ஜும்ஆ பயான் ஆகுமா? பத்வா:
By Sufi Manzil
கேள்வி: ஜும்ஆ தினத்தில் பாங்கிற்கு முன் பள்ளியினுள் நஸீஹத்-உபதேசம் செய்வது பற்றி மார்க்கச் சட்டம் என்ன?
பதில்: ஜும்ஆ நாளில் பாங்கிற்கு முன்னும், பின்னும் உபன்னியாசம் செய்வது பண்டை காலத்திலிருந்தும், முன்னோர், பின்னோர்கள் காலத்திலிருந்தும் வந்திருக்கும் வழக்கத்திற்கு மாற்றமானதாகும். இன்னும் குத்பாவுக்கு முன் செய்யும்படியாக வந்த சுன்னத்தான் காரியங்களை தடுக்கக் கூடியதுமாகும். ஆகையால் அந்நேரத்தில் உபன்னியாசம் செய்வது ஆகாது. அது கெட்ட பித்அத்தாகும். அல்லாஹ் நேர்மையை நன்கு அறிந்தவன்.
செய்யிது முஹம்மது
முஹம்மதலி சைபுத்தீன்
முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா