Imam Jainul Abdeen-இமாம் ஜைனுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹு.

Imam Jainul Abdeen-இமாம் ஜைனுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹு.

By Sufi Manzil 0 Comment March 8, 2010

Print Friendly, PDF & Email

 

இமாம் ஜைனுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹு.

இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனாக ஹிஜ்ரி 38 வெள்ளிக் கிழமை பிறந்த இவர்களின் பெயர் அபுல் ஹஸன் அலீ என்பதாகும். இவர்களிலிருந்தே ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வழித்தோன்றல்கள் தோன்றியுள்ளார்கள். இவர்களின் அன்னை பாரசீக நாட்டின் கடைசி மன்னர் யஸ்ஜர்தின் மகள் ஸஹர்பானு என்றும், சிந்து நாட்டைச் சார்ந்த ஸுலாஃபா என்றும் இரு வேறு கருத்துக்கள் உள்ளன. இவர்களை ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், 'யா வலதத்துல் ஹிந்த்'(இந்திய மகனே) என்று அழைத்து வந்ததாகவும் தெரிகிறது.

நாளொன்றுக்கு 1000 ரக்அத்துகள் தொழுதன் காரணமாக ஒட்டகையின் முழங்கால்களைப் போல் இவர்களுடைய கால்கள் காய்ச்சிப் போனதென்றும்,அதன் காரணமாக இவர்களுக்கு 'ஸுத்தா ஃபினாத்' எனும் பெயர் ஏற்பட்டதென்றும் தெரிகிறது. இரவில் ஏழைகளின் வாயில்களில் யாருக்கும் தெரியாமல் உணவுகளை வைத்துவிட்டு வரும் வழக்கமுடையவர்களாய் இருந்தார்கள். அதனால் இவர்களுக்கு தோளில் தழும்புகள் ஏற்பட்டிருந்தது.

இவர்களின் அடிமை ஒருவன் ஓர் ஆட்டைப் பிடித்து அதன் காலை ஒடித்துவிட்ட போது, இவர்கள் அவனை நோக்கி, 'ஏன் இவ்வாறு செய்தாய்?' என்று வினவ, 'உங்களுக்கு கோபமூட்டவே இவ்வாறு செய்தேன்' என்று அவன் கூறினான். உடனே இவர்கள் உனக்கு இதைக் கற்றுத் தந்த இப்லீஸை நான் கோபமூட்ட விரும்புகிறேன் என்று கூறி அவ் வடிமையை விடுதலை செய்துவிட்டர்கள்.

இவர்கள் தங்கள் அன்னைக்கு கடமையை ஒழுங்காக செய்து வந்தார்கள். 'நீங்கள் அன்னைக்கு ஊழியம் புரியும் அருமை மகனாக இருக்க ஏன் அவருடன் சேர்ந்து ஒரே தட்டில் உண்ணாதிருக்கிறீர்கள்? என்று வினவப் பட்டபோது, 'நான் எடுக்கும் உணவை அவர்கள் எடுக்க நாடி அதற்குமுன் நான் அதனை எடுத்து உண்டுவிடின், நான் அவர்களுக்கு தவறிழைத்தவனாகிவிடுவேளோ! என்ற அச்சத்தில்தான் அவ்விதம் செய்வதில்லை' என்று கூறினார்கள்.

கர்பலா போர்க் களத்தில் சிறு குழந்தையாகயிருந்த இவர்கள் காயச்சலினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர். அதனால் இவர்கள் கொல்லப்படாமல் அல்லாஹ் காத்தருளி இவர்கள் மூலம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் வழித் தோன்றல்கள் உருவாக வழி ஏற்படுத்தினான்.

இவர்கள் ஹிஜ்ரி 94 ல் மதீனாவில் மறைந்து இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அருகில் ஜன்னத்துல் ஃபகீயில் அடக்கப்பட்டார்கள்.