Fatwa about Jamite Islami-ஜமாஅத்தே இஸ்லாமியர்களின் நிலை!(பத்வா)

Fatwa about Jamite Islami-ஜமாஅத்தே இஸ்லாமியர்களின் நிலை!(பத்வா)

By Sufi Manzil 0 Comment April 15, 2010

ஜமாஅத்தே இஸ்லாமியர்களின் நிலை!(பத்வா)

கேள்வி:- ஜமாஅத்தே இஸ்லாமியர் உடன் தொடர்பு வைத்துக் கொண்டும், வஹ்ஹாபிக் கொள்ககை உள்ளவருமானவரும் (இவர்கள் கொள்கை அஹ்லெ சுன்னத் ஜமாஅத் கொள்கைகளுக்கு மாற்றமானவை என்று முன்னமே தெரிந்ததே) அஹ்லெ சுன்னத் ஜமாஅத்தின் பள்ளிவாசலில் பிரசிடென்ட், காரியதரிசி, வகையறாக்களாக இருக்க உரிமை உண்டா?

எம்.எஸ். அப்துல் ரஜ்ஜாக்.

பதில்:

பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

எங்களுடைய திரு நபி ஸர்வரே ஆலம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையான ஹதீஸ் ஷரீபில் கூறுகிறார்கள்: கலியுகத்தில் தஜ்ஜால்கள் பொய் விஷயங்களை உண்மையான விஷயங்களோடு கலந்து பொய்யான விஷயங்களை உண்மையைப் போல் மக்களுக்கு காட்டும் பொய்யர்களாக இருப்பார்கள். நீங்களும் உங்களுடைய முன்னோர்களும் கேள்விபடாத விஷயங்களை உங்கள் முன்னிலையில் கொண்டு வருவார்கள். ஜாக்கிரதையாக இருங்கள். அவர்கள் உங்களை சந்திப்பதையும் நீங்கள் அவர்களை சந்திப்பதில் இருந்தும் தப்பித்துக் கொள்ளுங்கள். ஏன் என்றால் அவர்கள் உங்களை வழிகேட்ல் கொண்டுபோய் 'பித்னா'வில் விட்டு விடுவார்கள்.

சுமார் ஏறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட முன்னுரையைப் போல் இதுவரையிலும் பொய்ர்கள் கூட்டங்களாகிய வஹாபிய்யா, நஜ்தியா, காதியானி, அஹ்லெ குர்ஆன், கக்ஸார் என்றும் மற்றும் மவுதூதிய்யா என்றும் இன்னும் எத்தனையோ கூட்டங்கள் வெளியாகி உள்ளன.

இந்த மவுதூதிய்யா கூட்டம் ஜமாஅத்தே இஸ்லாமிய்யா என்ற பெயருடன் வழங்கப்படுவதும், ஜமாஅத்தில் பங்கு கொள்பவர்கள் கலிமா தையிபா ஷஹாதத்து ஓதி சேர வாக்குறுதி கட்டாயப்படுத்தி இருப்பதும், இந்தக் கூட்டம் தங்களை தவிர மற்றவர்கள் முஸ்லீம் அல்ல  என்றும் வெளிப்படையாக பறைசாற்றுகிறது என்று தெளிவாகிறது. இதைப் போலவே வஹாபியாக் கூட்டம் நஜ்த் பக்கத்திலிருந்து கிளம்பி அவர்கள் அவர்களுடைய கொள்கைகளுக்கு விரோதமாக கொள்கை கொண்டவர்களுக்கு காபிர்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்தார்கள். (இவர்கள் விஷயத்தில் நபி கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருஉளம் உற்று இருப்பதாவது (நஜ்த்) இப்பக்கத்தில் இருந்து ஷைத்தானுடைய கொம்பு வெளியே வரும்.)

தீனின் விஷயங்களில் உறுதியுடன் இருந்து செயல்களை செய்ய வேண்டி இருக்க மவுதூதியா கூட்டம் ஏனோதானோ என்று பொடும்போக்காக செயல்படுகிறது. வட இந்தியாவில் மிக உயர்ந்த உலமாக்கள் மவுதூதி சாஹிபின் பிரசங்கங்களைக் கேட்டு அவர்களால் வெளியிடப்பட்ட புத்தகங்களை பார்ப்பதை விட்டு தடுத்து பத்வாவும் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்கள். நாங்களும் வட இந்தியா ஆலிம்களால் எழுதப்பட்ட பத்வாக்களையும் பிரசுரங்களையும் மேற்கொண்டிருக்கிறோம். திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உத்தரவின் பிரகாரம் இந்த மவுதூதியா கூட்டத்துடன் எந்தவிதமான மத சம்பந்தமும் வைத்துக் கொள்வது கூடாது. கண்டிப்பாக தொழுகையில் அவர்களைப் பின்பற்றித் தொழாதீர்கள்.

29-8-53

ஷேக் ஆதம் (உபிய அன்ஹு)

முப்தி, மத்ரஸா பாக்கியாத்து ஸாலிஹாத், வேலூர்