அவ்வாபீன் தொழுகை -துஆ

Print Friendly, PDF & Email

 

அவ்வாபீன் தொழுகை -துஆ

மதி மறக்கும் நேரத்தில் அல்லாஹ்வை நினைவு கொள்பவர்களின் தொழுகை என்று இதற்குப் பெயர். மஃரிபிற்கும் இஷாவிற்கும் இடையிலுள்ள நேரம் சிறப்பான ஒன்றாகும். ஒருவர் மஃரிபிற்குப் பிறகு 6 ரக்அத் சுன்னத் தொழுது அவைகளுக்கிடையில் வீண்பேச்சுக்களை பேசாதிருந்;தால் அவை 12 வருடங்களுக்குரிய வணக்கங்களுக்கு நிகரானவை என்றும், 20 ரக்அத்துகளை தொழுபவருக்கு சுவனத்தில் மாளிகை ஒன்று எழுப்பப்படும் என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.-திர்மிதி.

ஆகவே மஃரிபின் வழமையான நபில் தொழுகைகளை தொழுது, தஸ்பீஹ்களை நிறைவு செய்தபின் இந்த தொழுகையை அவ்வாபீனுடைய நிய்யத் செய்து தொழுவது சுன்னத்தாகும். அதன்பின் இந்த துஅவை மூன்று முறை ஓதுவது விரும்பத்தக்கதாகும்.

دُعَاء

اَللّٰهُمَّ اِنِّىْ أَسْتَوْدِعُكَ اِيْمَانِىْ فِىْ حَيَاتِىْ وَعِنْدَ مَمَاتِىْ وَبَعْدَ مَمَاتِىْ فَاحْفَظْهُ عَلَيَّ اِنَّكَ عَلٰى كُلِّ شَيْئٍ قَدِيْرٌ.