Khaja Bakeebillah-காஜா பாக்கிபில்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு
By Sufi Manzil
Short Histroy-Hazrath Muhammed Baqi Billah
23 rd sheikh of NAQSHABANDI OOLA and NASHABANDI MUJJADIDI THAREEKS.
Name is Muhammed Abd-ul-Baqi , Laqab Baqi-billah Father's name is Qazi Abd-us-Salam Khilji Samarqandi Qureshi , who was a saint in his times. He was born in Kabul on 971 Hijri.
He Bait on the hands of Hazrath Amkangi and gained Ijazah-o-Khilafat from him. He was the first to introduce Silsilae Naqshbandia in the country of India.
He was perfect in Fiqah and Tasawwuf and spread his Faiz to the whole country in just 2 years. Hazrath Abd-ul-Haqq Muhadith Dehalwi was Mureed of him.
He stay some times in Lahore then go to Dehli , and stay there till last.
He passed the secrets of his Nisbatt to Hazrath Sheikh Ahmad Sarhindi.
He passed to Rafiq-e-Aala in Dehli on 25 Jamadi-ul-Ukhra 1012 Hijri. His grave mubarak is in Dehli.
நக்ஷபந்தி ஊலா மற்றும் கந்ஷபந்தி முஜத்திதி ஆகிய தரீகாக்களில் 23 வது குருமகானாக இவர்கள் வருகிறார்கள் .
மௌலானா முஹம்மது ஸாதிக் ஹல்வாயீ என்பவர் நடத்திவந்த மார்க்கக் கல்வி போதித்து வந்த பள்ளியில் மார்க்க கல்வி பயின்றனர். இதன்பின் ஆன்மீக ஞானிகளை தேடி அலைந்த அவர்கள் முதலில் ஷெய்கு காஜா உபைதிடம் தீட்சை பெற்றனர். பின்னர், ஷெய்கு காஜா உபைது அவர்களிடம் பைஅத்து பெற்றனர்.
ஆனாலும் அவர்களின் மனம் அமைதியுறவில்லை. சிறந்த ஆன்மீக ஆசானைத் தேடி நாடு, நகரங்கும் சுற்றித் திரிந்தனர். ஒருநாள் அவர்கள் ஆன்மீக நூல் ஒன்றை படித்துக் கொண்டிருக்கும்போது திடீரென ஒரு ஒளி தோன்றிஇ காஜா பஹாவுத்தீன் நக்ஷபந்த் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்கள் முன் திருத் தோற்றம் வழங்கி ஆன்மீக அறிவுரை வழங்கினர். அதன்பின் அவர்கள் வாழ்வில் பெரும் மாற்றம் ஏறபட்டது.
பின்பு காஷ்மீர் வந்து ஷெய்கு பாபா குப்ரவீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சந்தித்து அறிவுரை பெற்றனர். இப்பொழுதே அவர்கள் பனா நிலையை முதன்முதலில் எய்தப் பெற்றனர். இவர்களின் மறைவிற்குப் பின் சிறந்த ஆன்மீக வழிகாட்டியை தேடி அலைந்த அவர்களுக்கு காஜா உபைதுலலாஹ் அஃரார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் திருக்காட்சி வழங்கி நக்ஷபந்தியா தரீகாவின் ரகசியங்களை போதித்து மறைந்தனர்.
சில நாட்கள் கழித்தபின் ஷெய்கு அம்கன்கீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் திருக் கண்முன் தோன்றி அவர்களை அழைத்தனர். அவர்களிடம் சென்ற அவர்கள் அங்கு மூன்று நாட்கள் தங்கி ஆன்மீக பயிற்சி பெற்று அன்னாரிடம் பைஅத்தும், கிலாபத்தும் பெற்றனர்.
அதன்பின் அவர்களை நோக்கி, இந்தியா சென்று நக்ஷபந்தியா தரீகாவை பரப்புமாறு பணித்தனர். இச் சமயத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. திடீரென ஒரு கிளி வந்து, அருகில் நின்ற மரத்தின் கிளையில் அமர்ந்தது. அது தம் கையில் அமர்ந்தால் தாம் இந்தியா புறப்படுவதற்கான நல்ல அறிகுறி என்று எண்ணினர். அடுத்தகணம் கிளி வந்து அவர்கள் கையில் அமர்ந்தது. உடனே அதனை அவர்கள் பிடித்து, அதன் அழகை தம் வாயில் வைத்து தம் உமிழ்நீரை அதில் உமிழ்ந்தனர். அது பேசியது. கிளி ஒரு இந்தியப் பறவையாதலால், இந்தியாவில் ஆன்மீகத்தில் ஈடுபாடுடைய ஒருவருடன் தமக்கு தொடர்பு ஏற்படப்போகிறது என்பதை இது முன்னறிவிப்பு செய்வதாக தமக்குத் தாமே கூறிக் கொண்டார்கள்.
இதனை தம் ஆசானிடம் கூறியபோது, உமக்காக ஒருவர் அங்கு காத்திருக்கிறார். உம்மால் அவாரும், அவரால் நீரும் பயனடையப் போகிறீர்கள் என்று கூறி இந்தியா அனுப்பி வைத்தனர்.
வரும்வழியில் லாகூரில் தங்கி ஆன்மீக ஞானிகளைக் கண்டு அளவளாவினர். பின்னர் டில்லி புறப்பட்டு அங்கு பிரோஸ்ஷா கோட்டையிலுள்ள பள்ளியில் தங்கினர். அவர்கள் தங்கள் தாழ்மையுணர்வுடன் தம் ஆன்மீக உயர்வை வெளிக் காட்டாதபோதும், அவர்கள் அறியாமல் அது வெளியே தெரிந்துவிட்டது. மக்கள் சாரிசாரியாக அவர்களை தரிசிக்கவும், பைஅத் பெறவும் நாடி வந்தனர்.
ஒருநாள் அவர்களின் இருப்பிடத்திற்கு விருந்தினர் பதின்மர் வந்துவிட்டனர். அவர்களின் இருப்பிடத்தில் யாதொரு உணவுமில்லை. என்ன செய்வது என்று கவலையோடு அமர்ந்திருக்கும்போது, பக்கத்து ரொட்டிக் கடைக்காரர் ரொட்டியுடன் கோழிக்கறியை ஒரு தட்டு நிறைய கொண்டு வந்து வைத்தார். அதைக் கண்டு மகிழ்த அவர்கள் விருந்தினர்களை உபசரித்து அனுப்பினர். விருந்தினர்கள் சென்றதும், ரொட்டிக்கடைக்காரரை அழைத்து அவர்களுக்கு நன்றி கூறி உமக்கு என்ன வேண்டுமானாலும் கேளும். தருகிறேன் என்றார்கள். அதற்கு அவர் என்னைத் தங்களைப் போல் ஆக்கிவிடுங்கள் என்று கூறினார். திடுக்குற்ற அவர்கள், இதுதவிர வேறெது வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன் என்றார்கள். ஆனால் அவர் பிடிவாதமாக தாம் கேட்டதையே தருமாறு கேட்டார். வாக்குறுதியை றிறைவேற்ற, அவரை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று தம் ஆன்மீக ஆற்றலை அவரின் உடலில் புகச் செய்தனர். அடுத்தகணம் அவர் அவர்களே போன்றாகிவிட்டார். எனினும் உணர்வற்று ஒருவித மயக்க நிலையிலான அவர்,மூன்று நாட்களுக்குப் பின் இறந்துவிட்டார்.
ஒருநாள் அவர்கள் தவச்சாலையில் தங்கியிருந்தபோது, மௌலானா ஹஸனுடன் ஒருவர் அவர்களை காண வந்தார். அவர்களைக் கண்டதும், அவர்களை வரவேற்று நீண்ட நாள் தாம் எதிர்பார்த்து காத்திருந்தவரைக் கண்டதுபோல் உபசரித்து உரையாடினார்கள். ஒன்றரை மாதம் அவர்களுடன் தங்கியிருந்து அவர்களுக்கு ஆன்மீக பயிற்சியை வழங்கினார்கள். அவர்களுக்கே கிலாபத் வழங்கினர். அவர்கள்தான் முஜத்தித் அல்பதானி ஷெய்கு அஹ்மது சர்ஹிந்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆவார்கள்.
தம் சீடர் முஜத்தித் அல்பதானி அவர்கள் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தனர். மற்ற சீடர்களுக்கு அவர்களை முழுமையாக பின்பற்றி நடக்குமாறு ஏவினர்.
ஹிஜ்ரி 1014, ஜமாதுல் ஆகிர் பிறை 14 (கி.பி.1605 அக்டோபர்17) மாலையில் தமது 40 வது வயதில் இன்னுலகை நீத்தனர்.
அன்னாரின் அடக்கஸ்தலம் டில்லியின் மேற்குப் பகுதியில் 'கதம் ரஸூல்'என்னுமிடத்தில் அமைந்துள்ளது.