பைஜிஷாஹ் பற்றி கூறியிருப்பதற்கு விளக்கம் தாருங்கள்

பைஜிஷாஹ் பற்றி கூறியிருப்பதற்கு விளக்கம் தாருங்கள்

By Sufi Manzil 0 Comment February 24, 2012

Print Friendly, PDF & Email

பைஜிஷாஹ் பற்றி கூறியிருப்பதற்கு விளக்கம் தாருங்கள்

கேள்வி:எல்லா சிருஷ்டிகளையும் அன்பான கண் கொண்டு நோக்குவது தான் இறைஞானம் வந்ததற்கான அடையாளம் என்பார்கள்

அன்புள்ள சூஃபி மன்ஜில் சகோதரர்களே!

என் ஷைகு நாயகம் பைஜீஷாஹ் நூரி(ரஹ்). ஒரு முறை அவர்களின் வீட்டு வாசலில் ஷைகு அவர்களுடன் அமர்திருந்தோம். ஈராக் யுத்த நேரம். செய்தி கேட்பதற்காக டி.வியை வைத்தபோது தரீக்கத்திற்கு எதிரான கொள்கையுடைய ஒரு பேச்சாளர் சூஃபியாக்களை சாடினார். அதிலும் குறிப்பாக எனது ஷைகு அவர்களை மறைமுகமாக சாடினார். அங்கே இருந்த சீடர்கள் கோபமடைந்தார்கள்.  ஷைகு அவர்கள் முகத்தில் சிறு வருத்தமும் இல்லை. புன்னகை மாறாமலே இப்படி சொன்னார்கள், “ அவர் எந்த நோக்கத்துடன் இப்படி பேசுகின்றாரோ தெரியவில்லை. ஆனால் ஒருவருக்கு தவறான உள் நோக்கமில்லை. அவரது ஆய்வின் படி தவறென்று என்னை விளங்கி கொண்டுள்ளார். அதன் விளைவாக அல்லாஹ், ரசூலின் பொருத்தம் நாடி என்னை  ஏசினால். அதற்காக இறைவன் அவருக்கு நற்கூலி வழங்குவான் என்பது என் நம்பிக்கைஎன்றார்கள் என் ஷெய்கு நாயகம் ஃபைஜிஷாஹ் நூரி (ரஹ்) அவர்கள். என்ன ஒரு பரிசுத்தமான ஜீவன் அவர்கள். கராமத்தை உடைய அவ்லியாவாக அவர்களின் பல கராமத்துகளை கண்டிருந்தாலும் அவர்களுடைய இஹ்லாஸ் என்னை அவர்கள் மேல் அளவற்ற நேசம் கொள்ள செய்தது.

நண்பரே! வஹாபிய கொள்கை கொண்டோர் எங்களை தாக்கி எழுதுவதை எங்களால் புரிந்து கொள்ளமுடிகிறது. ஹைதராபாத் சூஃபி நாயகத்தின் தரீக்காவை சேர்ந்த நீங்கள் எங்கள் பாசத்துக்குரிய  நூரிஷா கிப்லாவைப் பற்றியும் எங்கள் ஷிஸ்தியுல் காதிரி தரீக்காவை சேர்ந்த பெரியார்களைப் பற்றியும்  தங்களின் சூஃபி மன்ஜில் வலைப்பக்கத்தில் பதிவு செய்திருப்பதை கண்ட போது யூ டூ புரூட்டஸ்என்ற ஜூலியஸ் சீசரின் (ஷேக்ஸ்பியரின்) வார்த்தைகள் தான் மனதில் வந்தது.

இரண்டு ஆடுகள் சண்டையிட்டால் ரத்தம் குடிக்கும் ஓநாய்களுக்குத் தான் கொண்டாட்டம்.

சரி தவறு என்று வாதிட்டு நம்மிடையே மேலும் பிளவை வளர்ப்பதில் துளியும் எனக்கு விருப்பமில்லை.

நீங்களும் நாங்களும் உயிராய் மதிக்கும் அண்ணல் பெருமானார் சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் , கௌதுநாயகம் முஹய்யத்தீன் அப்துல்காதர் ஜெய்லானி (ரலி) அவர்களின் பொருட்டால் அந்த கட்டுரைகளை நீக்க பணிவன்புடன் வேண்டுகின்றேன்.

.தரீகத்தே தவறென்று பிரச்சாரம் மிகுந்த இந்த நாளில் தரீகத்தை சாராத இஸ்லாமிய பொதுமக்களுக்கும், மாற்று மத சகோதரர்களுக்கும் எளிமையான முறையில் ஹக்கை விளக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புல்லாங்குழல்” (http://onameen.blogspot.com/)என்ற பெயரில் வலைத்தளம் ஒன்று நடத்தி வருகின்றேன். முடிந்தால் பார்வையிட்டு ஆலோசனை வழங்குங்கள்.

விவாதத்திற்காகவன்றி விளக்கத்திற்காக ஒரு சில வார்த்தைகள் உங்கள் மேலான பார்வைக்கு….

நாமெல்லாம் அல்லாஹ்வின் பெருங்கருணையால் ஐனியத்தே ஹகீகி என்பதை ஒத்து கொண்டவர்கள். சாதரண பாக்கியமா இது? அல்ஹம்துலில்லாஹ்.

எங்கே பிரச்சனை ? கைரியியத் என்பது இஃதிபாரியா? ஹகீகியா என்பதில் தான் நம் பார்வை வேறுபடுகின்றது.

உஜுது = ஜாத் என்பது ஹக்குடைய நிலை. உஜூதல்லாத ஜாத் என்பது சிருஷ்டியின் நிலை. உஜூத் = மாபிஹில் மௌஜுதியத்

ஜாத் = மர்ஜயே அஸ்மா வ ஸிபாத்

ஹக்கை பொருத்தவரை உஜூத் ஐனே ஜாத். ஜாத் ஐனே உஜூத் என்றாலும் சுய உள்ளமையில்லாத ஃபனியான கைரையும் ஜாத் என குறிப்பிடுகின்றோம். ஒரு அடிப்படையில் உஜூது ஏக். ஜாத் ஏக் என கூறும் பெரியோர்கள் இன்னொரு அடிப்படையில் உஜூது ஏக். ஜாத் தோ எனவும் கூறுகின்றார்கள்.

அப்துல் கரீம் ஜீலி(ரஹ்) தங்கள் இன்சானுல் காமில் பாகம் 1 பக்கம் 13 இப்படி கூறுவதை பாருங்கள்.

அறிந்து கொள்ளுங்கள்!  எதன்  பக்கம்  அஸ்மாக்களும்  சிபாத்துகளும் இணைக்கப்படுகிறதோ அதுவே ஜாத்ஆகும். இதில்  உஜூது  இஃதிபார் செய்வதில்லை. (அதாவது பெயர்களும் தன்மைகளும் மீளுமிடமே தாத் ஆகும். அதற்கு  உஜூது இருப்பினும் இல்லாவிடினும் சரியே!) ஆக இஸ்மும் சிபாத்தும் இணைக்கப்பட்ட ஒவ்வொரு வஸ்துவையும் ஜாத் என்று கூறலாம். அது மஃதூமாகவோ, மவ்ஜுதாகவோ எப்படி இருந்தாலும் சரியே. மஃதுமுக்கு உதாரணம் அன்கா” (இது யானை இறாஞ்சிப் பறவை என்ற ஒரு பறவையின் பெயர். இது தற்போது இல்லை) மவ்ஜுதும் இரண்டு வகை ஆகும். ஒன்று மவ்ஜுதே மஹஜ் (அதமில்லாத மவ்ஜுது) இது ஹக்குடைய ஜாத்தாகும். இன்னொன்று அதமுடன் சேர்ந்த மவ்ஜுது . இது சிருஷ்டியின் ஜாத் ஆகும்.” (நூருன்னூர் பக்கம் 111 புத்தகம் உங்கள் வசம் இருந்த்தால் அரபி வாசங்களை பார்வையிடுக!)

தாங்களுக்கும் சிருஷ்டி = ஹக்கு அல்ல என்பதில் கருத்து வேறுபாடு இருக்காது என நம்புகின்றேன்.

சிருஷ்டியை ஹக்கு என்றோ ஹக்கு இல்லை என்றோ சொல்ல முடியாதுஎன்பது ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் அரபி(ரஹ்) போன்ற மகான்களுடைய கருத்து.

சிருஷ்டிகளுடைய ஹகீகத் அஃயானே சாபித்தா.

அஃயானே சாபித்தா ஒரு புறம் அஸ்மாவின் புறத்திலும், இன்னொரு புறம் சிருஷ்டிகளின் பக்கமும் நிஸ்பத் செய்யப்படுகிறது.

அஸ்மாயே இலாஹி, அஸ்மாயே கியானி என விளக்கங்கள் தொடர்கிறது.

சுருக்கமாக சொன்னால் அஃயானே சாபிதாவின் ஹகீகத் கஷ்பியாகும்.

ஹக்குடைய இல்மிலேயே ஒரு கைரியத் ஹக்கினால் அறியப்பட்டது அல்லது ஏஃதிபார் செய்யப்பட்டது. ஆகவே இதை இஃதிபாரி என்று சிலரும், ஹக்குடைய இஃதிபார் என்பதால் ஹகீகி என சிலரும் கூறுகின்றோம்.

ஸுபூத்தெ ஹல்க் அமரே வாக்கயியாக ஹக்குடைய இல்மில் இருக்கிறது. இந்த அஃயான்கள் உஜூதுடைய வாடையை நுகரவில்லை. அஃயான்களின் சூரத்தில் ஹக்குதான் காட்சியளிக்கிறது.

ஹக்கு ஜாஹிர் ப சூரத்தே ஷை என்பார்கள். சூரத்துடைய நிஸ்பத்தில் கைரியத் மா எக்திஜா (இக்திலாவுடன்) ஜுஹூர் ஆகிறது. முன்னால் சொன்னது போல் இது இறப்பு வரை மீற முடியாத  ஹக்கி இஃத்திபார்.

எங்களுடைய தகாயிக் பாடத்திலும் ராஹே தவ்ஹீதுடைய பாடத்தில்

அன”  ஷிர்க்

அன்தகுப்ரு

ஹூதவ்ஹீது

எனும் குர்ப் மஸ்த் வ பே ஹுதி மகாம் உண்டு. அது மகாம் தான். மன் ஜில் இல்லை.

நுஜூலில் கைரியத்தை (உங்களது முறையில் சொன்னால் மராத்திபே இலாஹியாவை) பேணுவது நாதாக்களின் வழி

இறைவா நீ உண்மையானவன்! உன் வாக்குறுதியும் உண்மை! உன் சந்திப்பும் உண்மை! உனது சொல்லும் உண்மை! சுவனமும் உண்மை! நரகமும் உண்மை! நபிமார்களும் உண்மை! முஹம்மது(ஸல்)அவர்களும் உண்மை. கியாமத்தும் உண்மை!(புகாரி,முஸ்லிம்) என்னும் ஹதீஸில் வரும்  படைப்புகள் உண்மை என்ற அர்த்தத்தை எந்த ஆன்மீக நாதர்களும் மறுக்கவில்லை.

நம்மிடையே புரிந்துணர்வுடன்  கூடிய நல்லுறவு வளர  எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன்.

உங்கள் அன்பான பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

வஸ்ஸலாம்,

onoorulameen@gmail.com

ஒ.நூருல் அமீன் ஃபைஜி ஷிஸ்தியுல் காதிரி

21.02.2011

பதில்: அன்புள்ள நூருல் அமீன் சாஹிப் அவர்களுக்கு,

தங்களுடைய மின்னஞ்சல் கண்டோம். தாங்கள்  பைஜீஷாஹ் அவர்களிடம் பைத் பெற்றுக் கொண்டதாக எழுதியிருக்கிறீர்கள். அவரின் சில நடைமுறைகளைப் பற்றியும் எழுதியிருக்கிறீர்கள். உங்களின் நிலையை பார்த்தால் மிகவும் வருந்தத்தக்கதாக இருக்கிறது. உங்களை அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்.

உங்கள் ஷெய்குவின் இஸ்லாமிய போர்வை என்னும் முகமூடியை நாங்கள் தக்க ஆதாரங்களுடன் கிழித்தெறிந்து இருக்கிறோம். அதுவும் அவர்கள் எழுதிய பேசிய பேச்சுக்களிலிருந்தும், அவர்கள் கலீபாக்கள், முரீதீன்கள் வார்த்தைகளிலிருந்தும்தான் ஆதாரம் காட்டி எழுதியிருக்கிறோம். நாங்கள் ஒன்றும் இல்லாத ஒன்றைப் பற்றி சொல்லவில்லை. முதலில் நீங்கள் சேர்ந்திருப்பது உண்மையான சூபிஸத்தைப் போதிக்கும் தரீகாதானா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அவர்கள் தந்திருக்கும் சில்சிலா என்னும் ஷஜராவிலேயே வஹ்ஹாபிகள் ஊடுருவி இருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு அவர்களிடமிருந்து எவ்வாறு சூபிஸம், ஞானங்களைப் பற்றிய உண்மையான கருத்து பிரதிபலிக்கும்.

ஒருமுறை உங்கள் ஷெய்கு பைஜிஷாஹ் அவர்களை மறைந்த மாமேதை எப்.எம். இப்றாஹிம் ரப்பானி அவர்கள் சந்தித்த போது, அவர் ரப்பானி ஹஜ்ரத் அவர்களிடம் சொன்னாராம் 'ஹைதராபாத் ஸூபி ஹஜ்ரத் அவர்கள் ஐனிய்யத்து, ஙைரிய்யத்தை தவறாக சொல்லியதால் காபிராகி விட்டார்கள்(நவூதுபில்லாஹி மின்ஹா) என்று. இதுதான் ஷெய்கு என்றும், ஸூபிகளை போற்றுகிறேன் என்றும் சொல்லும் ஒருவரின் லட்சணம். மேலும் இவர் கடைந்தெடுத்த வஹ்ஹாபியான, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மிகவும் தரக்குறைவாக பேசிய, எழுதிய அஷ்ரப் அலி தானவியை (மக்கா மதீனா உலமாக்களால் காபிர் என்று பத்வா கொடுக்கப்பட்டவர்) மகான் என்று சொல்கிறார். இவரை எப்படி சுன்னத் வல் ஜமாஅத்தாக ஏற்றுக் கொள்ள முடியும்? ஷெய்காக ஏற்றுக் கொள்ள முடியும்? நீங்களே சிந்தித்துப் பாருங்கள். அதேபோல் சுமார் 19 வருடங்கள் தப்லீக் சேவையாற்றி பல்வேறு இஜ்திமாக்களில் பங்குபற்றியவர் என பெருமையுடன் போற்றப்படும் இவரின் கூற்றுக்களை ஆதாரமாகத்தான் கொள்ள முடியுமா?

தான் போதிக்கும் தவறான ஞானத்தை இவர் வஹ்தத்துல் உஜூது என்று கூறுவதுதான் வேடிக்கை. இவர் சொன்ன மாதிரி யாராவது வஹ்தத்துல் வுஜூது கொள்கையைப் போதித்திருக்கிறார்களா? ஞானத்தில் வஹ்தத்துல் வுஜூது, வஹ்தத்துல் ஷுஹுது என்ற இரு சித்தாந்தங்கள் உண்டு. ஆனால் இந்த இரண்டிற்கும் சிறியளவு வித்தியாசமே உள்ளது.

ஒருமுறை ஷிஹாபுத்தீன் சுஹரவர்தியும் ரலியல்லாஹு அன்ஹு (வஹ்தத்துல் சுஹுது கொள்கையை போதித்த மகான்) அவர்களும், வஹ்தத்துல் வுஜூது கொள்கையை பின்பற்றிய மகான் முஹ்யித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு  ஆகிய இருவரும் சந்திக்கிறார்கள். இருவரும் ஒருவர் மற்றவரை பார்த்து கொண்டிருந்து விட்டு பிரிந்து விட்டார்கள். ஒருவரைப் பற்றி மற்றவரிடம் கேட்கப்பட்ட போது, அவரிடம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தைக் கண்டேன் என்றும், மற்றவரிடம் கேட்கப்பட்ட போது, அவர் பெரிய மகான் என்றும் போற்றிப் புகழந்தனர். இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் குறை சொல்லவில்லை. குறைத்து மதிப்பிடவும் இல்லை. இதுதான் ஸூபிஸம். இந்த ஸூபியிஸம் உங்கள் பைஜி ஷாஹ்விடம் இல்லை.

தான் கொண்ட கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்களை (உண்மை முஸ்லிம்களை) காபிர் என்கிறார். நீங்கள் மேலே கூறிய பிரகாரம் ஒருவரை அன்பான கண் கொண்டு பார்ப்பது இதுதானா? சொல்லுங்கள்.

அப்துல் கரீம் ஜீலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக சொல்லியிருக்கும் கருத்துக்கு தவறான அர்த்தம் வைத்து எழுதியிருக்கிறீர்கள். சரியான உண்மையான ஞானவான்களிடம் அதற்குரிய விளக்கத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

வஹ்ஹாபிகளின் கைப்பாவையாக செயல்படும் உங்கள் கூட்டத்தை நாங்கள் எப்படி தரீகத்தாக ஏற்றுக் கொள்ள முடியும். ஷஜரா சரியில்லை. கொள்கை சரியில்லை என்னும் போது நீங்கள் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.?

ஐனிய்யத்தும், ஙைரியத்தும் பற்றிய விளக்கம் தங்களுக்கு தவறாக போதிக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். அதுபற்றிய சரியான விளக்கத்தை எங்கள் இணையதளத்தின் பதிவிறக்கங்கள் பகுதியில் அல்ஹக்கு(https://sufimanzil.org/wp-content/uploads/downloads/2010/04/alhaque-new1.pdf என்ற நூலை பதிவிறக்கம் செய்து பார்வையிட்டுக் கொள்ளவும்.

தாங்கள் கேட்டிருக்கும் ஞானம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு  https://sufimanzil.org/books/othertamilbooks/%E0%AE%B8%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4 என்ற லிங்க்கை பார்த்துக் கொள்ளவும். எங்கள் ஷெய்கு நாயகம் அவர்கள் எழுதிய நூல்களை பார்த்தாலே உங்களுக்கு விஷயங்கள் தெளிவாகத் தெரியும்.

எங்களுடைய நோக்கம் வஹ்ஹாபிகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அது தரீகா என்ற போர்வையில் வந்தாலும் அவர்களின் முகத்திரையை கிழித்து மக்களை எச்சரிக்கை செய்து உண்மையை மக்களுக்கு தெரிவிப்பதுதான். அதுபடிதான் நாங்கள் செயல்பட்டிருக்கிறோம்.

நீங்கள் வஹ்ஹாபிய மதத்தின் மற்றொரு பிரிவான தரீகா போர்வையில் இயங்கும் கூட்டத்தை விட்டு வெளி வாருங்கள். உண்மையான ஸூபியாக்களை பின்பற்றுங்கள். ஜெயம் பெறுங்கள். விரட்டப்பட்ட கூட்டத்தில் சேருவதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.