Dua ul Kabeer- துஆவுல் கபீர் பற்றிய விளக்கம்.

Dua ul Kabeer- துஆவுல் கபீர் பற்றிய விளக்கம்.

By Sufi Manzil 0 Comment May 6, 2010

Print Friendly, PDF & Email

துஆவுல் கபீர் பற்றிய விளக்கம்.

கேள்வி:

இந்தியா, பாகிஸ்தானில் பிரபலமான புத்தக வெளீட்டகங்கள் பல 'துஆவுல் கபீர்' எனும் பெயரில் ஒரு துஆ அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். அந்த துஆவில் அரபியல்லாத-அர்த்தம் புரியாத சில வார்த்தைகள் காணக்கிடக்கின்றன. ஷpர்க்கைத் தூண்டும் கருத்துக்கள் தொனிக்கின்றன. சமஸ்கிருத மொழியின் உள்ள வார்த்தைகள் அவை.' என காரணம் கூறி அவற்றை ஆட்சேபிக்கின்றனர். பிரிவினைவாதிகள் சிலரின் தூண்டுதலால் இவ்வாறான சதி வேலைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியிடுகின்றனர்.

எனவே தூர நோக்கோடு ஷரீஅத் சட்ட வெளிச்சத்தில் இது குறித்து தெளிவானதொரு பதிலைத் தருமாறு தயவுடன் வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

முஹம்மது மியான் மள்ஹரி,
ஆசிரியர், காரி மாத இதழ்,
டில்லி, 14-3-1987.

பதில்:

அறியாமை தனக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, சில நேரங்களில் அடுத்தவரையும் மிகப்பெரிய சோதனைக்குள்ளாக்கி அவர்களையும் சட்டினியாக்கி விடுகிறது என பெரியார்கள் சொல்வது எவ்வளவு உண்மை.

துஆவுல் கபீரில் உள்ள வார்த்தைகளைக் குறித்து முராதாபாத்தின் முப்தி சாஹிபுக்குத் தெரியவில்லை என்றால் தனது அறியாமையை வெளிப்படுத்தி இருக்கலாம். அதைவிடுத்து அவ்வார்த்தைகள் சமஸ்கிருத வார்த்தைகள் என்றும் வடநாட்டின் சில பிரிவினைவாதிகள் தந்திரமாக துஆவுல் கபீரில் செருகி விட்டார்கள் என்றும் கூறி கற்பனையில் மிதந்து பிரச்சனைகளை உருவாக்கி இருப்பது கவலைக்கும் கண்டனத்திற்குமுரியது.

அந்த துஆவில் உள்ள வார்த்தைகள் சமஸ்கிருதமல்ல! அப்ரானி- ஹிப்ரூ என்பதைப் புநரிந்து கொள்ள வேண்டும். இது முற்கால அவ்ராதுகள் வழீபாக்களிலிருந்து நகல் செய்யப்பட்டுள்ளது.

மாபெரும் ஆத்ம ஞானியான முஹம்மது கௌது குவாலியர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஆதாரப்பூர்வமான நூலான ஜவாஹிருல் கம்ஸா (வெளியீடு: மகதப் பைழுல் குர்அன் தேவ்பந்த்) பக்கம் 259ல் இந்த துஆ இதே வார்த்தைகளுடன் பதிவாகி இருக்கிறது. ஜவாஹிருல் கம்ஸா ஹிஜ்ரி 1030க்கு முன்னர் எழுதப்பட்டது என சில பேரறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நூலிலிருந்து பயன்பெறவும், வஸீலா தேடவும், காலத்தால் சிறந்த உன்னதமான மகான்கள் இதனை ஓதுவதற்கு அனுமதி வழங்கி உள்ளனர்.

அன்வாருல் அஹ்மதிய்யா பீ பயானி மஃமூலாத்தில் அஸீஸிய்யா என்னும் நூல் ஹிஜ்ரி 1328ல் எழுதப்பட்டது. இந்நூலிலும் இந்த துஆ அதே வாசகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா, பாகிஸ்தானின் பல நூல் வெளியீட்டாளர்கள் துஆவுல் கபீரை அதே வாசகங்களுடன் வெளியிட்டுள்ளன. அவற்றுள் சில இதோ:

1. லௌலாசூரா வ மஜ்டூஆ வளாயிப் (வெளியீடு ரஹ்மான் பிரதர்ஸ், காஜ்ரானே குதுப் கராச்சி, பாகிஸ்தான்)

2. மஜ்மூஆ வளாயிப் மஅதலாயிலில் கைராத் (வெளியீடு ளியாஉல் குர்ஆன், பில்லி கேஷ;தர், லாகூர்)

3. மஜ்மூஆ வளாயிப் (வெளியீடு: குத்ப்கானா இன்ஙாமிய்யா, டில்லி)

4. அஹ்ஸனுல் வளாயிப்(வெளியீடு: குர்ஷித் தாஜ் கம்பெனி, அலகாபாத்)

மாபெரும் ஞானி கௌது குவாலியர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களாதல் தொகுக்கப்பட்டு, இதுவரையுள்ள உலமாக்கள், ஷெய்குமார்கள் ஆகியோர்கள் மீது இக்குற்றச்சாட்டு மாறியடியக்காதா? மாபெரும் ஆத்ம வள்ளல்கள், அறிஞர் பெருமக்கள் அரபி துஆவில் சமஸ்கிருதத்தைப் புகுத்தி இஸ்லாத்திற்கு மாறு செய்கின்றனரா? அனைத்து இஸ்லாமிய நூல் வெளியிட்டகங்கள் மீதும் அபாண்டம் கற்பிப்பதா?

மர்கஸ் அஹ்லுஜ்ஜுன்னத் பரேலி ஷரீபின் திறமை மிக்க முப்தி காழி அப்துர்ரஹீம் சாகிப் அவர்கள் த மது மஜ்மூஆ அஃமாலே ரிழாவில், இமாமே அஹ்லுஸ்ஸுன்னத் அஃலா ஹலரத் அவர்களின் மேற்கோளிலிருந்து துஆவுல் கபீரில் உள்ள ஹீப்ரு மொழிப்பதங்களுக்கு விளக்கம் எழுதி அறியாமையில் உழல்வோருக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகின்றனர்.

1.ஊ-உம் =யாரப் (சுகலை வசப்படுத்த)

2. ஹு-உம் = யாகதீர் (மிர்ரீஹை வசப்படுத்த)

3.நஹீன் = யாகாலிக் (முஷ்தரீயை வசப்படுத்த)

4.நஸ் ரீன், பரீன் =யாகரீம், யாறஹீம் (ஷம்ஸை வசப்படுத்த)

5. அரிமா =யாஜமீல் (ஸுஹ்றாவை வசப்படுத்த)

6. பர்ம் = யாஅலீம் (அதாரிதை வசப்படுத்த)

7. இஹ்யா =யாஹய்யு (கமறை வசப்படுத்த)

(ஆதாரம்: மஜ்மூஆ அஃமாலே ரிழா பாகம் 2, பக்கம் 17)

தேவ்பந்தின் பிரசித்திப் பெற்ற மௌலானா தானவி அவர்கள் கூட தமது மஜ்மூஆ அஃமாலே குர்ஆன் என்ற நூலில் ஒரு நக்ஷில் சில ஹீப்ரு வார்த்தைகளை நகல் செய்துள்ளார்கள். அவர்களையும் இவர்கள் குறை கூறுவார்களா?

அவூதுபில்லாஹி அன்அகூன் மினல் ஜாஹிலீன்-அறிவிலிகளில் நின்றுமாவதை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன். அல்லாஹ்வே மிக அறிந்தவன். அவனது அறிவே நிறைவானதுமாகும்.

இப்படிக்கு,

அர்ஷதுல் காதிரி,
தலைவர், அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட ஒன்றியம்.
18-3-1987.

நன்றி: வஸீலா 1-5-87