Imam Hussain-ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு.
By Sufi Manzil
ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு.
காதிரிய்யா ஆலிய்யா மற்றும் காதிரிய்யா அக்பரிய்யா தரீகாவின் மூன்றாவது ஷெய்காக இவர்கள் வருகிறார்கள்.
இவர்கள் தங்கள் தந்தை அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து ஆன்மீகத் தொடர்பை பெற்றார்கள். தங்கள் மகனார் ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு அத் தொடர்பை விட்டுக் கொடுத்தார்கள்.
அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் பாத்திமா நாயகி அவர்களுக்கும் இரண்டாவது மகனாக ஹஜ்ரி 4 ஷஃபான் பிறை 5 ல் மதீனாவில் பிறந்தார்கள். இடுப்புக்கு மேல் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை உருவத்தில் ஒத்திருந்தவர்கள் இவர்களின் சகோதரர் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். இடுப்புக்கு கீழே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒத்திருந்தார்கள்.
தங்கள் சகோதரர் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மறைவிற்குப் பின் மதீனாவிலேயே தங்கி வாழ்ந்து வந்தார்கள். தங்களுக்குப் பின் தம் மகன் யஸீதை கலீபாவாக நியமித்து விட்டு முஅவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மறைந்ததும் இவர்கள் மக்கா புறப்பட்டார்கள்.
யஸீது கலீபா பதவி வகிக்க தகுதியற்றவர் என்று கருதிய கூஃபா மக்கள், இவர்களை கூஃபா வருமாறும் தாங்கள் உறுதுணையாய் இருப்போம் என்று உறுதி கூறி கடிதம் மேல் கடிதம் எழுதினர். அநீதியை எதிர்த்து அறப் போர் புரிவதும் தமது கடமை என்று கருதிய இவர்கள் 100 பேர்களுடன் கூஃபா நோக்கி சென்றனர். ஆனால் கூஃபா மக்கள் துரோகம் இழைத்தனர்.
கர்பலா என்னுமிடத்தில் ஈராக்கின் ஆளுநர் உபைதுல்லாவின் படையினரால் இவர்கள் சூழப்பட்டார்கள். யஸீதின் கிலாபத்தை ஏற்க மறுத்த இவர்கள் அதன்பின் ஏற்பட்ட கடும்போரில் 43 காயங்கள் பெற்று ஷஹீதானார்கள். இவர்கள் குடும்பத்தனிர் 73 பேர் ஷஹீதானார்கள். இது ஹிஜ்ரி 61 முஹர்ரம் 10 (கி.பி.680 அக்டோபர் 10)ம் நாளில் நடநடதது. இவர்களின் தலை துண்டிக்கப்பட்டு கெய்ரோவில் அடக்கப்பட்டதாக தெரிகிறது. இவர்கள் உடல் கர்பலாவில் அடக்கப்பட்டது.