புகை பிடிப்பது ஆகுமானதா?-Is Smoking permissible?
By Sufi Manzil
கேள்வி: பீடி, சிகரெட் புகைக்கலாமா? மத்ரஸாக்களில் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது புகை பிடிக்கலாமா?
பதில்: பீடி, சிகரெட் போன்றவைகளை புகைப்பதால்' மற்றவர்களுக்கு வெறுப்பு ஏற்படும் என்றிருந்தால் அது மக்ரூஹ்.(நூல்: அல்ஹதீகத்துன் நதிய்யா ஷரஹ் அத்தரீகத்துல் முஹம்மதிய்யா பாகம் 1 பக்கம் 113)
திருமறை ஓதும் போதும், தப்ஸீர், ஹதீஸ் மற்றும் மார்க்கப் போதனைகளை நடத்தும்போதும் சிகரெட், ஹுகு;கா, வெற்றிலை போன்றவற்றை உபயோகிப்பது நல்லொழுக்கத்தைச் சார்ந்ததல்ல. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள், 'உங்கள் வாய்களை மிஸ்வாக் செய்தவன் மூலம் மணமாக்கி வையுங்கள். ஏனெனில் உங்கள் வாய்கள் திருக்குர்ஆன் வெளிவரும் வழியாக இருக்கிறது.(முஸ்லிம், அபூதாவூத், தப்ரானி, அஹ்மத்) நூல்: பதாவா ஆப்ரிக்கா பக்கம் 38.
இது குறித்து மேலும் அல்லாமா அப்துல் ஹை லக்னவீ அவர்கள் 'தாவீஹுல் ஜினான்பிதஷ்ரீஹி ஹுகமி ஷுர்பித் துகான்' என்ற நூலில் தெளிவான விபரங்'களைத் தந்துள்ளார்கள்.
நன்றி: வஸீலா 15-3-87.