Fatwa About Tablighi Jamat-தப்லீக் ஜமாத்தினர் பற்றிய ஒரு பத்வா!

Fatwa About Tablighi Jamat-தப்லீக் ஜமாத்தினர் பற்றிய ஒரு பத்வா!

By Sufi Manzil 0 Comment February 10, 2010

Fatwa About Tablighi Jamat

By: Moulana Moulavi Muhammed Habibullah , Kazhi, Chennai.

தப்லீக் ஜமாத்தினர் பற்றிய ஒரு பத்வா!

எழுதியவர்: மௌலானா மௌலவி முஹம்மது ஹபீபுல்லாஹ், காழி, மத்ராஸ்.

 1970 ல் தப்லீக் பிரச்சாரகர் ஒருவர் அருட்கொடையாய் அவதரித்த அண்ணலர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறித்து சென்னை வாலாஜா மஸ்ஜிதில் தரக்குறைவாக உரையாற்றியபோது, காழி அவர்களால் வழங்கப்பட்ட பத்வா இது.

வினா:- சிறிது காலமாகவே எங்கள் முஹல்லாவினைச் சேர்ந்த ஜாமிஆ மஸ்ஜிதில் தப்லீக் பிரச்சாரக் கூட்டம் கூடுவதும், முஹல்லாஹாசிகளை தங்கள் மஜ்லிஸுகளுக்கு அழைப்பதும், ஒவ்வொரு கூட்டத்திலும் மௌலானா இல்யாஸ் எழுதியுள்ள நூற்களைப் படிப்பதுமாக நடந்து வருகிறது. இக் கூட்டத்தினர் அண்ணலவர்கள் மீது ஸலாம் 4றுவதில்லை. சென்ற 20-05-70 அன்று இஷாத் தொழுகைக்குப் பின்னர் இக்கூட்டத்தைச் சார்ந்த ஒருவர் மிகவும் துணிவுடன் 'மனிதன் அசிங்கத்திலிருந்து பிறந்தான். அசிங்கத்திலேயே வளர்ந்தான். இந்த அசிங்கமுள்ள மனிதன் அந்த அசிங்கத்தைக் கொண்டே மேல் உலகம் (அர்ஷெ அஃலம்) சென்றான்' என்று பேசினார்.

இவரது இவ்வுரையிலிருந்து மூன்று கேள்விகள் எழுகின்றன. 1) மேல் உலகம் சென்ற அந்த மனிதர் யார்? 2) அவரது கூற்று நபியவர்களை சுட்டிக் காட்டுகிறது என்றால் ஷரீஅத் வழங்குகின்ற தீர்ப்பு என்ன? 3) இப்படிப்பட்ட கூட்டத்தாருடன் தொடர்பு வைப்பதும், அவர்களது நடைமுறைகளைப் பின்பற்றி நடப்பதும் கூடுமா? என்பனவற்றுக்கு குர்ஆன், ஹதீதுகளின் படி விடை தருக.

ஹாமித் அலி ஷாகிர்,
ஷாகிர் அச்சகம், சென்னை-5

விடை:- எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மானிட ஜன்ம வரலாற்றின்படி சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களின் கருத்து அவர்கள் மானிடர்தாம், எனினும் அன்னாரின் தன்மைகளுக்கும், சாதாரண மனிதர்களுக்குமுள்ள வித்தியாசம் வானத்துக்கும். பூமிக்குமிடையேயுள்ள வித்தியாசமாகும்.

1.) நாயகமவர்கள் மானிடர்தான். ஆனால் சாதாரண மனித பிறவியல்ல. வைடூரியமும் கல்தான். ஆனால் சாதாரண கல் அல்லவே!

2.) நாயகமவர்கள் இறைவனால் பிறப்பிக்கப்பட்ட நூர்-ஒளியைப் பெற்று பிறந்தவர்கள், அவ்வொளியின் காரமாகவேதான் மற்ற படைப்புகள் உண்டாயின. ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகள் நாதரிடம் 'எனது தாய் தந்தையர்களை தங்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இறைவனால் உருவாக்கப்பட்ட வஸ்துக்களில் முதனமுதலாக எதனை உருவாக்கப்பட்டது?' என்று கேட்கஅண்ணலவர்கள் சொன்னர்கள்:

'ஜாபிரே எல்லா வஸ்துக்களுக்கும் முன்பாக அல்லாஹ் உமது நபியின் ஒளியைப் படைத்தான்.' இதனை அப்துர் ரஸ்ஸாக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். அந்த ஒளி அல்லாஹ்வின் கட்டளைப்படி ஒளிவீசிக் கொண்டிருந்த நேரத்தில் சுவனம், நரகம், அமரர்கள், ஜின் மனிதன், வானம், பூமி, சூரியன், சந்திரன், அர்ஷ், குர்ஸி, ளெஹு, கலம் ஏதும் படைக்கப்பட்டிருக்கவில்லை. பின்னால் இந்நூரைக் கொண்டுதான் இவை அத்தனையும் படைக்கப்பட்டன.

உறுதியான நம்பிக்கையான ஹதீதுகளில் காணக் கிடைக்கிறது இப்படி: 'அல்லாஹ் எல்லாவற்றையும் உற்பத்தி செய்த பின்னர் எழுது கோலான கலமுக்கு 'லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்று அர்ஷின் மீதும், சுவன வாசல்கள் மீதும் எழுதிடக் கட்டளையிடப்பட்டது . அதனை எழுதி முடித்த பின்னர் கியாம நாள் வரைக்குமான நிகழ்ச்சிகள் எழுதப்பட்டன.'

தப்லீக் ஜமாஅத்தின் முக்கியஸ்தரும், இந்த ஜமாஅத்தும் செய்கின்ற அடுக்காத செயல்களையும், ஆதாரமற்ற காரியங்களையும் கண்டு அனேக உலமாக்கள் இந்த ஜமாஅத்துக்கு எதிரான பத்வாக்களை வழங்கியுள்ளனர்.
சுன்னத் ஜமாஅத்திற்கு எதிரான இவர்களது செயல்களைக் கண்டு அல்லாமா மவுலானா பீர்சாதா சையத்ஷா மள்ஹர் ரப்பானீ சாகிப் காதிரி ஜிஷ்தி அவாகள் 'தப்லீக் என்றால் என்ன?' என்ற பெயரில் 4 பாகங்களில் நூலொன்று எழுதியுள்ளார்கள்.

எந்த ஒரு கூட்டத்தில் சுன்னத் வல் ஜமாஅத்துக்கு எதிரான பிரச்சாரம் செய்யப்படுகிறதோ அக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களது பயானைக் கேட்பது தகாது. ஏனெனில் அவர்களது பயான் மனக் கலக்கத்தையும், கலவரத்தையும் ஏற்படுத்தி பொதுமக்களின் ஈமானைப் பறித்து விடுகி;ன்ற கெடுதியை ஏற்படுத்தும். இஸ்லாமியக் கொள்கைக்கு விரோதமான கொள்கையைக் கொண்டவனின் பயானை காதுகொடுத்துக் கேட்பதும். அவற்றில் கலந்து கொள்வதும் இஸ்லாமியச் சட்டப்படி செறுக்கத்தக்கதாகும். எனவே நரகை விலை கொடுத்து வாங்கிட வேண்டாம்.

முஹம்மது ஹபீபுல்லாஹ்,
காழி, மதராஸ்.