Kuthba Periya Palli – குத்பா பெரிய பள்ளி

Kuthba Periya Palli – குத்பா பெரிய பள்ளி

By Sufi Manzil 0 Comment July 31, 2010

 

    

           
        காயலில் முதன்முதலாக கட்டப்பட்ட பள்ளி பெரிய பள்ளியாகும். இதை கெய்ரோவிலிருந்து வந்த முஹம்மது கல்ஜி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மற்றும் பெரிய நாதாக்கள் ஹிஜ்ரி 228 (கி.பி.843) ல் கட்டினார்கள். முஹம்மது கல்ஜி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெரிய பள்ளியில் அடங்கியுள்ளார்கள்.
    கி.பி. 1300 ல் சுல்தான் ஜமாலுத்தீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இப் பள்ளியை புதுப்பித்து கட்டினார்கள். இப்பள்ளி மையவாடியில் ஆயிரக்கணக்கான இறை நேசர்கள் அடங்கியுள்ளார்கள்.

1. ஜமாஅத்துல் ஆகிர் மாதம் நாகூர் நாயகம் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் பேரில் சுபுஹான மௌலிது ஷரிஃபு ஓதுதல்.

2. ரபீயுல் அவ்வல் பிறை 1 முதல் 12 வரை ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் அவர்கள் பேரில் சுபுஹான மௌலிது ஷரிஃபு ஓதுதல்.

3. ரபீயுல் ஆகிர் பிறை 1 முதல் 11 வரை கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் பேரில் மௌலிது ஷரிஃப் ஓதுதல்.

4. முஹர்ரம் மாதம் இமாம் ஹஸன், இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்கள் பெயரில் மௌலிது ஷரிஃப் ஓதுதல்.

5. ரஜப் மாதம் ஹழரத் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் மௌலிது ஷரீஃப் ஓதுதல்.

6. ஷஃபான் பிறை 15 அன்று 3 யாஸீன் ஓதி தமாம் செய்து துஆ ஓதுதல்.

7. ரமலான் மாதம் பிறை 1 முதல் 30 வரை இரவு முழுக் குர்ஆன்ஓதி தராவீஹ் தொழ வைத்து பிறை 29 அன்று தமாம் செய்தல். பிறை 29 அன்று தமாம் செய்து, நோன்பு வைக்க பிறை 29 அன்று முஹல்லா வாசிகளுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்தல். ரமலான் மாதம் முழுவதும் நோன்பாளிகள் நோன்பு திறக்க கஞ்சி ஏற்பாடு செய்தல். பிறை 29 அன்று தஸ்பீஹ் தொழுகை  .ரமலான் பிறை 1 முதல் 30 வரை மாலை பொதுமக்களுக்கு நோன்பு கஞ்சி குடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிறை1 முதல் 30 வரை வித்ரிய்யா ஷரீபு ஓதுதல்.

8. நோன்புப் பெருநாள், ஹஜ்பெருநாள் தொழுகை தொழவைத்து குத்பா பேருரை நிகழ்த்தப்பெறும்.  நோன்புப் பெருநாள், ஹஜ்பெருநாள் -காதிரிய்யா திக்ரு செய்தல்.
    பொது மையவாடி உள்ளது.