தொழுகை சட்டங்கள் (ஷாபிஈ)-Law of Shafi Prayer

தொழுகை சட்டங்கள் (ஷாபிஈ)-Law of Shafi Prayer

By Sufi Manzil 0 Comment March 26, 2011

Print Friendly, PDF & Email

தொழுகை சட்டங்கள் (ஷாபிஈ)

1. தொழுகை நேரங்கள்

2. பாங்கின் அர்த்தம்

3. ஒளு

4.தொழுக மக்ரூஹான நேரங்கள்

5. தயம்மும்

6.  பெருந்தொடக்கு, சிறுந்தொடக்குகள்

7. குளிப்பு

8. தொழுகையை முறிப்பவைகள்

9. தொழுகையின் பர்ளுகளும், ஷர்த்துகளும்

 10. ஜனாஸா தொழுகை

11.      ஸலாத்துல் முஸாஃபரி: கஸ்ரு, ஜம்உ தொழுகை

12. ஜும்ஆ

13. சுன்னத்தான தொழுகைகள்

14.ஸுஜூதுகள்
     

தொழுகையைப் பற்றி அல்குர்ஆன் மற்றும் ஹதீதுகளில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்!

அல்லாஹ் கூறுகிறான்:

நிச்சயமாக தொழுகை முஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக விதிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். அல்குர்ஆன் 23:1,2,9

 தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள் அவனுக்கே அஞ்சி நடங்கள்   அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 6:72

எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம். அல்குர்ஆன் 7:170

'நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. அல்குர்ஆன் 20:14

'உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?' (என்று கேட்பார்கள்.). அவர்கள் (பதில்) கூறுவார்கள்: 'தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை'. அல்குர்ஆன் 74:42,43

(நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக. இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக) நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது. அல்குர்ஆன் 17:78

உங்கள் குழந்தைகள் ஏழு வயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள் பத்து வயதை அடைந்த(தும் தொழமலிருந்தால்) அதற்காக அவர்களை அடியுங்கள். என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: அம்ரு இப்னு ஷூஜபு. நூல்கள்: அஹ்மத்இ அபூதாவூத்.

யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக் கொள்ளவில்லையோ அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோஇ சாட்சியாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. (மாறாக) அவன் மறுமை நாளில் காரூன், பிர்அவ்ன், காமான், உபைபின் கஃப் ஆகியோருடன் இருப்பான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரழியல்லாஹு அன்ஹு) நூல் : அஹ்மத்

சிறந்த அமல்: அமல்களில் சிறந்தது எது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என்றார்கள். அறிவிப்பாளர்: உம்முஃபர்வா (ரழியல்லாஹு அன்ஹு) நூல்கள் : திர்மிதி, ஹாகிம், அபூதாவூத்.

பஜ்ரு, அஸர் தொழுகையின் சிறப்புகள்: (பஜ்ரு தொழுகையை) சூரியன் உதிப்பதற்கு முன்பும் (அஸர் தொழுகையை) சூரியன் மறைவதற்கு முன்பும் தொழுதவர் நிச்சயம் நரகில் நுழையமாட்டார் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

கூட்டுத் தொழுகையின் சிறப்பு: ஒரு மனிதர் தனித்து தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர் ரழியல்லாஹு அல்லாஹு) நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'ஜமாஅத்துடன் தொழுவது தனித்துத்தொழுவதைவிட 27 மடங்கு மேலானதாகும்.' (ஸஹீஹுல் புகாரி)

தொழுகையை விட்டவனின் நிலை: நமக்கும் அவர்களுக்குமிடையே (காஃபிர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார். என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: புரைதா (ரழியல்லாஹு அல்லாஹு) நூல்கள்: திர்மிதி, அபுதாவூத், அஹமத், இப்னுமாஜா

இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன் மீது பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜமாஅத்தும், இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றனர். அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரழியல்லாஹு அல்லாஹு) நூல்கள்:புகாரி, முஅத்தா, அபூதாவூத், திர்மித்,நஸயீ

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கியப் பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் நீர் உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும், உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும் என்று உளறுகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு படுக்கையிலிருந்து உளு செய்தபின், இரண்டாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார். அறிவிப்பாளர் : அபூ{ஹரைரா (ரழியல்லாஹு அல்லாஹு) நூல்கள் : புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸயீ.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூச் செய்கிறார். பின் தொழுகையைத் தவிர வேறெந்த நோக்கமுமின்றி மஸ்ஜிதுக்குச் செல்கிறார். அப்போது அவர் எடுத்து வைக்கும் எவ்வொரு அடிக்கும் அவரது அந்தஸ்து (தரஜா) என்று உயர்த்தப்படுகிறது. ஒரு பாவம் அழிக்கப்படுகிறது. அவர் தொழ ஆரம்பித்தால் மலக்குகள், 'இறைவனே! இவர் மீது அருள் புரிவாயாக! இவருக்கு மன்னிப்பளிப் பாயாக!' என்று துஆச் செய்கிறார்கள். இது அவர் உளூவுடன் இருக்கும் வரையிலாகும். அவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலமெல்லாம் தொழுகையிலேயே இருப்பவராவார். (ஸஹீஹுல் புகாரி)

'எவர் அதிகாலையில் அல்லது மாலையில் மஸ்ஜிதுக்குச் சென்று வருவாரோ அவர் சென்றுஇ திரும்பும் காலமெல்லாம் அல்லாஹ் சுவனத்தில் வீட்டைக் கட்டுகிறான்' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரிஇ ஸஹீஹ் முஸ்லிம்)

இதனால்தான் அல்லாஹ்வின் அருள்பெற்ற நபித்தோழர்கள் ஜமாஅத்துடன் தொழுவதில் பேராசை கொண்டிருந்தார்கள். இதுபற்றி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: 'எவருக்கு கியாமத் நாளில் அல்லாஹ்வை முஸ்லிமாக சந்திப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துமோ அவர் தொழுகைகளை அதற்காக பாங்கு சொல்லப்படும் இடங்களில் பேணிக்கொள்ளட்டும். அல்லாஹ் உங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நேரிய வழிமுறைகளை மார்க்கமாக்கியுள்ளான். தொழுகைகள் அந்த நேரிய வழிமுறையில் உள்ளதாகும்.' பின் தங்கியவன் (முனாபிக்) தனது இல்லத்தில் தொழுவது போன்று நீங்கள் உங்களது வீடுகளில் தொழுதால் உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டீர்கள். உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டால் நீங்கள் வழிதவறி விடுவீர்கள். வெளிப்படையான முனாபிக் (நயவஞ்சகர்)தாம் ஜமாஅத் தொழுகையிலிருந்து பின்தங்கிவிடுவார் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். அதனால் நடக்க சக்தியற்ற மனிதர், இருவர் துணைகொண்டு அழைத்து வரப்பட்டு தொழுகையின் அணிவகுப்பில் நிறுத்தப்படுவார்.' (ஸஹீஹ் முஸ்லிம்)

உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். நான் அறிந்தவரை அவரது வீட்டைத் தவிர வேறெந்த வீடும் பள்ளியிலிருந்து வெகுதூரத்தில் இல்லை. அவர் எந்தத் தொழுகைக்கும் இமாம் ஜமாஅத்தை தவறவிட மாட்டார். அவரிடம்இ 'நீங்கள் ஒரு கழுதையை வாங்கினால் கடுமையான இருள் மற்றும் கடின வெயிலின்போது வாகனிக்க உதவியாக இருக்குமே!' என்று கூறப்பட்டபோது அவர் கூறினார்: 'நான் எனது இல்லம் மஸ்ஜிதுக்கு அருகில் இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுக்கு வந்து எனது குடும்பத்தாரிடம் திரும்பும்போதும் நான் நடக்கும் எவ்வொரு அடியும் நன்மையாகப் பதிவு செய்யப்பட வேண்டுமென விரும்புகிறேன்' என்றார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், '(உமக்கு நீர் விரும்பும்) அது அனைத்தையும் என்று சேர்த்து அல்லாஹ் அருள்புரிவானாக!' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'நிச்சயமாக தொழுகையில் மகத்தான நற்கூலியை அடைபவர் வெகுதூரத்திலிருந்து வருபவர் ஆவார். தூரத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு நன்மை கிடைக்கும். இமாமுடன் சேர்ந்து தொழுவதற்காக தொழுகையை எதிர் பார்த்திருப்பவர் தொழுகையை தொழுதுவிட்டு பின்பு தூங்கியவரை விட மகத்தான நன்மை அடைந்து கொள்வார். (ஸஹீஹுல் புகாரி)

உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: 'இஷா தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுபவர் பாதி இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார். பஜ்ருத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுபவர் முழு இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார்.' (ஸஹீஹ் முஸ்லிம்)

அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நயவஞ்சகர்களுக்கு பஜ்ரு மற்றும் இஷாவைவிட கடினமான தொழுகை எதுவுமில்லை. அவ்விரண்டின் பலன்களை அறிவார்களேயானால் கால்களை பூமியில் இழுத்துக் கொண்டாவது அதை நிறைவேற்ற வருவார்கள்' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

தொழுகையின்  நேரங்கள்

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிப்பிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
(ஆல்குர் ஆன் :4:103).

ஒவ்வொரு தொழுகையையும் அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது அவசியமாகும்.

நாள்தோறும் நிறைவேற்றப்படும் வாஜிபான தொழுகை மொத்தமாக பதினேழு ரகஅத்துகளாகும். 

சுபஹ்    –           இரண்டு ரகஅத்துகள்

ளுஹர்  –           நான்கு ரகஅத்துகள்

அஸர்    –           நான்கு ரகஅத்துகள்

 மஃரிப்     –           மூன்று ரகஅத்துகள்

  இஷா     –           நான்கு ரகஅத்துகள்

லுஹர் (தொழுகை) உடைய நேரம் சூரியன் (உச்சி) சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனுக்கு சமமாக ஆகி அஸருடைய நேரம் வராத வரையிலாகும். இன்னும் அஸர் (தொழுகை) உடைய நேரம் சூரியன் மஞ்சள் நிறத்தையடையாத வரையாகும். இன்னும் மஃரிப் (தொழுகை) உடைய நேரம் செவ்வானம் மறையாத வரையாகும். மேலும் இஷா (தொழுகை) உடைய நேரம் நள்ளிரவு வரையாகும். இன்னும் ஸுப்ஹ் (தொழுகை) உடைய நேரம் கிழக்கு வெளுத்ததிலிருந்து சூரியன் உதயமாகும் வரையிலாகும். என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அம்ர் (ரலியல்லாஹு அன்ஹு ) நூல் : முஸ்லிம் (612)

சுப்ஹுடைய அதானின் நேரம்.

சுப்ஹுடைய அதானுக்கு நெருங்கிய போது கிழக்குப் பகுதியிலிருந்து வெள்ளை தோன்றி மேல்நோக்கி வரும். இதை பஜ்ருல் அவ்வல் எனப்படும். அது அங்குமிங்கும் பரவும் போது பஜ்ருத்தானி எனப்படும். அதுதான் சுப்ஹுடைய ஆரம்ப நேரமாகும்.

ளுஹர்.

கம்பையோ, அல்லது அது போன்றதையோ பூமியில் குத்தி வைத்தால் அதன் நிழல் மிகவும் குறைந்து மறுபக்கத்தில் தோன்ற ஆரம்பிக்கும் போது ளுஹருடைய நேரம் ஆரம்பமாகின்றது.

மஃரிப்.

சூரியன் மறைந்ததன் பின் கிழக்குப் பகுதியில் தெரியும் சிவந்த நிறம் மறைகின்ற போது மஃரிபுடைய நேரம் ஆரம்பமாகும்.

இரவின் அரைவாசி.

சூரியன் மறைவதற்கும் சுப்{ஹடைய அதானுக்குமிடையிலுள்ள நேரத்தை இரண்டால் பிரித்தால் வருபவை இரவின் அரைவாசியாகும். இஷாவுடைய கடைசி நேரமாகும். வேண்டுமென்றோஇ அல்லது தங்கடங்களுக்காகவோ மஃரிபையும் இஷாவையும் தொழாது விட்டால் இஹ்தியாதே வாஜிபின்படி சுப்{ஹடைய அதானுக்கு முன்பு அதாவானஇ அல்லது கழாவான நிய்யத்து இல்லாது தொழ வேண்டும்.

எந்த எந்தத் தொழுகையை எந்த எந்த நபி முதலில் தொழுதார்கள்:
 
1. பஜ்ர் – ஆதம் (அலைஹிஸ்ஸலாம்)
 
2. ளுஹர் – இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்)
 
3. அஸர் – யாகூப் (அலைஹிஸ்ஸலாம்)
 
4. மஃரிப் – தாவூது (அலைஹிஸ்ஸலாம்)

 5. இஷா – யூனூஸ் (அலைஹிஸ்ஸலாம்)
 

பாங்கின் அர்த்தம்

அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன்
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :முஹம்மது(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் : முஹம்மது(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
ஹய்ய அலஸ் ஸலா(த்), ஹய்ய அலஸ் ஸலா(த்) : தொழுகையின் பக்கம் வாருங்கள், தொழுகையின் பக்கம் வாருங்கள்
ஹய்ய அலல் ஃபலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் : வெற்றியின் பக்கம், வாருங்கள்,வெற்றியின் பக்கம் வாருங்கள்
அல்லாஹு அக்பர் : அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் : அல்லாஹ் மிகப்பெரியவன்
லா இலாஹ இல்லல்லாஹ் : அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவனில்லை

அறிவிப்பவர் : அபூமஹ்தூரா(ரழியல்லாஹு அன்ஹு) நூல் : முஸ்லிம் அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு ஜைத் (ரழியல்லாஹு அன்ஹு) நூல் : இப்னுமாஜா,அபூதாவூத்

ஒளு:

தண்ணீரால் உடலின் சில குறிப்பிட்ட உறுப்புக்களை சுத்தம் செய்வதற்கு ஒளு என்று பெயர். தொழுவதற்கு முன் உளு என்னும் அங்கசுத்தி செய்து கொள்ளல் வேண்டும்.

முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும், கணுக்கால் வரை உங்கள் கால்களையும் கழுவுவதோடுஇ நீரில் நனைத்த கைகளினால் உங்கள் தலையையும்(சிறு பகுதியைத்) தடவிக் கொள்ளுங்கள்'.
-அல்-குர்ஆன் (5:6)

இந்த ஒளு எடுப்பதற்கு ஷர்த்து, பர்ளுகள், சுன்னத்துக்கள் உண்டு.

உளுவின் பர்ளுகள்(கடமைகள்):

1.    உளுவின் கடமையை நிறைவேற்றுகிறேன் என்று நிய்யத் செய்தல்.

2.    முகம் கழுவுதல்

3.    முழங்கைகள் வரை கைகளைக் கழுவுதல்

முகம் கழுவும்போது நிய்யத் வைக்க வேண்டும். நிய்யத் இல்லாமல் முகம் கழுவினால் உளு நிறைவேறாது.

4.    தலையின் சிறுபகுதியை மஸ்ஹு செய்தல்

5.    கணுக்கால் வரை கால்களை கழுவுதல்

6.    இவைகளை வரிசைக்கிரமமாக செய்தல்.

தலைமுடி முளைத்துள்ள இடம் முதல் நாடிக்குழி வரையிலும் மற்றும் இரண்டு செவி சோனைகள் வரையிலும் உள்ள பகுதிகளையும் கழுவ வேண்டும்.

கை,கால்களை குறிப்பிட்டுள்ளபடி சிறுபகுதி கூட விடாத அளவிற்கு கழுவ வேண்டும். உளுவின் உறுப்புகளான முகம், கை, தலை,  கால்களில் நீர் சேர்வதை தடுக்கும் நகப்பாலிஷ், உதட்டு சாயங்கள், பெயிண்ட் போன்ற கட்டியான திரவப்பொருள்களிருப்பின் ஒளு நிறைவேறாது.

சற்றேழத்தாழ 280 லிட்டர் தண்ணீர் கொள்ளும் தொட்டியில் கைகளினால் நீரை அள்ளி எடுத்துக் கொள்ளலாம். இதைவிட குறைந்த அளவுள்ள தொட்டிகள், வாளிகள், பாத்திரங்கள் முதலியவற்றிலிருந்து நீரைக் கைகளில் ஊற்றியே ஒளு செய்வது சிறப்பானதாகும்.

வரிசைக் கிரமங்களுக்கு மாற்றமாக ஒளு செய்தால் ஒளு நிறைவேறாது.

உளுவின் சுன்னத்துக்கள்:

'அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம். பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு. அல்ஹம்துலில்லாஹில்லதீ ஜஅலல் மாஅ தஹூரா.' என்ற சொற்றொடரை உளுவின் ஆரம்பத்தில் ஓதுவதும், இதனை முழுமையாக ஓத முடியாவிட்டால் 'பிஸ்மில்லாஹ்' மட்டும் ஓதுவதும் சுன்னத்தாகும். அத்துடன் இரு கைகளின் முன் பகுதிகளை மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவுவதும் சுன்னத் ஆகும். மிஸ்வாக் செய்வது சுன்னத்தாகும்.

மிஸ்வாக் செய்தபின் மூன்று முறை வாய் கொப்பளிப்பது, மூக்கின் உள் நீர் செலுத்தி அதன் அழுக்கை அகற்றுவதும், ஒரு சிரங்கை நீரிலேயே வாயையும், மூக்கையும் இணைத்தே மூன்று முறை கழுவுவதும,;  அடர்த்தியான தாடியை விரல்களால் கோதி கழுவுதல், கை கால் விரல்களை கோதி கழுவுதல் ஒவ்வொரு உறுப்பையும் மும்முறை கழுவுதல் ஆகிய இவையாவும் சுன்னத்துக்களாகும்.

உளுவின் ஒழுக்கங்கள்:

உளுச் செய்யும்போது கிப்லாவை முன்னோக்கி அமர்தல், வீண் பேச்சுக்களைத் தவிர்த்தல், 'ஹவ்ழ்'- நீர்தொட்டி உளுச் செய்பவரின் வலப் பாகத்திலும், ஊற்றிக் கழுவும்போது நீர்ப்பாத்திரம் அவரின் இடது பாகத்திலும் இருக்கும் அமைப்பில் உளுச் செய்தல், தேவையற்றவர்கள் பிறரின் உதவியின்றி தாமாகவே உளு செய்தல், வியாதி, குளிர், சளி போன்ற காரணமின்றி உளுச் செய்த நீரைத் துடைக்காமலிருத்தல் ஆகியவை உளுவின் ஒழுக்க முறைகளான சுன்னத்துக்களாகும். ஒவ்வொரு உறுப்பையும் கழுகும்போதும் ஷஹாதத் கலிமாவை

'அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன ஸய்யிதனா முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு' என்று ஓதுவது சுன்னத் ஆகும்.

உளுச் செய்தபின் கையிலுள்ள நீரைக் குடிப்பது சுன்னத்தாகும். 'இந்நீர் அனைத்து வியாதிகளுக்கும் அருமருந்தாகும்' என நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: நஸயீ,ஹாகிம்)

உளுச் செய்தபின் இரு கரங்களையும் முகத்தையும் வான் நோக்கி உயர்த்தி

'அஷஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு அல்லாஹும்மஜ்அல்னீ மினத் தவ்வாபீன வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன வஜ்அல்னீ மின் இபாதிகஸ் ஸாலிஹீன ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக வஅஷ்ஹது அன்லாஇலாஹ இல்லா அன்த அஸ்தக்ஃபிருக வஅதூபு இலைக.'

என்ற துஆவை ஓதுவதும், உயர்த்திய கரங்களைத் தாழ்த்தி மூன்று முறை 'இன்னா அன்ஜல்னா' ஸூராவை ஓதுவதும் அதன்பின்பு

'அல்லாஹும்மஃபிர்லீ தன்பீ வவஸ்ஸிஃ லீ ஃபீ தாரீ வபாரிக் லீ ஃபீ ரிஸ்கீ வலாதஃப்தின்னீ பிமா ஜவய்த அன்னீ'
என்று ஓதுவதும் சுன்னத்தாகும்.

ஒருவர் உளு செய்தபின் அதன் துஆவை ஓதினால் அவருக்காக சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும். அவர் விரும்பிய வாயில் வழியாக நுழைந்து செல்லட்டும்; என்றும்(நூல்: முஸ்லிம்)

'அவருடைய அந்தச் செயல் முத்திரையிட்டுப் பாதுகாக்கப்படுகிறது. அதன் நன்மையை அவர் அடைந்தே தீருவார்' என்றும் (நூல்: ஹாகிம்) துஆவின் பெருமையையும் சிறப்பையும் பற்றி அண்ணலாரின் அரும்மொழிகள் இருக்கின்றன.

உளுவின் சுன்னத்தான தொழுகை:

உளுச் செய்யும் நேரங்களிலெல்லாம் உளுவின் சுன்னத்தான தொழுகையைநிறைவேற்றுகின்றேன் என்ற நிய்யத்துடன் இரண்டு ரக்அத்துகள் தொழுவது சுன்னத்தாகும். முதல் ரக்அத்தில் ஸூரத்துல் பாத்திஹாவிற்குப் பின்

'வலவ் அன்னஹும் இதுளலமூ அன்ஃபுஸஹும் ஜாஊக ஃபஸ்தஃக் ஃபருல்லாஹ வஸ்தக்ஃபர லஹுமுர் ரஸூலு லவஜதுல்லாஹ தவ்வாபர் ரஹீமா'

என்ற ஆயத்தை ஓதுவதும் இரண்டாவது ரக்அத்தில்,'வமன் யஃமல் ஸூஅன் அவ்யள்லிம் நஃப்ஸஹு ஃதும்ம யஸ்தஃபிரில்லாஹ யஜிதில்லாஹ ஙஃபூரர் ரஹீமா' என்ற ஆயத்தை ஓதுவதும் சுன்னத்தாகும்.

உளுவின் மக்ரூஹுகள்:

1.    அடர்த்தியான தாடியை கோதி கழுவாமலிருத்தல்.
2.    கைஇ கால்களை கழுவுவதில் இடது பாகங்களை முற்படுத்துதல்.
3.    கண்களுக்குள் நீர் செலுத்துதல்.
4.    நீரை முகத்தில் அடித்துக் கழுவுதல்
5.    அவரவர் முகத்திற்கு நேராக அல்லது கிப்லாவின் திசை நோக்கி துப்புதல்.
6.    உளுவின் உறுப்புகளை மூன்று முறைகளை விட அதிகமாகவோஇ குறைவாகவோ கழுவுதல்.
7.    மிஸ்வாக் செய்வதை விடுதல்
8.    தேவையின்றி பிறரின் உதவியினால் உளு செய்தல்
9.    உளுச் செய்யும்போது நீரை உதறுதல்.
10.    வெயிலில் சூடான நீரால் உளுச் செய்தல்.

உளுவை முறிப்பவை:


1.    காற்று, நீர், மலம், இரத்தம் புழு போன்றவை மனிதனின் முன்பின் துவாரம் வழியாக வெளிவந்தால் உளு முறிந்து விடும்.

2.    போதை, பைத்தியம், மயக்கம் உறக்கம் இவைகளினால் உணர்விழந்தால் உளு முறிந்து விடும். உட்கார்ந்து தூங்குவதினால் உளு முறியாது.

3.    ஆணோ பெண்ணோ இன உறுப்புகளை அல்லது மலவாயைத் திரையின்றி உள்ளங்கை கொண்டு தொடுவதினால் தொடுபவரின் உளு முறிந்து விடும்.

4.    திருமணத்திற்கு ஹலாலான ஆண் பெண்களின் மேனிகள் திரையின்றி ஒன்றோடு ஒன்று உராய்வதினால் இருவரின் ஒளுவுமே முறிந்து விடும். ஆசையினால் வெளிவரும் மோகநீரினாலும் ஒளு முறிந்து விடும். இந்திரியம் வெளியாவதினால் ஒளு முறிவதில்லை. ஆனால் குளிப்பது கடமையாகும்.

சுன்னத்தான உளு:

1.    குர்ஆனை தொடாமல் நாவினால் ஓதுவதற்காக.
2.    மய்யித்தை குளிப்பாட்டியதற்காக அல்லது அதை சுமந்ததற்காக.
3.    ஹதீது போன்ற மார்க்க நூல்களை படிப்பதற்காக.
4.    பால்வேறுபட்ட சிறார்களை தொட்டதற்காக
5.    மறைவிட ரோமங்களையும், இன உறுப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தொட்டதற்காக.
6.    மனைவியுடன் இணைவதற்காக.
7.    உறங்குவதற்காக
8.    நகம், தலைமுடி, மீசை ஆகியவற்றை களைந்ததற்காக.
9.    ஆணையோ, பெண்ணையோ ஆசையுடன் பார்த்ததற்காக.
10.    கோபம் அடைந்ததற்காக.
11.    வாந்தி எடுத்ததற்காக.
12.    மார்க்க உபதேசங்களை கேட்பதற்காக
13.    நல்லோர்களின் அடக்கத்தலங்களை தரிசிப்பதற்காக.
14.    உடலில் இரத்தம் எடுத்ததற்காக.
15.    பாங்கு சொல்வதற்காக.
16.    பள்ளிவாசலில் நுழைவதற்காக அல்லது தங்குவதற்காக மற்றும் பெருந்துடக்குள்ளவர்கள் குடிப்பதற்காக, உண்பதற்காக.

தொழுக மக்ரூஹான நேரங்கள்:

1.பஜ்ரின் பர்ளுத் தொழுகையை தொழுதபின் பொழுது உதயமாகும் வரையிலும்

2. பொழுது உதயமாகி ஓர் ஈட்டியின் அளவுக்கு அடிவானில் அது உயரும் வரையிலும்

3. வானில் சூரியன் உச்சியில் இருக்கும்போதும்.

4. அஸரின் ஃபர்ளுத் தொழுகையை முடித்தபின் பொழுதடையும் வரையிலும்.

5. பொழுதடையும்போதும்.

இந்த நேரங்களில் நஃபில் முத்லக், தஸ்பீஹ் தொழுகை, மற்றும் இஹ்ராமிற்குரிய நஃபில் தொழுகை ஆகிய மூன்று தொழுகைகளை மட்டும் தொழுவது மக்ரூஹ் தஹ்ரீம் ஆகும்.வெள்ளிக் கிழமை உச்சிப் பொழுதில் நஃபில் முத்லக், தஸ்பீஹ் தொழுகை ஆகியவற்றை தொழுவது கூடும்.

இம்மூன்றையும் தவிரவுள்ள ஃபர்ளான அதா, களா தொழுகை, ஜனாஸாத் தொழுகை, பள்ளிவாசல் காணிக்கைத் தொழுகை, கிரகணத் தொழுகை, உளுவின் சுன்னத்தான தொழுகை போன்றவற்றை இந்த நேரங்களில் தொழுதால் கூடும்.

தயம்மும்

இச்சொல் சுத்தம் செய்வதற்கு மண்ணை நாடுதல் என்ற பொருளைத் தரும். தண்ணீரை உபயோகிக்க இயலாத பொழுது மண்ணைக் கொண்டு முகம் மற்றும் கைகளை மஸ்ஹு செய்வதற்கு இச் சொல் வழங்கப்படுகிறது. தண்ணீர் இல்லாவிடில் அல்லது நீர் இருந்தும் குடிப்பதற்கு தேவைப் பட்டால் அல்லது வியாதியினால் நீரை உபயோகிக்க முடியாவிட்டால் தயம்மும்  செய்து கொள்ளலாம்.

நஜீஸ் இல்லாத சுத்தமான புழுதி கலந்த மண்ணினால் தயம்மும் செய்ய வேண்டும். செம்மண், காவி மண் போன்ற இயற்கை நிறத்தையும் தண்மைகளையும் கொண்ட மண்ணினால் தயம்மும்  செய்வது கூடும்.

ஃபர்ளுகள்:
 
1. தயம்மும் உடைய பர்ளை நிறைவேற்றுகிறேன் என்று நிய்யத் செய்து  கொண்டு தரையில் உள்ள மண்ணை உள்ளங்கையினால் ஒற்றி எடுத்து முகத்தை மஸ்ஹு செய்தல். மண்ணை எடுப்பதற்காக உள்ளங்கைகளைத் தரையில் பதித்ததிலிருந்து முகத்தை மஸ்ஹு செய்யும் வரை நிய்யத் நிலைத்திருக்க வேண்டும்.
2. முழங்கை வரை இரு கைகளையும் மஸ்ஹு செய்தல்.
3. முதலில் முகம், பிறகு கைகள் என வரிசைக் கிரமமாகச் செய்தல்.
4. இவ்விரண்டு உறுப்புகளுக்காக இருமுறை மண்ணை ஒற்றி எடுத்தல்.

சுன்னத்துகள்:

தயம்மும் தொடங்குமுன் அஊது ஓதுவதும், ஷஹாதத் கலிமா ஓதுவதும்,பிஸ்மில்லாஹ் ஓதுவதும், சுன்னத் ஆகும். தயம்மும் செய்து முடித்தபின் உளுவின் துஆவை ஓதுவதும், முகத்தின் மேல்பகுதியிலிருந்து மஸ்ஹு செய்யத் தொடங்கி அதன் கீழ் பகுதியில் கொண்டு முடித்தலும்இ தரையில் இரண்டு உள்ளங்கைகளை அடித்த பின்பு புறங்கைகளை ஒன்றோடு ஒன்றாக அடித்து, கையில் ஒட்டி இருக்கும் மிதமிஞ்சிய மண்தூள்களை விழச் செய்வதும் ஸுன்னத் ஆகும்.

தயம்முமை முறிப்பவைகவள்:

 உளுவை முறிக்கும் கருமங்கள் யாவும் தயம்முமையும் முறித்து விடும். அத்துடன் தண்ணீர் கிடைக்காததால் தயம்மும் செய்து தொழுபவர் தண்ணீரைப் பெற்றுக் கொண்டால் உடனே தயம்மும் முறிந்து விடும்.

 ஜனாபத்

ஜனாபத்  என்பதன் பொருள் 'தூய்மையின்மை' என்பதாகும். சிறு தொடக்கு உள்ளவர்கள் உளுச் செய்து தூய்மைபடுதத்திக் கொள்வது போன்று பெருந்தொடக்கு உள்ளவர்கள் குளித்து தூய்மைப் படுத்திக் கொள்ளவது கடமையாகும்.

புணருதல், பிரசவித்தல், உறக்கத்தில் ஸ்கலிதமாதல், மாதவிடாய் இரத்தம் வெளிவருதல், மரணித்தல் ஆக இந்த ஐந்து தூய்மையற்ற நிலைகளிலிருந்து குறித்து தூய்மைப்படுத்திக் கொள்வது ஃபர்ளாகும்.

இதேபோன்று ஆண் இன உறுப்பின் கத்னா செய்தபகுதியானது பெண் இன உறுப்பில் மறைந்துவிட்டால் விந்து வெளிவந்தாலும்,வராவிட்டாலும் இருவரின் மீதும் குளிப்பது கடமையாகும்.

ஹைளு:

குறித்த காலங்களில் பெண்களின் கருப்பையின் ஓரப்பகுதியிலிருந்து வெளிவரும் இயற்கை உதிரப் போக்கிற்கு ஹைளு(மாதவிடாய்) என்று சொல்லப்படும். 9 வயதில் தொடங்கும் மாதவிடாய் 55 வயதை அடையும்போது நின்று விடும். சிலருக்கு 60 வயது வரை நீடிப்பதுமுண்டு.

ஹைளு ஏற்படும் குறைந்தபட்சக் காலஅளவு 24 மணி நேரங்கள். அதன் அதிகபட்ச காலஅளவு 15 நாட்கள். மிகுந்த கால அளவு 6 அல்லது 7 நாட்கள். இந்த 24 மணி நேரத்தை விடக் குறைந்த அளவோ 15 நாட்களை விட விரிந்த அளவோ உதிரப் போக்கு ஏற்படின்இ இது ஹைளாகக் கணிக்கப்பட மாட்டாது. அவை வியாதி இரத்தம் அல்லது இஸ்திஹாளா (உதிரப் பெரும்போக்கு) எனக் கருதப்படும்.
ஒருமாதம் வெளிப்பட்ட ஹைளுக்கும் மறுமாதம் வெளிப்டும் ஹைளுக்கும் இடையே (சுத்தமான) இடைவெளி 15 நாட்கள் அவசியம் இருக்க வேண்டும். அவ்வாறு 15 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு வரும் இரத்தமே ஹைளு (மாதவிடாய்) ஆகும். அவ்வாறின்றி ஏற்படும் இரத்தப் போக்கு இஸ்திஹாளா(உதிரப் பெரும்போக்கு) எனக் கருதப்படும்.

சிறிய, பெருந்துடக்குள்ளவர்கள் செய்யக் கூடாத செயல்கள்:

தொழுதல், தவாபு செய்தல், குர்ஆனைத் தொடல், ஸஜ்தாவுடைய ஆயத்தை ஓதியதற்காக ஸுஜூது செய்தல், குர்ஆன் ஷரீபின் ஆயத்துகள் அல்லது பலகைகளைத் தொடுதல் ஆகியவை ஹராமாகும்.

பெருந்துடக்குள்ளவர்கள் பள்ளிவாசலில் தங்கியிருப்பதும், குர்ஆன் ஆயத்துக்களின் சில வாக்கியங்களை ஓதுவதும் ஹராமாகும்.

ஹைளு, நிபாஸ்(பிரவசத் தொடக்கு) உள்ளவர்கள் பள்ளியில் உள் செல்வதும், அங்கு தங்கியிருப்பதும், குர்ஆன்ஷரீபை தொடுவதும், அதை ஓதுவதும் நோன்பு நோற்பதும், தங்கள் கணவரோடு மருவுவதும் ஹராமாகும். இச்சமயங்களில் விடுபட்ட தொழுகைகளை களாச் செய்ய வேண்டியதில்லை. ஆனால் ரமளான் மாத நோன்புகளை மட்டும் களாச் செய்வது ஃபர்ளாகும்.

நிஃபாஸ்:

பேறு காலமானவுடன் அல்லது குறைந்தமாத கட்டிகள் விழுந்தவுடன் ஏற்படும் உதிரப்போக்கிற்கு நிஃபாஸ் என்று பெயர். இந்த இரத்தம் வெளிவரும் குறைந்த கால அளவு ஒரு நொடிப்பொழுது ஆகும். நிறைந்த காலஅளவு அறுபது நாட்கள். மிகுந்த கால அளவு நாற்பது நாட்கள் ஆகும். ஹைளுடைய சட்டங்கள் நிஃபாஸுக்கும் பொருந்தும்.

அல்குஸ்லு(குளிப்பு)

'குளிப்பின் பர்ளை நிறைவேற்றுகிறேன்' என்ற நிய்யத்தைக் கொண்டு உடலின் புறப்பாகங்கள் அனைத்திலும் தண்ணீரை ஓட்டுதலுக்குப் பெயர் குளிப்பு என்று பெயர்.இதன் ஃபர்ளுகள் 2. அவை

1. நிய்யத் 2. உடலின் புறப்பாகங்கள் அனைத்திலும் தண்ணீர் ஊற்றுதல்.

முழுக்கு குளியலின் போது நகங்களின் உட்பகுதிகள், உரோமங்களின் உள், வெளிப்பகுதிகள், மல ஜலம் கழிக்க அமரும்போது பெண்ணின் மறைவிடங்களில் வெளித் தெரியும் பகுதிகள் ஆகியவற்றை நன்கு கவனித்து கழுவுதல் ஃபர்ளாகும்.

500 ராத்தல் (280 லிட்டர்) கொள்ளளவு நீர் நிறைந்த தொட்டிகளில் முங்கிக் குளித்துக் கொள்ளலாம்.


ஸுன்னத்துக்கள்:

குளிக்கும் முன் சிறுநீர் கழித்தல், மேனியிலோ, ஆடையிலோ படிந்திருக்கும் அசுத்தங்களை (நஜீஸ்களை) கழுவுதல், பரிபூரணமாக உளு செய்து கொள்ளுதல், குளிக்கத் தொடங்கும்போது பிஸ்மில்லாஹ் சொல்லல், வாயையும், மூக்கையும் சுத்தம்  செய்து கொள்ளல்,ஆரம்பத்தில் தலைக்கும் பின்பு வலது மற்றும் இடது புறங்களுக்கும் தண்ணீர் ஊற்றுதல், ரோமங்களை கோதி விடுதல், ஒவ்வொரு பகுதியின் மீதும் மூன்று முறை தண்ணீர் ஊற்றுதல், உடலைத் தேய்த்துக் குளித்தல், கமுக்கட்டு, தொப்புள், கைமொழிகள் போன்ற இடங்களை நன்றாக கவனித்து கழுவுதல், கிப்லாவை முன்னோக்கி இருத்தல், தேவையில்லாமல் உரையாடாதிருத்தல், ஓர் உறுப்பு உலருமுன் தொடர்ந்து மற்றொரு உறுப்பைக் கழுவுதல்,குளித்த பின் வியாதி, குளிர், சளி போன்ற காரணமில்லாவிடில் துடைக்காமல் விடுதல், குளித்த பின்பு ஹைளு வந்த வழியில் நறுமணம் பூசுதல் ஆகியவை குளிப்பின் ஸுன்னத்துக்களாகும்.குளித்த பின் ஷஹாதத் கலிமாவை ஓதி, பின்பு உளுவின் துஆவை ஓதி, மூன்று முறை இன்னா அன்ஸல்னா' சூராவை ஓதுவதும் அதன்பின், 

اللهمّ اغْفرْ لـيْ ذنبيْ ووسّعْ ليْ فيْ داريْ وبارك ليْ رزْقيْ ولاتفتنيْ بما زويْت عنّيْ
 
என்று ஓதுவதும் ஸுன்னத்தாகும்.

சுன்னத்தான குளிப்புகள்:

ஜும்ஆ தொழுகை, இருபெருநாள் தொழுகைகள், சூரிய சந்திர கிரகணத் தொழுகைகள் ஆகியவைகளுக்காக மழை தேடி தொழுவதற்காக, ஹரம் ஷரீபிலும், மதீனா முனவ்வராவிலும் நுழைவதற்காக, தவாஃப் செய்வதற்காக, அரபா மினாவில் தங்குவதற்காக, பைத்தியம் போதை மயக்கம் தெளிந்ததற்காக, மய்யித்தைக் குளிப்பாட்டியதற்காக, ஹாஜிகள் ஜம்ரத்துல் அகபா ஊலா, உஸ்தாவில் கல் எறிவதற்காக, ரமலான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் ஜமாஅத்துடன் தராவீஹ் தொழுவதற்காக, சன்மார்க்க நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்காக, பெருந்தொடக்கு இல்லாத காபிர்கள் இஸ்லாம் ஆவதற்காக ஆகியவை சுன்னத்தான குளிப்புகள்.

ஸுன்னத்தான குளிப்பை நிறைவேற்றுகிறேன் என்றோ அல்லது 'இன்ன செயலுக்காக குளிக்கிறேன் என்றோ நிய்யத் செய்து கொண்டால் சுன்னத்தை நிறைவேற்றிய நன்மைகளை அடையலாம். நிய்யத்துச் செய்யாவிட்டால் நன்மைகள் கிடைக்கமாட்டாது.

தொழுகையை முறிப்பவைகள்

தொழுகையில் இருமுதல், கனைத்தல், தும்முதல் போன்றவற்றிலிருந்து இரு எழுத்துகள் வாயிலிருந்து வெளிவந்தால் தொழுகை முறிந்து விடும்.
 
சதைப்பற்றுள்ள ஏதாவது ஒரு பொருளை விழுங்கினால் தொழுகை முறிந்து விடும்.

தொண்டையில் கபம் இறங்கிட அதைத் துப்பாமல் விழுங்கினாலும், வாயில் இரத்தம் வடிந்திருந்து அதைக் கழுவாத நிலையில் உமிழ் நீர் ஊறி அதை விழுங்கினாலும் தொழுகை முறிந்து விடும்.
 
தொழுது கொண்டிருக்கும் போது அதை முறித்துவிட நினைத்தால் உடனே தொழுகை முறிந்து விடும்.

தொழுகையிலுள்ள செயல்வடிவமான பர்ளுகளை இடம் மாற்றி செய்தாலும், சொல் வடிவ பர்ளுகளிலுள்ள தக்பீர் தஹ்ரீமா, ஸலாம் கொடுத்தல் ஆகிய இரண்டை மட்டும் இடம் மாற்றி செய்தால் அல்லது செயல்வடிவ பர்ளை அதிகப்படுத்தி செய்தாலும் தொழுகை முறிந்து விடும்.

பதினான்கு பர்ளுகளில் ஏதாவது ஒரு பர்ளை சுன்னத்தாக நினைத்தாலும் தொழுகை முறிந்து விடும்.

தொழுகையின் செயல்முறை அல்லாத வேறு செயல்களை தொடர்படியாக மூன்று முறை செய்தாலும் தொழுகை முறிந்து விடும்.

கைவிரல்களுடன் முன் கையும் சேர்த்து மும்முறை அசைந்தால் அல்லது நாவை வாயின் வெளியே நீட்டி மும்முறை அசைத்தால் தொழுகை முறிந்து விடும்.

தொழுகையின் பர்ளுகளும், ஷர்த்துகளும்:

1. நிய்யத்: இதற்கு உள்ளத்தால் நாடுதல் என்று பொருள். இது தொழுகையின் ஆரம்ப ஃபர்ளாகும்.இன்ன நேரத்தின் பர்ளான தொழுகையை தொழுகிறேன் என்பதிலுள்ள மூன்று அம்சங்களும் ஃபர்ளான தொழுகையில் இருக்க வேண்டிய அம்சங்கள்.

அதாவாக கிப்லாவை முன்னோக்கி இத்தனை ரக்அத்துகளை அல்லாஹ்விற்காக என்ற இந்த நான்கையும் நிய்யத் செய்வதும் உள்ளத்தில் நிய்யத் செய்வதை நாவால் மொழிவதும் சுன்னத்தாகும்.

2. தக்பீர் தஹ்ரீமா:தொழுகையை நிய்யத் செய்து அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்கு இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

3. நின்று தொழ சக்தியுள்ளோர் நின்று தொழுதல்

4. பாத்திஹா சூரா ஓதுதல்: ஜனாஸா தொழுகையைத் தவிர எல்லா தொழுகைகளிலும் வஜ்ஹத்து ஓதுவது ஸுன்னத்து ஆகும்.

وجّهتُ وجهي للّذي فطرالسّماوات والاْرْض حنيْفا مسلم وما انا منالْمشْركيْن. انّ صلاتيْ ونسكيْ ومحياي
 ومماتي لله ربّ العالمين. لاشريك له وبذالك امرْت وانا من الْمسلمين 

 

ஸூரத்துல் பாத்திஹா ஓதுவது எல்லாத் தொழுகையிலும் தனியாகத் தொழுதாலும், இமாம் ஜமாஅத்துடன் தொழுதாலும் ஃபர்ளாகும். பிஸ்மில்லாஹ்வை சேர்த்து இந்த சூரத்தின் எழுத்துக்கள் 156 ஆகும்.அதன் ஷத்துகள் 14 ஆகும். இதில் ஏதாவது ஒரு எழுத்தையோ ஷத்தையோ விட்டு ஓதினால் ஃபாத்திஹா நிறைவேறாது.

ஃபாத்திஹா சூரா ஓதும் முன்பு 'அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' என்று சப்தமின்றி எல்லா ரக்அத்திலும் ஓதுவது ஸுன்னத்தும் முதல் ரக்அத்தில் ஓதுவது ஸுன்னத் முஅக்கதாவும் ஆகும். முதல் ரக்அத்தில் அஊது ஓதாமல் விடுவது மக்ரூஹ் ஆகும்.

ஃபாத்திஹா ஸூராவை ஓதியபின் ஆமீன் என்று கூறுவது ஸுன்னத்தாகும்.

5. ருகூஉ செய்தல்: தொழுகையில் தக்பீர் கட்டி(கியாம்) நிலையில் ஃபாத்திஹாவும், சூராவும் ஓதிய பின்பு குனிந்து நிற்கும் செயலுக்கே ருகூவு என்று பெயர்.இதன் ஃபர்ளுகள் மூன்று ஆகும். 1. முழங்காலை உள்ளங்கையால் தொடும் அளவுக்கு குனிவது 2. ருகூவு செய்வதற்காகவே குனிவது 3. குனிந்தபின் அங்க அசைவுகள் அமைதியாகும் வரை அதில் தரிபடுவது.

இதன் சுன்னத்துகள்: 1. தக்பீர் தஹரீமா போன்று இரு கைகளையும் உயர்த்தி தக்பீர் சொல்லியவாறு ருகூவிற்கு வருதல் 2. சமமான பலகையைப் போன்று கழுத்தையும், முதுகையும் நேராக்கி குனிந்திருத்தல் 3. இரு முழங்கால்களையும் ஒரு ஜான் அளவு பிரித்து நேராக நாட்டி நிற்றல் 4. திரையின்றி திறந்து மற்றும் விரித்த வண்ணம் உள்ளங்கைகளினால் முழங்கால்களைப் பிடித்துக் கொள்ளல்.5. ஆண்கள் தங்களின் முழங்கைகளை விலாப்பகுதியை விட்டும் வயிறை தொடைப்பகுதியை விட்டும் விலக்கி வைத்தல், பெண்கள் இவைகளை சேர்த்து வைத்தல்.6.سبحان ربّي العظيم وبحمده என்று மூன்று முறை ஓதுவது.

. தனியாகத் தொழுபவர் கீழ்காணும் துஆவை ஓதிக் கொள்ளல்

'அல்லாஹும்ம லக ரகஃது வபிக ஆமன்து வலக அஸ்லம்து கஷஅ லக ஸம்யீ வபஸரீ வமுஃக்கீ வஅள்மீ வஅஸபீ வஷஅரீ வபஷரீ வமஸ்தகல்லத் கதமீ லில்லாஹி ரப்பில் ஆலமீன்.'

6. இஃதிதாலில் நிற்றல்: ருகூவிலிருந்து மீண்டும் நிலைக்குத் திரும்பி வருவதற்கு இஃதிதால் என்று பெயர்.இஃதிதாலுக்காகவே நிமிர்ந்து வருதல் மற்றும் அதில் தரிபடுதல் ஆகியவை இதன் பர்ளுகளாகும்.

ருகூவிலிருந்து எழும்போது இரு கைகளையும் தக்பீர் தஹ்ரீமா போன்று உயர்த்தி 'சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் ரப்பனா லகல் ஹம்து மில்அஸ் ஸமாவாதி வமில்அல் அர்ழி வமில்அ மாஷிஃத மின் ஷையின் பஃது' என்று சொல்வது ஸுன்னத்தாகும்.

குனூத்: இதற்குப் பணிதல், தொழுகையின் போது இறைஞ்சுதல் என்று பொருள். ஸுபுஹுத் தொழுகையின் இரண்டாவது ரக்அத்தின் இஃதிதாலிலும் மற்ற ரமலான் மாதத்தின் பிற்பகுதி 15 நாட்களில் வித்ரு தொழுகையின் கடைசி ரக்அத்தின் இஃதிதாலிலும் வழமையாக ஓதும் இஃதிதாலின் திக்ருகளை ஓதி முடித்தபின் குனூத் ஓதுவது ஸுன்னத்தாகும். இதுபோன்று உணவுப் பஞ்சம், வறட்சி, நோய், சன்மார்க்க விரோதிகளினால் அச்சம் உண்டானாலும் மற்றும்  துண்பங்கள் சோதனைகள் போன்றவை ஏறட்பட்டாலும் ஃபர்ளுத் தொழுகையின் கடைசி ரக்அத்தில குனூத் ஓதுவது ஸுன்னத்தாகும்.

குனூத் துஆ:

اللهمّ اهدني فيمن هدشت . وعافيت . وتولّني فيمن تولّيت. وباركلي فيما اعطيت. وفني شرّ ما قضيت
فانّك تقضي ولا يقضاي عليك. فانّه لايذلّ من وّاليت. ولايعزّ من عاديت. تباركت ربّنا وتعاايت. فلكاا
لحمد علي ما قضيت. اشتغفرك واتوب اليك وصلّي الله علي شيّدنا محمّد وعلي آله وصحبه وسلّم.

இமாம் சப்தமிட்டு குனூத்தை பன்மை வசனத்தோடு ஓதுவதும், இமாமின் குனூத் துஆ, இறுதி ஸலவாத் ஆகியவைகளுக்கு மஃமூம்கள் ஆமீன் கூறுவதும் 'ஃப இன்னக தக்ழீ' முதல் 'வஅதூபு இலைய்க' வரை இமாமுடன் சேர்ந்து சப்தமின்றி மஃமூம்கள் இதே வாக்கியங்களை ஓதுவதும் ஸுன்னத்துகளாகும். துன்பங்கள்,கஷ்டங்கள் ஏற்பட்டால் இமாம் குனூத் ஓதிவிட்டு அதற்கென்று தனியாக துஆ செய்வது ஸுன்னத்தாகும்.குனூத் துஆவை ஒருமை வசனத்தில் இமாம் ஓதுவது மக்ரூஹ் ஆகும்.

 
7. இரு ஸுஜூது செய்தல்: இதற்கு தலையை தரையில் வைத்துப் பணிதல் என்று பொருள். இதற்கு என்று விதிமுறைகள் 7 உள்ளன. அவை:

1.ஸுஜூது செய்வதற்காகவே தரைக்கு செல்ல வேண்டும்.
2.தரைக்கு வந்தபிறகு அங்க அசைவுகள் அமைதியாகும் வரை தரிபட வேண்டும்.
3. நெற்றி,இரு உள்ளங்கைகள், இரு முட்டுக் கால்கள், இரு உள்ளங்கால்களின் விரல்கள் ஆகிய ஏழு உறுப்புகளில் ஒவ்வொன்றினுடைய சில பகுதிகளையாவது தரையில் பதித்தல் வேண்டும். இவைகளோடு மூக்கையும் சேர்த்து வைப்பது ஸுன்னத்தாகும்.
4,5. திரையின்றி திறந்த நிலையில் நெற்றியை தரையில் அழுத்தமாக வைப்பது ஃபர்ளாகும்.

6. தலை, தோள் பகுதியை தாழ்த்தியும் இடுப்புப் பகுதிகளை உயர்த்தியும் ஸுஜூது செய்ய வேண்டும்.

7. ஸுஜூதில் ஏழு உறுப்புகளையும் ஒன்றாக தரையில் வைத்திருக்க வேண்டும்.
 

ஸுன்னத்துகள்: இஃதிதாலிலிருந்து தக்பீர் கூறியவாறு கீழே வந்து முதலில் தன் இரு முட்டு கால்களையும் ஒரு ஜாண் அளவு பிரித்து நிலத்தில் வைப்பதும், இரண்டாவதாக இரு கைவிரல்களையும் கிப்லாவை நோக்கி தோள் புயத்திற்கு நேராக நிலத்தில் வைப்பதும்,மூன்றாவதாக மூக்கையும், நெற்றியையும் வைப்பதும், நான்;காவதாக கால் விரல்களை கிப்லாவை நோக்கி நட்டியும் ஒரு ஜாண் அளவு இரு கால்களையும் பிரித்து வைப்பதும் ஸுன்னத்தாகும்.ஸுஜூதில் கண்களை திறந்திருப்பதும், மூன்று முறை

سبحان ربيّ الاعلي وبحمده

என்று ஓதுவதும் ஆண்கள் தங்கள் முழங்கைகளை விலாப் பகுதியை விட்டும் வயிற்றைத் தொடைப் பகுதிகளை விட்டும் விலக்கி வைத்து ஸுஜூது செய்வதும், பெண்கள் இவைகளை சேர்த்து வைத்து ஸுஜூது செய்வதும், இருபாலரும் முழங்கைகளை சேர்த்து வைத்து ஸுஜூது செய்வதும் தனித்தனி ஸுன்னத்துகளாகும்.

8. இரு ஸுஜூதுக்கிடையில் அமர்தல்:'ஜுலூஸ்' என்பதற்கு இரு ஸுஜூதுகளுக்கிடையில் சற்று அமர்வது என்று பெயர். முதல் ஸுஜூதிலிருந்து சிறு இருப்புக்காக எழுந்து வருதல், சிறு இருப்பில் அமர்ந்த பின் அங்க அசைவுகள் அமைதியாகும் வரை அதில் தரிபடுதல் இவ்விரண்டும் இதில் ஃபர்ளாகும்.

இவைகளின் ஓதப்படும் திக்ருகளின் கால அளவைக் கடந்து, அதற்கு மேலும் ஃபாத்திஹா சூரா ஓதும் அளவுக்கு இதில் காலம் தாழ்த்தினால் தொழுகை முறிந்து விடும். எல்லாத் தொழுகைகளிலும் முதலாவது மூன்றாவது ரக்அத்துகளின் ஸுஜூதுகளை முடித்து நிலைக்கு எழுந்திருக்கும் போது சற்று அமர்ந்த பின்பு உள்ளங்கைகளைத் தரையில் ஊன்றி நிலைக்கு வருவது ஸுன்னத்தாகும்.

9. இந்த நான்கு ஃபர்ளுகளிலும் அங்க அசைவுகள் அமைதியாகும் வரை தரிபடுதல்

10. கடைசி அத்தஹிய்யாத்திற்காக அமர்தல்:மண்டியிட்டு வலது கால் விரல்கள் கிப்லாவை முன்னோக்கி இருக்கும் வண்ணம் வலது காலைத் தரையில் ஊன்றி வைக்க வேண்டும். இடது காலின் புறப்பகுதியைத் தரையோடு சேர்த்து வைத்து இடது கரண்டைக் கால் மீது பித்தட்டை வைத்து அமர வேண்டும். இவ்வாறு அமர்வது நடு இருப்பில் (முதல் அத்தஹிய்யாத்தில்) சுன்னத்தாகும். இரண்டாம்(கடைசி) அத்தஹிய்யாத்தில் வலது கால்விரல்கள் கிப்லாவை முன்னோக்கி இருக்கும் வண்ணம் அதைத் தரையில் பதித்து வைக்க வேண்'டும். இடது பாதத்தை வலது காலின் கீழே வெளிப்படுத்தி வைத்துக் கொண்டு பித்தட்டைத் தரையின் மீது வைத்து அமர வேண்டும்.

இரண்டு அத்தஹிய்யாத்திலும் இரு கரங்களையம் முழங்கால் முட்டிற்கு நேராக வைத்து வலது கையின் ஆள் காட்டி விரலைத் தவிர்த்து ஏனைய விரல்களை மூடிக் கொள்ள வேண்டும். அதன் பெருவிரலின் நுனியை ஆள்காட்டி விரலின் அடியில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அத்தஹிய்யாத் ஓதி 'இல்லல்லாஹ்'என்று கூறும்போது சான்று பகர்வதற்கு அறிகுறியாக கலிமா விரலை மட்டும் நீட்டிக் கொள்ள வேண்டும். தொழும்போது அவரவர் சுஜூது செய்யும் இடத்தில் பார்வையை பதிப்பது சுன்னத்தாகும். ஆனால் அத்தஹிய்யாத்தில் கலிமா விரலை உயர்த்திய பின்பு ஸலாம் கொடுக்க திரும்பும்வரை பார்வையை கலிமா விரலின் மீது படிய வைக்க வேண்டும். இது சுன்னத்தாகும்.

அத்தஹிய்யாத் ஓதி முடித்தபின்பு ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டியிருப்பின் ஸஜ்தா ஸஹ்வு செய்யும் வரை முதல் அத்தஹிய்யாத்தில் இருப்பதைப் போன்று இருப்பது சுன்னத்தாகும்.

தொழுகையில் கடைசி அத்தஹிய்யாத் தவிர மற்ற எல்லா இருப்புகளும் நடு இருப்பைப் போன்று இருப்பது சுன்னத்தாகும்.

11. கடைசி அத்தஹிய்யாத் ஓதுதல்.

12. இதில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் ஓதுதல்

التحيّات المباركات الصّلوات الطيبات لله اسّلام عليك ايّها انّبي ورحمة الله وبركاته السّلام علينا وعلي عبادالله الصا لحين اشهد ان لاّاله الاّالله و اشسهد انّ محمّد رّسول الله اللهمّ صلّ علي محمّد علي محمّد  وعلي آل  محمّد

முதல் அத்தஹிய்யாத்தில் ஓதுவது சுன்னத்தும், கடைசி அத்தஹிய்யாத்தில் ஓதுவது ஃபர்ளுமாகும். முதல் அத்தஹிய்யாத்துடன் கீழ் வரும் தரூதே இப்றாஹிமிய்யாவை சேர்த்து கடைசி அத்தஹிய்யாத்தில் ஓதுவது சுன்னத்தாகும்.

كما صَلَّيْتَ علي ابراهيم وبارك علي محمّد وعلي آل محمّد كما باركت علي ابراهيم وعلي آل ابراهيم في العالمين انّكك
حميد مّجيد                                                                

13. முதல் ஸலாம் கூறுதல்: அஸ்ஸலாமு அலைக்கும் என முதல் ஸலாம் கூறி தொழுகையை முடீப்பது ஃபர்ளு ஆகும். இடது பாகம் திரும்பி இரண்டாவது ஸலாம் கூறுவதும் ஸலாமுடன் 'வரஹ்மத்துல்லாஹ்' என சேர்த்துச் சொல்வதும் சுன்னத்துகளாகும்.

ஜனாஸா தொழுகையில் மட்டும் வபரகாத்துஹு என்பதைச் சேர்த்துக் கூறுவது சுன்னத்தாகும்.

14. இவற்றை வரிசைக் கிரமமாக செய்தல்.

 
ஆக மொத்தம் பதினான்கு தொழுகையின் பர்ளுகளாகம். இதை சற்று விரிவுபடுத்தி பதினேழு அல்லது பத்தொன்பது ஃபர்ளுகளென்றும் சொல்லலாம்.

ஷர்த்துகள்:

1. சிறு தொடக்கை விட்டும் நீங்கியிருத்தல்.
2. பெருந்தொடக்கை விட்டு சுத்தமாக இருத்தல்.
3. அவ்ரத்தை மறைத்தல்
4. கிப்லாவை முன்னோக்குதல்.
5. தொழுகையை முறிக்கும் கருமங்களை விட்டு விலகி இருத்தல்.
6.தொழுகையின் நேரம் வந்து விட்டதெனத் தெரிந்து தொழுதல்.
7. ஃபர்ளான தொழுகையை ஃபர்ளு என்று விளங்கித் தொழுதல்
8. தொழுகையில் பதினான்கு ஃபர்ளுகளையும் விளங்கித் தொழுதல்.
தொழுகையில் ஓத வேண்டிய சூராக்கள்

முதலாவது மற்றும் இரண்டாவது ரக்அத்துகளில் பாத்திஹா சூராவிற்குப் பின் ஏதேனும் மூன்று ஆயத்துக்களை ஓதுவது இமாமுக்கும்இ தனியே தொழுபவருக்கும் சுன்னத்தாகும்.

இருப்பினும் தொழுகையில் நீளமான ஆயத்துகளை ஓதுவதை விட, சிறிய சூராவாயினும் அதை முழுமையாக ஓதுவதும் முதல் ரக்அத்தில் ஓதிய ஸூராவை விட இரண்டாவது ரக்அத்தில் சிறிய ஸூராவை ஓதுவதும், குர்ஆனின் வரிசைக்கேற்ப முதல் ரக்அத்தில் முன்னுள்ள சூராவையம் இரண்டாவது ரக்அத்தில் அதன் பின்னர் உள்ள சூராவையும் ஓதுவதும், முதலாவது ஓதிய ஸூராவிற்கு அடுத்த ஸூராவை ஓதுவதும் ஸுன்னத்தாகும். எனினும் குறிப்பிட்ட சூராக்களை ஓதவேண்டும் என்று விபரிக்கப்பட்டுள்ள தொழுகைகள் இச்சட்டத்திலிருந்து நீங்கியவைகளாகும்.

ஸுப்ஹு மற்றும் ளுஹர் தொழுகைகளில் 'ஹுஜுராத்' முதல் 'அம்ம' வரையிலும் உள்ள சூராக்களில் ஏதாவது ஒரு ஸூராவை ஓதுவதும் அஸர், இஷா தொழுகைகளில் 'அம்ம' முதல் வள்ளுஹா' வரை உள்ள சூராக்களில் ஏதாவது ஒரு சூராவை ஓதுவதும் மக்ரிஃப தொழுகையில் வழ்ளுஹா' முதல் 'அந்நாஸ்' வரை உள்ள சூராக்களில் ஏதாவது ஒரு சூராவை ஓதுவதும் ஸுன்னத்தாகும். இவைகளை விடச் சிறிய சூராவை ஓதவேண்டுமென மஃமூம்கள் விரும்பினால் அவ்வாறு சிறிய சூராவை ஓதி தொழவைப்பது இமாமுக்கு சுன்னத்தாகும்.

குறிப்பிட்ட ஸூராக்கள்:

ஜும்ஆ தொழுகையிலும், அதன் இஷாத் தொழுகையிலும் 'ஜும்ஆ-முனாஃபிக்கீன்' ஆகிய சூராக்களை ஓதுவதும்இ ஜும்ஆவின் ஸுப்ஹு தொழுகையில் 'ஸஜ்தா-தஹ்ரு' ஆகிய ஸூராக்களை ஓதுவதும் ஸுன்னத்தாகும்.

வியாழன் மாலை வெள்ளியிரவு மக்ரிப் தொழுகையிலும் எல்லா நாட்களின் மக்ரிப் மற்றும் ஸுப்ஹுடைய ஸுன்னத் தொழுகையிலும் இஸ்திகாரா, தவாஃப், இஹ்ராம், தஹிய்யத்துல் மஸ்ஜித் போன்ற சுன்னத்தான தொழுகைகளிலும் 'காபிரூன்-இக்லாஸ்' ஆகிய இரு ஸூராக்களை ஓதுவது ஸுன்னத்தாகும்.

ஜனாஸா தொழுகை

ஐங்கால தொழுகையின் ஷர்த்துகளோடு அதிகமான வேறு இரு ஷர்த்துகளும் இதற்கு உண்டு.

1. மய்யித்து அதனோடு சேர்ந்த கபன் துணிகள்இ சந்தூக் பெட்டி ஆகிய யாவும் சுத்தமாக இருக்க வேண்டும்.
2. தொழுபவரின் முன்னில் ஜனாஸா இருக்க வேண்டும்.

ஃபர்ளுகள்:

1. ஃபர்ளான ஜனாஸாத் தொழுகையைத் தொழுகிறேன் என்று நிய்யத் செய்வது. நான்கு தக்பீரை கிப்லாவை நோக்கி அல்லாஹ்விற்காக என்று மூன்று அம்சங்களையும் நிய்யத் செய்வது சுன்னத் ஆகும்.
2. நின்று தொழ சக்தியுடையோர் நின்று தொழுவது ஃபர்ளாகும்.
3. தக்பீர் தஹ்ரீமாவை சேர்த்து நான்கு தக்பீர் சொல்லித் தொழுவது பர்ளாகும்.
ஒவ்வொரு தக்பீரையும் சொல்லும் போது கைகளை உயர்த்தி பின்பு அவைகளை நெஞ்சுக்குக் கீழே கட்டிக் கொள்வது சுன்னத்தாகும்.
4. முதல் தக்பீர் கட்டியவுடன் சூரத்துல் பர்திஹா ஓதுவது ஃபர்ளாகும். ஃபாதிஹாவிற்கு முன் அஊது கூறுவதும் இறுதியில் ஆமீன் கூறுவதும் சுன்னத்தாகும்.
5. இரண்டாவது தக்பீர் கட்டியவுடன் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து சொல்வது ஃபர்ளாகும். அத்துடன் அவர்கள் குடும்பத்தார்களையும் ஸலவாத்தில் இணைத்து ஓதுவதும் ஸலவாத்திற்கு முன் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுவதும் எல்லா முஃமின்களுக்காகவும் துஆ செய்வதும் சுன்னத்துக்களாகும்.
6. மூன்றாவது தக்பீர் கட்டியவுடன் மய்யித்திற்காக துஆ செய்வது ஃபர்ளாகும். துஆவின் குறைந்த அளவு:

الّلهمّ اغفرله وارحمهُ

ஜனாஸா தொழுகைக்கு ஜமாஅத் சுன்னத்தாகும்.

மூன்றாவது தக்பீரில் ஓத வேண்டிய சுன்னத்தான துஆ:

اللهمّ اغفرله واعف عنه وعافه واكرم نزله ووسّع مدخله واغسلهُ بالماء والثّلج والبرد ونقّه من الخطايا كما يُنقّي الثوبُ الابيض من الدّنس وابدله دارا خيرا مّن داره واهلا
خيرا من اهله وزوجا خيرا من زوجه واد خله الجنّة وأعذه من عذاب القبر وفتنته ومن عذاب انّار
اللهمّ اغفر لحيّنا وميّتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأُنثانا
 اللهمّ من احييته منّا فاحيه علي الاسلام ومن توفّيته منا فتوفه علي الايمان 

மய்யித்து குழந்தையாக இருப்பின்:

اللهمّ اجعله فرطا لابويه وسلفا وذخرا وعظة واعتبارا لهما وشفيعا لهما وثقّل به موازنيهما وافوغ الصّبر علي قلوبهما

நான்காவது தக்பீரில்:

الّلهمّ لا بحرمنا اخره ولا بفتنّا بعده واغفر لنا وله

ஃகாயிப் ஜனாஸா:

வெளியூரில் இறந்த நபருக்காக (அந்த ஊர் குறைவான தூரத்தில் உள்ளது என்றாலும்) காயிப் ஜனாஸா தொழுது கொள்ளலாம். வேறுவேறு ஊர்களில் இறந்த மய்யித்துகளுக்காக காயிப் ஜனாஸா தொழுவது சுன்னத் ஆகும்.

ஸலாத்துல் முஸாஃபரி: கஸ்ரு, ஜம்உ தொழுகை:

ளுஹர்,அஸா, இஷா ஆகிய தொழுகைகளை இரண்டு இரண்டு ரக்அத்துகளாகக் குறைத்து தொழுவதற்கு கஸ்ரு என்று பெயர். 'ளுஹர்-அஸர்' இவ்விரண்டையும் மற்றும் 'மஃரிபு-இஷா' இவ்விரண்டையும் ஒன்றின் வக்தில் மற்றொன்றை முற்படுத்தி அல்லது பிற்படுத்தி தொழுவதற்கு ஜம்ஊ என்று பெயர்.

விதிமுறைகள்:
 
1. பயணத் தொலைவு 130 கிலோ மீட்டர் (82 மைல்) அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும்.

2. பயணம் ஹலாலாகதாக இருக்க வேண்டும்.

3. கஸ்ரும் ஜம்உம் தொழுது முடிக்கும் வரை அவர் பயணாளியாக இருக்க வேண்டும்.

4.ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊரை நினைத்து அவர் பயணம் செய்திருக்க வேண்டும்.

5. பயணியுடைய சொந்த ஊரின் எல்லையைக் கடந்திருக்க வேண்டும்.
6. வியாபாரம், உறவினரை சந்தித்தல் போன்று ஏதேனும் சில காரணங்களுக்காகவாவது பயணம் இமைய வேண்டும்.
7. அஸரை ளுஹர் வக்திலும், இஷாவை மக்ரிப் வக்திலும் முற்படுத்தி தொழும்போது ளுஹர் தொழுது முடிப்பதற்குள் அஸரை முற்படுத்தி தொழப்போவதாகவும்இ மஃரிப் தொழுது முடிப்பதற்குள் இஷாவை முற்படுத்தி தொழப்போவதாகவும் நிய்யத் செய்வது அவசியமாகும்.

இதே போன்று ளுஹரை அஸர் வக்தில் பிற்படுத்தி தொழும்போது ளுஹர் வக்து முடியும் முன் அஸருடன் ளுஹரை பிற்படுத்தி தொழுகிறேன் என்றும், மஃரிபை இஷா வக்தில் பிற்படுத்தி தொழும்போது மஃரிப் வக்து முடியும் முன் இஷாவுடன்; மஃக்ரிபை பிற்படுத்தி தொழுகிறேன் என்றும் நிய்யத் செய்து கொள்ள வேண்டும். இரண்டு ஃபர்ளுகளையும் ஒன்று முடிந்தவுடன் மற்றொன்று என்று தாமதமின்றித் தொழுவது அவசியமாகும்.

8. கஸ்ராகத் தொழுபவர்கள் கஸ்ரின்றி பரிபூரணமாக தொழும் இமாமை பின் தொடர்ந்து தொழுவது கூடாது.

ஜும்ஆ

ஜும்ஆ என்ற அரபு வார்த்தைக்கு ஒன்று கூடுதல் என்று பொருள். ஜும்ஆ தொழுகை உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு மட்டும் உரிய வணக்கமாகம். அடிமை-நோயாளிஇ குழந்தைஈ பெண் நீங்கலாக பருவம் அடைந்த ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஜும்ஆ கடமையாகும். (நூல் : அபூதாவூத்)

ஐங்காலத் தொழுகையின் ஷர்த்துக்களுடன் விசேஷமான ஆறு ஷர்த்துக்கள் ஜும்ஆத் தொழுகைக்கு உள்ளன.

1. குறைந்த பட்சம் ஜும்ஆவின் முதல் ரக்அத்தாவது ஜமாஅத்துடன் சேர்ந்து நிறைவு செய்யப்பட வேண்டும்.2. ளுஹர் தொழுகையின் வக்துக்குள் ஜும்ஆவும் அதன் குத்பாவும் நிறைவு செய்யப்பட வேண்டும்.
3. 'ஜும்ஆ' தொழும் அதே ஊரைச் சேர்ந்த உள்ளுர் வாசிகளான பருவம் அடைந்த, நாற்பது ஆண்கள் தொழுகையிலும்இ குத்பாவிலும் தவறின்றி பாத்திஹா சூரா ஓதத் தெரிந்திருக்க வேண்டும்.
4. ஜும்ஆ கடமையான ஊரினுள் ஜும்ஆ தொழ வேண்டும்.
5. ஊரிலுள்ள அனைவரும் ஒரே இடத்தில் எவ்விதச் சிரமும் இன்றி 'ஜும்ஆ' தொழ வசதியிருப்பின், ஒரே ஜும்ஆதான் நிறைவேற்றப்பட வேண்டும்.

குத்பா:

ஜும்ஆ நாளன்று நிறைவேற்றப்படும் இரு குத்பாக்களையும் தொழுகைக்கு முன்பு ஓதுவது அவசியமாகும். ஜும்ஆ நாள் குத்பா ஃபர்ளான ஒன்றாகும்.

குத்பாவின் ஃபர்ளுகள்:

இரண்டு குத்பாக்களும் ஹம்து ஸலவாத்து கொண்டு தொடங்கப்பட வேண்டும். 'அல்ஹம்துலில்லாஹ், அஹ்மதுல்லாஹ், அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் ஸல்லல்லாஹு அலா முஹம்மதின்' என இவைகளுக்குரிய வாசகங்களை ஓதுவது அவசியமாகும்.

இரு குத்பாக்களிலும் இறையச்சம் பற்றி போதிக்கப்பட வேண்டும்.

குர்ஆன் ஷரீபிலுள்ள பொருள் பொதிந்த முழுமையான ஒரு ஆயத்தினை இரு குத்பாக்களில் ஒன்றில் ஓதுவது அவசியமாகும்.  எனினும் ஆயத்தை முதல் குத்பாவில் ஓதுவது சிறப்புடையதாகும்.

இரண்டாவது குத்பாவில் மு.ஃமின்களின் மறுமைப் பேறுக்காக துஆ செய்வது அவசியமாகும்.

குத்பாவின் ஷர்த்துக்கள்:

1. குத்பாவின் பர்ளான பகுதிகளை நாற்பது நபர்கள் கேட்கக் கூடிய அளவிற்கு சப்தமிட்டு ஓதுவது.
2. அரபி வாக்கியங்களினால் ஓதுவது.
3. நின்று ஓத சக்தியுள்ளோர் நின்று ஓதுவது.
4. இரு குத்பாக்களுக்கும் இடையில் சிறிது நேரம் அமர்வது.
5. அவ்ரத்தான (மான உறுப்புகளை) மறைப்பது.
6. உடல்இ ஆடைஇ இடம் பெரிய சிறிய தொடக்குகளை விட்டும்இ நஜீஸ்களை விட்டும் சுத்தமாக இருப்பது.
7. இரு குத்பாக்களின் ஃபர்ளுகள் தொழுகை ஆகியவற்றை முறையே தொடர்ந்து செய்வது.
8. கதீப் ஆணாக இருப்பது.
9. ளுஹரின் வக்தில் குத்பா ஓதுவது.
10. குத்பாக்களை தொழுகைக்கு முன் ஓதுவது.

இமாம் குத்பா ஓதும் போது குத்பாவை காது தாழ்த்தி கேட்பதைப் போன்று மௌனமாக இருப்பது சுன்னத்தாகும்.குத்பாவில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெயரைக் கேட்டால் ஸலவாத்து சொல்வதும்இ ஸஹாபாக்கள் பெயரைக் கேட்டால் ரலியல்லாஹு அன்ஹு சொல்வதும்இ குத்பாவில் துஆ ஓதினால் அதற்கு ஆமீன் சொல்வதும் சுன்னத்துகளாகும். இமாம் குத்பா ஓதும் போது பேசுவது மக்ரூஹ் ஆகும்.

பள்ளிவாசலில் மக்களைத் தாணடிச் செல்வது மக்ரூஹ் ஆகும்.

ஜும்ஆவின் முதல் அதானிற்குப் பிறகு வியாபாரம் போன்ற கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவது மக்ரூஹும் அதன் இரண்டாம் பாங்கு அதானிற்குப் பிறகு ஈடுபடுவது ஹராமும் ஆகும்.

ஜும்ஆ தொழுகையை விட்டு விட்டு (இடைப்பட்ட நேரத்தில் ஜும்ஆ தொழ முடியாதபோது) வெள்ளிக் கிழமை பஜ்ருக்குப் பின் பயணம் புறப்படுவது ஹராமாகும்.

ஜும்ஆவின் சுன்னத்துகள்:

ஜும்ஆவிற்காக குளிப்பது, குளிக்க இயலாதோர் தயம்மும் செய்வது, நகம் வெட்டுவது, கக்கம் மற்றும் மறைவிட முடிகளைக் களைவது, மீசை கத்தரிப்பது, உடல் மற்றும் ஆடையின் அழுக்குகளை அகற்றுவது ஆகியவை சுன்னத்துகளாகும்.

தன்னிடமுள்ள உயர்ந்த ஆடைகளை உடுத்துவது, நறுமணம் பூசிக் கொள்வது, ஜும்ஆவிற்கு ஒரு வழியாகச் சென்று வேறு வழியாகத் திரும்பி வருவது, அமைதியாகவும், கம்பீரமாகவும நடந்தே செல்வது ஆகியவை சுன்னத்துக்களாகும்.  ஜும்ஆவிற்காக நேரத்தோடு வருவது சுன்னத்தாகும். கதீபானவர் குத்பா ஓதும் நேரத்தில் வருவதே சுன்னத்தாகும்.

சூரத்துல் கஃபை ஜும்ஆவின் பகலில் அல்லது அதன் இரவில் ஓதுவதுஇ அதிகமதிகம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து ஓதுவது, அதிகமாக துஆக்களை வேண்டுவதும், தர்மங்களையும் நன்மைகளையும் அதிகமாக செய்வதும் சுன்னத்தாகும்

சுன்னத்தான தொழுகைகள்

உபரியானவை எனப் பொருள் தரும் நபிலான வணக்கங்களை வணங்குவதால் நன்மைகள் கிடைக்கும்.அவைகளை விட்டுவிடுவதால் தண்டனை தரப்படுவதில்லை. ஃபர்ளான வழிபாடுகளில் ஏற்படும் குறைகளi மறுமையில் நிறைவுபடுத்துவதற்காகவே இந்த நபிலான வணக்கங்கள் உள்ளன.

ஃபர்ளுத் தொழுகையின் முன், பின் சுன்னத்துக்கள்:

ளுஹர், அஸர் இவைகளுக்கு முன்பாக இரண்டிரண்டு ரக்அத்துகளாக நான்கு ரக்அத்துகளும், ளுஹருக்குப் பின்பு இரண்டிரண்டு ரக்அத்தாக நான்கு ரக்அத்துகளும், மஃரிபிற்கு முன் (நேரமிருப்பின்) இரண்டு ரக்அத்களும், பின் இரண்டு ரக்அத்துகளும், இஷாவிற்கு முன் இரண்டு ரக்அத்துகளும், பின் இரண்டு ரக்அத்துகளும், ஸுப்ஹிற்கு முன் இரண்டு ரக்அத்துகளும் ஆக மொத்தம் 22 ரக்அத்துகள் ஸுன்னத்தான தொழுகைகளாகும்.

இவற்றில் ஸுப்ஹுக்கும், ளுஹருக்கும் முன் உள்ள இரண்டு ரக்அத்துகள்  ளுஹ்ரு, மஃரிப், இஸாவிற்குப் பின்னுள்ள இரண்டு ரக்அத்துகள் சுன்னத்துல் முஅக்கதாவாகும்.

ஃபர்ளான தொழுகையை விட்டால் களா செய்வது கடமையாவது போல் சுன்னத்தான தொழுகையை விட்டால் அதை களா செய்வது சுன்னத்தாகும்.

ஸுப்ஹுடைய முன் சுன்னத்தில் முதலாவது ரக்அத்தில் 'அலம் நஷ்ரஹ், குல் யாஅய்யுஹல் காபிரூன சூராக்களையும், இரண்டாவது ரக்அத்தில் 'அலம் தர கைப-குல் ஹுவல்லாஹு அஹது' சூராக்களையும் ஓதுவது ஸுன்னத்தாகும். வழமையாக ஓதித் தொழுபவருக்கு இதனால் மூலநோய் நீஙகி விடும்.

வித்ரு தொழுகை:

 இஷா தொழுகையை தொழுது முடித்ததிலிருந்து அதிகாலைப் பொழுது உதயமாகும் வரை வித்ரு தொழுகையை தொழுது கொள்ளலாம். ஒன்றுஇ மூன்று, ஐந்து, ஏழு,ஒன்பது, பதினொன்று என ஒற்றைப் படையாகத் தொழ வேண்டும். குறைந்த அளவு ஒன்றும் அதிகளவு பதினொன்று ரக்அத்துகளும் ஆகும்.

மூன்று ரக்அத் தொழும்போது முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம' சூராவும், இரண்டாவது ரக்அத்தில் குல்யாஅய்யுஹல் காபிரூன' சூராவும், மூன்றாவது ரக்அத்தில் குல் ஹுவல்லாஹு அஹது, குல்அவூது ரப்பில் பலக்இ குல் அவூது ரப்பின்னாஸ்' சூராக்களும் ஓதுவது சுன்னத்தாகும்.
 
ஸலாத்துள் ளுஹா:

ளுஹாவின் குறைந்த அளவு இரண்டு ரக்அத்தும் விரிந்த அளவு எட்டு ரக்அத்தும்  மிக விரிந்த அளவு பன்னிரண்டு ரக்அத்துகளுமாகும். சூரியன் உதித்து ஒரு ஈட்டியின் அளவு உயர்ந்தது முதல் 'ளுஹர்' தொழுகையின் வக்து வரை இதன் நேரமாகும். ஆனால் காலை 9 மணி முதல் 11 மணிவரை தொழுவது மிகச் சிறப்பாகும்.

இதன் முதல் ரக்அத்தில் 'வஸ்ஸம்ஸி' அல்லது காபிரூன்' சூராக்களையோ இரண்டாவது ரக்அத்தில் 'வள்ளுஹா வல்லைலி' அல்லது 'அஹது' சூராக்களை ஓதுவது சுன்னத்தாகும்.

தஹிய்யத்துல் மஸ்ஜித்:

இதன் பொருள் 'பள்ளியின் காணிக்கைத் தொழுகை' என்பதாகும். உள் பள்ளிக்கு செல்பவர் அங்கு சென்று அமருவதற்கு முன் இரண்டு ரக்அத் தொழுது விட்டு அமருவது சுன்னத்தாகும். தகுந்த காரணமின்றி இத்தொழுகையை விடுவது மக்ரூஹ் ஆகும். பள்ளியில் ஜமாஅத் நடைபெறப் போகிறது என்றால், அங்கு நின்று  கொண்டு பர்ளான தொழுகையை எதிர்பார்ப்பது சுன்னத்தாகும். ஏதாவது காரணத்தினால் பள்ளியினுள் சென்ற பிறகு தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழ விரும்பாதோர் மூன்றாம் கலிமாவை

 
سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولاقوّة الاّ بالله العليّ العطيم.
 
நான்கு வை ஓதுவது சுன்னத்தாகும்.

இஸ்திகாராத் தொழுகை:

நன்மையை நாடித் தொழுதல் என்று இதற்குப் பெயர். ஒருவர் ஒரு செயலை செய்வதா அல்லது விடுவதா? அதன் விளைவு நன்மையா? தீமையா? எனத் தடுமாறினால் இஸ்திகாராவுடைய நிய்யத் செய்து இரண்டு ரக்அத் தொழுவதும்இ முதலாவது ரக்அத்தில் ஃபாத்திஹா ஸூராவிற்குப் பின் குல்யாஅய்யுஹல் காபிரூன்' சூராவையும்இ இரண்டாவது ரக்அத்தில் 'குல்ஹுவல்லாஹு அஹது' சூராவையும் ஓதுவது சுன்னத்தாகும். ஒரு தெளிவான முடிவு தெரியும்வரை திருப்பித் திருப்பித் தொழுவது சுன்னத்தாகும்.இதை தொழுத பின்பு ஓத வேண்டிய துஆ:

 
الّلهمّ انّي اسْتخيرك بعلمك واستقدرك بقدرتك. واسالك من فضلك العضيم. فانّك تقدر ولا اقدر. وتعلم ولا اعلم. وانت علاّمالغيوب. الّلهمّ ان كنت تعلم انّ هذا الامر خيرلي في ديني ودنياي وعقبة امري وبجله وآجله فقدّره لي. وباركل لي فيه. ثمّ يسّره لي. وان كنت تعلم انّ هذا الامر شرّلي في ديني ودنياي وعاقبة امري وعاجله وآجله فاصرفني عنه. واصرفه عنّي. واقدر لي الخير اينما كان انّك علي كلّ شيئ قدير

ஸலாத்துல் உளு:

உளுச் செய்த பின் தொழும் தொழுகை' என்று இதற்குப் பெயர். உளு செய்தபின் உளுவின் சுன்னத் என நிய்யத்  செய்து இரண்டு ரக்அத் தொழுவது சுன்னத்தாகும் முதலாவது ரக்அத்தில் பாத்திஹா சூராவிற்குப் பின்,

ولو انّهم اذ ظّلموا انفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرّسول لرجدوا الله توّابا رّحيم
 
என்ற ஆயத்தை ஓதி 'அஸ்தஃபிருல்லாஹ்' என மூன்று முறை கூறி 'குல் யா அய்யுஹல் காபிரூன்' சூராவை ஓதுவதும் இரண்டாவது ரக்அத்தில்,

ومن يعمل سوءا او يظلم نفسه ثمّ يستغفر الله يجد الله غفورا رّحيما

என்ற ஆயத்தை ஓதி 'அஸ்தஃபிருல்லாஹ்' மூன்று முறை கூறி ;குல்ஹுவல்லாஹு அஹது சூராவை ஓதுவதும் சுன்னத்தாகும்.

ஸலாத்துல் அவ்வாபீன்: மதி மறக்கும் நேரத்தில் அல்லாஹ்வை நினைவு கொள்பவர்களின் தொழுகை என்று இதற்குப் பெயர். மஃரிபிற்கும் இஷாவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் வழமையான நபில் தொழுகைகள், தஸ்பீஹ்களை நிறைவு செய்தபின் மிக உச்ச அளவான இருபது ரக்அத்துகளை அல்லது மிகக் குறைந்த அளவான இரண்டு ரக்அத்துகளை அவ்வாபீனுடைய நிய்யத் செய்து தொழுவது சுன்னத்தாகும். அதன்பின் கீழ்வரும் துஆவை மூன்று முறை ஓதுவது விரும்பத்தக்கதாகும்.

اللهم اني أستودعك ايماني في حياتي وعند مماتي وبعد مماتي فاحفظه عليّ انّك علي كلّ شيئ قدير

தஸ்பீஹ் தொழுகை:
 
வாரத்தில் ஒரு முறை அல்லது மாதத்தில் ஒருமுறை அல்லது வருடத்தில் ஒரு முறையாவது இதைத் தொழுவது சுன்னத்தாகும்.
 
இதை இரண்டு இரண்டு ரக்அத்துகளாக இரண்டு ஸலாமில் அல்லது நான்கு ரக்அத்துகளாக ஒரு ஸலாமில் தொழ வேண்டும். இரண்டு இரண்டு ரக்அத்துகளாக பிரித்து தொழுவதுதான் சிறந்தது.
 

முதல் ரக்அத்தில் பர்திஹா ஸூராவிற்குப் பின் அல்ஹாக்கு முத்தகாதுரு சூராவும் இரண்டாவது ரக்அத்தில் வல்அஸ்ரி சூராவம் 3வது ரக்அத்தில் குல்யாஅய்யுஹல் காபிரூன சூராவும், நான்காவது ரக்அத்தில் அஹது சூராவும் ஓதுவது சுன்னத்தாகும்.'ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்' என்ற தஸ்பீஹை 4 ரக்அத்திலும் 300 தடவை ஓதுவது சுன்னத்தாகும்.

நின்ற நிலையில் சூராக்களை முடித்த பின்பு 15 விடுத்தம், ருகூவில் 10 விடுத்தம், இஃதிதாலில் 10 விடுத்தம், முதல் ஸுஜூதில் 10 விடுத்தம், இரு ஸுஜூதின் நடுவில் 10 விடுத்தம், இரண்டாவது ஸுஜூதில் 10 விடுத்தம், இரு ஸுஜூதுகளை முடித்து எழுமுன் அமரும் இருப்பில் 10 விடுத்தம் இவ்வாறு ஒரு ரக்அத்தில் 75 வீதம் நான்கு ரக்அத்துகளில் 300 தஸ்பீஹ் ஓத வேண்டும்.

இரண்டாவது ரக்அத்தில் அத்தஹிய்யாத் ஓதி முடித்தபின் 10 தஸ்பீஹ் ஓதுவதுதான் சிறப்புடையதாகும்.

முதல் ரக்அத்தில் அல்ஹாகுமுத் தகாதுர் சூராவும், இரண்டாவது ரக்அத்தில் வல் அஸ்ரி சூராவும், மூன்றாவது ரக்அத்தில் சூரா காபிரூனும்இ நானகாவது ரக்அத்தில் சூரா இக்லாஸும் ஓதுவது சிறப்பானது. தொழுகை முடிந்த பிறகு கீழ்காணும் துஆவை ஓதுவது சிறப்பானதாகும்.

اَللّهُمَّ انيْ أسئلك توْفيق اهل الهداي واعمال اهل اليقين. ومناصحة اهل التوبة. وعزم اهل الصّبر. وجدّ اهل الخشبية. وطلب اهل الرّغبة. وتعبّد اهل الورع. وعرفان اهل العلم حتي اخافك اَللّهُمَّ انّي أسئلك مخافة تحجزني عن معا صيك . حتي اعمل بطاعتك عملا استحقّ به رضاك. وحتي اناصحك بالّتوبة خوفا منك. وحتي  اخلص لك النصيحة حياء منك. وحتي اتوكال عليك في الامور حسن ظنّ بك  سبحان خالق الناّر 

ஸலாத்துல் ஈதைன்:

பொழுது உதயமானதிலிருந்து ளுஹரின் வக்து வரும் வரை நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகளின் நேரங்களாகும். இவ்விரு பெருநான் தொழுகைகளும் களாவாகிவிட்டால் தொழுவது சுன்னத்துல் முஅக்கதாவாகும்.  உளுஹிய்யாவை அறுக்க வேண்டியிருப்பதால் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை அதன் ஆரம்ப வக்திலும்இ ஃபித்ரு ஜகாத்தை கொடுத்து முடிப்பதற்காக நோன்புப் பெருநாள் தொழுகையை சற்றுக் காலம் தாழ்த்தியும் தொழுவது சுன்னத் ஆகும்.

ஈத் தொழுகையானது தொழுகையின் எல்லாவித ஃபர்ளு, ஷர்த்துகளைக் கொண்ட இரண்டு ரக்அத் தொழுகை ஆகும். எனினும் முதல் ரக்அத்தில் வஜ்ஹத்து ஓதிய பின் ஏழுமுறை  தக்பீர் கூறுவதும், இரண்டாவது ரக்அத்தில் நிலைக்கு வந்த பின்பு ஐந்து முறை தக்பீர் கூறுவதும் சுன்னத்தாகும். ஒவ்வொரு தக்பீர் கூறும்போதும்  இரு கைகளையும் உயர்த்தி பின்பு அவைகளைக் கட்டிக் கொள்வதும் மற்றும் இந்த தக்பீர்களுக்கிடையில் 'ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்' எனச் சொல்வதும் சுன்னத்துக்களாகும். ஃபாத்திஹா சூராவிற்குப் பின் 'காஃப்'; (50வது) சூரா  அல்லது 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல்'; சூராவும் இரண்டாவது ரக்அத்தின் ஆரம்பத்தில் 'ஹல்அதாக' சூராவும் ஓதுவதும் சுன்னத்தாகும்.

இரு பெருநாட்களின் முதல் நாள் மாலை சூரியன் மறைந்தது முதல் பெருநாள் தொழுகை தொழத் தொடங்கும் வரை எல்லாத் தொழுகைகளுக்குப் பின்பும் தெருக்களிலும், வீதிகளிலும், வீடுகுளிலும் நின்ற, அமர்ந்த, படுத்த அமைப்புகளிளெல்லாம் தக்பீர் சொல்லிக் கொண்டே இருப்பது சுன்னத்தாகும். இதற்கு தக்பீர் முர்ஸல் என்று பெயர். ஹஜ்ஜுப் பெருநாளில் அரபா தினத்தின் ஸுப்ஹுத் தொழுகையிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் (துல்ஹஜ் பிறை 13) அஸர் வரை எல்லாத் தொழுகைகளுக்கும் பின்பு மட்டும் தக்பீர் சொல்வது சுன்னத்தாகும். இதற்கு தக்பீர் முகய்யத்' என்று பெயர் மேலும் துல்ஹஜ் பிறை 1 முதல் 10 வரை ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய குர்பானிப் பிரயாணிகளைப் பார்க்ககும் போதோ, இவைகளின் சப்தங்களைக் கேட்கும்போதோ தக்பீர் சொல்வது சுன்னத்தாகும்.


தக்பீர்:

الله اكبر الله اكبر الله اكبر لااله الاّ الله والله اكبر الله اكبر ولله الحمد.. (2
الله اكبر الله اكبر الله اكبر كبيرا والحمد الله كثيرا وسبحان الله بكرة وّأصيلا لا اله الاّ الله ولا نعبد الاّ اياه مخلصين له الدّين ولو كره الكافرون لااله الاّ الله وحده وصدق وعده ونصر عبده وأعزّ جنده
 وهزم الاحزاب وحده لااله الاّ الله والله اكبر الله اكبر ولله الحمد 

தொழுகைக்குப் பின்பு குத்பா ஓதுவது சுன்னத்தாகும். ஜும்ஆ குத்பாவின் ஃபர்ளு, ஷர்த்துகளுடன் முதல் குத்பாவை ஒன்பது தக்பீர்களைக் கொண்டும், இரண்டாவது குத்பாவை தொடர்ச்சியான ஏழு தக்பீர்களைக் கொண்டும் தொடங்குவதும் பெருநாள் குத்பாவின் சொற்றொடர்களுக்கு இடையே தக்பீர் கூறுவதும் சுன்னத்தாகும்.

ஸலாத்துல் குஸூபைன்: சந்திர,சூரிய கிரகணத் தொழுகைகைள்:

சந்திர, சூரிய கிரகணங்கள் பிடிக்கத் துவங்கியது முதல் அது நீங்கும் வரை அல்லது கிரகணம் பிடித்த நிலையிலேயே சூரியன் மேற்கில் மறையும் வரை அல்லது சந்திர கிரகணம் ஏற்பட்ட நிலையில் காலை பொழுது புலரும் வரை கிரகணத் தொழுகைகளைத் தொழுவது சுன்னத்துல் முஅக்கதாவாகும்.

சாதாரண சுன்னத் தொழுகையைப் போன்று கிரகணத் தொழுகைக்காக நிய்யத் செய்து இரண்டு ரக்அத் தொழுது முடிப்பது இதன் குறுகிய அமைப்பாகும்.

இரண்டாவது முறை முதல் ரக்அத்தில் பர்திஹாவிற்குப் பின் சூரா பகரா அல்லது அதே அளவில் வேறு சூரா ஓதி முடித்து ருகூவிற்கு சென்று சூரா பகராவின் நூறு ஆயத்துகள் அளவிற்கு அங்கு தஸ்பீஹ் ஓத வேண்டும். பின்பு அங்கிருந்து நிலைக்கு வந்து திரும்பவும் பாத்திஹா சூராவையும் ஆலஇம்ரான் சூராவை அல்லது அதே அளவில் வேறு சூராவை ஓதிய பின் இரண்டாவது முறையாக ருகூவிற்கு செல்ல வேண்டும். அதில் சூரத்துல் பகராவின் எண்பது ஆயத்துக்கள் அளவிற்கு தஸ்பீஹ்கள் ஓத வேண்டும்.

சூரத்துல் பகராவின் நூறு மற்றும் எண்பது ஆயத்துகள் அளவு தஸ்பீஹ்களை முதலாவது ஸுஜூதிலும் இரண்டாவது ஸுஜூதிலும் ஓத வேண்டும். இதே போல் அடுத்த ரக்அத்தில்பாத்திஹா சூராவிற்குப் பின் சூரத்துன் னிஸாவையோ அதே அளவுள்ள சூராக்களையோ ஓத வேண்டும்.இரண்டாவது நிலைகயில் பாத்திஹாவிற்குப் பின் சூரத்துல் மாயிதாவையோ அதே அளவுள்ள வேறு சூராவையோ ஓத வேண்டும். இரண்டாது ரக்அத்தின் முதல் ருகூஉஇ ஸுஜூதுகளில் சூரத்துல் பகராவின் எழுபது ஆயத்துகள் அளவிற்கும், இரண்டாவது ருகூஉ, ஸுஜூதுகளில் சூரத்துல் பகராவின் ஐம்பது ஆயத்துகள் அளவிற்கும் தஸ்பீஹுகள் ஓதி தொழ வேண்டும். இதுவே கிரகணத் தொழுகையின் பரிபூரண அமைப்பாகும்.

தொழுகைக்குப் பின்பு ஜும்ஆ குத்பாவின் ஃபர்ளு, ஷர்த்துகளுடன் முதல் குத்பாவை ஒன்பது தக்பீர்களைக் கொண்டு குத்பா ஓதுவது சுன்னத்தாகும்.

ஸலாத்துல் இஸ்திஸ்கா: மழை தேடித் தொழுதல்.

தண்ணீர் அறவே இல்லாத போது அல்லது தேவையான அளவை விட குறைவாக கிடைக்கும் போது மழை தேடி தொழுவது சுன்னத்தாகும். தொடர்ந்து மூன்று நாட்கள் நோன்பு நோற்ற பின் நான்காவது நாளில் நோன்பு நோற்ற நிலையில் வயோதிகர்கள் சிறார்கள் அனைவரும் பழைய ஆடைகளை அணிந்து பெருநாள் தொழுகையைப் போன்று இரண்டு ரக்அத்துகள் தொழுவது இதன் அமைப்பாகும்.

முதல் ரக்அத்தில் ஏழு முறை தக்பீர் கூறி கைகளைக் கட்டிக் கொண்ட பின் பாத்திஹா சூரா ஓதி காப் அல்லது ஸப்பிஹிஸ்ம சூரா ஓதுவதும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து முறை தக்பீர் கூறிய பின் பாத்திஹா சூரா ஓதி முடித்து இக்தரபத்திஸ்ஸாஅத்து' அல்லது 'ஹல் அதாக' சூரா ஓதுவதும் ஸுன்னத்தாகும்.

பெருநாள் குத்பா போன்று இதிலும் இரண்டு குத்பாக்கள் ஓதுவதும் இதன் முதல் குத்பாவில் ஒன்பது தடவையும், இரண்டாவது குத்பாவில் ஏழு தடவையும் 'இஸ்திக்பார்' கொண்டு ஆரம்பிப்பதும் சுன்னத் ஆகும்.

இரண்டாவது குத்பாவின் இடையில் இமாம் கிப்லாவை நோக்கித் திரும்பியவாறு தனது மேனியிலுள்ள துண்டை-அதன் மேல் பகுதியைக் கீழ்ப் பகுதியாகவும் இடப் பகுதியை வலப் பகுதியாகவும் புறப்பகுதியை உட்பகுதியாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும். இதுபோன்று மக்களும் செய்வதோடு அனைவரும் சப்தமின்றி துஆ செய்வதும் சுன்னத்தாகும்.

தாவீஹ் தொழுகை:

 
'ஓய்வு கொள்ளும் தொழுகை' என்பது இதன் பொருள். தாவீஹ் தொழுகை நோன்பு காலங்களில் இஷாவிற்கு பின் இரண்டிரண்டு ரக்அத்துகளாக பத்து ஸலாமில் 20 ரக்அத்துகள் தொழ வேண்டும். இதை ஜமாஅத்தாக தொழுவது போன்று தனியாகவும் தொழுது கொள்ளலாம். ரமலான் 30 நாட்களுக்குள் குர்ஆன் ஷரீபை பரிபூரணமாக ஓதித் தொழுவது சுன்னத்தாகும். எனினும் அவரவர்களுக்குத் தெரிந்த சூராக்களை ஓதியும் தொழுது கொள்ளலாம்;.


தஹஜ்ஜுத்:

இரவுப் பொழுதில் சற்றேனும் உறங்கி விழித்பின்பு தொழும் சுன்னத்தான தொழுகையாகும். இதை வழமையாக தொழுபவர் காரணமின்றி இதை விடுவது மக்ரூஹ் ஆகும்.

இதன் குறைந்த அளவு இரண்டு ரக்அத்துகள். கூடிய அளவு பன்னிரண்டு ரக்அத்துகள். மிக விரிந்த அளவு கணக்கற்ற ரக்அத்துகள்.
  
ஸுஜூதுகள்


ஸஜ்தா ஸஹ்வு

மறந்ததற்காக ஸுஜூது செய்தல்' என்பது இதன் பொருள் ஆகும். தொழுகையின் கடைசி அத்தஹிய்யாத் ஓதி முடித்த பின்பு ஸலாம் கொடுப்பதற்கு முன்பாக இரண்டு ஸஜ்தா செய்வதை இது குறிக்கிறது.

இவ்விரண்டு ஸுஜூதுகளும் ஃபர்ளுகளை விட மேலதிகமான செயல்களாக இருப்பதால் இவற்றைச் செய்யத் தொடங்கும்போது 'மறதிக்காக ஸுஜூது செய்கிறேன்' என்றுநிய்யத் செய்வது ஃபர்ளாகும். இதில்,

سبحان من لاّينام ولايسهو

என்று தஸ்பீஹ் ஓதுவது சிறப்பானது என்று சொல்லப்படுகிறது.கீழ்வரும் காரணங்களில் ஒன்றுக்காக ஸஜ்தா ஸஹ்வு செய்வது சுன்னத் ஆகும்.

 
1. அப்ஆழ் ஸுன்னத்துகளில் ஏதாவதொன்றை விட்டுவிடுதல்
2. அல்லது விட்டுவிட்டதாக சந்தேகித்தல்.

3. வேண்டுமென்றே செய்தால் தொழுகையை முறித்து விடும். மறந்து செய்தால் தொழுகையை முறிக்காது என்ற நிலையிலுள்ள செயலைத் தொழுகையில'; மறந்து செய்தல்.

4. தொழுகையில் ஓத வேண்டியவைகளை அதற்குரிய இடம்விட்டு வேறிடத்தில் ஓதுதல்.

5. தொழுகையில் ஒரு ரக்அத்தையோ, ஃபர்ளையோ செய்யாமல் விட்டு விட்டதாகச் சந்தேகித்து மீண்டும் செய்தல்.

அப்ஆழ் சுன்னத்:

1. முதலாவது அத்தஹிய்யாத் ஓதுதல்.
2. அதற்காக அமர்தல்.
3. அதன் இறுதியில் அண்'ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓதுதல்.
4. ஸுப்ஹுடைய ஃபர்ளுத் தொழுகையிலும், ரமலான் மாத இறுதி 15 நாட்களில் வித்ரின் கடைசி ரக்அத்தில் குனூ|த் ஓதுதல்.
5. குனூத்திற்காக நிற்றல்.
6. குனூத்தின் இறுதியில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அiலி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓதுதல்.
7. குனூத்தினுடைய ஸலவாத்தின் இறுதியிலும் பிந்திய அத்தஹிய்யாத்தினுடைய ஸலவாத்தின் இறுதியிலும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உறவினர்களையும் சேர்த்து  ஸலவாத் ஓதுதல்.

ஸுஜூதுத் திலாவத்

ஸஜ்தாவின் ஆயத்தை ஓதியதற்காக  ஸுஜூது செய்தல் என்பதன் இதன் பொருளாகும். ஸூரத்துல் ஹஜ்ஜில் இரண்டு ஸஜ்தாக்கள், நஜ்ம் அஃராஃப்,ரஃது, நஹ்லு, மர்யம், புர்கான், நம்லு, அலிப் லாம் மீம் ஸஜ்தா, ஹாமீம் ஸஜ்தா, அல் இஸ்ரா, இன்ஷிகாக், அலக் ஆகிய ஸூராக்களில் ஒவ்வொரு ஸஜ்தாக்கள் ஆக மொத்தம் பதினான்கு ஸுஜூதுகள் உண்டு.
 
குர்ஆன் ஷரீபை ஓதிக் கொண்டிருப்பவர்கள் இந்த சுன்னத்தான ஸுஜூதை நிறைவேற்றுவதற்கு தொழுகையின் எல்லா ஷர்த்ததுக்களையும் பேணிக் கொள்ள வேண்டும். அத்துடன் திலாவத்துடைய ஸுஜூது செய்வதாக நிய்யத் செய்து தக்பீர் தஹ்ரிமா கட்ட வேண்டும். பின்பு ஒரே ஒரு ஸுஜூது செய்து சலாம் சொல்ல வேண்டும்.

 
سجد وجهي للذي خلقه وصوّره وشقّ سمعه وبصره بحوله وقوّته فتبارك الله احسن الخالقين.
اللّهم اكتب لي بها عندك اجرا واجعلها لي عندك ذخرا وضع عنّي بها وزرا واقبلها منّي كما قبلتها من
   عبدك داؤد 

என சுஜூதில் ஓதுவது சுன்னத்தாகும்.

ஸஜ்தா ஆயத்தை ஓதியதற்காக ஸுஜூது செய்வது சுன்னத்தாகும். ஆனால் இமாம் இதை ஓதியதற்காக ஸுஜூது செய்யும்போது மஃமூம் ஸஜ்தா செய்வது ஃபர்ளாகும்.

ஸஜ்தா ஷுக்ரு:

நமக்கு ஏதாவதொரு நன்மை கிடைக்கப் பெற்றாலோ, அபாயங்கள், ஆபத்துக்களிலிருந்து பாதுகாவல் கிடைக்கப் பெற்றாலோ ஷுக்ராக ஸுஜூது செய்வது சுன்னத்தாகும். இதற்கு தொழுகையின் எல்லாவிதமான ஷர்த்துக்களையும் பேணிக் கொள்ள வேண்டும்.அத்துடன் ஷுக்ருடைய ஸஜ்தா செய்வதாக நிய்யத் செய்து தக்பீர் கட்டிக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரே ஒரு ஸஜ்தா செய்ய வேண்டும்.

ஆனால் தொழுகையை நிறைவு செய்தபின் மேற்சொன்ன காரணங்கள் எதுவுமின்றி ஸுஜூது மட்டும் செய்வது ஹராமாகும்.