வஹ்ஹாபிகளே! தேவ்பந்தி தப்லீக் வாதிகளே! கிறிஸ்துவ மதத்திற்கு வந்து விடுங்கள்! இல்லையேல்…, காபிராகவே இருப்பீர்கள்… பாதிரியார் வில்லியம் மஸீஹ்யின் அறைகூவல்!

வஹ்ஹாபிகளே! தேவ்பந்தி தப்லீக் வாதிகளே! கிறிஸ்துவ மதத்திற்கு வந்து விடுங்கள்! இல்லையேல்…, காபிராகவே இருப்பீர்கள்… பாதிரியார் வில்லியம் மஸீஹ்யின் அறைகூவல்!

By Sufi Manzil 0 Comment October 30, 2012

Print Friendly, PDF & Email

சியால் கோட் (பாகிஸ்தான்) என்னும் ஊரில் இருந்து பாதிரியார் வில்லியம் மஸீஹ் என்பவர், வழிகெட்ட இயக்கங்களான வஹ்ஹாபிய தப்லீக் ஜமாஅத் தேவ்பந்திகள், காதியானிகள், ஜமாஅத்தே இஸ்லாமி, நஜாத் போன்ற இயக்கங்களை அழைத்து 'எனது கேள்விகளுக்கு பதில் அளியுங்கள். இல்லையென்றால் கிறித்துவ மதத்திற்கு வந்து விடுங்கள். காஃபிராக இருப்பதை விட எங்கள் கிறித்துவ மதம் மேலானது' என்று பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

இதுநாள் வரையிலும் வஹ்ஹாபிய வழிகெட்ட இயக்கங்களால் பதில் கூற இயலவில்லை. எக்காலமும் அவர்களால் பதில் கூற இயலாது என்பதே உண்மை.

தமிழகத்தில் வாய்சவடால் விடும் வஹ்ஹாபிகளே! தொழுகையின் பெயரால் பாமர மக்களை வழிகெடுக்கும் தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினரே! உங்களால் கிறித்துவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா? பாதிரியார் வில்லியம் மஸீஹின் கேள்விகளைப் படியுங்கள்.

கேள்வி 1: இஸ்மாயில் தெஹ்லவீ, அஷ்ரப் அலி தானவி போன்றோர் தமது நூற்களில் 'முஹம்மது நபி மரணித்து மண்ணோடு மண்ணாகி விட்டார்' என்று எழுதி உள்ளார்கள். ஆதாரம்: தக்வியத்துல் ஈமான்.

மண்ணோடு மண்ணாகிப் போன ஒரு தூதுவரை ஏற்று இஸ்லாத்தைப் பின்பற்றுவதை விட, நான்காம் வானத்தில் உயிரோடு உயர்த்தப்பட்ட இன்னும் ஜீவிதமாக உள்ள, எதிர்காலத்தில் இப்பூவுலகில் மறுபடியும்  வருகை தரவள்ள, எங்கள் ஈஸா நபியை பின்பற்றுங்கள். உயிருடன் உள்ள எங்கள் ஈஸா உயர்ந்தவரா…? மரணித்து மண்ணாகிப் போன உங்கள் நபி உயர்ந்தவரா…?

கேள்வி 2: அஷ்ரப் அலி தானவி தனது 'ஹிப்ளுல் ஈமான்' எனும் நூல் பக்கம் 8ல் எழுதுகிறார்… 'முஹம்மது நபி அவர்களின் மறைவான விஷயங்களைப் பற்றிய ஞானம் சாதாரண மனிதர்கள், குழந்தைகள், பைத்தியக்காரன் இனு;னும் எல்லா வகை விலங்கினங்களுக்கும் உள்ளதைப் போல்தான்.'

ஆனால் எங்கள் ஈஸாவின் ஞானம் பற்றி உங்கள் குர்ஆனிலேயே வந்துள்ளது. அவர் பிறந்தவுடன் பேசினார். மறைவானதை அறிவிக்கக் கூடியவராக இருந்தார்.
விஷயம் இவ்வாறிருக்க மறைஞானத்தை அறியக் கூடிய எங்கள் ஈஸா சிறந்தவரா? ஒன்றுமே தெரியாத என்று உங்களால் கூறப்படும் முஹம்மது நபி சிறந்தவரா? பதில் கூறுங்கள்…

கேள்வி 3: முஹம்மது நபியின் நாட்டத்தால் ஆகப்போவது ஒன்றுமில்லை'. (ஆதாரம்: தக்வியத்துல் ஈமான்) உங்கள் நபியால் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. ஏனெனில் அவர் உங்களைப் போன்ற சாதாரண மனிதர் என்றே நீங்கள் நம்புகிறீர்கள்.

ஆனால், எங்களின் ஈஸா குருடர்களைப் பார்வையுடையவர்களாய் ஆக்கினார். குஷ்ட நோய் போன்ற கடும் நோய் பிடித்தவர்களை தமது கரத்தைக் கொண்டே சமாளித்தார். மரணித்தவர்களை உயிர்ப்பித்தார் என்று உங்கள் குர்ஆனே சாட்சியம் பகர்கிறது.

ஒன்றும் செய்ய முடியாத ஒரு சாதாரண மனிதரை நபியாக ஏற்று வழிநடப்பதை விட அற்புதமான மனிதரான எங்கள் ஈஸாவை நபியாக ஏற்றுக் கொள்வதுதானே புத்திசாலித்தனம்.

உங்கள் நபி 40 வயதிலிருந்து தான் நபி என்று கூறுகிறீர்கள். அதற்கு முன்னால் அவர் ஒரு சாதாரண மனிதர்தான். ஆனால் எங்கள் ஈஸா பிறக்கும்போதே 'தான் நபி' என்று அறிவித்தார்.

உங்கள் நபியின் பெற்றோர் குஃப்ரில் இருப்பதாக கூறி நபியின் பிறப்பையே கேள்விக்குறியாக்கி உள்ளீர்கள். ஆனால், எங்கள் ஈஸாவின் தாயார் மரியம் பரிசுத்தமானவர். புனித தேவ தூதரின் மூலம் ஈஸாவை பெற்றெடுத்தார். ஆக எல்லா வகையிலும் எங்கள் ஈஸாவே உயர்வானவராக இருக்கிறார்.

ஆனால் நீங்கள் முஹம்மது நபியை பின்பற்றுவதாக கூறி அவரையே குறை சொல்லுகிறீர்கள். இப்படி குறை கூறுவதால் இஸ்லாமிய அறிஞர்கள் உங்களை காஃபிர் என்று தீர்ப்பளித்துள்ளார்கள். நீங்கள் காஃபிராக இருப்பதை விட எங்கள் ஈஸாவை ஏற்றுக் கொண்டு கிறிஸ்துவ மதத்திற்கு வந்து விடுங்கள்.

-ஆதாரம்: ரஜாயே முஸ்தஃபா மாத இதழ் (குஜ்ரன் வாலா, பாகிஸ்தான்) ஹிஜ்ரி 1405 ரஜப் மாதம்.

முஸ்லிம்களே…! இந்த கேடுகெட்ட வஹ்ஹாபிய கொள்கையின் விளைவுகளைப் பார்த்தீர்களா? யூதர்களும், கிறித்துவர்களும் நம்மை கேலி செய்கின்ற அளவிற்கு துணிந்து விட்டார்கள். மேலை நாடுகளில் நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி அவதூறாக எத்தனையோ நூல்களில் எழுதப்பட்டுள்ளது. கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட மோசமாக சித்தரித்து திரைப்படமும் எடுக்கப்பட்டது. இதற்கெல்லாம் வழிகாட்டியவர்கள் இந்த வஹ்ஹாபிகள்தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

பாதிரியார் வில்லியம் மஸீஹின் கேள்விகளுக்கு ஆதாரம் இல்லாமல் இல்லை. தேவ்பந்திய தப்லீக் வஹ்ஹாபிய தலைவர்கள் தமது நூல்களில் நமது உயிரினும் மேலான நபிகளாரை மிகவும் தரம் தாழ்த்தி எழுதியுள்ளார்கள். இன்றளவும் அதை அச்சடித்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். தொழுகைக்கு அழைக்கிறோம் என்ற போர்வையில் மக்களுக்கு அதை மறைமுகமாக போதிக்கிறார்கள். அந்த நூல்கள் மற்றும் அதை எழுதியோர்களின் விபரங்களையும் பாருங்கள்.

1.    கிதாபுத் தௌஹீத் – ஆசிரியர்: முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி (வஹ்ஹாபிய மதத்தின் முன்னோடி இவர்தான். இவர் பெயராலேயே வஹ்ஹாபி என்று அழைக்கப்படுகிறார். தமிழகத்தில் இவர்கள் தப்லீக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, தவ்ஹீத் ஜமாஅத், நஸாத்து என்ற பற்பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள்.

2.    தக்வியத்துல் ஈமான் – ஆசிரியர்: இஸ்மாயில் தெஹ்லவி (கிதாபுத்  தவ்ஹீது என்ற வழிகெட்ட நூலின் உருது மொழியாக்கம் தான் இந்தநூல். இந்த வழி கெட்ட நூலை எழுதி போதித்த காரணத்தினால் வட இந்திய சுன்னத் வல் ஜமாஅத் பட்டான் முஸ்லிம்களால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு காக்கைக்கு இரையாக்கப்பட்டார். இதை மறைத்து தப்லீக் வஹ்ஹாபிகள் இவரை ஷஹீது என்று அழைக்கின்றனர்.)

3.    தஹ்தீருன் நாஸ் – ஆசிரியர்: காஸிம் நானோத்தவி (தாருல் உலூம் காஸிமிய்யா என்னும் வஹ்ஹாபிய தப்லீக் தேவ்பந்து மத்ரஸாவின் ஸ்தாபகர். ரஸூலுல்லாஹ்விற்குப் பின் ஒரு நபி வர சாத்தியம் உள்ளது என்று கூறியதன் மூலம் காதியானி கூட்டத்திற்கு அடிகோலியவர்)

4.    ஹிப்ளுல் ஈமான் – ஆசிரியர்: அஷ்ரப் அலீ தானவி (தேவ்பந்திய தப்லீக் ஜமாஅத்தின் மூலவர்களில் ஒருவர்) தரீகா வஹ்ஹாபி அமைப்பான நூரிஷா தரீகா இவரின் தவறான கொள்கைகளையே பின்பற்றுகிறது.

5.    பதாவா ரஷீதிய்யா – ஆசிரியர்: ரஷீத் அஹ்மது கங்கோஹி (தேவ்பந்திய தப்லீக் ஜமாஅத்தின் தரீகா அமைப்பான ரஷீதிய்யா என்ற தவறான தரீகாவின் தலைவர்)

6.    பராஹீனே காத்திஆ – ஆசிரியர்: கலீல் அஹ்மது அம்பேட்டி (வழிகெட்ட தேவ்பந்திய தப்லீக் தலைவர்களில் ஒருவர்)
 

மேற்கண்ட நூல்களில் தேவ்பந்திய வஹ்ஹாபிகள் நபிகளாரைப் பற்றி கூறியுள்ள வாசகங்களைப் படித்தால் திரைப்படம் எடுத்த யூத, கிறித்துவ விஷமிகளை விட இந்த கேடு கெட்ட வஹ்ஹாபிய தப்லீக் தலைவர்களையே முதலில் கண்டித்து ஒதுக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு எடுப்பீர்கள்.

நம்மை ஏமாற்ற  வேஷம் போடும்  தமிழக வஹ்ஹாபிகளின், பீ.ஜே.க்களின், நஜாத்வாதிகளின், தேவப்ந்து தப்லீக் ஜமாஅத்தினரின் கபட வேடத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.

தேவ்பந்தின் பத்திரிகையான 'தஜல்லி 1959 பிப்ரவரி – மார்ச்' மாத இதழில் அதன் ஆசிரியர் ஆமிர் உஸ்மானி தேவ்பந்தி கூட 'தப்லீக் தலைவர்கள் தமது தவறான கொள்கைகளை விட்டு விட வேண்டும்' என்று வேண்டு கோள் விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. மேலும் கூறுகிறார் (மேற்கண்ட) நமது தவறான வஹ்ஹாபியக் கொள்கைகளைத் தாங்கிய நூல்களை நடுரோட்டில் வைத்து எரித்து விடுங்கள்' என்றும் கூறியிருப்பதையும் கருத்தில் கொண்டு தமிழக தப்லீக்வாலாக்கள் தவ்பாசெய்து தப்லீக் ஜமாஅத்தை விட்டு ஒதுங்கிக் கொள்ளவேண்டும்.

இந்த பாதிரியார்  வில்லியம் மஸீஹின் கேள்விகளுக்கு  சுன்னத்வல் ஜமாஅத்தார்களைத் தவிர வேறு எந்த வழிகெட்ட இயக்கங்களாலும் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் சுன்னத் வல் ஜமாஅத்தார் தான் நபிகளாரை நித்திய ஜீவிதம் உள்ளவர்கள் என்று ஈமான் கொண்டுள்ளார்கள். நபிகளாருக்கு மறைவான ஞானம் வழங்கப்பட்டுள்ளதாக ஈமான் கொண்டுள்ளார்கள். நபிகளார் அவர்கள்  எந்த படைப்பிற்கும் நிகரில்லாத மிக உன்னதமான படைப்பு என ஈமான் கொண்டுள்ளார்கள். எனவே வஹ்ஹாபிகள், தேவ்பந்திகளே, பாதிரியார் வில்லியம் மஸீஹ் கூறுவதைக் கொண்டாவது உங்களது கொள்கைகளை திருத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் அவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.

-முஹிப்பிர் ரஸூல் சபை, சதுக்கைத் தெரு, காயல்பட்டினம்.
கைபேசி: 9171890163, 9025752312.