கனவுலகம்.

கனவுலகம்.

By Sufi Manzil 0 Comment July 27, 2012

Print Friendly, PDF & Email

கனவு மூன்று வகைப்படும்.

முதலாவது நேர்வழி நடப்பவர்களுக்கு அல்லாஹுத்தஆலாவிடமிருந்து உண்டாகும் நற்செய்தி. இது 'புஷ்ரு' எனப்படும். இரண்டாவது தன் மனத்தைக் கொண்டு உண்டாகும் கனவு. மூன்றாவது ஷைத்தானின் தூண்டுதலாக வரும் கனவு.

நேர்வழி நடப்பவர்களுக்கு வரும் கனவு நபித்துவத்தில் (நுபுவ்வத்தில்) நாற்பத்தாறில் ஒரு பங்காய் இருக்குமென்று நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள். அல்லாஹுத்தஆலா கனவுக்காக அமரர் ஒருவரை திட்டப்படுத்தியுள்ளான். அவர் பெயர் ரூஹு என்பதாகும். அவர் கீழ்வானத்துக்கு உரியவர். தூங்குபவர்களுக்குத் தெரியும் உருவங்கள் எல்லாம் அவர் கையிலிருக்கும். ஒருவன் தூங்கினால் அல்லது தூங்காமல் தன்னை மறந்தவனாய் இருந்தால், அல்லது 'நாஸ்தி'யின் நிலையிலிருந்தால் அப்போது அந்த அமரர் காட்டுபவை விழிப்பேற்பட்டதும் நினைவுக்கு வரும். இதில் மூன்று பதவிகளுண்டு. முதலாவது அவனிருக்கும் தானத்தையும், அவன் குணங்களையும் விளக்கும் கனவு. இரண்டாவது அவனுடைய நிலையைக் காட்'டும் கனவு. மூன்றாவது சன்மார்க்க ஞானங்கள் வெளியாகும் கனவு. இவற்றில் பூரண அழகுமிக்க உருவமாகக் காட்சியாகித் தன்னுடன் அது பேசவும், தான் அதற்கு மரியாதை காட்டி பணிவுடன் இருக்கக் கண்டால் அது உண்மையான அமரர் தோன்றும் கனவாய் இருக்கும். அழகிய உருவங்களையும், அவலட்சணமான உருவங்களையும் கண்டால் அது தன் நிலைiயை வெளியாக்கும் கனவாகும். தனக்கு முன் நடந்த காரியங்களைச் சேர்ந்த கருமங்கள் தெரிந்தால் அது தன் கீழான மனத்தைக் கொண்டு உண்டான கனவாக இருக்கும். பயங்கரமானவையும், வெறுக்கப்பட்டவையும் தெரிந்தால் அது ஷைத்தானால் உண்டானது என அறிந்து கொள்ளலாம். இத்தகைய கனவை கண்டு விழித்தவன் எழுந்ததும் இடப்புறம் திரும்பி மூன்று தடவை துப்பிவிட்டு, அல்லாஹுத்தஆலாவிடம் அதன் தீங்கை விட்டு கார்மானம் தேடும்படியும், அப்படிச் செய்தால் தீங்கு எதுவும் வராது என்றும் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். கெட்ட கனவு காண்பவன் அதை பிறரிடம் சொல்லக் கூடாது. அப்படிச்சொன்னால் அவ்விதமே நடந்துவிடும் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.