Jalaluden Suiyutee-இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி ரலியல்லாஹு அன்ஹு.
By Sufi Manzil
இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி ரலியல்லாஹு அன்ஹு.
ஹிஜ்ரி 849, ரஜப் பிறை 1 ல் கெய்ரோவில் பிறந்த இவர்களின் இயற் பெயர் ஜலாலுத்தீன். இவர்களுடைய மூதாதையர் ஈரானிலிருந்து குடியேறி எகிப்தில் சுயூத்தி என்ற ஊரில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்தனர். எனவே இவர்கள் சுயூத்தி என்றழைக்கப்பட்டனர். இவரது தந்தை அப்துர் ரஹ்மான் கெய்ரோவிலுள்ள அல் ஷைகுன்னியா மத்ரஸாவில் பிக்ஹ் போதிக்கும் ஆசிரியராக பணியாற்றி வந்தார்கள். ஹிஜ்ரி 864 ல் தம் படிப்பைத் துவக்கி, எகிப்திலுள்ள பல்வேறு நகரங்களுக்கும் சென்று கல்விகளைக் கற்றுத் தேறினர் இவர்கள். ஹஜ் கடமையை நிறைவேற்றித் திரும்பிய இவர்கள் தம் ஆசிரியர் ஒருவரின் பரிந்துரை பேரில் தம் தந்தை ஆற்றிய கல்வி கூடத்திலேயே பணியாற்றினார்கள். இதன்பின் பல்Nவுறு கல்விக் கூடங்களுக்கும் சென்று பணியாற்றியுள்ளார்கள்.
தம்முடைய 17 வயதில் எழுதத் துவங்கிய இவர்கள் தம் இறுதி மூச்சு வரை எழுதிக் கொண்டிருந்தனர். இவர்கள் மொத்தம் 400 நூல்கள் எழுதியுள்ளனர் என்றும், 561 நூல்கள் எழுதயுள்ளனர் என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. இஸ்லாமிய கலையின் எல்லாப் பிரிவுகளைப் பற்றியும் எழுதிவிட வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தனர்.
திருக்குர்ஆனை விளக்கும் நபிமொழிகளையெல்லாம் ஒன்று திரட்டி 'தர்ஜுமானுல் குர்ஆன் ஃபில் தஃப்ஸீருல் மஸ்னத்' என்ற நூல் எழுதியுள்ளனர். தம் ஆசான் ஜலாலுத்தீன் அல் மஹல்லி கி.பி. 854 ல் மறைந்ததன் காரணமாக, அவர் எழுதி அரைகுறையாக விடப்பட்ட அவருடைய தஃப்ஸீரை நிறைவு செய்தனர். அதுவே தஃப்ஸீர் ஜலாலைன் என்றழைக்கப்படுகிறது.
'அல் முளிர் ஃபில் உலூமுல் லுஹா' என்ற பெயருடன் ஒரு மொழி நூலும், 'அல் நுகாயா' என்ற பெயரில் கலைக்களஞ்கியமும், திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் பற்றி 'தபகாத்துல் முஃபஸ்ஸிரீன்' என்ற நூலும், 'லுப்புல் லுபாப்' என்ற பெயரில் அகராதியும், கலீபாக்கள் வரலாறு பற்றியும் நூல்கள் எழுதியுள்ளார்கள்.
இவர்களுடைய காலத்தில் எகிப்தில் நிலநடுக்கம் ஏற்பட, 'மக்களுடைய பாவத்தின் காரணமாக இறைவNனு நிலநடுக்கத்தை ஏற்படுத்துகிறான் என்பதை மக்களுக்கு விளக்குவதற்காக ஹிஜ்ரி 94 ம் ஆண்டிலிருந்து தம் காலம் வரை ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி 'கஷ்புல் ஸல்ஸலா உன் வஸ்ஃபுஸ் ஸல்ஸலா' என்ற பெயருடன் ஒரு நூலும் எழுதியுள்ளார்.
ஹிஜ்ரி 911, ஜமாத்துல் அவ்வல் பிறை 18 (கி.பி.1505) ல் மறைந்தார்கள்.