ஜும்ஆவிற்கு முன் தமிழில் உள்பள்ளியில் பயான் பண்ணுவது ஹராம் என்பதற்குரிய பத்வா ஆதாரங்கள்…-Is Jumma Bayan in Arabic Than other Languages(Arabic/Urudu)
By Sufi Manzil
பள்ளிவாசலினுள் ஜும்ஆ குத்பாவிற்கு அரபியைத் தவிர்த்து ஏனைய மொழிகளில் பயான் செய்வது ஹராம்-தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்கான பத்வாக்கள்:
1. சமஸ்த கேரள பத்வா மொழிபெயர்ப்பு:
இஃது சமஸ்த கேரள உலமாக்களிடம் நீங்கள் கேட்டகேள்விக்கு விடை:
இஃது 11-1-1973-ல் சமஸ்த கேரளா ஜம்இய்யத்துல் உலமா பத்வா கமிட்டியார் கொடுத்த பத்வா(மார்க்க தீர்ப்பு)
ஜும்ஆ நாளில் பாங்குக்கு முன் உபன்னியாசம் செய்வது பழங்காலத்திலிருந்து வந்திருக்கும் வழக்கத்திற்கும், முன்னோர்கள், பின்னோர்களுடைய நடைமுறைக்கும் மாற்றமானதாகும். மேலும் குத்பாவுக்கு முன் செய்யும்படியாக வந்த சுன்னத்தான அமல்களை செய்யவிடாது விலக்கக்கூடியதுமாகும். ஆகையால் அந்நேரத்தில் உபன்னியாசம் செய்வது கூடாது. அஃது அழகல்லாத(கெட்ட) பித்அத்தாகும்.
2. பெங்களுர் பத்வா:
கேள்வி: சில உலமாக்களிடத்தில் மிம்பர் மீது நின்று ஜும்ஆ குத்பாவை தர்ஜமா செய்வது ஆகாது. மிம்பருக்கு பக்கத்தில் நின்று ஜும்ஆ குத்பாவுக்கு முன்னால் நீளமாக வஃளு செய்வது சுன்னத்தா? ஜாயிஸா?
விடை: சில பள்ளிவாசல் இமாம்கள், சுன்னத் தொழுகிற நேரத்தில் ஜும்ஆ பாங்குக்கு முன்னால் அல்லது பின்னால் ஜும்ஆ தினத்தில் உர்தூ அல்லது வேறு பாசைகளில் வஃளு செய்வதும், பின் மிம்பரில் ஏறிக் கொண்டு அரபியில் குத்பா ஓதுவதும் (இது சுன்னத்தான தொழுகைகளுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. குத்பாவை திரும்ப ஓதுவதாகவும் ஆகிறது. ஜனங்களுக்கு சடவை உண்டாக்கக்கூடியதாகவும் இருக்கிறது.)ரெம்ப இகழப்பட்டதாகும். அழகற்ற கருமமாகும். ஏனென்றால், ஹததீதின் பிரகாரமும், பிக்ஹின் படியும் வழக்கமாக வந்த சுன்னத்தாகிறது ஜும்ஆ குத்பா சுருக்கமாகவும், ஜும்ஆ தொழுகை நீளமாகவும் இருப்பதுதான். இதற்கு மாற்றம் சுன்னத்திற்கு மாற்றமாகும்.
மிஷ;காத்-நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுடைய குணங்கள் என்னும் பாடத்தில்,
‘நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் எப்போதும் ஜும்ஆ குத்பாவை சுருக்கமாகவும், ஜும்ஆ தொழுகையை நீட்டியும் தொழுது வந்தார்கள். இன்னும், முஹத்திது முல்லா அலீ காரி இந்த ஹதீதின் விரிவுரையில் சொல்கின்றார்கள்:-
‘ஜும்ஆவுடைய குத்பா ஜனங்களின் கவனத்தை ஹக்கின் பக்கம் திருப்புவதற்காக வேண்டி உபதேசம் செய்வதற்காக உண்டாக்கப்பட்டிருக்கிறது. இதில் கதீப் நளினமாகவும், நாகரீகமாகவும் பேசுவதினாலும், அதிகமாகப் பேசுவதினாலும் முகததாட்சணையும், பெருமையும் ஏற்படுவதற்கு சாத்தியம் இருப்பதனாலும், சடைவு ஏற்படாமல் இருப்பதற்காகவும் ஜும்ஆ குத்பாவை சுருக்குவது சுன்னத். ஜும்ஆ தொழுகையானது முஃமின்களுக்கு மிஃராஜாக இருப்பதனால் அல்லாஹ்வுடன் வசனிப்பதற்காக உண்டாக்கப்பட்டுள்ளது. இது நீளமாக இருப்பது அவசியம்.பரக்கத்தையும், கைரையும் உண்டாக்கக் கூடியதும் கருணையும், கிருபையும் வருவதற்குக் காரணமுமாகும்.
மிர்காத் 5வது ஜுஸ்உ 396 ம் பக்கத்தில் வருகிறது,
இக்காலத்தில் சில இமாம்கள், மிம்பர் மீது நின்று ஜும்ஆ குத்பாவில் சப்தமிட்டு, குறிப்பான மனிதர்களைப் பற்றி கூறுகிறார்கள். மேலும், அவர்களுடைய மைதானம் என்று எண்ணிக் கொண்டு சொந்த விஷயங்களிலும் இறங்குகின்றனர். இவர்கள் அசலில் ஷரகின்படி ஒழுக்கமான கதீப் அல்ல. மேலும் இவர்கள் கூளம் பொறுக்கக் கூடிய கதீபாகும்! இவர்கள் குத்பாவின் தத்துவத்தை,(அறியமாட்டர்கள்) விளங்காதவர்கள். ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திதுத் திஹ்லவி தமது கௌலுல் ஜமீல் என்னும் கிதாபில் இது பற்றி தெளிவாக எழுதியிருக்கிறார்கள். மேலும் இம்மாதிரி மனிதனை, கதீபாக நியமிப்பதினால் ஜமாஅத்தார்கள் பாவிகளாகிவிடுகிறார்கள். அல்லாஹ் குர்ஆனில் சொல்வது போல்,
நல்ல கருமங்கள் பேரிலும், தக்வா பேரிலும் உதவியாக இருங்கள். பாவங்களின் பேரிலும், பகைமைத்தனத்திலும் உதவியாக இருக்காதீர்கள்.
சில உலமாக்கள் மிம்பர் மீது ஏற் நின்று ஜும்ஆவுடைய குத்பாவை அரபியல்லாத பாசையில் ஓதுவது சுன்னத்துக்கு மாற்றம். பித்அத் என்று சொல்லியிருக்கிறார்கள். வேடிக்கையாவது இவர் தானே ஒரு பித்அத்தை சொல்கிறவராக இல்லை, செய்கிறவராக இருக்கிறார். விரண்டோடியதளவில் மீண்டார். மழையை விட்டு ஓடி தண்ணீர் மடைக்குக் கீழ் தங்கினான் என்பதற்கொப்பாகும். அதாவது, மிம்பர் மீது அரபியில் குத்பா ஓதுவதற்கு முன் சுன்னத், நபில்கள் செய்கிற நேரத்தில், அரபியல்லாத குத்பா (வஃளு) மிம்பருக்குப் பக்கத்தில் நின்று அல்லது மிம்பருக்கு மேலேயே இருந்து கொண்டு(சில நாட்களுக்கு முன் ஒரு பெரிய மௌலானா அப்படி குத்பா ஓதினார்) வஃளு சொல்ல ஆரம்பிக்கிறார். மேலும் வேடிக்கை, சில ஆதாரங்கள் காட்டுகின்றனர். ஸஹாபாக்கள், தாபிஈன்கள், குலபாவுர்ராஷிதீன்கள் அதாவது உமர், உதுமான் ரலியல்hஹு அன்ஹுமா ஆகியோரின் காலத்தில் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், அபூதமீம் தாரானியும் அனுமதி வாங்கி குத்பாவுக்கு முன் வஃளு சொன்னார்கள் என்று ஆதாரம் காட்டுகின்றார்கள். மேலும் சொல்கின்றனர், உமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆரம்ப காலத்தில் அனுமதி கொடுக்கவில்லை. ஆனால் அவர்களுடைய கிலாபத்தின் கடைசி காலத்தில் அனுமதி கொடுத்தர்கள் என்றும் சொல்கின்றார்கள். இது ஆதாரமற்ற ஒரு ரிவாயத்தாகும்.
அப்படி அவர்கள் சொன்னார்கள் என்பதை நாம் உப்புக் கொண்டாலும், ஸஹாபாக்கள் குத்பாவை 5, 6 நிமிடங்களில் முடித்துள்ளார்கள். அதனால், சுன்னத், நபில்கள் தொழுவதற்கு இடைஞ்சல் இல்லாதிருந்தது. முடிவாக: ஜும்ஆ நாளில் இரண்டு குத்பா (அரபியும், அரபியல்லாததும்) ஒன்று சேருவது தொழுகைக்கு முன்னால் சுன்னத்தானது-வழுக்கமானது என்பதற்கு ஆதாரமில்லை. அசலில் தரிபட்டதாக இருக்குமானால் அதற்கு இன்ஷாஅல்லாஹ் விபரமான பதில் சொல்வோம்!
அல்லாஹ் மிக அறிந்தவன்.
14-1-1959 இதை எழுதியவர்
முப்தீ அபுல்கலாம் முஹம்மது ஹபீபுல்லாஹ் பாகவீ,
நத்வீ, ஹனபீ, காதிரீ, வேலூரீ
முப்தீ தாறுல் இப்தாஉ, ஸத்ர் முதர்ரிஸ்
மதரசா ஹக்கானிய்யா அரபிய்யா,
பெங்களுர் சிட்டி.
3. பொதக்குடி அன்னூருல் முஹம்மதிய்யு அரபிக் கல்லூரி பத்வா:
பொதக்குடி மத்ரஸா அன்னூருல் முஹம்மதிய்யு உலமாக்கள் சமுகத்திற்கு காயல்பட்டணம் சதுக்கைத் தெருவைச் சார்ந்த ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் உடைய அஸ்ஸலாமு அலைக்கும்.
கீழ்காணும் வினாவிற்கு தகுந்த இஸ்லாமிய மார்க்க தீர்ப்பளித்து அல்லாஹ்விடம் நற்கூலி பெறுவீர்களாக.
வினா?: வெள்ளிக்கிழமை தினத்தில் கதீப் மிம்பரில் ஏறி குத்பா ஓதுவதற்கு முன், கூடியிருக்கும் மக்களுக்கு பிரசங்கம் செய்யலாமா? ஷாபிஈ மத்ஹபின் பிரகாரம், பத்வா தரும்படி வேண்டுகிறேன்.
இங்ஙனம்
ஊண்டி செய்யிது முஹம்மது.
விடை: வினாவில் கண்டபடி பள்ளிவாசல் என்பது அசலில் தொழுகக் கூடியவர்களுக்கு மட்டும் வக்பு செய்யப்பட்டிருப்பதால்- குத்பா ஓதுவதற்கு முன் தொழுகக் கூடியவர்களுக்கு இடைஞ்சல் உண்டாகும்வித்தில் மக்களுக்கு உபதேசம் செய்வதோ, குர்ஆன் ஓதுவதோ மக்ரூஹான விஷயமாகும். இந்த மக்ரூஹ் என்பது இடைஞ்சல் லேசாக இருந்தால்.
தொழுகக் கூடியவர்களுக்கு இடைஞ்சல் அதிகம் இருந்தால் சப்தமிட்டு குர்ஆன் ஓதுவதும், பிரசங்கம் செய்வதும் ஹராம் உண்டாவதற்கு ஏதுவாகும். இப்படி ஷாபிஈ மதுஹபு கிதாபுகளான பத்ஹுல் முயீன், இஆனா, கல்யூபி, நிஹாயதுஸ்ஸைன் போன்ற கிதாபுகளில் ஜும்ஆ உடைய பாடத்திலும் தொழுகையுடைய பாடத்திலும் காணப்படுகிறது.
வல்லாஹு அஃலம் பி ஜவாப்.
மௌலவி ஏ.கே.எம். ஜியாவுத்தீன்
நாளிர், அன்நூருல் முஹம்மதிய்யு மத்ரஸா டிரஸ்ட்.
26-2-80
இஸ்தான்புல்(துருக்கி) பத்வா:
பத்வா ஹம்ஸியா(இந்தியா):
தமீம் ஹஜ்ரத், மதராஸ் தலைமை காஜி பத்வா:
காழி ஹபீபுல்லாஹ் ஹஜ்ரத்(மதராஸ்) பத்வா: