உறுப்பு தானம் செய்யலாமா?-Human Parts Donation is permissible?
By Sufi Manzil
கேள்வி: முஸ்லிம் ஒருவர் உயிருடன் இருக்கும்போதோ, மரணமடைந்த பின்னரோ தன் உடல் உறுப்புகளை இன்னொருவருக்கு கொடுப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா?
பதில்:ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவர் தனது உறுப்புக்களை சிதைப்பது, வெட்டுவது, அசிங்கப்படுத்துவது ஹராமாகும். அதுபோன்றே மரணமடைந்த பின்னரும் அவரது அங்கங்களை சிதைப்பது கூடாது.
ஒருவர் ஷரீஅத்திற்கு மாற்றமாக வஸிய்யத் செய்திருந்தால் அந்த வஸிய்யத் நிறைவேறாது, மட்டுமின்றி அதனை நிறைவேற்றுதலும் கூடாது.
அத்தோடு ஒருவர் மரணமுற்றால் அந்த ஜனாஸா, வாரிசுதார்களின் உரிமையாகிவிடுகிறது. வாரிசுதார்கள் மைய்யித்தைக் குளிப்பாட்டி, கபனிட்டு, தொழ வைத்து நல்லடக்கம் செய்ய வேண்டும்.
மைய்யித்தை நோவினை செய்தல், உறுப்புகளை வெட்டி எடுத்தல் போன்றவை ஹராமான செயல். ஏனென்றால் மைய்யித்தைக் குளிப்பாட்டுதல் போன்றவற்றுக்காக கையாளும்போது மிக மிருதுவாக கையாள வேண்டும் என்று ஷரீஅத் கூறுகிறது. வேதனை தரக் கூடாது என்றும் கட்டளை இடுகிறது ஷரீஅத்.
இப்படி இருக்க ஒரு முழு உறுப்பை வெட்டி அகற்றுகின்ற போது எவ்வளவு வேதனை ஏற்படும்? அப்படிச் செய்வது குற்றமல்லவா? அத்தோடு மய்யித்தின் ஒவ்வொரு உறுப்புமே குளிப்பாட்டி நல்லடக்கம் செய்யப்பட வேண்டியவை மைய்யித்திலிருந்து ஒரு பகுதியை வெட்டி எடுக்கும்போது, அது குளுpப்பாட்டாமலும், நல்லடக்கம் செய்யப்படாமலும் ஆகிவிடுகின்றது. இதனால் மைய்யித்தை நோவினை செய்வது குற்றம். உறுப்பைச் சிதைப்பது குற்றம். மைய்யித்தின் ஒரு உறுப்பு குளிப்பாட்டப்படாமல், நல்லடக்கம் செய்யப்படாமல் விடப்பட்ட குற்றம் ஆகிய ஏற்படுகிறது.
எனவே உடல் உறுப்புக்களைத் தானம் செய்வது இஸ்லாத்தில் அனுமதியில்லை.
நன்றி: வஸீலா 1-6-87