Isthikara Dua-இஸ்திகாராத் தொழுகை துஆ

Isthikara Dua-இஸ்திகாராத் தொழுகை துஆ

By Sufi Manzil 0 Comment April 17, 2010

Print Friendly, PDF & Email

 

இஸ்திகாராத் தொழுகை:

நன்மையை நாடித் தொழுதல் என்று இதற்குப் பெயர். 'திருக்குர்ஆனின் சூராக்களை கற்றுத் தந்தது போன்று ஒவ்வொரு விஷயங்களிலும் இஸ்திகாராவை எங்களுக்கு எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள்' என ஜாபிர் இன்னு அப்தில்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவிக்கிறார்கள். நூல்: புஹாரி.

ஒருவர் ஒரு செயலைச் செய்வதா? அல்லது விடுவதா? அதன் விளைவு நன்மையா? அல்லது தீமையா? எனத் தடுமாறினால் இஸ்திகாராவுடைய நிய்யத் செய்து கொண்டு இரண்டு ரக்அத் தொழுவதும், முதலாவது ரக்அத்தில், பாத்திஹா சூராவிற்குப் பின் 'குல் யாஅய்யுஹல் காபிரூன்' சூராவும், இரண்டாவது ரக்அத்தில் குல்ஹுவல்லாஹு அஹது ஸூராவையும் ஓதுவது சுன்னத்தாகும். அந்த செயலை செய்ய வேண்டும் அல்லது வேண்டாம் என்ற தெளிவான முடிவு அவனுக்கு கிடைக்கும் வரை இவ்வாறு திருப்பித் திருப்பித் தொழுவது சுன்னத்தாகும். இதன்பின்பும் தெளிவு ஏற்படாவிடில் தனக்கு எது இலகுவாகத் தோன்றுகிறதோ அந்தச் செயலை செய்துக் கொள்ள வேண்டும். இன்ஷாஅல்லாஹ் துநன்மையாகவே முடியும். தொழுது முடிந்த பின் 'இஸ்திகாரா'வின் இந்த துஅவை ஓதுவது விரும்பத்தக்கது.

 

دُعَاء

اَللّٰهُمَّ اِنِّيْ اَسْتَخِيْرُكَ بِعِلْمِكَ ، وَاَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ ، وَاَسْاَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيْمِ . فَاِنَّكَ تَقْدِرُ وَلاَ اَقْدِرُ ، وَتَعْلَمُ وَلَا اَعْلَمُ ، وَاَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ ، اَللّٰهُمَّ اِنْ كُنْتَ تَعْلَمُ اَنَّ هٰذَا الْاَمْرَ خَيْرٌ لِّىْ فِيْ دِيْنِىْ وَدُنْيَايَ وَعَاقِبَةِ اَمْرِيْ وَعَاجِلِهِ وَآجِلِهِ فَقَدِّرْهُ لِىْ ، وَبَارِكْ لِىْ فِيْهِ ، ثُمَّ يَسِّرْهُ لِىْ ،وَاِنْ كُنْتَ تَعْلَمُ اَنَّ هٰذَا الْاَمْرَ شَرٌّ لِّىْ فِىْ دِيْنِىْ وَدُنْيَايَ وَعَاقِبَةِ اَمْرِىْ وَعَاجِلِهِ وَآجِلِهِ فَاصْرِفْنِىْ عَنْهُ ، وَاصْرِفْهُ عَنِّىْ ، وَاقْدِرْلِيَ الْخَيْرَ اَيْنَمَا كَانَ اِنَّكَ عَلٰى كُلِّ شَيْئٍ قَدِيْرٌ .

பொருள்:

யா அல்லாஹ்! உன்னுடைய அறிவின் பொருட்டால் நான் உன்னிடம் நன்மையை வேண்டுகிறேன். உனது ஆற்றலின் பொருட்டால் உன்னி;டம் ஆற்றலைத் தேடுகிறேன்.உன்னுடைய மகாத்தான அருளிலிருந்து உன்னிடம் நான் கேட்கிறேன். நிச்சயமாக நீ(எல்லாப் பொருட்களின் மீதும்) ஆற்றல் பெறுவாய். நான் (எதற்கும்) ஆற்றல் பெற மாட்டேன். நீ (அனைத்தையும்) அறிந்துள்ளாய். நான் (எதனையும்) அறிய மாட்டேன். நீ மறைவானவற்றை நன்கு அறிந்தவனாய் இருக்கிறாய். யா அல்லாஹ்! இந்த செயல் எனக்கு என்'னுடைய தீனிலும் என்னுடைய வாழ்விலும் என் செயலின் முடிவிலும் நன்மையாக இருக்குமென நீ அறிந்திருந்தால் அதற்கு எனக்கு நீ ஆற்றலளித்து அதனை எனக்கு எளிதாக்கி வைத்து, பிறகு அதில் எனக்கு நீ பரக்கத்துச் செய்வாயாக! இந்தச் செயல் எனக்கு என்னுடைய தீனிலும் என்னுடைய வாழ்விலும் என் செயலின் முடிவிலும் தீமையாக இருக்குமென நீ அறிந்திருந்தால் அதனை என்னை விட்டும் நீ திருப்பிவிடுவாயாக! என்னையும் அதனை விட்டும் திருப்பி விடுவாயாக! நன்மை எங்கிருந்தாலும் அதனைச் செய்ய எனக்கு ஆற்றலளிப்பாயாக! பிறகு அதனைக் கொண்டு என்னைப் பொருந்திக் கொள்ளச் செய்வாயாக!