Manzil News

Manzil News

By Sufi Manzil 0 Comment March 9, 2010

 

 வேண்டுகோள்:
  அன்புள்ள முரீதீன்களே! முஹிப்பீன்களே! சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்த இணையதளம் காயல்பட்டணம் ஸூபி மன்ஜிலின் செய்திகளை மட்டும் தாங்கி வெளிவருவதல்ல. மாறாக நமது தரீகா சகோதரர்கள் மற்றும் அபிமானிகள் இதர ஸூபி மன்ஜில்கள் மற்றும் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுடைய அனைவர்களுக்கும் பொதுவாக வருவது. ஆகவே தங்களுக்கு கிடைக்கக் கூடிய செய்திகள், போட்டோக்கள், தகவல்களையும், இதர ஸூபிமன்ஜில் பற்றிய முழுவிபரங்களை எமக்கு அனுப்பித் தந்தால் இதில் அச் செய்திகளை வெளியிட உதவியாக இருக்கும்.

admin@sufimanzil.org

-Administrator,

sufimanzil.org

 

 

இந்தியா, தமிழ்நாடு, சென்னை-வியாசர்பாடி ஸூபி மன்ஸில் மீலாது விழா, கந்தூரி விழா அழைப்பு!

நாள்: ஹிஜ்ரி 1431 ரபீவுல் அவ்வல் பிறை 20 (07-03-2010)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளாலும், இறையருள் பெற்ற நபிமார்கள், வலிமார்களின் நல்லாசியாலும் நடைபெறும் இப்புனித விழாக்களில் பங்கேற்று நற்பயன் பெற வியாசர்பாடி  ஸூபி மன்ஜில் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.

மீலாதுன் நபி விழாவும்,

     

அவர்களின் பிரதான கலீஃபா

அல் ஆரிபுபில்லாஹ், அல் முஹிப்பிர் ரஸூல், அஷ்ஷய்குல் காமில் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் (காயல்பட்டணம்) அஸ்ஸித்தீகி, அல்காதிரிய்யி, அந்நக்ஷபந்திய்யி (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்) அவர்களதும்,  

அவர்களின் கலீஃபா

அஷ்ஷெய்கு செய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் ஹஸனி ஸூபி காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்

ஆகியோர்களது கந்தூரி விழாக்களை சங்கைக்குரிய எங்களது ஷெய்கு நாயகம், அஷ்ஷெய்குல் காமில் மௌலானா மௌலவி அல்ஹாஜ் S.M.H. முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ஸூபி காதிரி காஹிரி ஸல்லமல்லாஹு தஆலா வமத்தலில்லாஹுல் ஆலி

(தலைவர், தமிழ்நாடு அஹ்லுஸ் ஸுன்னத் வல் உலமா சபை)

அவர்கள் நடாத்திதர இசைந்துள்ளார்கள்.

 

நிகழ்ச்சி நிரல்:

காலை 8.30 மணி – குர்ஆன் ஷரீப் ஓதுதல்

காலை 10.30 மணி- மௌலிது ஷரீபுகள் ஓதுதல்

மாலை 4.30 மணி- கத்முல் குர்ஆன் துஆ-மௌலிது ஷரீபுகளின் இறுதி துஆக்கள் ஓதுதல்

மாலை 5.00 மணி -மார்க்க சொற்பொழிவு

மாலை 7.00 மணி- காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ்

மாலை 8.00 மணி தபர்ருக் நேர்ச்சை வழங்குதல்

 

இவண்,

ஹிஸ்புல்லாஹ் ஸபை, ஸூபி மன்ஜில்,

(அப்துல்லாஹ் ஹார்டுவேர்ஸ்)

 

1/14, மீனாம்பாள் சாலை, சென்னை-118.

Phone: 2554 0450/2555 0812.

குறிப்பு:-பிரதிவாரம் வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு மஃரிபு தொழுகைக்குப் பின் திக்ரு மஜ்லிஸ் நடைபெறும்.

பஸ் ரூட்: 33, 2 A, 116, 37 E .இறங்குமிடம்: மகாகவி பாரதி நகர், பஸ் ஸ்டாப்.

நம் ஸூபி மன்ஸில் கட்டுவதற்கு நிதி தேவைப்படுகிறது. எனவே முரீதீன்களும் முஹிப்பீன்களும் தங்கள் உதவியுடனும் தங்களது நண்பர்களிடம் ஆர்வமுடன் வசூலித்து தரும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

பணம் அனுப்ப வேண்டிய முகவரி:

தலைவர் அல்ஹாஜ் M.M. உமர்கத்தாப்

Bank Name: UNION BANK OF INDIA

Madhavaram Branch

A/c No. 332902010705424.

 

இந்தியா, தமிழ்நாடு, சென்னை-போரூர் ஸூபி மன்ஜில் 6-ம் ஆண்டு மீலாதுன் நபி விழா, கந்தூரி விழா அழைப்பிதழ்!

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளாலும், இறையருள் பெற்ற நபிமார்கள், வலிமார்களின் நல்லாசியாலும் நடைபெறும் இப்புனித விழாக்களில் பங்கேற்று நற்பயன் பெற போரூர் ஸூபி மன்ஜில் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.

மீலாதுன் நபி விழாவும்,

இமாமுல் ஆரிபீன், சுல்தானுல் வாயிழீன்,   அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் (ஹைதராபாத்) கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களதும்,

அவர்களின் பிரதான கலீஃபா

அல் ஆரிபுபில்லாஹ், அல் முஹிப்பிர் ரஸூல், அஷ்ஷய்குல் காமில் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் (காயல்பட்டணம்) அஸ்ஸித்தீகி, அல்காதிரிய்யி, அந்நக்ஷபந்திய்யி (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்) அவர்களதும்,

அவர்களின் கலீஃபா

அஷ்ஷெய்கு செய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் ஹஸனி ஸூபி காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்

ஆகியோர்களது கந்தூரி விழாக்களை சங்கைக்குரிய எங்களது ஷெய்கு நாயகம், அஷ்ஷெய்குல் காமில் மௌலானா மௌலவி அல்ஹாஜ் S.M.H. முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ஸூபி காதிரி காஹிரி ஸல்லமல்லாஹு தஆலா வமத்தலில்லாஹுல் ஆலி

(தலைவர், தமிழ்நாடு அஹ்லுஸ் ஸுன்னத் வல் உலமா சபை)

அவர்கள் நடாத்திதர இசைந்துள்ளார்கள்.

 நிகழ்ச்சி நிரல்

நாள்: ரபியுல் அவ்வல் பிறை 19, ஹிஜ்ரி 1431(06-03-2010) சனிக்கிழமை மாலை 5.30 மணி முதல்

இடம்: ஹிஸ்புல்லாஹ் சபை, ஸூபி மன்ஜில்,

(நியூ சீமாட்டி ரெடிமேட்ஸ் மாடியில்)

4/24 முதல் தெரு, R.E. நகர், போரூர்-116.

விழா கொடியேற்றுதல், மெய்ஞ்ஞான சொற்பொழிவு, காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ், துஆவிற்குப் பிறகு நேர்ச்சை வழங்கப்படும்.
 
குறிப்பு:- வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் திக்ரு மஜ்லிஸ் நடைபெறும்.

இவண்,

ஹிஸ்புல்லாஹ் ஸபை, ஸூபி மன்ஜில்,

போரூர்-116.

 

 

ஹஜ் வரவேற்பு.

2010 ம் வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு தாயகம் (இந்தியா) திரும்பிய அஷ்ஷெய்கு S.M.H. முயம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் காதிரி ஸூபி அவர்களும் அவர்களுடைய மகனார் M.A.S. ஹம்மாது ஆலிம் மஹ்லரி அவர்களும் சென்னை ஏர்போர்ட்டில் வந்திறங்கியபோது எடுத்த புகைப்படங்கள்:

  

 தூத்துக்குடி ஸூபி மன்ஸிலில் கந்தூரி விழா!

ஸைபுத்தீன் ஹஜ்ரத் காதிரி ஸூபி அவர்கள் சென்னை, தஞ்சாவூர் ஸூபி மன்ஜிலுக்கு விஜயம்!

நமது ஷெய்குநாயகத்தின் கலீபா மௌலவி எஸ்.எம்.எச். முஹம்மதலி சைபுத்தீன் ஹஜ்ரத் காதிரி ஸூபி அவர்கள் இன்ஷாஅல்லாஹ் வருகிற 1 நவம்பர் 2009 அன்று சென்னை, மற்றும் தஞ்சாவூர் நகரங்களிலுள்ள ஸூபி மன்ஜில்களுக்கு விஜயம் செய்யவிருக்கிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் இவ்வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வருகிற நவம்பர் மாதம் 16-ம் தேதி சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்படவிருக்கிறார்கள். அவர்களுடன் அவர்களது மகனார் மௌலவி ஹம்மாது ஆலிம் மஹ்லரி அவர்களும் புனித ஹஜ் யாத்திரை செய்ய நாடியுள்ளார்கள்.

கேரளம் பீமா பள்ளியில் கந்தூரி விழா!

சுல்தானுல் வாயிழீன் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் 74 வது கந்தூரி வைபவமும் மற்றும் அன்னாரது கலீபா அஷ்ஷெய்குல் காமில் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபி காஹிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் 28 வது கந்தூரி வைபவமும் அன்னாரது கலீபாவான மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு S.M.H. ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி அவர்கள் தலைமையில் 05-10-2009 திங்கட் கிழமை அன்று திருவனந்தபுரம் பீமா பள்ளியில் நடைபெறவிருக்கிறது.

நிகழ்ச்சி நிரல்:

நிகழ்ச்சி நாளன்று மாலை அஸருக்குப் பின் புனித மௌலிது ஷரீஃபும் அதைத் தொடர்ந்து பயானும் நடைபெறும். மஃரிபிற்குப் பின் காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ் நடைபெற்று நேர்ச்சை விநியோகிக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நிறைவு பெறும் இன்ஷா அல்லாஹ்.

அனைவரும் கலந்து நற்பயனடைய வேண்டுகிறோம்.

02-10-2009

கொழும்பு குப்பியாவத்தையில் கந்தூரி விழா!

சுல்தானுல் வாயிழீன் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் 74 வது கந்தூரி வைபவமும் மற்றும் அன்னாரது கலீபா அஷ்ஷெய்குல் காமில் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபி காஹிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் 28வது கந்தூரி வைபவமும் அன்னாரது கலீபாவான மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு S.M.H. ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி அவர்கள் தலைமையில் 11-10-2009 ஞாயிற்றுக் கிழமை அன்று சிறிலங்கா, கொழும்பு  குப்பியாவத்தையில் மகான் அஷ்ஷெய்குல் காமில் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபி காஹிரி அவர்களின் மக்பராவில் வைத்து நடைபெறவிருக்கிறது.

நிகழ்ச்சி நிரல்:

காலை 9 மணிக்கு கத்முல் குர்ஆன் ஓதி தமாம்  செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து பயனானும் நடைபெறும். பின்னர் மகான் அவர்களின் புனித கப்ரு ஷரீஃபிற்கு சென்று ஜியாராத் நடைபெற்று நேர்ச்சையுடன் விழா நிறைவு பெறும் இன்ஷா அல்லாஹ்.

அனைவரும் கலந்து நற்பயனடைய வேண்டுகிறோம்.

02-10-2009

இருபெரும் மகான்களன் கந்தூரி விழா!

        காயல்பட்டணம் ஸூபி மன்ஸிலில் 30-09-09 புதன் கிழமை அன்று, சுல்தானுல் வாயிழீன் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் 74 வது கந்தூரி வைபவமும் மற்றும் அன்னாரது கலீபா அஷ்ஷெய்குல் காமில் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபி காஹிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் 28 வது கந்தூரி வைபவமும் அன்னாரது கலீபாக்களான மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு எஸ்எம்இஹைச். ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி அவர்கள், மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு டபிள்யு.எம்.எம்.செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி அவர்கள், மௌலவி அஷ்ஷெய்கு ஹைச்.என்.ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி காதிரி அவர்கள் ஆகியோர் முன்னிலையில் சிறப்புற நடைபெற்றது. முன்னதாக, காலை சுப்ஹிற்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டது. மாலை அஸருக்குப் பின் புனித மௌலிது ஷரீஃபும், மஃரிபிற்குப்பின் காதிரிய்யா திக்ரு மஜ்லிஸும், அதைத் தொடர்ந்து மார்க்க உரையும் நிகழ்த்தப்பட்டு நேர்ச்சை விநியோகிக்கப்பட்டு விழா சிறப்புற முடிவடைந்தது.

      மஃரிபிற்குப்பின் மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு S.M.H. ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி அவர்கள் காதிரிய்யா திக்ரு மஜ்லிஸை நடத்தி வைத்தார்கள். மார்க்க உரையை மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு W.M.M. செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி அவர்கள் நிகழ்த்தினார்கள்.
  

 

    அவர்கள் தங்கள் உரையில், " இருமகான்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை மிக அழகாக தெளிவுபட எடுத்துரைத்தார்கள்;. அதில், 'பள்ளிவாசலில் தமிழில் பயான் பண்ணுவதை தக்க ஆதாரங்களுடன் எதிர்த்தார்கள். இப்னு ஹஜர் இமாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தூங்கிக்கொண்டு இருப்பவனுக்கும், தொழுது கொண்டு இருப்பனுக்கும் இடைஞ்சலாக அல்லாஹ்வின் வேதமாகிய திருக்குர்ஆனை ஓதுவது கூட ஹராமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறிருக்க, பள்ளியில் பயான் செய்வது எப்படி ஆகும்? இதற்கு தீர்ப்பு சொன்னவர்கள் பணக்காரர்கள்தான். மெஜாரிட்டியின்படி தீர்ப்பளிப்பதாக சொன்னர்கள். ஷெய்குனா அவர்களை எதிர்த்தவர்கள் பட்டபாடு எல்லோருக்கும் தெரியும். அந்த பணக்காரர்கள் பயான் ஆகும் என்றவருக்காவது ஏதாவது உதவி செய்தார்களா? என்றால் இல்லை. அவர்  கடைசிவரை மிகவும் கஷ்டப்பட்டவராகவே இறந்தார்கள்.

         ளாஹிர் உலமாக்கள் தங்கள் வேலை போய்விடும், வருமானம் போய்விடும் என்று பயப்படுவார்கள். ஆனால் ஷெய்குமார்கள்தான் எதையும் தைரியமாக எவருக்கும் பயப்படாமல் சொலவார்கள். அவ்வாறுதான் எங்கள் ஷெய்குனா அவர்கள் தப்லீககின் தீய கொள்கைகளை பார்த்து சிலோனில் சம்மாங் கோட்டுபள்ளியில் பணியாற்றி கொண்டிருக்கும் போது எதிர்த்தார்கள். பணக்கார நிர்வாகிகள் அதை பொறுக்கமாட்டாமல் அவர்களை பள்ளியை விட்டும் நீக்கிவிட்டார்கள். ஷெய்குனா அவர்கள் அதைக் கண்டு கலங்கவில்லை. தங்கள் பணியை செவ்வனே ஆற்றி வந்தார்கள்.

     சிலர் வந்து எங்களிடம் மார்க்க விஷயமாய் முடிவெடுக்க உலமாக்கள் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது என்று எங்களை அழைத்தார்கள். அங்கு சென்றபோது, தப்லீகை பற்றி பேச வேண்டமென்று சொன்னார்கள். நாங்களும் உத்துக் கொண்டு தப்லீக் ஸ்தாபகர் இல்யாஸின் குருமார்களில் ஒருவரான ரஷீத் அஹ்மது கங்கோஹி எழுதிய பதாவா ரஷீதிய்யா என்ற நூலில் வஹ்ஹாபி இயக்கத்தலைவரான முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியை ஆதரித்து எழுதியதைக் காட்டி கேட்டபோது, இது அவர் அனுமானத்தை எழுதியுள்ளார் என்றனர். பதாவாவில் அனுமானத்தை சொல்லலாமா? என்று கேட்டபோது, அவர்கள் அறை அறையாக கூடி சென்று பேசி அவர் எழுதியதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் அந்தக் கருத்துக்கு நாங்கள் உடன்படவில்லை என்று சொல்லி கையொப்பமிட்டுவிட்டு சில நாட்களில் அந்த ரஷீத் அஹ்மது கங்கோஹியை ஆதரித்து கூட்டம் போட்டார்கள் என்றால் இவர்களின் நயவஞ்சகத்தனத்தை என்னவென்பது?

        பன்னூற்றாண்டுகாலம் ஒற்றுமையாக நடந்து வந்த ஜும்ஆவை பிரித்தார்கள். தற்போது என்ன நடந்தது? அவர்களை மற்றவர்கள் வந்து வெளியேபோகும்படி சொல்லிவிட்டார்கள். இதுதான் நடக்கும் குழப்பம் விளைவிப்பவர்களுக்கு.

      நான் நமதூரில் மத்ரஸாவில் ஓதிக் கொடுக்கும்போது பள்ளியில் பயான் பண்ணச் சொன்னார்கள். நான் முடியாது என்றேன். பள்ளியும் எங்கள் நிர்வாகத்திலுள்ளதுதான். எனவே பயான் பண்ணனும் என்று வற்புறுத்தினார்கள். நான் திட்டவட்டமாக ஹராமானதை செய்ய முடியாது என்று மறுத்துவிட்டேன் . அவர்களால் என்ன செய் முடியும்? என்னை வேலையிலிருந்து நீக்குவார்கள். அதைத்தான் செய்யமுடியும்.

       ஆக ஷெய்குமார்கள்தான் எதையும் பயமின்றி மக்கள் மத்தியில் சொல்பவர்கள். அவர்களே ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மீது முஹப்பத்தை ஏற்படுத்தி மக்களை நேர்வழி செலுத்துபவர்கள். எனவே தரீகத் வழி செல்பவர்கள் நமது நாயத்தின் மீது பேரன்பு கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார்கள்.

      இறுதியில் பாத்திஹா துஆவுடன் நேர்ச்சை விநியோகிக்கப்பட்டு விழா முடிவுற்றது. ஏராளமான முரீதீன்கள், முஹிப்பீன்கள் கலந்து பயன் பெற்றனர்.

 01-10-2009

 

இரு மகான்களின் கந்தூரி விழா! 

சுல்தானுல் வாயிழீன் அஷ்ஷாஹ் அஷ்ஷெய்கு  முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 74 வது உரூஸ் முபாரக்கும், ஷெய்குல் காமில் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி சித்தீகி, காதிரி காஹிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் 28வது கந்தூரி விழாவும் இன்ஷாஅல்லாஹ் வருகிற ஷவ்வால் பிறை 10 (30-09-2009) புதன் கிழமை காயல்பட்டணம் ஸூபி மன்ஸிலில் வைத்து நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல்:

காலை சுப்ஹிற்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதுதல்

மாலை 4.30 மணிக்கு புனித மௌலிது ஷரீஃப் ஓதுதல்

இரவு மஃரிபிற்குப் பின் கதரிரிய்யா திக்ரு மஜ்லிஸும் அதைத் தொடந்து மார்க்க உரையும் நிகழ்த்தப்பட்டு நேர்ச்சை வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிகளை காயல்பட்டணம் ஸூபி ஹஜ்ரத் அவர்களின் கலீபாக்களான மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு S.M.H. சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி காதிரி பாகவி ஸூபி அவர்கள், மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு  W. M. M. செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி அவர்கள், மௌலவி  அஷ்ஷெய்கு  H.N. ஷெய்குஅப்துல் காதிர் ஸூபி காதிரி  அவர்கள் ஆகியோர்களின் முன்னிலையில் நடைபெறுகிறது.

கந்தூரிக்கான நன்கொடைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

S.M. TAJUDEEN HAJI,

SOOFI MANZIL,

KUTHUKAL STREET,

KAYALPATNAM-628204.

SOUTH INDIA.

 

வெளிவந்து விட்டது!
 

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தப்லீக் ஜமாஅத் ஸ்தாபகர் மௌலவி இல்யாஸ் காந்தலவியின் மூல குருமார்களில் ஒருவரான அஷ்ரப் அலி தானவியைப் பற்றி மீரட் மௌலானா அப்துல் அலீம் சித்தீகி காதிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களால் வெளியிடப்பட்ட பத்வா 'ஃபர்ரத் மின் கஸ்வரா' (புலியைக் கண்டு ஓட்டம்) எனும் நூல் அஷ்ஷெய்குல் காமில் காயல்பட்டணம் ஸூபி ஹழரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு விளக்க குறிப்புகளுடன் வெளிவந்து விட்டது. 
  

குத்புல் ஹிந்த் காஜா முயீனுத்தீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கந்தூரி விழா!

     அஜ்மீர் ஷரீஃபில் மறைந்து வாழும் அதாயிர் ரஸூல் காஜா முயீனுத்தீன் ரலியல்லாஹீ அன்ஹு அவர்களின் வருடாந்திர கந்தூரி வைபவம் காயல்பட்டணம் ஸூபி மன்ஜிலில் கடந்த ரஜப் பிறை 6 (29-06-09) திங்கட்கிழமை நடைபெற்றது.

        திங்கட் கிழமை காலை சுபுஹிற்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டது. அன்று மாலை அஸருக்குப் பின் அஜ்மீர் நாயகம் அவர்கள் பெயரில் மௌலிது ஷரீஃப் ஓதப்பட்டது. மஃரிபிற்குப் பின் காயல்பட்டணம் ஸூபி ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கலீபா மௌலானா மௌலவி அல்ஹாஜ் S.M.H.முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி அவர்களால் காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ் நடத்தப்பட்டது. அதன்பின் காயல்பட்டணம் ஸூபி ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கலீபா மௌலானா மௌலவி அல்ஹாஜ் W.M.M. செய்யிது மும்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி அவர்களால் மகான் அவர்களின் வாழ்க்கை சரித்திரம் சொல்லப்பட்டு நேர்ச்சை வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.

     உள்ளுர், வெளியூர் பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.