ஸலாத்துல் ஈதைன் – இரு பெருநாள் தொழுகைகள்-Eid Prayers
By Sufi Manzil
பெருநாள் தொழுகை (ஹனபி)
ஜும்ஆத் தொழுகை யார் யார் மீது எல்லாம் கடமையாகிறதோ இரு ஈது பெருநாள் தொழுகைகளும் அவர்கள் மீது கடமையாகிறது. ஆனால் ஈது தொழுகை வாஜிபு ஆகும். இம்மாதிரியே ஜும்ஆவில் குத்பா பர்ளு, ஆனால் ஈதில் குத்பா வாஜிபாகும்.
ஜும்ஆவில் குத்பா தொழுகைக்கு முன்னால் ஓதப்படும். ஈதுகளின் குத்பா தொழுகைக்குப் பின்னால் ஓதப்படும்.
பெருநாள் தொழுகையின் நேரமாவது சூரியன் நன்கு உதயமானதிலிருந்து (காலை 7 மணியிலிருந்து) நடுப்பகல் உச்ச நேரத்திற்கு சற்று முன் (11 மணி) வரையிலாகும்.
ஈதுல் பித்ரைவிட ஈதுல் அல்ஹாவைச் சீக்கிரம் தொழுது கொள்வது நல்லது.
தொழுகை முறை:
ஈது பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத் வாஜிபாகும். ஒவ்வொரு ரக்அத்திலும் மும்மூன்று விகிதம் இரண்டு ரக்அத்துகளில் 6 அதிகப்படியான தக்பீர்கள் உண்டு.
முதலில் நிய்யத்து செய்து அல்லா{ஹ அக்பர் சொல்லி இமாமுடன் ரக்அத் கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஃதனா ஓத வேண்டும். பிறகு இரண்டு முறை 'அல்லா{ஹ அக்பர்' என்று கையை உயர்த்தி கீழே தொங்கவிட்டு விட்டு மூன்றாம் முறை 'அல்லாஹ அக்பர்' சொல்லி (ரக்அத்தில் கை கட்டி கொள்ள வேண்டும்) வழக்கம் போல் இமாம் அல்ஹம்து ஸூராவும் கிராஅத்தும் ஓதுவார். அதைக் கேட்க வேண்டும்.
நோன்புப் பெருநாள் தொழுகை நிய்யத்:
نَوَيْتُ اَنْ اُصَلِّ لِلهِ تَعَااٰى رَكَعَتَيْنِ صَلٰوةَ عِيْدِ الْفِطْرِ اِقْتَدَيْتُ بِهٰذَالْاِمَامِ مُتَوَجِّهًا اِلٰى جِهْةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرُ
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நிய்யத்:
نَوَيْتُ اَنْ اُصَلِّ لِلهِ تَعَااٰى رَكَعَتَيْنِ صَلٰوةَ عِيْدِ الْاَضْحٰى اِقْتَدَيْتُ بِهٰذَالْاِمَامِ مُتَوَجِّهًا اِلٰى جِهْةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرُ
இரண்டாவது ரக்அத்தில் ஓத வேண்டியதை ஓதி முடித்து ருகூவுக்கு போகும் முன்னர், முன்போல் 3 தக்பீர் சொல்ல வேண்டும். மூன்று முறை அல்லா{ஹ அக்பர் சொல்லி கையைத் தொங்கவிட்டு விட்டு நாலாவது முறை அல்லா{ஹ சொல்லி ருக்கூவுக்கு போய் வழக்கம் போல் தொழுகையை முடிக்க வேண்டும்.
அதன்பிறகு இமாம் குத்பா ஓதுவார். அதை காது தாழ்த்தி கேட்க வேண்டும். பின்பு துஆ திக்ருகள் ஓதப்படும்.
தக்பீர்:
للهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ لاَ اِلاَهَ اِلَّا اللهُ وَاَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ وَلِلهِ الْحَمْدُ
பெருநாள் தொழுகை (ஷாபிஈ)
பொழுது உதயமானதிலிருந்து ளுஹரின் வக்து வரும் வரை நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகளின் நேரங்களாகும். இவ்விரு பெருநான் தொழுகைகளும் களாவாகிவிட்டால் தொழுவது சுன்னத்துல் முஅக்கதாவாகும். உளுஹிய்யாவை அறுக்க வேண்டியிருப்பதால் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை அதன் ஆரம்ப வக்திலும்இ ஃபித்ரு ஜகாத்தை கொடுத்து முடிப்பதற்காக நோன்புப் பெருநாள் தொழுகையை சற்றுக் காலம் தாழ்த்தியும் தொழுவது சுன்னத் ஆகும்.
ஈத் தொழுகையானது தொழுகையின் எல்லாவித ஃபர்ளு, ஷர்த்துகளைக் கொண்ட இரண்டு ரக்அத் தொழுகை ஆகும். எனினும் முதல் ரக்அத்தில் வஜ்ஹத்து ஓதிய பின் ஏழுமுறை தக்பீர் கூறுவதும், இரண்டாவது ரக்அத்தில் நிலைக்கு வந்த பின்பு ஐந்து முறை தக்பீர் கூறுவதும் சுன்னத்தாகும். ஒவ்வொரு தக்பீர் கூறும்போதும் இரு கைகளையும் உயர்த்தி பின்பு அவைகளைக் கட்டிக் கொள்வதும் மற்றும் இந்த தக்பீர்களுக்கிடையில் 'ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லா{ஹ வல்லா{ஹ அக்பர்' எனச் சொல்வதும் சுன்னத்துக்களாகும். ஃபாத்திஹா சூராவிற்குப் பின் 'காஃப்'; (50வது) சூரா அல்லது 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல்'; சூராவும் இரண்டாவது ரக்அத்தின் ஆரம்பத்தில் 'ஹல்அதாக' சூராவும் ஓதுவதும் சுன்னத்தாகும்.
நோன்புப் பெருநாள் தொழுகை நிய்யத்:
اُصَلِّى صَلٰةَّ عِيْدِ الْفِطْرِ رَكْعَتَيْنِ لِلهِ تَعَالٰى اَللهُ اَكْبَرْ
`[;[{ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நிய்யத்:
اُصَلِّى صَلٰةَّ عِيْدِ الْاَضْحٰى رَكْعَتَيْنِ لِلهِ تَعَالٰى اَللهُ اَكْبَرْ
இரு பெருநாட்களின் முதல் நாள் மாலை சூரியன் மறைந்தது முதல் பெருநாள் தொழுகை தொழத் தொடங்கும் வரை எல்லாத் தொழுகைகளுக்குப் பின்பும் தெருக்களிலும், வீதிகளிலும், வீடுகுளிலும் நின்ற, அமர்ந்த, படுத்த அமைப்புகளிளெல்லாம் தக்பீர் சொல்லிக் கொண்டே இருப்பது சுன்னத்தாகும். இதற்கு தக்பீர் முர்ஸல் என்று பெயர். ஹஜ்ஜுப் பெருநாளில் அரபா தினத்தின் ஸுப்{ஹத் தொழுகையிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் (துல்ஹஜ் பிறை 13) அஸர் வரை எல்லாத் தொழுகைகளுக்கும் பின்பு மட்டும் தக்பீர் சொல்வது சுன்னத்தாகும். இதற்கு தக்பீர் முகய்யத்' என்று பெயர் மேலும் துல்ஹஜ் பிறை 1 முதல் 10 வரை ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய குர்பானிப் பிரயாணிகளைப் பார்க்ககும் போதோ, இவைகளின் சப்தங்களைக் கேட்கும்போதோ தக்பீர் சொல்வது சுன்னத்தாகும்.
தக்பீர்:
اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ لاَ اِلاَهَ اِلَّا اللهُ وَاَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ وَلِلهِ الْحَمْدُ…..۲
اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ كَبِيْرًا وَالْحَمْدُ لِلهِ كَثِيْرًا وَسُبْحَانَ اللهِ بُكْرَةً وَّاَصِيْلًا لاَ اِلٰهَ اِلَاَّ اللهُ وَلَا نَعْبُدُ اِلَّا اِيَّاهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ وَلَوْ كَرِهَ الْكَافِرُوْنَ لَااِلٰهَ اِلَاّ اللهُ وَحْدَهْ وَصَدَقَ وَعْدَهْ وَنَصَرَ عَبْدَهْ وَاَعَزَّ جُنْدَهُ وَهَزَمَ الْاَحْزَابَ وَحْدَهْ لَا اِلٰهَ اِلَّا الله وَالله اَكْبَرُ اَللهُ اَكْبَرُ وَلِللهِ الْحَمْدُ .
தொழுகைக்குப் பின்பு குத்பா ஓதுவது சுன்னத்தாகும். ஜும்ஆ குத்பாவின் ஃபர்ளு, ஷர்த்துகளுடன் முதல் குத்பாவை ஒன்பது தக்பீர்களைக் கொண்டும், இரண்டாவது குத்பாவை தொடர்ச்சியான ஏழு தக்பீர்களைக் கொண்டும் தொடங்குவதும் பெருநாள் குத்பாவின் சொற்றொடர்களுக்கு இடையே தக்பீர் கூறுவதும் சுன்னத்தாகும்.