காதலிப்பது ஆகுமா?

காதலிப்பது ஆகுமா?

By Sufi Manzil 0 Comment June 11, 2012

Print Friendly, PDF & Email

கேள்வி: காதலிப்பது ஆகுமா?

பதில்:மேற்கத்திய கலாசாரம் ஈன்றெடுத்த குழந்தைகள்தான் இன்றைய காதலும் காதலர் தினங்களும் சீரழிந்த இந்த மேற்கத்திய கலாசாரத்தின் வெளிப்பாடுகள்தான் இவைகள்.  இன்றைய இளவல்களை கவர்ந்திழுக்கின்ற ஒரு காரணியாக நவீன காதல் அமைந்திருக்கின்றது.

தமது திருமண வாழ்வைத் தீர்மானிப்பதில் தம்மை தாலாட்டி சீராட்டி வளர்த்த தமது தாய் தந்தையரின் தலையீடுகள் சிறிதும் இன்றி முழுவதுமாக தமது சுயவிருப்பின் அடிப்படையிலேயே தமது திருமண வாழ்வை அமைத்துக் கொள்ள விரும்புகின்றது இன்றைய சமுதாயம்.

தற்போதைய சூழற்காரணிகளும் அதற்கு ஏதுவாக அமைந்திருக்கின்றது. அந்நிய ஆண்களும் பெண்களும் தனிமையில் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களும் கலந்து பழகுவதற்கான வாய்ப்புக்களும் தாராளமாகவே காணப்படுகின்றன.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தனியார் கல்விநிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் பூங்காக்கள் போன்றவற்றில் அந்நிய ஆண்களும், பெண்களும் எந்தவிதமான தடங்கல்களுமின்றி கலந்து பழகுகின்றனர். ,து பற்றி நமது ,ஸ்லாமிய மார்;க்கச் சட்ட கிதாபுகளில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதை நாம் பார்ப்போமானால் காதலிப்பது மார்க்கத்தில் ஆகாத செயல் என்று நன்றாக விளங்க வரும்.

அந்நிய ஆணும் பெண்ணும் பற்றி மார்க்க சட்டங்கள்:

'நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளத் தூதனுப்பினேன். இதனைக் கேள்வியுற்ற நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நீங்கள் பெண்ணைப் பார்த்தீர்களா? என வினவினார்கள். இல்லை என்றேன். அவ்வாறாயின் அப்பெண்ணை பார்த்துக் கொள்ளுங்கள். இம்முறையைக் கையாள்வதால் உங்களுக்கிடையில் நட்பும் நல்லிணக்கமும் ஏற்பட வழிபிறக்கும் எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர்: முகீரா பின் ஹுஃபா(ரழியல்லாஹு அன்ஹு) நூல்: திர்மிதீ நஸயீ

இது போன்ற பல்வேறு நபிமொழிகள் மூலம் நமக்கு மார்க்க சட்ட வல்லுனர்கள் சட்டங்களை வகுத்துத் தந்திருக்கிறார்கள். மார்க்க சட்ட நூல்கள் கூறுவதைப் பாருங்கள்:

திருமணம் செய்ய நல்லெண்ணங்கொண்டு முடிவு செய்தபிறகு மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது சுன்னத்தாகும். அதாவது தொழுகையில் மறைக்கப்பட வேண்டிய உறுப்புகளைத் தவிர மற்றதைப் பார்த்துக் கொள்வது சுன்னத்தாகும். எனினும் பெண்ணுக்கு மஹ்ரமான ஒருவரை உடன் வைத்துக் கொள்ள வேண்டும். அவன் பார்ப்பது சாத்தியமில்லையானால் அவனுக்குச் சொந்தமான ஒரு பெண்ணை நியமித்துப் பார்த்து வர செய்வது சுன்னத்தாகும். அதேபோல்
'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.' (அஹ்மத்)

'உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.' (புகாரி, முஸ்லிம்)

குறிப்பாக ஒரு பெண் தனது கணவரின் சகோதரர்கள் முதலான நெருங்கிய உறவினர்களுடன் தனித்திருப்பது, சுதந்திரமாகப் பழகுவது கூடாது. இதனை நபியவர்கள் மரணத்திற்குச் சமமானது என வர்ணித்துள்ளார்கள். (பார்க்க ஸஹீஹுல் புகாரி)

ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)

'அலியே! ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரியதல்ல.' (அஹ்மத், அபூதாவூத்)

கெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ் கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்:

'இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும்.' (புகாரி)

இது போன்ற குர்ஆன் ஆயத்துக்களிலிருந்தும், ஹதீது தொகுப்பபுக்களிலிருந்தும் புகஹாக்கள் நமக்கு வகுத்துத் தந்திருக்கும் சட்டங்கள்:

பருவமடைந்த ஆண் பெண்ணைத் தொடுவதும், பார்ப்பதும், இச்சை கொண்டு அவளுடைய சத்தத்தைக் கேட்பதும் ஹராமாகும். ஒரு பெண் அந்நிய ஆணையும் விபச்சாரியையும் பார்ப்பது ஹராம். அவர்களுடன் தனித்திருப்பதும் ஹராம்.

இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் ஒரே விரிப்பில், ஒரே போர்வையில் படுப்பது ஹராம்.

தாடி, மீசை முளைக்காத அழகிய வாலிபனை இச்சை கொண்டு பார்ப்பதும் தொடுவதும் ஹராமாகும்.

மஹ்ரமானவன் பாவம் செய்பவனாக இருந்தாலும், மஹ்ரமான பெண்ணுடைய முழங்காலுக்கும் தொப்புளுக்கும் இடையிலுள்ளதை தவிர மற்ற உறுப்புகளைப் பார்க்கலாம். எனினும், முதுகு போன்றவற்றைத் தேவையான காரியத்துக்கல்லாமல் தொடுவது கூடாது.

அந்நிய ஆண் அந்நியப் பெண்ணைப் பார்ப்பது கொடிய ஹராமாகும். மஹ்ரமானவன் பிரபலமாகப் பாவம் செய்கிறவனாக இருந்தால் அவனைப் பார்க்காமல் திரைப் போட்டுக் கொள்வது சுன்னத்தாகும்.
இந்த அடிப்படையில்தான் திருமணத்திற்கு முன்பு அந்நிய பெண்களிடம் தொலைபேசி, அலைபேசி, இணையதளம் மூலம் பேசுவதும், செய்திகள் அனுப்புவதும், கடிதம் எழுதுவதும் ஹராமாகும்.

இந்த மார்க்க நடைமுறைக்கு உகந்ததாக காதல் என்பது இருக்கவில்லை என்னும் போது காதலிப்பது என்பது மார்க்கச் சட்டங்களின் படி நடக்க மறுப்பது ஆகும். எனவே இஸ்லாமிய மார்க்கத்தில் காதல் செய்வதற்கு அனுமதி இல்லை.

காதலித்துதான்  ஆக வேண்டும் என்பதில்லை. அதற்கு மாற்றாக இஸ்லாம் கூறும் வகையில் அழகிய முறையில் திருமணம் முடித்துக் கொள்வதே சாலச் சிறந்தது.

திருமணத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு:

'பெண்ணின் சம்மதமின்றி செய்யப்பட்ட திருமணத்தை நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இரத்து செய்துவிட்டார்கள் 'ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி 5136ஃ 6968ஃ 6970

அதே வேளை பெண்ணைப் பொறுத்த வரையில் விரும்பிய ஆண்மகனை தானாக திருமணம் செய்ய முடியாது. மாறாக பொறுப்பாளரே விரும்பிய ஆண்மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என இஸ்லாம் பணிக்கின்றது.

இவ்வாறு செய்கின்ற போது பெண்கள் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றார்கள். இதனால் பெண்ணுடைய வாழ்வுக்கு உரிய உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

முஸ்லிம்களையே திருமணம் செய்து கொள்ளல்:

மேலும் முஸ்லிம்கள்  முஸ்லிமல்லாதோரை திருமணம் செய்வதை இஸ்லாம் தடை செய்கின்றது. முஸ்லிமும் முஸ்லிமல்லாதோரும் விரும்புகின்றபோது முஸ்லிமல்லாதோர் இஸ்லாத்தை ஏற்றதன் பிற்பாடு திருமணம் செய்து கொள்ள முடியும்.

ஏக நாயன் அருள் மறையாம் திருமறையில் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.
'(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை -அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.  இணை வைக்கும் ஒரு பெண்  உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும் அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள். அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;  இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும் ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள் உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும் மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (அல்குர்ஆன் 2:221)

எனவே அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தந்த வகையில் நமது திருமண வாழ்வை அமைத்துக் கொள்வோமாக! ஈருலகிலும் ஏகநாயனின் திருப்தியையும் மன்னிப்பையும் பெறுவோமாக!