028ல் அம்மடல்களின் இரண்டாம் தொகுப்பு தொகுக்கப்பட்டபோது, 99 எண்ணிக்கை வந்ததும், இது அல்லாஹ்வின் திருப்பெயர்களின் எண்ணிக்கை என்று சொல்லி அத் தொகுப்புக்கு, 'நூருல் காலிக்' என்று பெயரிட்டனர். ஹிஜ்ரி 1033ம் ஆண்டில் மூன்றாம் தொகுப்பு தொகுக்கப்பட்டபோது, 114 எண்ணிக்கை வந்ததும் அதனை அத்துடன் நிறுத்தி 'இது திருக் குர்ஆன் அத்தியாயங்களின் எண்ணிக்கை' என்று கூறினார்கள். அதனைத் தொகுத்தவரே 'பஹ்ருல் மஆரிஃப்' என்று பெயரிட்டார். அக்காலத்தில் அவர்கள் எழுதிய பத்து மடல்களும் அத்துடன் இணைக்கப்பட்டன.
அல்லாமா மகாகவி இக்பால் அவர்கள் ஷெய்கு அஹ்மது ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி சொன்ன சுருக்கமான வாசகம், 'தன்னுணர்வு பெற்ற ஒருவர், உலகை ஒரு குலுக்கு குலுக்கினார் என்பதாகும்.'