Shaikh Maroof al-Karkhi [d.200H/815CE]
Hadrath Sheikh Maroof Karkhi radi Allahu anhu is the ninth Imam and Sheikh of the Silsila Aaliyah Qaderiya. He attained all his knowledge under the watchful eye of Imam Ali Raza radi Allahu anhu. He became mureed of Hadrath Habeeb Raa'ee, and was blessed with Khilafath from Hadrath Habeeb Ra'ee, Hadrath Ali Raza and Hadrath Awliyah Ta'ee Allah be pleased with them all.
He passed away on a Friday or Saturday, on the 2nd of Muharram, 200 Hijri. After his demise, Hadrat Muhammad bin Abul Hussain radi Allahu anhu says, that he saw Hadrat Maroof Karkhi radi Allahu anhu in his dream and he asked him how Almighty Allah had treated him. He said;
Almighty Allah pardoned me, not because of my piety but because of what I heard from hazrath Samaak radiallahu anhu in Kufa, when he said, 'He who leaves all ties and turns towards Allah, then Allah Almighty Allah sends his Mercy towards him and he turns all his servants in his dierction.' I followed this advice of his and turned completely towards Allah nad with the exception of the khidmat of Hazrat Ali(Raza) radiallahu anhu I left everything else.
மஃரூபுல் கர்கீ ரலியல்லாஹு அன்ஹு.
இவர்களின் முழுப் பெயர் அபூ மஹ்பூஸ் மஃரூப் இப்னு ஃபிரோஸுல் கர்கீ என்பதாகும். இவர்கள் சிறுவயதில் கிறித்துவ மதத்தைச் சார்ந்தவராகயிருந்ததால் இராக்கில் கிறித்துவ பள்ளி ஒன்றில் பயின்று வந்தார். அங்கு பாதிரியார் மாணவர்களுக்கு திரியேகத்துவ கொள்கையைப் போதித்து கொண்டிருந்தார். அதன்பின் இவர்களை நோக்கி தான் கூறியதைக் கூறச் சொன்னார். ஆனால் இவரோ அதைக் கூற மறுத்ததுடன், 'இறைவன் ஒருவன்தான். அவன் மூவரில் ஒருவனல்ல.' என்று கூறியதும், பாதிரியார் சினம் கொண்டு அம்மாணவரை அடி அடி என்று அடிக்கிறார்.எனினும் அச் சிறுவர் அசையவில்லை. பாதிரியார் அவரை இனியும் இப்பக்கம் திரும்பி பார்க்காதே என்று விரட்டிவிடுகிறார். அம்மாணவருடைய கால்கள் இமாம் அலீ இப்னு மூஸா அல் ரஸாவின் இல்லம் நோக்கிச் சென்றன. இமாம் அவர்களின் முகத்தைக் கண்டதும் அம் மாணவருக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. இமாம் அவர்கள் காரணம் கேட்டதும், நடந்த விஷயங்களையெல்லாம் அவர்களிடம் எடுத்துரைத்து, ' இனி இல்லம் திரும்பவில்லையென்றும்,என்னை ஆதரித்து இஸ்லாத்தில் இணைத்துக் கொள்ள வேண்டுமென்றும் வேண்டுகிறார். அடுத்தகணம் இமாம் அவர்களின் வாயிலிருந்து திருக் கலிமா வெளிவருகிறது. அந்த மாணவர் அதனைத் திரும்பக் கூறுகிறார். அதன்பின் அவர்கள் வாழ்வில் பெறும் மாற்றம் ஏற்பட்டு மாபெரும் இறைநேச் செல்வராக மாறுகிறார்.
பள்ளி சென்ற மாணவர் வீடு திரும்பாததைக் கண்ட பெற்றோர்கள், சக மாணரிடம் விபரம் கேட்கிறார்கள். அவன் அங்கு நடந்த விபரங்களையெல்லாம் சொல்கிறான். உடனே பெற்றோர்கள் இறைவனே! எனது மகனை திரும்பி வரச் செய்! நாங்கள் அவன் விரும்பும் மார்க்கத்தை தழுவுவதற்கு தடையாக இருக்கமாட்டோம் என்று இறைஞ்சுகிறார்கள்.
சில நாட்கள் கழித்து, தமது இல்லம் சென்ற அவர்களை அவர்களது பெற்றோர் கட்டித் தழுவி வரவேற்றதுடன் அவர்களும் இஸ்லாத்தை தழுவினர்.
இமாம் அலீ இப்னு மூஸா அல் ரஸாவின் மத்ரஸாவில் அமர்ந்து மார்க்க கல்விகளைக் கற்றுத் தேர்ந்தனர். ஒருநாள் கூஃபாவின் தெருவழியே நடந்து சென்றுக் கொண்டிருக்கும்போது, மாபெரும் பேச்சாளரான இப்னு ஸம்மாக் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அதில், 'எவன் அல்லாஹ்வை விட்டும் தன் முகத்தை திருப்பிக் கொள்கிறானோ வெனை விட்டும் அல்லாஹ் தன் முகத்தை திருப்பிக் கொள்கிறான். எவன் அல்லாஹ்வை நெருங்குகிறானோ, அவனை அல்லாஹ்வும் நெருங்கிஅ வன் மீது அருள்மாரி பொழிகிறான்' என்று அவர் பேசிய பேச்சு அவர்களின் செவி புகுந்து அவர்களின் உள்ளத்திலும் ஊடுருவிப் பாய்ந்தது. அக் கணமே அவர்கள் தம்மை முற்றிலும் இறைவழியில் ஈடுபடுத்தி இறைவனின் பேரளுக்கும், பேரன்புக்கும் உரியவராக்கிக் கொள்ள உறுதி பூண்டார்கள்.
இதன்பின் அவர்கள் தாவூத் தாயீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அணுகி, அவர்களின் அடியமர்ந்து அவர்கள் இட்ட பணிகளை செவ்வனே செயலாற்றி வந்தார்கள். தாவூத் தாயீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் தம் மாணவருக்கு ஆன்மீக பயிற்சி அளித்து வந்தனர். அவர்களின் புகழ் நாளாக ஆக நாடெங்கும் பரவியது.
ஒரு தடவை தம்மைப் பற்றிக் கூறும் போது, 'நான் முப்பது ஆண்டுகளாக அல்லாஹ்வின் சன்னிதானத்த விட்டு ஒருகணமும் அகலாது அவனுடன் உரையாடியவண்ணம் உள்ளேன். ஆனால் மக்களோ நான் அவர்களுடன் உரையாடுவதாக எண்ணிக் கொண்டுள்ளனா'; என்றனர்.
ஒருநாள் பெருநாளன்று அவர்கள் பக்தாது மாநகரின் தெருவொன்றில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, ஒரு சிறுவன் அழுது கொண்டிருப்பதைக் கண்டு, அவனிடம் அழுகைக்கு காரணம் கேட்டார்கள். அதற்கு அச் சிறுவன் எல்லோரும் புத்தாடை அணிந்து கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் அக்ரோட் பருப்பு வாங்கித் திண்ணுகின்றனர். என்னிடமோ இந்த கிழிசல் சட்டயைத் தவிர வேறொன்றும் இல்லை. கையில் காசும் இல்லை. என்ன செய்வேன்? என்று அழுது கொண்டே கூறினான்.
அதுகண்டு இரங்கிய அவர்கள் கையிலும் காசு இல்லை.எனவே தெருவில் கிடக்கும் பேரீத்தம் கொட்டைகளை பொறுக்கி எடுத்து விற்றாவது அவனுக்கு அக்ரோட் பருப்பு வாங்கித் தர முடிவு செய்து, அவர்கள் அதை பொறுக்கிக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ணுற்ற இவர்களி;ன் மாணவர் ஸர்ரீ அஸ்ஸகதீ அவர்கள் இதற்கான காரணத்தக் கேட்டபோது, அவர்கள் காரணத்தை சொன்னதும் இதற்குத்தானா நீங்கள் தங்களையே வருத்தி துன்புறுத்திக் கொண்டுள்ளீர்கள்? கவலையை விடங்கள். அவனுக்கு புத்தாடையையும், அக்ரோட் பருப்பையும் நான் வாங்கித் தருகிNறுன் என்றார்கள். அது கேட்ட மஃரூபுல் கர்கீ அவர்களின் முகம் மலர்ந்தது. 'நீ அந்த குழந்தையை மகிழ்விப்பின் பேரருளானாகிய அல்லாஹ் உம் உள்ளத்தை இறை நம்பிக்கையால் நிரப்பமாக்கி வைப்பானாகா! என்று இறைஞ்சினர். அதன்பின் அச் சிறுவனை வீட்டுக்கு அழைத்துச் சென்று அவனுக்கு புத்தாடை அணிவித்து, உணவளித்து, அக்ரோட் பருப்பும்ட வாங்கி வழங்கினர் ஸர்ரீ அஸ்ஸகதீ அவர்கள். அக்கணத்திலிருந்து அவர்களின் உள்ளத்தில் ஆன்மீகப் பேரொளி இலங்கலாயிற்று.
அவர்கள் தங்களையே தாங்கள் சவுக்கால் அடித்துக் கொண்டு 'நப்ஸே! நீ தூய்மையுடன் செயலாற்றுவாயாக! அவ்விதம் செய்தால்தான் நீ ஈடேற்றம் பெறுவாய் 'என்று கூறுவார்கள்.
ஒருநாள் ஒரு மனிதன் வந்து தனக்கு அறிவுரை கூறுமாறு வேண்ட, 'இறையருள் மீது நம்பிக்கை வை.இறைவன் உன் வசமாகி விடுவான்.அவன் பக்கம் திரும்பு.உன் தேவையை அவனிடம் கேள்.ஏனெனில் எவரும் உனக்கு நன்மையோ,தீமையோ செய்துவிட முடியாது. உனக்கு ஏற்படும் துன்பம்,துயரங்களை அவனிடம் எடுத்துரைத்து விட்டு அதை பிறர் கண்களிலிருந்து மறைப்பதில்தான் உள்ளது' என்று கூறினர்.
ஒரு நாள் அவர்கள் இமாம் அலீ இப்னு மூஸா அல்ரஸாவின் இல்லத்தில் இருக்கும் போது, வீட்டை முற்றுகையிட்டு கலகம் செய்த ஷியாக்கள் இவர்களைப் பிடித்து நையப் புடைத்துவிட்டார்கள். அதன் காரணமாக நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையிலிருந்து அதன்காரணமாக ஹிஜ்ரி 200 ல் இறப்பெய்தினர்.
அவர்களின் மறைவிற்குப்பின், அவர்கள் தங்களைச் சார்ந்தவர் என்று யூதர்களும், கிறித்துவர்களும், முஸ்லிம்களும் தங்கள் தங்கள் இடத்தில் அடக்கNவுண்டும் என்று சர்ச்சை செய்தனர். அச் சமயம் ஆங்கு வந்த இவர்களின் பணியாள், தம் பிரேதப் பெட்டியை எவர்களால் தூக்க இயலுகிறதோ அவர்கள் இடத்திலேயே என்னை அடக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளார்கள் என்றார். அதன்படி யூதர்களும், கிறித்துவர்களும் அவர்கள் பெட்டியை தூக்க முயன்றும் முடியவில்லை. முஸ்லிம்கள் தூக்கியபோது இலகுவாக தூக்கினர். எனவே முஸ்லிம்கள் அவர்களுக்கு ஜனாஸா தொழவைத்து அவர்கள் மறைந்த இடத்திலேயே நல்லடக்கம் செய்தார்கள். அவர்களின் அடக்கவிடம் பக்தாதில் திஜ்லா நதியின் மேற்கு கரையில் உள்ளது.
அவர்கள் தம் மாணவர் ஸர்ரீ அஸ்ஸகதீ அவர்களிடம், 'உமக்கு இறைஉதவி தேவைப்படின், என் பொருட்டு தருமாறு இறைவனிடம் பேளும். இறைவன் தந்தருள்வான்.' என்று சுறியதற்கேற்ப எவரும் அவர் பொருட்டு கேட்கும் இறைஞ்சல்கள் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றன.