பெண்கள் பள்ளிக்கு செல்லலாமா? தவணை முறையில் பொருட்கள் வாங்கலாமா? பேங்க் வட்டி கூடுமா? இறந்தவர்களை ஃபிரீஜரில் வைக்கலாமா?

பெண்கள் பள்ளிக்கு செல்லலாமா? தவணை முறையில் பொருட்கள் வாங்கலாமா? பேங்க் வட்டி கூடுமா? இறந்தவர்களை ஃபிரீஜரில் வைக்கலாமா?

By Sufi Manzil 0 Comment June 12, 2012

Print Friendly, PDF & Email

கேள்விகள்:
அஸ்ஸலாமுஅலைக்கும்.
smk.abdul majeed, s.majeed33@gmail.com

1. நம் ஷரீயத்தின் படிபெண்கள் சம்பாத்தியம் பண்ணலாமா?
கூடுமா? கூடாதா?சரியானபதில் ஷரீயத்தின்படிதாருங்கள். இப்பொழுது நாட்டின் நடப்பு தேவைகளை வைத்து எல்லோர்களும் பெண்களைசம்பாதிக்க அனுப்புவதோ வீட்டில் வைத்துஏதாவது  ஒருதொழில் செய்துசம்பாதிப்பதோ கூடுமா? ஷரீயத்தின் படிபதில் தாருங்கள்.

பதில்: பெண்கள் வீட்டிலிருந்து கொண்டு சம்பாத்தியம் செய்வதில் தவறில்லை. வேலைக்கு என்று செல்லும் போது தற்போது ஆண், பெண்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. எனவே பெண்கள் வெளியில் வேலைக்கு செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.

2. இறந்தவர்களைபிற்படுத்திமையம் எடுப்பதற்காக(FREEZER)  வைக்கலாமா? ஒருஆலிம் கூடாதுஎன்கிறார்.

பதில்: இறந்தவர்களை உடனுக்குடன் அடக்கம் செய்வதுதான் இஸ்லாமிய மார்க்கம் காட்டும் நடைமுறை. மய்யித்தை அடக்கம் செய்வதற்கு சுணக்கம் காட்டக் கூடாது. மய்யித்தை அடக்க சுணங்குவதால் பிரீஜரில் வைத்து பார்வைக்கு வைப்பது தற்போது வழக்கமாகி வருகிறது. இதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

3. பழனி ஊரில் உள்ளபஞ்சாமிர்தம் சாப்பிடலாமா?

பதில்: பழனி ஊரில் உள்ள பஞ்சாமிர்தம் என்பது ஒரு பதார்த்தம். அது பழனியிலும் செய்யப்படலாம். வேறு ஊரிலும் செய்யப்படலாம். அதை சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் சிலைகளுக்கு படைக்கப்பட்ட பஞ்சாமிர்தமோ அல்லது வேறு பொருட்களையோ சாப்பிடுவது கூடாது.

 shahul hameed greentronix4@gmail.com

assalaamu alikum va rahmathullahi va barakatthuhu


1. தவணை முறையில் பொருட்களை வாங்கலாமா?
2.பேங்க் வட்டி கூடுமா?
3. அரசு கடன், தனியார் வங்கி கடன் வாங்கலாமா?

4.முனாபிக்குகளிடம் வியாபாரம் செய்யலாமா?
5.உருவங்கள் (கடவுள் படம் இல்லாதது) வியாபாரம்  செய்யலாமா?
                                                 
பதில்: தவணை முறையில் பொருட்கள் வாங்கும்போது தற்போது அங்கு விற்கும் பொருட்களின் விலையை விட அதிகமாக (தவணை முறையில் கடன் வாங்குகிறோம் என்ற காரணத்தினால்) விலை கொடுத்து வாங்குவது அனுமதிக்கப்பட்டதல்ல.

பேங்க் வட்டி என்பது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட வட்டி வகையைச் சார்ந்ததாகும். எனவே பேங்க் வட்டி கூடாது.

அரசு கடன், தனியார் வங்கி கடன் வாங்கும் போது அதற்கு வட்டியில்லாமல் வாங்கலாம். வட்டி போட்டு கடன் வாங்குவது கூடாது.
தவிர்க்க முடியாத காரணங்களால் முனாபிக்குகளிடம் வியாபாரம் செய்யலாம்.

உருவங்களை வியாபாரம் செய்வது என்பது சிலைகளைக் குறிக்கும். உருவப்படம் என்று தாங்கள் குறிப்பிட்டிருப்பது நிழல் படங்கள் என்பதாகும். நிழல் படங்களை வியாபாரம் செய்யலாம். அதில் மாற்று மத சின்னங்கள், கடவுள் படங்கள் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

mohideen hameedhulla hameedhulla@gmail.com

 

பெண்கள் பள்ளிக்கு போகக்கூடாது வீட்டில் தொழுவதுதான் சிறந்தது என்பது சம்பதமான ஹதீத்கள் சற்று சொல்லுங்கள்

 

பதில்: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளியில் தொழுதிருக்கிறார்கள். ஜமாஅத்தின் தவாபு, பள்ளியில் தொழும் தவாபு தங்களுக்கும் கிடைக்க வேண்டும், அமல்கள் அதிகம் செய்ய வேண்டும் என்ற ஆர்வமிகுதியால் பெண்கள் பள்ளிக்கு சென்று தொழுதிருக்கிறார்கள். அதற்கு நாயகம் அவர்களும் அனுமதித்திருக்கிறார்கள். கட்டுக்கோப்பான, கண்காணிப்பான, ஒழுகக்கம் மிகுந்த காலமான அந்தக் காலத்தில் பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுவது ஆகுமாக்கப்பட்டிருந்தது.
 ஆனாலும்;, பிற்காலத்தை அறிந்த ஞானமுடைய நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுவதினால் மிகுந்த குழப்பம் உண்டாகும் என்பதை அறிந்திருந்தார்கள். எனவே அவர்கள் தங்கள் காலத்திலேயே அதை தடுக்க முனைந்துள்ளார்கள். அதற்காகத்தான் பெண்கள் வீட்டில் தொழுவது சிறந்தது என்று அறிவித்தார்கள். ஆர்வமிகுதியால் பள்ளியில் தொழும் பெண்களுக்கு அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்தார்கள்.

பெண்கள் வீட்டில் தொழுவதால் பள்ளியில் தொழும் தவாபு கிடைக்கிறது என்று நமது புகஹாக்கள் சட்டம் வகுத்துள்ளனர்.

இதற்குரிய நபிமொழிகளைப் பாருங்கள்:

'பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடை செய்யாதீர்கள். அவர்களது வீடுகளில் தொழுவது அவர்களுக்குச் சிறந்தது' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்: அபூதாவூத் 480, புகாரி, முஸ்லிம்.

இந் நபிமொழி பெண்கள் பள்ளிக்கு வருவதை தடை செய்யாதீர்கள் என்றுதான் இருக்கிறது. ஆனால் பெண்கள் தொழுவது என்று வரும் போது வீடுகளில் தொழுவதையே சிறந்ததாக- நன்மை மிகுந்ததாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். அதேபோல் ஜும்ஆ தொழுகை கூட பெண்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது என்பது கீழ்காணும் ஹதீது விளக்குகிறது.

'அடிமைகள், பெண்கள், சிறுவர், நோயாளிகள் தவிர மற்ற முஸ்லிம்கள் அனைவர் மீதும் ஜும்ஆ கட்டாயக் கடமையாகும்' என்பது நபிமொழி

(அறிவிப்பவர்: தாரிக் இப்னு ஷிஹாப் (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: அபூதாவூத்)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (ஒருநாள்) இஷாவைத் தாமதப்படுத்தினார்கள். பெண்களும் ,சிறுவர்களும் உறங்கிவிட்டனர் என உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். 'இப்பூமியில் வசிப்பவர்கள் உங்களைத் தவிர வேறெவரும் இத்தொழுகையை எதிர்  பார்த்திருக்கவில்லை' என்றார்கள். அந்த நாட்களில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப்படவில்லை. இஷாவை அடிவானத்தின் செம்மை மறைந்ததிலிருந்து இரவின் மூன்றில் ஒரு பகுதி கழிவது வரை மக்கள் தொழுது வந்தனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்: புகாரி 864, 866, 569, 862

இந்த ஹதீது பெண்கள் பள்ளிக்கு வருவதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பவில்லை என்பதையும், அதற்காகவே தொழுகையைக் கூட காலம் தாழ்த்தி தொழுதனர் என்பதும் தெரியவருகிறது.

பெண்கள் பள்ளிக்கு வருவதைப் பற்றி அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மிகுந்த கவலையுடன் அறிவிக்கும் அறிவிப்பு ஸஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது:

عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَقُولُ لَوْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى مَا أَحْدَثَ النِّسَاءُ لَمَنَعَهُنَّ الْمَسْجِدَ كَمَا مُنِعَتْ نِسَاءُ بَنِي إِسْرَائِيلَ قَالَ فَقُلْتُ لِعَمْرَةَ أَنِسَاءُ بَنِي إِسْرَائِيلَ مُنِعْنَ الْمَسْجِدَ قَالَتْ نَعَمْ  (صحيح مسلم )

பெண்கள் உருவாக்கிக் கொண்ட(புதிய)வைகளை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவதானித்திருந்தால் பனூ இஸ்ரவேலரின் பெண்கள் தடுக்கப்பட்டது போல நமது பெண்களையும் பள்ளிக்கு வராது நிச்சயம் தடுத்திருப்பார்கள்; என அன்னை ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இதுதான் தற்போதைய பெண்களின் நிலை. இதையே நமது சட்ட மேதைகள் சட்டமாக்கி பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுவதை தடை செய்திருக்கிறார்கள். எனவே பெண்கள் பள்ளிக்கு சென்று தொழுவது கூடாது.